சமீபத்தில் எனது மெயில் பெட்டிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் இஸ்ரேல் குண்டுவெடிப்பில் சிதைந்த லெபனான் குழந்தைகள், சிதைந்த கட்டிடங்கள், அரைகுறையாக வெந்த பிணங்கள், தாங்கள் அணிந்துள்ள ஜீன்ஸ் கம்பேனிகளின் ப்ராண்ட் நேம் கூட எரியாமல் இருக்க அணிந்த மானிடர்கள் - வெந்த பிணங்களாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். இப்படி பல கொடூரமான படங்கள் இருந்தன.
அதன் பாதிப்பின் காரணமாக இந்தியாவில் இஸ்ரேலை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் இந்துத்துவ வெறியர்களுக்கு ஒரு சிறு கண்டன கட்டுரை எழுதலாம் என்ற முயற்சியின் விளைவே பின்வரும் கட்டுரை.
***********
1940-ல் இன்றைய இஸ்ரேல் பாலஸ்தீன பகுதி மொத்த மக்கள் தொகையில் 30% யூதர்களின் மக்கள் தொகை. இது 1922-ல் 11% மட்டுமே. அதாவது 18 வருடங்களில் இரண்டு மடங்குக்கும் அதிகமான வளர்ச்சி.
இந்திய முஸ்லீம்கள் இந்த மண்ணின் மைந்தர்களாக இருந்தும் கூட அவர்கள் பின்பற்றும் மதம் வேற்று மதம் என்பதை காரணமாகக் கொண்டே அவர்களின் மக்கள் தொகை பெருகுவதாகக் கூறி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் கூட்டம், இஸ்ரேலியர்களின் இந்த அபரிமிதமான திணிக்கப்பட்ட மக்கள் தொகை பெருக்கத்தைக் கண்டு பீதியடைந்து தாக்குதல்கள் நடத்திய அரேபியர்களின் நியாயத்தை உணருவதற்க்கு வாய்ப்பில்லை. அதற்கு அடிப்படை மனித பண்புகள் சில தேவைப்படுகிறது.
இன்றைய இஸ்ரேல் நிலபரப்பு பற்றிய யூத மத வெறியும், மூடத்தனமான நம்பிக்கையும்தான் இந்த உலகப் பிரச்சனைக்கு மிக மிக அடிப்படைக் காரணமாகும். அதாவது இஸ்ரேல் யூத மதத்தின் புனித பூமி என்ற சென்டிமென்ட். அதன் காரணமாக அங்கு வலிய குடியேறிய யூதர்கள். இந்த சென்டிமென்டின் விலை இன்றளவும் செத்து சிதறி விழும் பிணங்கள். இந்த மூடத்தனத்துக்கு செயல் வடிவம் கொடுக்க உந்துதலாக இருந்த வரலாற்று சூழல் அன்றைய ஐரோப்பாவின் அரசியல் நிலைமைகள் (anti semitism etc).
அதாவது இங்குள்ள சில புனித பிம்பங்களும், அறிவு ஜீவிக்களும் இஸ்லாம் மதம் மூடத்தனமானது என்று குற்றம் சாட்டுவார்களே, இஸ்ரேலை பாராட்டிக் கொண்டு. ஆனால் யூத மதத்தின் மூடத்தனம்தான் இன்று உலக தீவிரவாதத்திற்க்கு ஒரு முக்கியமான ஊற்று மூலமாக உள்ளது. மூடத்தனத்தில் மதங்களிடையே போட்டி வைத்தால் இந்து மதம் முதல் இடமும், யூத மதம் இரண்டாம் இடமும் பிடிக்கும் மற்ற மதங்களலெல்லாம் அடுத்த இடங்கள்தான்.
மதம் என்பது மடத்தனம்தான். அது அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிதான். மக்களை தார்மீக ரீதியாக சுரண்டுவதற்க்கு நியாயம் கற்பிப்பதுதான் மதம். அது இஸ்ரேல் விசய்த்திலும் அவ்வாறே உள்ளது. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனின் பிரதமாரான சர்ச்சில் இந்த யூத மத வெறியின் பாத தாங்கியாக இருந்தான். பாலஸ்தீனர்களைப் பற்றி அந்த பன்றியின் ஒரு பிரபலமான வாசகம்:
"ஒரு நாய், குப்பைத் தோட்டியில் நெடு நாட்கள் தங்கியிருக்கிறது என்பதற்காக அந்த குப்பை தொட்டிக்கு அது உரிமை கொண்டாட முடியுமா?"
