கோயில் குடமுழுக்கு, திருமணம், நீத்தார் இறுதிச் சடங்கு என நீளும் எல்லாச் சடங்குகளிலும் தீ வளர்த்து, வேதம் ஓதி சடங்கு செய்வதை ஒரு அடிப்படையான செயல்முறையாகக் கொண்டுள்ளனர் பார்ப்பனர், பார்ப்பனர் எனப்படும் ஆரியர்கள். அவர்களுக்கு அக்னி எனப்படும் தீ, ஒரு முதன்மையான தெய்வமாக இருந்துள்ளது. இதை ஆய்வு செய்வது தான் இந்தக் கட்டுரையின் முதன்மை நோக்கம். அதற்கு முன், ஆரியர்கள் என்பவர்கள் யார், எங்கிருத்து வந்தவர்கள் என்பதனைப் பார்க்து விடலாம். 

பெரும்பாண்மை பார்ப்பனர்கள் என்பவர்கள் வௌ்ளை வௌேர் என்ற வெண் தோற்றத்தை உடையவர்கள். பார்ப்பனர்களின் உண்மையான வண்ணம் அது தான். கருத்த நிறப் பார்ப்பனர்களைப் பற்றி வேறொறு கட்டுரையில் பார்க்கலாம். ஆனால், வெண் தோல் என்பது வெப்ப நாடான இந்தியாவுக்கான நிறமல்ல. இது பற்றிய அறிவியல் ரீதீயான காரணத்தை முதலில் காண்போம். தீக்கும் வெண்தோலுக்குமான தொடர்பை இக்கட்டுரையின் பிற்பகுதி தௌிவு படுத்தும். 

உலகின் மக்கள் பலவேறு நிறங்களில் வாழ்கின்றனர். குளிர் பிரதேசங்களில் நீண்ட நெடிய காலம் வாழ்ந்து வருபவர்கள் வெண்ணிறமாகவும், வெப்பப் பகுதியில் வாழ்பவர்கள் கருத்த நிறமாகவும், மற்ற இடங்களில் வாழ்பவர்கள் இடத்திற்கேற்ப இந்த இரண்டு வண்ணங்களுக் கிடைப்பட்ட நிறமுடையவர்களாகவும் உள்ளனர். 

குளிர் பிரதேசத்தில் வாழ்பவரின் நிறம் வெண்மையாக இருக்கவேண்டியதன் அவசியம் என்ன? 

மனித உடல் சீராக இயங்க அதன் வெப்ப நிலை 98.6F (37C) டிகிரியாக இருக்கவேண்டியுள்ளது. இது இயற்கையின் நியதி. இந்த வெப்ப நிலையை உடல் தனது உணவில் உள்ள எரிபொருளிலிருந்து தான் பெருகிறது. ஆனால், குளிர் பிரதேசங்களில் வருடத்தின் பெரும்பாண்மையான நாட்கள், சுற்றுச் சூழல் வெப்பம் பனியின் வெப்பநிலையைவிடக் குறைவானதே. ஆக, சுற்றுச் சூழலின் வெட்பம் உடலின் வெப்ப நிலையை விடக் குறைவாக இருப்பதால், மனித உடலிலிருந்து வெப்பம் தொடர்ந்து வௌியேறுகிறது. இந்த வௌியேற்றத்தின் அளவு, இந்த "வெப்பநிலை வித்தியாசத்தின்" இருமடிக்கு (Square) நேரடி விகிதாச்சாரம் கொண்டதென, குளிர்தல் பற்றிய நியூட்டனின் விதி சொல்கிறது. இந்த வௌியேற்றத்தை ஈடுகட்ட உடலுக்கு மிகுதியான உணவும் அதன் தொடர்ந்த செரிமானமும் தேவைப்படுகிறது. ஆக, உடலின் வெப்ப வௌியேற்றத்தைக் குறைத்தால், உடலின் உணவுத் தேவையும் குறையும்.

