சென்னை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, பல புதிய நூல்கள் வெளிவர இருக்கின்றன. புதிய நூல்களுக்கான அறிமுகமாக வெளியீட்டு விழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் அவற்றிற்கான கவனம் வாசகர்களிடம் கிடைக்கும் என்பதால், வெளியீட்டு விழாக்களையும், நூல் அறிமுகக் கூட்டங்களையும் வாழ்த்தி, வரவேற்கிறோம்.

இந் நிலையில், ஏற்கனவே வெளிவந்த நூல்களின் மீதான கவனக் குவிப்பையும் கீற்று இணையதளம் விரும்புகிறது. பல பதிப்புகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைக்கும் சிறந்த புத்தகங்கள் பற்றிய செய்தி வாசகர்களுக்கு சென்று சேர்வதில்லை. அதே நேரம் கடந்த ஆண்டுகளில் வெளிவந்த பல முக்கியமான புத்தகங்கள், வாசகர்களின் நினைவில் இருந்து மறைந்து விட்டன. இவற்றை எல்லாம் புத்தக விரும்பிகளிடம் கொண்டு செல்ல கீற்று விரும்புகிறது. இதற்கு தங்கள் பதிப்பகத்தின் ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.

மூன்று தலைப்புகளில் தங்களிடம் இருந்து தகவல்கள் வேண்டுகிறோம்.

1. கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்த புத்தகங்கள், அவை எப்போது வெளியாகின, எத்தனை பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன, மொத்தம் எவ்வளவு பிரதிகள் விற்றிருக்கின்றன என்ற தகவல்கள்

2. மிக முக்கியமான, ஆனால் அதே நேரத்தில் வாசகர்களைச் சென்று சேராத புத்தகங்கள், அந்தப் புத்தகங்களின் முக்கியத்துவம் குறித்த செய்திகள்

3. கடந்த ஆண்டு வெளிவந்து அதிக வரவேற்பைப் பெற்ற நூல்கள், எவ்வளவு பதிப்புகள் வெளியாகின, எவ்வளவு பிரதிகள் ஆகியவை

தங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி!!

என்று அன்புடன்
கீற்று நந்தன்
தொடர்புக்கு: 7708407015, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

1 comment

1
sarafath hussain tm
please update the details

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.