ஆக இஸ்ரேல் பிரச்சனையும் அதன் உடன் விளைவான அரபு தேசங்களில் இஸ்லாம் தீவிரவாதத்தின் life lineனும் சர்ச்சிலின் அந்த திமிர் பிடித்த வார்த்தைகளில் பொதிந்துள்ளது.
இன்றைக்கு காசா ஸ்டிரிப் எனப்படும் பகுதியும், மேற்குக் கரை எனப்படும் பகுதியும் சேர்த்து ஒரு சிறு பகுதிதான் பாலஸ்தீனர்களின் பகுதி. நாய்களுக்கு குப்பைத் தொட்டியில் இந்தளவுக்கு இடம் கொடுத்ததே அதிகம் என்று சில மக்கள் நல, இந்திய தாயின் மீது அதீத பற்று கொண்ட அறிவு ஜீவிகள் மனதிற்குள் கூறுவது கேட்கிறது. (இந்தியத் தாயை MNC-க்கள் ரேப் செய்வதற்க்கு 'மாமா' வேலை செய்வதை developement என்றும் இவர்கள் கூறுகிறார்கள். பாசமுள்ள மகன்கள்).
அந்த தேசபக்தர்கள் இஸ்ரெல் வழியில் இந்தியாவும் பாகிஸ்தான் மீது குண்டு போட வேண்டும் என்று அமேரிக்கா, இஸ்ரேல், கன்டா போன்ற தங்களது தந்தையர் நாடுகளில் மாடு பிடிக்கும் போட்டிகள், ராணுவ உடை பெண்கள், மார்க்கெட்டுகள், சந்தைக்கு தேவையான தத்துவங்கள் போன்றவற்றை ரசித்துக் கொண்டே கூக்குரலிடுகிறார்கள். அவ்வப்பொழுது 'ஜெய் ஹிந்து' என்று சரியாக செரிக்காதவன் காற்றுப் பிரிப்பது போல் அருவெறுக்கும் குரலில் கூவுகிறார்கள். ஏதோ அனுமதி கொடுத்தால் இன்றே பாகிஸ்தானுக்கு தற்கொலைப் படையாக சென்று தங்களது உயிரை தியாகம் செய்து விடுவது போல் அறச் சீற்றம் காட்டுகிறார்கள். வேலி தாண்டி விடுவேன் வேலி தாண்டி விடுவேன் என்று 'வக்ரா' வாக ஜூ காட்டுகிறார்கள். இவர்கள் கோமாளிகள்தான் ஆனால் சிறிது ஆபத்தான கோமாளிகள்.
இஸ்ரேல் உழைக்கும் மக்கள் தங்கள் கண்ணை மறைத்திருக்கும் யூத மத தேசிய வெறியிலிருந்து வெளிவந்து தங்களையும், அரபு பகுதியையும் களமாக வைத்து ஏகாதிபத்தியங்கள் நடத்தும் அரசியல் விளையாட்டுக்களை அம்பலப்படுத்தி பாலஸ்தீனர்களின், அரபு தேசங்களின் நியயாமான இருப்பை ஏற்றுக்கொண்டு, தங்களது சொந்த நாட்டின் சுரண்டல்களையும் எதிர்த்து போராடாத வரை இஸ்ரேல் பிரச்சனை தீராது. பாலஸ்தீனர்கள் தங்களது விடுதலை கோரிக்கையை முன்வைத்து மத, இன மயக்கங்களுக்கு அப்பாற்ப்பட்டு போராடதவரை பிரச்சனை தீராது.