இதற்கான தீர்வாக இயற்கை தேர்ந்தெடுத்த வழி தான் வெண் தோல். வெண்ணிறப் பொருட்கள் தனது வெப்பத்தை எளிதில் வௌியிடாது. வெப்ப வௌியேற்றம், வெண்ணிறப் பொருட்களுக்கு மிகவும் நிதானமாகவே நடைபெரும். ஆகையினால் தான் கடுங்குளிர்ப் பிரதேச மக்கள் வெண்ணிறத் தோலுடையவர்களாக உள்ளனர். இதிலிருந்து பார்ப்பனர்கள் அத்தகைய குளிர்ப் பிரதேசங்களிலிருந்து இந்திய நிலப்பரப்பிற்கு வந்தேறியவர்கள் என்பது புலனாகிறது. வெப்ப நாட்டுக் கரடியின் மயிர் கறுப்பாகவும், பனிக்கரடியின் மயிர் வெண்மையாகவும் இருப்பதையும் சேர்த்து ஒப்புநோக்குக.

வெப்ப நாடுகளில் திறந்தவௌி வெப்பம், பகல் நேரத்தில், மனித உடலின் வெப்பத்தைவிட மிகுதியாகவும், நிழலில் உடலின் வெப்பத்தைவிட சற்று குறைவாகவும், பருவகாலங்களுக்குத் தகுந்த மாற்றங்களோடு நிலவும். எனவே, பகலில் திறந்தவௌியில் மனித உடலுக்குள் சுற்றுச் சூழல் வெப்பம் புகும். இது மனிதனுக்கு இன்னல் கொடுக்கக் கூடியது. ஆதலால், நிழலுக்கு வந்தவுடன் உடல் விரைந்து குளிரடைய வேண்டிய தேவை உள்ளது. கருத்த நிறமுடைய பொருட்கள் வெப்பத்தை எளிதில் வௌியேற்றும் குணமுடையவை. ஆதலினால், வெப்ப பிரதேசங்களில் மனிதர்களின் உடல் இயல்பாகவே கருத்துள்ளது. (நிறம் கருப்பதற்கு சூரிய ஒளியோடு வரும் வெப்ப மற்றும் புறஊதாக் கதிர்களும் காரணம். இவை பற்றி முழுமையாக விவாதிக்க இக்கட்டுரையில் இடமில்லை; தேவையுமில்லை)

நீக்ரோக்கள் மிகவும் கருப்பாயிருப்பது, அவர்கள் வெப்பம் மிகுந்த பூமத்திய ரேகை பகுதியில் வாழ்வதனால் தான். மேற்க்கத்தியவர்கள் வெண்மையாய் இருப்பது, அவர்கள் வாழும் பகுதிகளில் சூரியனின் சாரய்கதிர்கள் மட்டும் அதுவும் ஒவ்வொரு நாளின் சிறிய பகுதிகளில் மட்டும் விழுவதால், நிகழும் கடுங்குளிராலேயே என்பது அறிவியல் உண்மை.

இந்த இரண்டு உச்ச நிலைகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் மஞ்சள், பழுப்பு மற்றும் இளங்கறுப்பு என்று வாழும் பகுதிகளுக்கேற்ற வண்ணம் கொண்டுள்ளனர்.

ஆரியர்கள் கடும் குளிர்ப்பிரதேசத்திலிருந்து 4000 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப்பரப்பில் வந்தேறியவர்கள். கடுங்குளிர்ப் பிரதேசங்களில் உடலின் இயல்பான வெப்ப நிலையை விட, சுற்றுச்சூழல் வெப்பம் குறைவாயிருப்பதனால், உடலின் வெப்பம் வௌியறுவதைத் தடுக்க, இயற்கை, மனித உடலின் நிறத்தை வெண்மையாக்கிக் கொண்டது என்று பார்த்தோம்.

4000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் வாழக்கை முறை எப்படி இருந்தது என்பதை இப்போது பார்க்கலாம். குளிர்ப்பிரதேசங்களில் வாழ்ந்த ஆரியர்கள் உழவுத்தொழில் செய்ததாக எந்த சான்றும் சிக்கவில்லை. மிகக்குறைவான மக்கள் தொகை கொண்ட அக்காலத்தில் சிறு, சிறு இனக்குழுக்களாகவே அம்மக்கள் வாழ்ந்து வந்தனர். இயற்கையாக கிடைக்கும் உணவு வகைகளோடு, மாமிசம் உண்பதும் அவர்களது வழக்கம். மாமிச உணவில் மிகையான எரிசக்தி கிடைப்பதாலும், நிதானமாக செரிமானம் நிகழ்வதாலும், குளிர் பிரதேசத்திற்கு ஏற்ற உணவாக அது அவர்களுக்கு அமைந்தது.

