தமிழீழ இனப்படுகொலையில் இங்கிலாந்தின் பங்கு என்ன? தமிழர்களை இனப்படுகொலை செய்தால் இங்கிலாந்துக்கு என்ன பயன்?
1947 வரை பிரிட்டன் பேரரசின் காலனியாகயிருந்த இலங்கைத் தீவை வீட்டு அது செல்லும் போது முழு அதிகாரத்தையும் சிங்களவர்களுக்குக் கொடுத்து விட்டு அவர்களோடு இராணுவ ரீதியான சில இரகசிய ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டது.
இந்த ஒப்பந்தத்தில், இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்து பிரிட்டனின் தரைப்படை, விமானப்படை மற்றும் கப்பற்படை ஆகியவற்றை இலங்கை தீவுக்கருகிலும், திரிகோணமலை துறைமுகம் போன்ற முக்கியத்துவமான இடங்களிலும் சுதந்திரமாக நிறுத்தி வைத்துக்கொள்வோம் என்றும், இதற்கு கைமாறாக சிங்களவர்கள் இந்த நிலப்பகுதியில் எழும் பிரச்சனைகளை சமாளிக்க தாங்கள் பயிற்சி அளிப்போம் என்றும், இதனைக்கொண்டு உள்நாட்டு பாதுகாப்பு சீர்கெடாமல் அதே சமயம் இலங்கையிலிருக்கும் தங்களின் இராணுவ நிலைகளுக்கு எந்தவொரு பிரச்சனையும் ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இலங்கையிலுள்ள தங்கள் இராணுவ நிலைகளுக்கு பிரச்சனை ஏற்படுமாயின் அது இந்தியப் பெருங்கடலில் தனது பிடியை அடியோடு தளர்த்திவிடும் என்றுணர்ந்த பிரிட்டன் அரசு, ஒருவேளை நிலைமை சிங்களவர்களின் கட்டுக்கடங்காமல் சென்று விட்டால் பிரிட்டனின் கூடுதல் துருப்புகள் வரவழைக்கப்பட்டு நிலைமையை சீராக்க பயன்படுத்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் வடக்கே இந்தியாவிலுள்ள மக்களின் மூலம் இலங்கைத் தீவின் ஒற்றை ஆட்சிக்கு ஏற்படும் சிக்கல்களைப் பற்றியும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் இறுதியாக சிங்களவர்கள் இதனை சரியாகச் செய்தால் அதற்கு கைம்மாறாக இலங்கையில் நடைபெறும் சிங்களவர்களின் ஆட்சிக்குத் துணையாகவும், இலங்கையின் ஒற்றுமையைக் காக்கவும் பிரிட்டன் துணைநிற்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழத் தமிழர்களுக்கு சொந்தமான நிலப்பரப்பில் இருக்கும் திரிகோணமலை என்ற இயற்கை துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவத்தை ஆரம்பம் முதலே உணர்ந்து, அதனைப் போன்றவற்றை அடைய இயல்பாக ஐரோப்பிய எதிப்புணர்ச்சி கொண்ட, பொதுவுடைமை சிந்தாந்தங்களில் ஈடுபாடு கொண்ட தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்காமல், சிங்களவனை தங்களின் ஏகாதிபத்திய, இராணுவ நலனுக்காகப் பயன்படுத்தி கொண்டனர். இறுதியாக தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிராகவும், இந்த நாடுகளின் ஏகாதிபத்திய நோக்கங்களுக்கு எதிராகவும் தங்கள் இன விடுதலைப் போராட்டத்தை நடத்தியதையடுத்து தமிழர்கள் மீது திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்தினர்.
ஆரம்ப காலம் முதலே காலனியாதிக்க பிரிட்டன் அரசுக்கு இந்த தமிழ்ச்சமுகத்தின் மீது இனப்படுகொலை கட்டவிழ்த்து விடுவதற்கான பார்வை/காரணங்கள் தொடர்ந்து இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவணம் கடந்த டிசம்பர் மாதம் ஜெர்மனியில் நடைபெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய ஆவணங்களுள் ஒன்று.
சாட்சியங்களை தொடர்வோம், இனப்படுகொலையாளர்களை அடையாளம் காண்போம், விடுதலையை வென்றெடுப்போம்.!!
தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு உடனே நடத்தப்பட வேண்டும்,
இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
PDF: http://www.tamilnet.com/img/publish/2013/12/1947_06_09-CAB:129:19.pdf
Link: http://www.tamilnet.com/art.html?catid=79&artid=36867
- த.ஆனந்த், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், சென்னை (9677226318,
www.facebook.com/balachandranstudentsmovement)