"எந்தவொரு தனிநபருக்கும் ஸ்டாம்ப் கூடாது. குறிப்பாக ஈ.வெ.ரா.வின் ஸ்டாம்ப் இருப்பது நாட்டுக்கே அவமானம்! அதை உடனே தடை செய்ய வேண்டும் இல்லையேல் நாங்கள் பிரதமருக்கு வலியுறுத்திக் கோரிக்கை வைப்போம்!” என்று கூறும் அர்ஜூன் சம்பத், “இவர் பிரிட்டிஷாரின் எடுபிடி. இந்தியாவுக்குச் சுதந்திரம் வேண்டாம் என்றவர். அவர் ஒரு தேசத்துரோகி, அவர் தமிழரே கிடையாது. அவருக்கு எதற்கு ஸ்டாம்ப்?" என்று அதற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.

அரைவேக்காடுகள் என்று நான் தொடக்கத்திலே சொன்னதற்குக் காரணம் இதுதான். ஆங்கில ஆட்சி உடனே அகலக்கூடாது; அகன்றால் அது ஆரிய பார்ப்பன ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும் என்பதால் அவர்கள் ஆட்சி நீடிக்கட்டும் என்ற கருத்தை விவேகாநந்தரே கூறியுள்ளார் என்பது இந்த நொய்யரிசிகளுக்குத் தெரியுமா?

இதோ விவேகாநந்தர் கூறியதைப் பாருங்கள்:

ஆரியர்களின் ஆதிக்கக் கொடுமையால் பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் தான் கல்வியும் உரிமையும் பெற்றனர். அந்த ஆட்சியிருக்கும்போதே ஆரிய பார்ப்பன ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.

"ஆரியர்களே நீங்கள் இறந்தகாலப் பிரதிநிதிகள். நீங்கள்தான் சூனியம், நீங்கள் இன்னும் ஏன் வாழ்கிறிர்கள்? நீங்கள் ஏன் மண்ணில் கரைந்து, காற்றில் கலந்து மறைந்துவிடக்கூடாது.

நீங்கள் இந்த பாரதத்தை நிர்மாணிக்கும் உரிமையை உரியவர்களிடம் ஒப்படையுங்கள். அதற்கு இதுதான் சரியான காலம். பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ், கல்வியும் ஞான ஒளியும் சுதந்திரமாகக் கிடைக்கும். இந்த நேரந்தான் ஒப்படைக்கச் சரியான நேரம். நவபாரதம் ஏழை எளிய மக்களிடமிருந்து உருவாகட்டும்" என்றார்.

ஆக, ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியும், உரிமையும், விழிப்பும், உயர்வும் பெற உரிய காலம் ஆங்கில ஆட்சிக் காலமே என்கிறார் விவேகாநந்தர்.

இதைத் தான் பெரியாரும் சொன்னார். ஆரிய பார்ப்பனர்களால் இந்த நாடு மூடநம்பிக்கையிலும், அறியாமையிலும் அமுக்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு சாதிக்கொடுமை உருவாக்கப்பட்டு இழிமக்களாய் மாற்றப்பட்டனர். இந்நிலை பல நூற்றாண்டுகளாய் நீடித்தது. ஆனால், தற்போது ஆங்கில ஆட்சியால் சாதிக்கொடுமை விலக்கப்பட்டு எல்லோருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு கிடைக்கிறது. எனவே, பார்ப்பன ஆதிக்கம் அழியும் மட்டும் ஆங்கில ஆட்சியே நீடிக்கட்டும். விடுதலை கிடைத்தால் அது ஆரிய பார்ப்பன ஆதிக்கத்திற்கே பயன்படும் என்றார்.