தமிழர்களாகிய நாம் தொல்பழங்காலத்திலேயே, ஐம்பெரும் பூதங்களாகிய நிலம், நீர், காற்று, தீ, வௌி (Space) என்று ஐந்தையும் போற்றி வந்துள்ளோம். இதில் ஆரியர்களும் வௌியைத் தவிர்த்து மற்ற நான்கு பூதங்களை வணங்கி வந்துள்ளனர். அதிலும் ஆரியர்கள் அந்த நான்கு பூதங்களைவிட, அக்னி எனப்படும் தீயையே முதன்மையான தெய்வமாக வழங்கி வந்தனர். அதனுடைய நீட்சிதான் பிராமணர்களின் இன்றய யாககுண்டம் வளர்க்கும் சடங்குகள். அவர்கள் தீய்க்கு முதன்மை தரவேண்டிய தேவை என்ன? தமிழர்களாகிய நாம் தீக்கு சிறப்பான முதன்மையை ஏன் தரவில்லை?

இங்கு தான் வாழும் இடம் சார்ந்த பண்பாடு, வழக்கம், குணம் போன்றவற்றை நாம் கணக்கிலெடுக்க வேண்டியுள்ளது. பனிப்பிரதேசங்களில் வருடத்தில் பெரும்பாண்மையான நாட்களில் கடுங்குளிரே நிலவும். அக்கடுங்குளிரை எதிர்கொள்ள குகை அல்லது குடிசைகளின் நடுவில் தீயை எரிய விடுவார்கள். அந்தத் தீயே இரவில் ஒளியையும் கொடுக்கும். தீயை மூட்டுவது எளிதல்ல என்பதால், அனையாத தீயாகவே அத்தீயைக் காப்பார்கள்.

தீயில் சுட்ட மாமிசம் சுவையாயிருந்ததைக் கண்ட ஆரியர்கள், அந்த தீயிலேயே தாங்கள் வேட்டையாடிய விலங்குகளை பொசுக்கி உண்டு மகிழந்தனர். நாளின் பெரும்பாண்மையான நேரங்கள் தீயைச் சுற்றியே அவர்கள் வாழ்க்கை அமைந்திருந்தது. அவர்களின் கல்வி, கேளிக்கைகள் எல்லாம் தீயைச் சுற்றியமர்ந்த படியே தான் நடந்தது. பெரியவர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவங்களை, இளைய தலைமுறையினருக்கு சிறிய பாடல்கள் வாயிலாக, மனனம் செய்துகொள்ள ஏதுவான முறையில் சொல்லிக்கொடுத்தனர். அப்போது அவர்களிடம் எழுத்துருக்கள் உருவாகாமல் இருந்ததனால், 'சுலோக' வடிவிலேயே பாட்டுகளாக அந்த கல்வி இருந்தது. அப்போது அவர்கள் அறிந்த இசை என்பது இரண்டு சுரங்கள் கொண்டது தான். எனவே தான் அவர்களின் இன்றய சமஸ்கிருத சுலோகங்கள் கூட இரண்டு சுரங்களைப் பயன்படுத்தி இன்றும் பாடப்படுகின்றன. அவர்கள் பேசிய மொழி அஸ்வெதா என்று அழைக்கப்பட்டதாக தெரிகின்றது.

ஆக, குளிர்காய மூட்டிய தீ, உணவு பொசுக்கவும், கல்வி போதிக்கவும் பயன்பட்டது. தீயின் முன்னே இவையனைத்தையும் இவர்கள் செய்ததனால், இது அவர்களின் அடிப்படை பண்பாடாக பரிணமித்தது. அத்தகைய பண்பாட்டோடு இந்திய நிலப்பரப்பில் நுழைந்த ஆரியர்கள் இங்கும் அதே வழக்கங்களைக் கைக்கொண்டனர். இந்திய நிலப்பரப்பில் குளிர் காய வேண்டிய நாட்கள் குறைவானதாக இருந்தாலும், அவர்களின் பண்பாடாக இந்த வழி முறைகள் தொடர்ந்தன.

