கடந்த சில தினங்களாக ஊடகங்கள் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கின்றார் அத்திவரதர். பார்ப்பன ஊடகங்களும், சூத்திர ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு அத்திவரதரின் புகழை தெய்வ சங்கல்ப்பமாக கருதி பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஒரு நான்கு நாட்களுக்கு முன்புவரை இந்த அத்திவரதரை யாருக்கும் தெரியாது. தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு இந்தப் பெயர் பரிச்சயம் அற்றதாகவே இருந்தது. ஆனால் இன்று அத்திவரதர் இரண்டு மணி நேரம் காத்திருந்து வழிபடும் அளவிற்கு புகழ்பெற்ற கடவுளாக மாறிவிட்டார். மக்கள் வேலைவெட்டிகளை எல்லாம் விட்டுவிட்டு முண்டி அடித்துக்கொண்டு எப்படியாவது அத்திவரதரை வழிபட்டுவிட வேண்டும் என்று பேரார்வத்தோடு கால் கடுக்க காத்துக் கிடக்கின்றனர்.

athi varadhar kanchipuramஒரு பெரிய மக்கள் கூட்டம் ஒருவரை வழிபட நினைக்கின்றது என்றால் நிச்சயம் அந்த நபர் அந்த மக்களுக்காக வாழ்ந்து அந்த மக்களுக்காக மடிந்த நபராகத்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் உலகில் பல அரசியல் தலைவர்களும், அறிவியல் அறிஞர்களும், எழுத்தாளர்களும், தத்துவவாதிகளும் கொண்டாடப்பட்டு வருகின்றார்கள். எந்த மக்கள் பிரச்சினைக்கும் குரல் கொடுக்காமல், எதற்காக வாழ்கின்றோம் என்றே தெரியாமல், ஐந்து பைசாவுக்கு கூட பிரயோசனம் இல்லாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று சுயநலமாக, வயிறு முட்ட தின்றுவிட்டு விலங்கு வாழ்க்கை வாழ்ந்த அற்பப்பிறவிகளை எந்த மனிதர்களும் கொண்டாட மாட்டார்கள். தன்மானமும் சுயமரியாதையும் உள்ள நபர்கள் இது போன்று வாழ்ந்த மனிதர்களை ஓர் இழிபிறவியாகவும், நாட்டைப் பிடித்த சாபக்கேடாகவும், வாழ்வதற்கே தகுதியற்றவராகவுமே பார்ப்பார்கள்.

சாதாரண மனிதர்களுக்கே இப்படி என்றால், தன்னைக் காத்து வழிநடத்துபவர் என்று நம்பப்படும் கடவுளுக்கு சொல்லவா வேண்டும்? அதன் படி அத்திவரதர் அவரையே நம்பி இருக்கும் கோடான‌ கோடி மக்களுக்கு என்ன செய்தார் என்று தெரிந்து கொள்வதன் மூலம் அவரின் நேர்மையையும், அவரை வழிபடும் மக்களின் அறிவு நேர்மையையும் நாம் தெரிந்து கொள்ள முடியும். பொதுவாக இன்று இந்து மக்கள் வழிபடும் கடவுள்களில் குறிப்பாக பார்ப்பனக் கடவுள்களின் புஜபல பராக்கிரமங்களையும் அவர்கள் யாருக்காக பாடுபட்டார்கள் என்பதைப் பற்றியும் தன்மானமும் சுயமரியாதையும் உள்ளவர்களுக்குத் தெரியும் என்றாலும், அத்திவரதரைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் அதை மேலும் நம்மால் உறுதிபடுத்திக் கொள்ள முடியும்.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காட்சியளிப்பதாகக் கருதப்படும் அத்தி வரதரைப் பற்றி வழங்கப்பட்டு வரும் புராண செய்திகளை முதலில் பார்ப்போம்.