மக்கள் நலன்கருதி சொல்லப்பட்ட கருத்தேயன்றி, பெரியார் சுயநலத்திற்காகச் சொல்லவில்லையே! ஆங்கில கவர்னர் பெரியாரை மாகாண முதல்வராய் பொறுப்பேற்க அழைத்தபோது அதை மறுத்த சுயநலமற்ற பொதுநலத் தொண்டரை பொறுக்கிகளெல்லாம் விமர்சிப்பது கேவலத்திலும் கேவலம்.

நாடு சுதந்திரம் அடைந்தது. அதற்கு காந்தி நாடு என்று பெயர் வைக்கச் சொன்னது பெரியார். காந்தி சுடப்பட்டபோது சுட்டவன் இஸ்லாமியர் அல்ல; இந்து என்ற உண்மையைக் கூறி நாட்டில் கலவரம் நிகழாமல் தடுத்தவர் பெரியார்.

இக்கட்டான காலகட்டத்தில் இந்த நாட்டின் ஒற்றுமைக்காக பிரிவினைக் கோரிக்கையை தற்காலிகமாக கைவிட்டவர் பெரியார். சீனப் போரின் போது நமது உடல், பொருள் உயிர் எல்லாவற்றையும் இந்த நாட்டிற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டவர் பெரியார்.

உண்மை இப்படியிருக்க ஒன்றும் அறியாதவர்கள் எல்லாம் பெரியாரைக் கொச்சைப்படுத்துவது கொடுமையிலும் கொடுமை!

பெரியாருக்குத் தபால் தலை வெளியிட்டது காங்கிரஸ் அரசு அல்ல; ஜனதா அரசு! இந்த உண்மைக்கூடத் தெரியாத அரைவேக்காடுகள் எல்லாம் இன்று தலைவர்கள்! எப்படிப்பட்ட கேவலம் பாருங்கள்.

தந்தை பெரியாரின் நூற்றாண்டை ஒட்டி அன்றைய ஜனதா அரசு பெரியார் தபால்தலை வெளியிட்டது. அந்த அரசில் வாஜ்பாயி, அத்வானியெல்லாம் அமைச்சர்கள். அதன் பொருள் என்ன இன்றைய பி.ஜே.பி. ஆட்சி வெளியிட்டது போன்றதுதானே அது!

தபால் தலையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை எஸ்.மோகன் அவர்கள் தலைமையில், உயர் நீதிமன்ற நீதிபதி மாண்பமை ஏ.வரதராசன் 17.09.1978இல் பெரியார் திடலில் வெளியிட்டார்.

பெரியாரின் 125 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி அப்போது வாஜ்பேயி தலைமையில் அமைந்த மத்திய அரசு தந்தை பெரியார் அவர்களைப் பெருமைப்படுத்த அஞ்சல் சிறப்பு உறையை வெளியிட்டது அதைச் சென்னையில் எஸ். திருநாவுக்கரசர் மத்திய இணையமைச்சர் என்ற முறையில் வெளியிட்டார்.

ஆக, பெரியாருக்கு இப்பெருமைகளைச் செய்தது பி.ஜே.பி. அரசு. குறிப்பாக வாஜ்பேயி என்ற நிலையில் காங்கிரஸ் செய்ததாகக் கற்பனை செய்து கொண்டு களங்கம் பேசுவதும், தடைசெய்யச் சொல்வதும் கடைந்தெடுத்த கயமைச் செயலாகும்!

தமிழராய்ப் பிறந்த விபீஷணனாய் பிழைப்பு நடத்தும் இந்தப் பேர்வழிகள், வரலாறு தெரியாமல் தலைவர்களின் பெருமை தெரியாமல் பிதற்றுவதை இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்! பெரியாரிடம் பிழை செய்தவன் எவனையும் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்! எச்சரிக்கை!