ஆனால், இந்திய நிலப்பரப்பில் அப்போது வாழ்ந்த தமிழர்களுக்கு இது புதிதாகவும், வினோதமானதாகவும் பட்டது. ஏற்கனவே, ஆரியர்களின் வெண் தோலால் மயக்கமுற்ற, பழுப்பு நிற/கருத்த நிற வட இந்தியத் தமிழர்கள், அவர்களின் இந்த வழிபாட்டு முறையின் மீதும் கவர்ச்சி கொண்டனர். இதை ஆரியர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு அந்த யாககுண்டங்களை மையப்படுத்தியே தங்களின் ஏய்ப்புத் திட்டங்களை வகுத்துக் கொண்டனர்.

முதலில் அவர்களது வழிபாட்டு முறையை முழுதாக நம்முள் திணிக்கப் பார்த்த அவர்கள், அதில் முழு வெற்றியடையாமல் போனதால், நமது தெய்வவழிபாட்டோடு அவர்களது முறையை இணைத்து, ஒரு கலவை வழிபாட்டு முறையை ஏற்படுத்தினர். அதில் அவர்கள் வெற்றியும் கண்டனர். அது இன்றுவரை ஆழ வேரூன்றித் தொடர்கிறது.

ஆனால், அவர்கள் தற்போது யாககுண்டத்தில் உயிர்களைப் பொசுக்குவதில்லையே என்று கேட்கலாம். ஆனால், புத்தன் காலம் வரை அதை அவர்கள் செய்துகொண்டுதான் இருந்தனர். யாககுண்டம் மூட்டி, உயிரோடு விலங்குகளை அதில் எரித்து, சடங்கு முடிந்ததும் அவற்றின் சுட்ட ஊணைப் புசித்தனர். புத்தர் இது பற்றிக் கேள்வி எழுப்பியபோது ஆரியர்கள், இந்த விலங்குகள் சொர்க்கம் போகும் என்று விளக்கினர். அப்படியானால், ஆரியர்களாகிய உங்களையும் தீயில் போட்டால், சொர்க்கம் போகலாமல்லவா, என்று கேட்ட புத்தரைப்பார்த்து அலரிப்போன அவர்கள், அப்போதிலிருந்து யாககுண்டத்தில் உயிர்ப்பலி கொடுத்து ஊண் உண்ணும் வழக்கத்தை விட்டனர். காலப்போக்கில் ஊண் உண்ணுவதையே கூட விட்டொழித்தனர். ஆனால் மற்றபடி தீமூட்டி சடங்கு செய்யும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

இங்கே ஒரு ரசனையுள்ள ஒர் செய்தியை கவனிக்க வேண்டும். ஆரிய இனம் அனைத்தும் இந்தியாவுக்குள் வந்து விடவில்லை. ஆரிய இனக்குழுக்களுள் பல உலகெலாம் பரவி, இன்றும் பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், யாககுண்ட வழக்கம் அவர்களுள் யாருக்கும் இன்று இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவர்களது அக்கால யாககுண்ட பண்பாடு, இயற்கையான மாற்றங்களை அடைந்து, தற்போது வீட்டின் Living Roomல் Fire Place என்று நாகரிகமான நவீன பயன்பாடாகி மலர்ந்துள்ளது. இதுவும் குளிர் நாடுகளில் மட்டும் தான்.

அதேபோல, யாககுண்டம் தேவைப்படாத இந்திய நிலப்பரப்பில், அந்த பண்பாடே அழிந்திருக்க வேண்டுமே? 4000 ஆண்டுகளுக்கு முந்தய ஆரியப் பண்பாடு, இந்திய நிலப்பரப்பில், இன்றும் தொடரவேண்டிய காரணம் என்ன?