“பிரம்மன் பெருமாளை நோக்கி யாகம் செய்தார். பிரம்மாவிடம் சினம் கொண்டிருந்த சரஸ்வதி, அந்த யாகத்துக்கு வரவில்லையாம். இதனால் சரஸ்வதியின் துணையின்றி யாகத்தைப் பூர்த்தி செய்ய முடியாது என்று எண்ணினான் பிரம்மன். எனவே காயத்ரி, சாவித்திரியின் துணையோடு யாகத்தை அவர் தொடர்ந்தார். பிரம்மாவின் யாகத்தைக் கண்டு மேலும் சினம் கொண்ட சரஸ்வதி யாகத்தைத் தடுத்து நிறுத்த நினைத்தார். எனவே யாகத்தைத் தடுக்க பூமியை இருளில் மூழ்கடித்தார். இருளில் தவித்த பிரம்மாவுக்கு தடைகளை நீக்கி, மீண்டும் யாகம் தொடர உதவி புரிந்தார் பெருமாள். இருந்தும் கோபம் தணியாத சரஸ்வதி மீண்டும் பல இடையூறுகளைச் செய்தார். பிரம்மா வேண்டி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சரஸ்வதி ஏற்படுத்திய தடைகளை முறியடித்த பெருமாள், பிரம்மனின் யாகம் தொடர துணைநின்றார். இறுதியில் வேகவதி நதியாக வந்த சரஸ்வதி யாகம் நடக்கும் இடம் நோக்கிப் பாய்ந்தார். சரஸ்வதியை அணையாகத் தடுத்து நிறுத்தினார் திருமால்.

சரஸ்வதியின் கோபத்தைத் தணித்த பெருமாள், பிரம்மாவுடன் யாகத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார். கோபம் தணிந்த சரஸ்வதி , பிரம்மா, காயத்ரி, சாவித்திரி ஆகியோருடன் யாகத்தில் பங்கேற்றார். அக்னியிலிருந்து வெளிப்பட்ட வரதராஜப் பெருமாள் பிரம்ம தேவர், சரஸ்வதி , காயத்ரி , சாவித்ரி ஆகியோருக்குக் காட்சியளித்தார். அவர்கள் விரும்பிய வரங்களை அளித்தார். அதனால் வரதர் எனப் பெயர் பெற்றார்.

பெருமாளின் அற்புதக் காட்சியைக் கண்ட பிரம்மன் பெருமாளுக்கு அத்தி மரத்திலான ஒரு விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அத்தி மரத்திலான பெருமாள், அத்தி வரதர் என்று அழைக்கப்பட்டார். பின்னர் இந்திரனின் வாகனமாகிய ஐராவதம் எனும் யானை, அத்தி வரதராகக் காட்சியளித்த வரதராஜப் பெருமாளை சுமந்தது. பின்னர் இது ஹஸ்திகிரி என அழைக்கப்பட்டது. பின்னாளில் அத்தி கிரி என அளிக்கப்பட்டது. அத்தி என்றால் யானை, கிரி என்றால் மலை. யானைமலை போன்று இருப்பதால் இப்பெயர் வந்தது. அத்தி கிரி என்னும் மலை மீது வரதராஜப் பெருமாள் அருள்பாலிக்கிறார். பிரம்மாவின் வேண்டுதலுக்கிணங்க பக்தர்களுக்கு வரதராஜப் பெருமாளாக காட்சியளிக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தருவேன் என்று கூறிய அத்திவரதர், கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்துக்கு வடக்கே உள்ள ஆனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில் நாலுகால் மண்டபத்தில் வைக்க உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் காட்சி தரும் அத்திவரதர் 24 நாட்கள் சயன வடிவிலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பாராம்.

மேலே சொல்லப்பட்டிருக்கும் புராணக் கதையின் படி பார்த்தால் பிரம்மன் என்ற பார்ப்பான் என்ன காரணத்திற்காக நடத்துகின்றோம் என்றே தெரியாமல் நடத்திய ஒரு யாகத்திற்கு பாப்பாத்தி சரஸ்வதியால் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்த்து வைத்து, பார்ப்பான பெருமாள் அந்த வெட்டித்தனமான யாகத்தை நடத்த உதவியிருக்கின்றார். இதைத் தவிர இந்தக் கருமம் பிடித்த கதையில் தெரிந்து கொள்வதற்கோ, அறிந்து கொள்வதற்கோ ஒரு வெங்காயமும் கிடையாது. இந்தக் கதையின் படி பார்த்தால் ஒருவருக்கும் உருப்படியான எந்த வேலைவெட்டியும் இல்லை என்பது தெரிகின்றது. வேலைக்குப் போகாமல் வீட்டில் வெட்டி சோறு தின்றுவிட்டு ஊருக்குள் வம்பிழுத்துக் கொண்டு திரியும் வெட்டி பயல்களாக‌த்தான் கதையில் வரும் பார்ப்பன மற்றும் பாப்பாத்திகளின் செயல்பாடுகள் உள்ளன. பார்ப்பனன் எழுதிய கதையில் வரும் கடவுள்கள் கூட அவனைப் போலவே உழைக்காமல் சோறு தின்னும் சோம்பேறிகளாகவே இருக்கின்றார்கள்.

