kapil mishra bjpமகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அவரைக் கொன்றவர் சித்பவன பார்ப்பான் நாதுராம் கோட்சே என்ற விபரம் பரவியது. இதனால் பெரும் கலவரம் மூண்டது. பார்ப்பனர்களும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர்.

மக்கள் இவர்கள் அனைவரையும் கைது செய்து விட்டார்களே என்று ஒரு வித நிம்மதியில் இருக்க, அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் மெதுவாகச் சிரித்தார்.

அவர் மறைமுகமாக மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைதான் இது என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

எவ்வளவு பெரிய தவறைச் செய்துவிட்டு அதற்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்து விடுவது என்பது பட்டேல் காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை. அப்போதுதான் அவர்கள் சிறையில் எந்தவித பயமும் இன்றி போலீஸ் பாதுகாப்புடன் இருப்பார்கள் என்று அவர்கள் திட்டமிட்டு செய்த சதிதான்...

ஒரு முறை பெரியார் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது பேசிய ஒருவர், "மகாத்மாவைக் கொன்றது யார் தெரியுமா?" என்று ஆரம்பித்து பாப்பான் என்று சொல்ல வந்தார்... இதனைக் கண்டுபிடித்த பெரியார் கைத்தடியால் ஒரு தட்டு தட்ட அதனை உணர்ந்து கொண்ட அந்த பேச்சாளர் உடனடியாக பேச்சை நிறுத்தினார்.

அவ்வாறு அவர் பேசியிருந்தால், பார்ப்பனர்களின் மீதான வன்மம் அங்கேயே கட்டவிழ்க்கப்பட்டிருக்கும். ஆனால் பெரியார் அவ்விதம் செய்யவில்லை. அவர் வன்முறையை விரும்பாதவர். கருத்துப் புரட்சியின் மூலமே மக்களுக்கு விடுதலையும் மானமும் அளிக்க முடியும் என்று நம்பியவர். ஆகவே இதுபோன்ற வெறிப்பேச்சுகளுக்கு அவர் எப்போதும் இடம் கொடுத்ததே இல்லை.

இப்போது இன்றைய விஷயத்திற்கு வருவோம்...

அவர் தனது டிவிட்டர் பதிவில் "போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த டெல்லி போலீசாருக்கு 3 நாள் அவகாசம் வழங்கப்படுகிறது. இதன்பிறகும் காரணம் கூறி நியாயப்படுத்த முயற்சிக்க வேண்டாம். நாங்கள் செவி சாய்க்க மாட்டோம். அவர்கள் அனைவரையும் விரட்டி அடிப்போம்..." என்று கூறியிருந்தார். இதையே அவர் பாஜகவினர் மத்தியிலும் பேசினார்.

கிளர்ந்தெழுந்தார்கள்... டெல்லி கலவர பூமியாக மாறிப் போனது. 47 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டன. படுகாயம் அடைந்தவர்கள் ஒருவர்பின் ஒருவராய் உயிரிழந்து வருகிறார்கள்...

இப்போது தெரிந்திருக்கும் பெரியாரின் கண்ணியத்திற்கும் வெறி பிடித்தவர்களின் கலவரப் பேச்சிற்கும்...

இவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்? என்று கேட்ட நீதிபதி மாற்றப்பட்டு விட்டார். வேறுவழியின்றி இவர் மீது இப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் இவரது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்து விடலாம் என்று கருதிய மத்திய அரசு ஆறு பேர் கொண்ட உச்சபட்ச பாதுகாப்பு வழங்கியுள்ளது.

டெல்லி நீதிமன்றம் வழங்கிய ஆணையைக் கொண்டு இரவோடு இரவாக ஒரு முன்னாள் நிதி மந்திரி என்றுகூட பாராமல் வீட்டின் மதிலேறி கைது செய்ததும், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஜம்முவில் முன்னாள் முதல்வர்களை வீட்டுக் காவலில் சிறை வைத்திருப்பதும்... காஷ்மீருக்குள் செய்தியாளர்கள் யாரையும் நுழைய அனுமதிக்காமல் அந்த மாநில மக்கள் அனைவரையும் தனித்தீவாக மாற்றி வைத்திருப்பதும்... கலவரக்காரர் கபில் மிஸ்ராவுக்கு பாதுகாப்பு வழங்குவதும் தான் இந்திய ஜனநாயகமா?

நீதித் துறை, காவல் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ என ஒட்டுமொத்த துறைகளையும் அதன் சாரத்தை இழந்து நிற்கச் செய்வதுதான் சட்ட ஒழுங்கா?

- சஞ்சய் சங்கையா

Pin It