ஒரு பண்பாடு என்பது சூழலியல் தேவையின் அடிப்படையிலேயை படிப்படியாக உருவாகி, வளர்ந்து செழிப்படைகிறது. ஆனால், சூழல் மாற்றத்தால் அந்த பண்பாடும் மாற்றமடைவது தான் இயல்பானது. மேற்குலகில் அறிவியல் வளர்ச்சியினால், அவர்களின் பழைய அக்னியை மையப்படுத்திய பண்பாடுகள், கால, சூழல், அறிவியல் மாற்றங்களால் இயற்கையான மாற்றமடைந்தது. சமையலறை இருப்பதால் Fire Placeல் மாமிசம் சுடத்தேவை இல்லை. எழுத்து மொழி உருவான பிறகு சுலோக வழிக்கல்வி தேவையற்றதாகி விட்டது. ஏய்க்க அங்கு கறுப்பர்கள் இல்லாததால், தாங்கள் மட்டும் படிக்கவென்று, தங்களது ஏய்ப்பு சுலோகங்களை எழுதவென்று, உருவாக்கப்பட்ட, பேசப்படாத சமஸ்கிருதம் என்ற குழூஉக்குறி மொழி, தேவையற்றதானது.

ஆனால், இந்திய நிலப்பரப்பில் வந்தேறிய ஆரியர்களால், இது இந்திய மக்களை ஏய்த்துப் பிழைக்க ஒரு கருவியாக பயன்பட்டதால், அவர்கள் ஏய்த்துப் 'பிழைப்பதற்கான தேவையை' நிறைவு செய்ததால், இந்திய 'நிலப்பரப்புக்கு தேவையற்ற பண்பாடாக' இருந்தாலும், இந்த ஆரியப் பண்பாடு இன்றும் சீரும், சிறப்போடும் தொடர்கிறது. இந்த ஆழமான உண்மையை நாம் உணர்ந்தால் தான், தீயை மூட்டி சடங்கு செய்வதில் 'நமக்கு' எந்தப் பலனும் இல்லை என்பது புரியும்.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், தீயால் நன்மையும் உண்டு, கெடுமையும் உண்டு. ஆதிகாலத் தமிழர்களுக்கு தீயால் நன்மைகளைவிட கெடுதியே மிகையாக நிகழ்ந்தது. தற்காலத்தில் தீயின் நற்பயன்கள் மிகுதியாக வளர்ந்திருந்தாலும் அதன் அழிவுத்திசைகளும் வளர்ந்தேயுள்ளது. உண்மையாகப் பார்த்தால் தீயோடு மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதால் தான், கெடுதிக்குப் பெயரே 'தீய்மை', 'தீயது' என்றாகியது, ஆதிகாலத் தமிழ்ச் சொல்வழக்கில்.

ஆக, தீயைப் 'புனிதத்தின்' அடையாளமாக பார்ப்பனீயம் சொல்வதெல்லாம் முழுப் பித்தலாட்டம் தான். புனிதமானதாக ஒரு பொருள் பார்க்கப்பட வேண்டுமானால், அப்பொருளால் நன்மைகள் மட்டுமே விளைய வேண்டும். தீயால் நன்மையும், தீய்மையும் நிகழ்வதால் அதை ஒரு இயல்பான ஒரு பொருளாகப் பார்க்க வேண்டுமே தவிர, புனிதமாகப் பார்க்க இயலாது. ஆக, கடுங்குளிரிலிருந்து தப்பிக்க தீ ஆரியர்களுக்கு உதவியதால்தான் அது அவர்களுக்கு முதன்மையானதும், புனிதமானதுமான தெய்வமானது. நமக்கு அப்படிப்பட்ட தேவை இல்லாததால் அது நமக்கு ஒரு முதன்மையான தெய்வமாகவில்லை. ஆனால், தீ என்பது தமிழர்களின் பல தெய்வங்களில் ஒன்றானது. தீயின் அழிவு சக்தியை உணர்ந்திருந்த ஆதித் தமிழன், சிவனையே கூட தீயின் (அழிவின்) ஒரு வடிவமாகவும் வணங்கினான் (சிவம் -> சிவப்பு -> நெருப்பு). இது தன்னை அச்சுறுத்தும் அனைத்தையும் வணங்கும் இயல்பான ஆதி மனிதர் பண்பாடுதான்.