- மஞ்சை வசந்தன்

Comments

18 comments

18
இராமியா
விவேகானந்தர் கூறியவை எந்த நூலில், எந்த பதிப்பில் இருக்கிறது என்று எடுத்துக் கூறி இருந்தால், அதை மேலும் பிரபலப்படுத்தவும், அதை வைத்துப் பல வாதங்களை முன்வைக்கவும் முடியும். தயவு செய்து கூறுகிறீர்களா?
mani.pari
aariyarkal veliyilirunthu vantharkal enru entha puththakaththil irukkirathu? ellam vellakaranin uugam thaan.
மஞ்சை வசந்தன்
#ஆதாரம் : எழுமின் விழிமின்!– (ஹிந்து ராஷ்டிரத்துக்கு அறைகூவல் பக்-150-152)
மஞ்சை வசந்தன்
awake arise - eknath ranade

விழிமின் எழுமின் -R. கோபாலன்
இராமியா
நன்றி.
இராமியா
ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தார்கள் என்பது வெள்ளைக்காரனின் ஊகம் என்றால், அந்த ஊகம் தவறானது என்று எடுத்துக் காட்டி இருக்கிறீர்களா? குறைந்த பட்சம் அதற்கான முயற்சியாவது செய்து இருக்கிறீர்களா?
மஞ்சை வசந்தன்
ஆரியர்கள் அயல்நாட்டிலிருந்து வந்தார்கள் என்பதற்கு அவர்கள் உருவமே ஆதாரம். இந்திய அறிஞர்கள் பலரும் இதை ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர். ஆங்கிலேயர்கள் மட்டும் தான் சொல்கிறார்கள் என்பது இந்துத்துவவாதிகளின் அபத்தமான பொய்.
mani.pari
tholkappiyar ,thiruvalluvar,avvaiyar , sangappulavargal ,ilangovadikal , kambar, annal ambethkar ivargal yarum sollavillai en? illai sollavillai. vellaiya kasappu karanai nambum aadukala naam?
mani.pari
karupa ieukkum parpanar , vellaiya irukkum parpanar allathavar? vellaiyaga irukkum periyar ev.ve ra ivargal yar ariyar yar thiravidar ayya ?
mani.pari
ravana is thamizhar , where is evidence?
mani.pari
pleas read dr ambethkar about ariya , which sase there is no ariya race even in anthropalagy and collar coplexsen. the theariy of ariya race was rijected by marxmullar in ending dayes by his article. pleas read it.
குமாரசாமி
இட ஒதுக்கீடு ஆரியத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை முழுமையாக அவர்கள் அறிந்ததால்தான் அதை தாங்கள் எதிர்ப்பதை விட கோடாலி காம்புகள் மூலமாக எதிர்ப்பது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதன் விளைவுதான் அர் ஜன் சம்பத்துகள். புசியமித்திரன் காலத்தில் இருந்து மனு, கௌடல்லியர் மூலமாக மண்ணின் மக்களை கட்டுக்குள் வைப்பதற்காக அவர்களை அடித்தட்டு மக்களாகவும் அவர்களுக்கு கல்வி, உணவில் எண்ணை, பருப்பு வகைகள் நீக்கம் முதலிய கட்டுப்பாடுகளை கடவுளின் பெயராலேயே கருத்து வழியாகவே உருவாக்கி சுமார் 2000 வருடங்கள் வரை செயல் படுத்தி விட்டார்கள். பெரியார் அம்பேத்கார் காரணமாக இன்று அவர்கள்க்கு அர்ஜுன் சம்பத்கள் தேவைப்படுகிறார்கள்.எந்த கூச்சமும் இல்லாமல் அவர்கள் விவாதங்களில் பங்கு பெருவது அவர்களுக்கு எவ்வளவு வசதி. ஓரளவு வரலாற்றை ஒழுங்காக சொல்ல வேண்டும் என்ற எண்ணமுள்ள ராகுல சாங்கிருத்தியாயன் தனது ரிக் வேதகால ஆரியர்கள் என்ற நூலில் ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தார்கள் என்பதை மறைத்து இந்தியாவில் இருந்து வெளியே போனார்கள் என்று சொன்னால் அது தவறாகி விடும் என்றும், ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தது கி.மு. 1500 வாக்கில்தான். ஆகையால் ரிக் வேதம், மகாபாரதம் போன்றவற்றை 8000,10,000 வர்டங்களுக்கு முன் என்று சொன்னால் காலக்குழப்பம் ஏற்படும் என்றும் சொன்னார் அதாவது பொய்யை பொருந்தும் படியாகச் சொல்லச் சொன்னார். ஊடக வலிமை காரணமாக அவர்கள் இப்படி தறுதலைகளாகச் சொல்கிறார்கள்.
இராமியா
மணி பாரி அவர்களே! இக்கட்டுரை ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளை அடையப் பாடுபட்ட, பெரியாரைச் சிறுமைப் படுத்துவதை எதிர்த்து எழுதப்பட்டது. ஆனால் நீங்கள் இதைப் பற்றி விவாதிக்காமல் ஆரியர்கள் எங்கிருந்து வந்தர்கள்?, ஆரியர்கள் என்று ஒரு இனமே இல்லை; இராவணன் தமிழனா? என்று விவாதத்தை ஏன் திசை மாற்றுகிறீர்கள்?

