தோழர்களே,
 
வணக்கம். அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பாக கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்துக்கு எதிராக இடிந்தகரை, கூடங்குளம் பகுதி மக்கள் ஆதரவுடன் 2011 ஆகஸ்ட் முதல் ஓர் உச்சமான போராட்டத்தை நாங்கள் தொடங்கி நடத்தி வருகிறோம். போராட்டம் தொடங்கி சுமார் மூன்று மாதங்கள் கழித்து உங்கள் இயக்கத்தைச் சார்ந்த ஒரு குழு இடிந்தகரைக்கு வந்து எங்களைச் சந்தித்தனர். உங்கள் இயக்கத்தைப் பற்றி, செயல்பாடுகள் பற்றி எங்களில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், உங்கள் எண்ணங்களை, ஆலோசனைகளை நான் கவனமாகக் கேட்டேன், உங்களோடு ஒரு கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டேன்.
 
உங்களின் கொள்கைகளில், செயல்பாடுகளில் முழு உடன்பாடு இல்லையென்றாலும், நீங்கள் ஒரு மதவாத, சாதீய, பிற்போக்கு சக்தியல்ல என்பதன் அடிப்படையில் உங்களோடு தொடர்ந்து இணைப்பில் இருந்தேன். எங்கள் நிகழ்வுகளை உங்களுக்கு அறியத் தந்தேன். கூடங்குளம் போன்ற பிரச்சினைகள் ஓர் இயக்கத்துக்கோ, அல்லது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவுக்கோ மட்டுமே சொந்தமல்ல என்பதில் நானும், எங்கள் போராட்டக் குழுத் தோழர்களும் தெளிவாகவே இருந்து வருகிறோம். அந்த அடிப்படையில் உங்கள் இயக்கம் நடத்திய போராட்டங்களுக்கும் நாங்கள் ஆதரவாகவே செயல்பட்டோம். தூத்துக்குடியில் நீங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நானும், சில தோழர்களும் கலந்து கொண்டோம்.
 
பிப்ரவரி 11, 2012 அன்று கூடங்குளம் அணுமின் நிலைய முற்றுகைப் போராட்டம் ஒன்றை அறிவித்து, கூத்தங்குழி மக்களை சந்தித்து அந்தப் போராட்டத்துக்கு வரும்படி அழைத்தீர்கள். “உதயகுமார் சொன்னால்தான் வருவோம்” என்று அவர்கள் சொன்னதன் அடிப்படையில் ஒருநாள் இரவு இடிந்தகரைக்கு வந்து எங்களை சந்தித்து, கூத்தங்குழி மக்களை அனுப்பும்படி கேட்டுக் கொண்டீர்கள். ஏன் ஒரு குறிப்பிட்ட ஊர் மக்களை மட்டும் அழைக்கிறீர்கள், உங்களின் உண்மையான செயல் திட்டம் என்ன என்று விவாதித்த நாங்கள், இன்னொரு இயக்க நிகழ்வுக்கு நம் மக்களை அனுப்புவது சரியாக இருக்காது என்று தீர்மானித்தோம். இந்த நிலையில் கூடங்குளம் நண்பர்கள் ஒரு சிலரின் உதவியோடு எனக்கு எதிராக எங்கள் இயக்கத்துக்கு ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டீர்கள். கூடங்குளம் ஊருக்கு அடிக்கடிச் சென்று அங்குள்ள தோழர்களிடம் நிறையப் பேசி அவர்களை மசிய வைக்கும் வேலை தொடர்ந்து நடைபெற்றது. சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட நான், அந்த நிலையிலும் உங்களை உதாசீனப்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாகவே இருந்தேன்.
 
மார்ச் 19, 2012 அன்று தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, கூடங்குளம், கூட்டப்புளி, செட்டிக்குளம் தோழர்களைக் கைது செய்தபோது, அவர்களைப் பிணையில் எடுப்பதற்கு உதவ முன் வந்தீர்கள். நெல்லையைச் சார்ந்த வேறு பல சார்பற்ற வழக்கறிஞர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்ததால், அவர்களையும் இணைத்துக் கொண்டு செயல்படும்படிக் கேட்டு, அந்தப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்தோம். தாங்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்று அவர்கள் ஆதங்கப்பட்ட நிலையிலும், உங்களோடு தொடர்ந்து செயல்பட்டோம் நாங்கள். ஆனால் உங்களின் “புதிய ஜனநாயகம்” இதழின் மார்ச் 2012 தலையங்கத்தில் இப்படி எழுதினீர்கள்: “புலிகள் பிரபாகரனைப் போல ஜெ உதவியுடன் வெற்றி பெற முடியுமென்று உதயக்குமார் நம்பச் சொல்கிறார். முள்ளிவாய்க்காலுக்கு நேர்ந்த முடிவு இடிந்தக்கரையிலும் ஏற்படக் கூடாது.”
 
