தூய்மை இந்தியா(ஸ்வச் பாரத்) என்ற திட்டத்தை காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2 அன்று நரவேட்டை மோடி அறிவித்தார். இந்த திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக சச்சின் டெண்டுல்கார், அனில் அம்பானி, சல்மான்கான், யோகா குரு ராம்தேவ், சசி தரூர், கமல்ஹாசன், பிரியாங்க சோப்ரா போன்றவர்களை நியமித்திருக்கிறார்.
தனது உடலின் அனைத்துப் பாகங்களையும் விளம்பரத்திற்கு விட்டு பணம் சம்பாதிப்பவன், இந்திய மக்களை கொள்ளையடித்து உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்தவன், குடித்துவிட்டு கார் ஓட்டி வீடில்லாமல் ரோட்டோரம் தூங்கிக்கொண்டிருந்த ஏழைகளை காரேற்றிக் கொன்றவன், காவிவேட்டி தறித்த பொறுக்கி சாமியார் என தன்னையும் தன்னுடைய கொள்கைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஒன்பது பேரை மோடி நியமித்திருக்கிறார்.
தன்னுடைய திரைப்படங்களில் இந்துத்துவ பார்ப்பன பாசிசத்தை மிக நேர்த்தியாக நுழைத்து உலகநாயகன் என்ற பட்டத்தை வென்ற கமல் அவர்கள் மோடியின் அழைப்பை தான் பெரும்பாக்கியமாகக் கருதுவதாக கூறியிருக்கிறார். மேலும் கட்சிகளுக்கும், சித்தாந்தங்களுக்கும் அப்பாற்பட்ட மனித சேவையில் தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
கமலுக்கு வேண்டுமானால் கட்சிகளிலும், சித்தாந்தங்களிலும் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை அப்படி இருந்தாலும் தன்னுடைய சினிமா பிழைப்புவாதத்திற்காக அவர் அதை வெளியே சொல்லாமல் இருக்கலாம். ஆனால் மோடிக்கு?
பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதை வெளிப்படையாக கண்டித்த ஒரே நடிகன் நான்தான் என்று பெருமை பேசிக்கொள்ளும் கமல் அவர்களே! குஜராத் கலவரத்தைப் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா? நரோடா பாட்டியா, குல்பர்சொசைட்டி பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? உலக நாயகனுக்குத் தெரியாமலா இருக்கும்! விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டப்போது “பாசிசத்தின் முன் மண்டியிட மாட்டேன்” என்று சபதம் செய்தீர்களே? ஒரு வேளை உங்கள் படங்களுக்கு தடை விதிக்கக்கோரும் ‘இஸ்லாமிய பாசிசத்தின்’ முன்தான் மண்டியிட மாட்டீர்களோ? இருக்கலாம். இந்துத்துவ பாசிஸ்ட்டுகள் எப்போதும் தங்களுக்குள் கைகுலுக்கிக்கொள்வார்கள். அதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஆனால் ஆச்சரியப்பட வேண்டிய செய்தி என்னவென்றால் தூய்மை இந்தியா என்று மோடி சொல்கிறாரே அது என்ன தூய்மை இந்தியா? எந்த குப்பைகள் இந்தியாவின் தூய்மையை கெடுத்துக் கொண்டிருக்கின்றன? சமானிய மக்கள் கொட்டும் குப்பைகளா? நிச்சயமாக இல்லை. இந்தியாவை உலகின் குப்பைக்கிடங்காக மாற்றியது இங்குள்ள பணவெறி படித்த, உலகமயமாக்கலால் உருவாக்கப்பட்ட பன்னாட்டு தொழில்நிறுவனங்ககளின் கைக்கூலி ஆட்சியாளர்கள்.
உலகின் முன்னேறிய நாடுகளில் இருந்து 70% மின்னணுக் கழிவுகள் இந்தியாவிற்குள் கொண்டுவரப்படுகின்றன, குறிப்பாக டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
நரவேட்டை மோடியின் குஜராத்தில் உள்ள அலாங்க் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான டன்கள் நச்சுவேதிப்பெருட்கள் நிறைந்த கப்பல்கள் உடைக்கப்படுகின்றன. இங்கு விபத்துக்களில் ஆண்டு தோறும் 60 தொழிலாளர்கள் உயிர் இழக்கிறார்கள். முன்னேறிய நாடுகளில் குப்பைகளை மறு சுழற்சி செய்ய டன் ஒன்றுக்கு 12000 ரூபாய் செலவாகும். ஆனால் இந்தியாவில் இதை வெறும் 2800க்கு செய்துவிடலாம். இதனால் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேலை நாடுகள் தங்களுடைய குப்பைகளை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கின்றன.
வேதந்தா, ஸ்டெரிலைட், ஜிந்தால் போன்ற நிறுவனங்கள் இந்தியாவின் காடுகளை அழித்து, பழங்குடி இனமக்களை காடுகளில் இருந்து விரட்டி, இந்திய மக்களுக்கு சொந்தமான கனிம வளங்களை கொள்ளையடித்திருக்கின்றன; கொள்ளையடித்துக் கொன்டிருக்கின்றன.
கோகோ கோலா, பெப்சி போன்றவை லச்சக்கணக்கான லிட்டர்கள் நிலத்தடிநீரை உறிஞ்சி தண்ணீர்ப் பற்றாக்குறையை ஏற்படுத்துவதோடு அவை தமது கழிவுகளை வயல்களில் கொட்டி விவசாயத்தை அழித்து வருகின்றன.
இதுவெல்லாம் பாசிச மோடிக்கு தெரியாத ஒன்றல்ல! குஜராத்தின் சுற்றுச்சுழலை கெடுத்து நாசமாக்கியதில் மோடிக்கும், அவரது புரவலர் அதானிக்கும் பெரும்பங்கு இருக்கின்றது. உலகில் மிக மோசமான சுற்றுச்சுழல் பாதிப்புக்குள்ளான நகரங்களில் குஜராத்தில் உள்ள வாபிக்கும், அகமதாபாத்திற்கும் இடையில் உள்ள வேதிப்பொருள் தொழில்துறை பகுதி உள்ளது.
உலகமயமாக்கலை கொலைவெறியொடு இந்திய மக்கள் மீது திணிக்கும் மோடியால் ஒருக்காலும் இந்தியாவை சுத்தப்படுத்த முடியாது. மோடியின் பாசிசப் படையில் புதிதாக சேர்ந்திருக்கும் கமல் போன்ற பிழைப்புவாதிகளாலும் முடியாது. இந்தியாவை சுத்தப்படுத்த ஒரே வழி இந்திய மக்களின் மீது உண்மையிலேயே பற்று கொண்ட இந்திய பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியை புரட்சியின் மூலம் கொண்டுவருவதுதான்.