பழந்தமிழ் இலக்கியங்களில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்ற மன்னன் இருந்தான் என்று இருப்பதே ஆரியர்கள் எனும் இனம் இருந்ததை உநுதிப்படுத்துகிறது அல்லவா? விவேகானந்தரும் ஆரிய இனம் இருந்ததை / இருப்பதைப் பற்றிப் பேசி இருக்கிறாரே? அம்பேத்கர் ஆரிய இனம் என்று ஒன்று இல்லை என்று எழுதினாரா என்பது பற்றித் தெரியவில்லை; அப்படி எழுதி இருந்தால் அதை எந்தச் சூழ்நிலையில், எந்த அர்த்தத்தில் ஏழுதினார் என்பதையும் மனதில் கொண்டு தானே பார்க்க வேண்டும்? பெரியாரைச் சிறுமைப் படுத்துவதற்குச் சார்பாக அதைப் பிரயோகப்படுத்துவது தவறு என்று தோன்றவே இல்லையா?

திறமை இல்லாத உயர் சாதிக் கும்பலினர் மிக எளிதாக உயர் நிலைகளை அடையவும், திறமை இருப்பினும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கீழ் நிலை வேலைகளையே செய்ய வேண்டி இருப்பதுமாக உள்ள சூழ்நிலைகளை எப்படி மாற்றுவது என்று விவாதித்தால் அது நாட்டிற்கு நல்லது அல்லவா? அதைப் பற்றி விவாதியுங்களேன்.
Surya
Very nice article :) keep it up.
Surya
Nice article. Keep it up :)
mani.pari
no need enemy to develop any one like other states. ariya vs diravida racial thiyari is not history but politics.this thiyari is not introduced by tamil scholars instead of european political funded scholars especially by marks mullar and kalduwell by subsequently in later period ,both are refused as areya/diravida are not racial (inam)one. which is not known our people. i know the above said facts,therefore i registered my comment. please we have to prepare any new tool for upliftment of our people and success. everyone changes, we have to change like periyar ,otherwise our people may ruined
mani.pari
pleas know about ariya vellaa at pazhani eria, ariya menavar at nagappatinam coastal area, chola,ayanar,god siva are also aiya by our tamil agarathi.butha and vartamana also are ariya. ari=mal, the land ( central india ) was ruled by thirumall stated namely arinadu- aryanadu-arayanadu. thiravida is also name of place (thiru-king + vidam-idam= rulde place of kings).present tamilnadu-andira-karnadaka-kerala- kugarat are place of dravidaland. bramin not attall a jews we are not attal jermaniyan(ariyaa!). pleas find truth inthe eye of periyar by new evidence, we have to develop periyar thought in favor to depressed people in all sections in all means .
இராமியா
we have to develop periyar thought in favor to depressed people in all sections in all means .

But Mr.Mani.Pari, your approach is not on such line.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.