ஏழை மக்கள் உணவின்றி தவித்த போது அவர்களுக்கு உணவு கொடுத்தார் என்றோ, வீடு இல்லாத மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார் என்றோ, தொழிற்வளர்ச்சியைப் பெருக்கி வேலை வாய்ப்பை உருவாக்கினார் என்றோ, சாமானிய மக்களைத் துன்புறுத்திய பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டார்கள் என்றோ ஒரு பார்ப்பனக் கடவுளைக் கூட பார்க்க முடியாது. உண்டகட்டி பார்ப்பான்களின் பிரச்சினையை ஏதோ உலகமகா பிரச்சினையாக சித்தரித்து அதற்காக அந்த வெட்டிப் பிரச்சினையுடன் துளி அளவு கூட சம்மந்தமில்லாத, பார்ப்பனியத்தால் வைப்பாட்டி மகன்கள் (சூத்திரன்) என்ற பட்டம் வழங்கப்பட்டவர்களையே இந்த கருமம் பிடித்த கடவுள்களைக் கும்பிட வைப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

மானமற்ற மடையர்கள்தான், தான் என்ன காரியம் செய்கின்றோம் என்பதே தெரியாமல் செய்வார்கள். இது போன்றவர்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. பொங்க சோறுக்காகவும், சுண்டலுக்காகவும், ஆன்மீக கிளுகிளுப்புக்காவும் தன்மானத்தையும், சுயமரியாதையையும் அடகு வைத்து ஆன்ம திருப்தி அடைவார்கள். உண்மையில் அத்திவரதர் என்ற பார்ப்பனனை மோட்சம் கிடைக்கும் என்று வழிபடச் சென்றவர்கள் அறிவு நேர்மை இருந்தால், அத்திவரதர் எந்த ஆணியைப் புடுங்கினார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். வெட்கமுமில்லை, மானமுமில்லை, சிலையைத் தொட்டு வழிபடக் கூட அனுமதியற்று நாய்களைப் போல தூரத்தில் நிறுத்தப்பட்டு, பார்ப்பானின் வைப்பாட்டி மகன்களாய் (சூத்திரர்களாய்), பாவப்பட்ட யோனியில் இருந்து பிறந்தவர்களாய், சண்டாளர்களாய், குரங்குகளாய் பார்ப்பன அத்திவரதருக்கு கூழைக் கும்பிடு போட கால்கடுக்க காத்திருக்கும் தமிழினம் என்று மீண்டுவரப் போகின்றது?

நவீன அறிவியல் அதன் உச்சாணிக் கொம்பில் இருக்கும் இந்தக் காலத்தில் கூட பார்ப்பன புரட்டுகளை ஓர் அடிமையைப் போல எந்தவித கேள்விக்கும் உட்படுத்தாமல் அதை சிரமேற்கொண்டு கடைபிடிக்க நினைக்கும் கூட்டம் அறிவும் மானமும் பெற வழி இருக்கின்றதா? இதைப் பரப்பி மக்களை முட்டாள்களாக்கி அதன் மூலம் பணம் பிடுங்க நினைக்கும் கூட்டத்தையும், எந்தவித சுய அறிவும் இல்லமால் பகுத்தறிந்து சிந்திக்கும் ஆற்றல் இல்லாமல் வெட்கக்கேடான முறையில் மூட நம்பிக்கையில் வீழ்ந்துகிடக்கும் கூட்டத்தையும் அறிவு நாணயமற்ற அயோக்கியர்கள் என்று சொன்னால் அதில் நிச்சயம் தவறில்லை என்றே தோன்றுகின்றது.

- செ.கார்கி

Pin It