மொத்தத்தில் இந்த பிரச்சனையின் தீர்வு ஏகாதிபத்தியங்களின் அழிவில்தான் சாத்தியம் அதுவரை ரத்த பலி தொடரும் என்பதுதான் நிதர்சனம். முட்டாள்த்தனமான ராணுவ சாகச வழியின் முடிவு இதுதான் என்பதை அதிபுத்திசாலி அறிவுஜீவிகளுக்கு அல்ல, மாறாக என்னைப் போன்ற அரைகுறைகளுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் - அதி புத்திசாலிகள், புதிய கோணங்களை பார்க்கும் தன்மை இழந்த பார்வை குறைபாடுடையவர்களாய் இருக்கின்றனர் என்ற உண்மையை கணக்கில் எடுத்துக் கொண்டு.
பாலஸ்தீன பிரச்சனை பற்றி மேலதிகமான விவரங்கள்:
1922இல் சர்ச்சிலால் தயாரிக்கப்பட்ட வெள்ளை அறிக்கை கூறுகிறது:
"'During the last two or three generations the Jews have recreated in Palestine a community, now numbering 80,000உ it is essential that it should know that it is in Palestine as of right and not on the sufferance. That is the reason why it is necessary that the existence of a Jewish National Home in Palestine should be internationally guaranteed, and that it should be formally recognized to rest upon ancient historic connection.'"
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்கள் இருப்பது உரிமையின் அடிப்படையில் மாறாக அவர்கள் படும் கஷ்டங்களின் காரணமாக இல்லை (வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்கள் போல அல்ல என்று அர்த்தம் கொள்ளலாம்) என்று எவ்வளவு திமிராக அந்த அறிக்கை கூறுகிறது. அதே திமிரோடு சமீபத்தில் சிலர் இஸ்ரேலை ஆதரித்து தொடர் பதிவுகள் இட்டனர்.
அந்த வெள்ளை அறிக்கையின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக யூதர்கள் அதிக அளவில் பாலஸ்தினத்துக்கு குடியேற வேண்டும் என்று வெள்ளை அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டது. இது எந்த அளவுக்கு வேசித் தனமான செயல் என்பதை படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.
அதாவது ஒரு குறிப்பிட்ட தேச எல்லைக்குட்ப்பட்ட நிலப்பரப்பில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் மக்களை (பாலஸ்தீனர்கள்), வரலாற்றுப் பூர்வமாக அந்த இடத்திற்க்கு உரிமை கொண்டாடிக் கொண்டு வேறு நாடுகளில் அதிகாரத்தில் இருந்து கொண்டு வாழ்க்கை நடத்தும் ஒரு கூட்டம் (யூதர்கள்) ஒரு 50 60 வருடங்களில் அந்த புதிய இடத்தில் குடியேறி அவர்களிடமிருந்து (அரபியர்கள்) பிடுங்கி தனி நாடு உருவாக்குவதற்கு வசதியாக நிலங்களை வாங்கிப் போடுவது, தனது இன மக்களை பல தேசங்களிலிருந்தும் அங்கு வந்து குடியேறச் செய்வது போன்ற தந்திரங்களை செய்வது என்பது எந்த அளவு தந்திரமானது, மூடத்தனமானது, அபாயமானது என்பதற்க்கு இஸ்ரேல் ஒரு உதாரணமாக உள்ளது.
மூடத்தனமானது - அல்ப மத, இன வெறிக்காக இப்படி இடம் பெயர்ந்த ஒரே கூட்டம் இந்த யூதர்கள்தான்.
தந்திரமானது - பார்ப்பன தந்திரத்துக்கு இணையாக இதை அவர்கள் சாதித்த விதம்.
அபாயமானது - நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கும் மனித குலத்தின் அழிவு.
இப்படி தந்திரமாக நுழைந்ததை லீகலாக (legal) சரி என்று வாதட நம்மூர் பார்ப்பன அடிவருடிகள் தொடர் கட்டுரைகள் எழுதுவது.... சுத்த மானங்கெட்ட பிழைப்பு. (தந்திரம் என்பதே நியாயமில்லாத ஒரு விசயத்தை லீகலாக்கும் முயற்சியை குறிக்கும் சொல்தான்).
விரிவான மற்றுமொரு கட்டுரை: http://tamilarangam.blogspot.com/2006/07/blog-post_31.php
- அசுரன்