புனிதமாகப் பார்க்க வேண்டியது ஜோதி எனப்படும் ஒளிதானே தவிர அக்னி எனப்படும் தீ அல்ல. ஒளியால் தாவரங்கள் வளர்கின்றன, மற்ற அனைத்து உயிர்களுக்கு உணவளிக்கும் மூலமாக திகழ்கின்றன. ஆனால், தீயால் தாவரங்கள் எரிந்து பொசுங்கி அழிகின்றன. தீயிலிருந்து ஒளியும் பிறந்தாலும், தீ வேறு, ஒளி வேறு. தீயில்லாமல் ஒளியை ஏற்படுத்த இயலும். தீயில்லாமல் ஒளி ஏற்படுத்தும் எண்ணற்ற சாதனங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டுள்ளன. இயற்கையும் பல இலக்கம் ஆண்டுகளுக்கு முன்பே அதையும் நிகழ்த்தியுள்ளது. மின்மினிப் பூச்சி Photo- (bio)Chemical Reaction வாயிலாக ஒளி ஏற்படுத்துவது ஒரு விந்தை. இதைப் போன்று பல உள.

ஆக, ஒளி புனிதமானது. ஆறாம் திருமுறையில் பகுத்தறிவு ஆன்மீகம் பேசிய வள்ளலாரும், ஒளியை வழிபடச் சொன்னார். ஒளி தரும் சூரியனுக்கு தை முதல் நாளன்று தமிழர்கள் நன்றி செலுத்துவது பண்டைத் தமிழரின் மாண்புக்கு ஒரு அடையாளம்.

ஆக, தமிழர்கள் தங்களது சடங்குகளை அகல் விளக்கு அல்லது குத்துவிளக்கு போன்றவற்றின் முன்னிலையில் நிகழ்த்துவது தான் அறிவுக்குகந்த செயல். மற்றவை அறிவீனம்! 

- முனைவர் வே.பாண்டியன்

Comments

8 comments

8
தமிழநம்பி
பாராட்டத்தக்க புதிய பார்வை!
punithan
Ella villakum villakalla sandorku poiya villakae vilaku.- kural.famous book of TIMEexplain space.nam kanmunnae eqpit nagarikum pol pala nagarikum irukerathu.anal piramanithai mattum kanmun niruthkerom>atharku nam chinna space than karanamaga irukumo.
Dr. V. Pandian
புனிதன்!
எகிப்து நாகரிகம், கிரேக்க நாகரிகம், சீன நாகரிகம், தமிழர் நாகரிகம், ஆரிய நாகரிகம், யூத நாகரிகம் என்று பல பழம்பெரும் நாகரிகங்கள் உள்ளதான். ஆனால், எம்மைப் பாதிக்கும் அயலார் நாகரிகத்தின் வரலாற்றை ஆய்வதுதான் எமது முதல் கடமை. மற்றவற்றையும் ஆய்வு செய்யலாம். செய்வோம்.

எம்மக்களின் மீது மாற்றான் நாகரிகத்தின் ஆதிக்கத்தை ஒடுக்க இது போன்ற ஆய்வுகள் காலத்தின் தேவை. எனது ஆய்விலே தவறிருப்பின் சுட்டிக் காட்டலாம். எனது சாண்றான்மையின் மீது எனக்கு நாம்பிக்கை உண்டு.

அதனால், இக்குறள் இங்கு பொருந்தாக் கூற்று.

ஜெயலலிதாவின் காலிலே மண்டியிட்டுக் கிடந்தது எனது சமூகம் சில காலத்திற்கு முன்பு. தற்போது சற்றே அதிலிருந்து மீண்டுள்ளது. ஆனாலும், இன்றும் அந்த யாககுண்டப் புகையிலே சிக்கி, திக்குத்தெரியாமல் சுற்றிக்கொண்டுள்ளது எனது சமூகம். அவன் சமஸ்கிருதத்தில் திக்கு சொல்கிறான் போல. இவனுக்குப் புரிந்தால் தானே? புரியாத மொழியில் ஏனடா திக்கு சொல்கிறாய் என்று கேட்க இவனுக்கு நாதியில்லை! மீட்பார்கள் தேவை நன்பரே!
Dr. V. Pandian
அது மட்டுமல்ல தோழரே! ஈழத்தில், இந்தியப் பார்ப்பான் முட்டிய யாகத்தீயில் புகையானார்கள் லட்சக்கனக்கான எம்மின மக்கள். நெய்யின் புகைவாடை மட்டுமே அறிந்திருந்த இக்கொடியக் கும்பலுக்கு, தீக்குளித்த 15 முத்துக்குமாரன்களின் பிணவாடைகளை உணரமுடியாமல், அவர்களின் நாசி நரம்புகளில் நெய்யின் கொழுப்பு மண்டிக்கொண்டு விட்டது.
கணேஷ் எபி
நல்ல கட்டுரை தான். ஆனால் புத்தர் சொன்னதற்காக மாமிசம் உண்பதை ஆரியர்கள் விட்டு விட்டதாக சொல்வது எல்லாம் அதிகபடியான கற்பனை.
Dr. V. Pandian
புத்தரும் ஆரியரும் பற்றிய செய்திகள் பலப்பல நூல்களில் கிடைக்கும் பொதுவான செய்திதான். அவர்கள் அனைவரும் பூர்விகத்தில் மாமிசம் உண்டவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற, ஆரியரால் எழுதப்பட்ட நூலே ஒரு சான்று. பனிப்பிரதேசங்களில் உணவுப் பற்றாக்குறை என்பது இயல்பான ஒன்று.

புலால் மறுப்பு என்பது தமிழரின் ஒரு பகுதியரின் பண்பாடுதான். இங்கு இயற்கை மரக்கறி உணவு அனைத்து காலங்களிலும் கிடைத்தது தான் அதற்கான காரணம். அதோடு வள்ளுவம் செழித்த புமி தமிழ் பூமி. சைவ உணவு வழக்கம் கொண்டோர் தங்களை, மாமிசம் உண்பவர்களைவிட உயர்ந்தவராக எண்ணும் வழக்கம் உள்ளது. பல தமிழ் சாதிகளின் உட்பிரிவுகளிலேயை இந்த பாகுபாடு உள்ளது.

எனவே, ஆரியர்களும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நிலைநாட்ட, நாளடைவில் புலாலை விட்டிருக்க வேண்டும்.
punithan
ayya nan sonathu pothu parviel.ungal parvaiyai aruvial parvai erunthathal ithyum appadi eduthu kolvergal ena ninthanga ayya.valvin pala mudanambikigali ungali pontra sanderorgalain kaiyel ulla vilagai kondae ( athu pirmina mudanambikai irunthalum) kadanthu salgerom.antha ennathilthan antha kuralai painpaduthinan ayya. ungal manathai pathithu irunthal manikavum ayya.
தா.வேல்முருகன்
திரு.பாண்டியன் அவர்களே, ஜெயலலிதா காலில் விழுந்த காலம் போய்.. இப்பொழுது கருணாநிதி - தன் பிள்ளைகளுக்காகவும்.. பணம்.. பதவி வேண்டியும் ஒரு இன்ன எழுச்சியை கொலை செய்த பாதகன்... தமிழ் பேசி.. எழுதி.. ஏய்த்து... இன்ன உணர்வை கொன்ற கொடியவன். எதிரியை விட துரோகி மிக கொடியவன்..

இவர்களை பார்க்கும் பொழுது எம்.ஜி.ஆர் எவ்வளவோ மேல்.. இனத்தை தாண்டி நன்றி உள்ள மனிதனாக தமிழனுக்கு ஏதோ செய்தான். அது திரைப்பட பாடலாக இருந்தாலும் சரி... (அந்த சின்ன கடமைகள் கூட தற்காலத்தில் காண முடிவதில்லை.. நல்ல ஒரு சில சிறு கருத்தைக்கூட மக்களிடம் கொண்டு செல்ல அனைவரும் அஞ்சுகின்றார்கள்) மதிய உணவாக சரி.. ஈழ உதவியாக இருந்தாலும் சரி...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.