“ஜெ உதவியுடன் வெற்றி பெற முடியுமென்று” நான் எங்கேயும், எப்போதும் சொல்லவுமில்லை, அப்படி நம்பவுமில்லை, யாரையும் நம்பச் சொல்லவுமில்லை. தமிழக அரசியல் நிலை, யதார்த்தம், கட்சிகள், ஆளுமைகள் பற்றியெல்லாம் எனக்கு நன்றாகவேத் தெரியும். கூடங்குளம் திட்டம் மத்திய அரசின் திட்டம் என்பதாலும், மத்திய அரசையும், மாநில அரசையும் ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராடுவது கடினமென்பதாலும், சில நடைமுறை தந்திரங்களைக் கைக்கொண்டோமே தவிர எங்களை, மக்கள் போராட்டத்தை யாரிடமும் நாங்கள் அடகு வைக்கவில்லை.
 
கைதான தோழர்களை பிணையில் எடுப்பதற்காக நாம் சேர்ந்து முயற்சிகள் மேற்கொண்டிருந்த நேரத்திலேயே, “கூடங்குளம் போராட்டத்தின் தலைமை சரியில்லை” என்ற கருத்தை ஏப்ரல் 21, 2012 அன்று திருநெல்வேலியில் நடந்த ஒரு கருத்தரங்கில் தெரிவித்தீர்கள். அதை ஒரு விமர்சனமாகக் கருதி உங்கள் மேல் கோபம் கொள்ளாமல், உங்கள் கருத்துரிமையாக எடுத்துக்கொண்டுக் கடந்து சென்றோம் நாங்கள்.
 
2012 மார்ச் மாதம் நானும், புஷ்பராயனும், இன்னும் சில தோழர்களும் நடத்திய காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தின் காரணமாக, எங்கள் மக்கள் குழுவோடு அரசு தரப்பு நடத்தியப் பேச்சுவார்த்தையில், கைதாகி சிறையில் இருப்பவர்கள் அனைவரையும் அரசு தரப்பில் எந்த ஆட்சேபணையும் இன்றி பிணையில் விடுவதற்கு முன்வந்தனர். அதற்கான செலவாக, உங்களுக்கு இடிந்தகரை மக்கள் ரூ.1,25,000 தந்தார்கள்; கூட்டப்புளி மக்கள் ரூ. 65,000 தந்தார்கள்; கூடங்குளம் நண்பர் ஒருவர் ரூ.5,000 தந்தார். மொத்தம் ரூ. 1,95,000 தந்தோம். இதில் ரூ. 69,267-க்கானச் செலவு விபரங்களை தெளிவாக, முறையாக எழுதி என்னிடம் தந்தீர்கள்; நான் அந்த ஆவணத்தின் ஒரு நகலை இடிந்தகரை நிதிக் குழுவிடம் கொடுத்துவிட்டு, முதல் படியை பத்திரமாக வைத்திருக்கிறேன்.
 
நானோ, எனது தோழர்களோ வெளியாரிடம் ம.க.இ.க. தோழர்கள் வழக்குச் செலவுகளுக்கு இவ்வளவு பணம் வாங்கினார்கள் என்றோ, இவ்வளவு செலவு ஆயிற்று என்றோ பேசியதே கிடையாது. அதற்கானத் தேவையும் எழவில்லை. ஆனால் நீங்கள் போகும் இடங்களில் எல்லாம் “ஒரு ரூபாய் கூட வாங்காமல், வழக்கு நடத்தினோம்” என்று ஒரு சுய விளம்பரத்தைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். இதைப் பற்றி சிலர் எங்களிடம் விசாரித்தபோதுதான், வழக்குச் செலவுகளுக்காக நாங்கள் ரூ. 1,95,000 கொடுத்தோம் என்று சொல்ல வேண்டியதாயிற்று. “எங்களுக்கான கட்டணம் எதுவும் வாங்கவில்லை, செலவுகளுக்கு மட்டும் காசு வாங்கினோம்” என்ற உண்மை விபரத்தை நீங்கள் சொல்லியிருக்கலாம்.
 
அக்டோபர் 9, 2013 அன்று இடிந்தகரைக்கு உங்கள் குழு ஒன்று வந்து, உங்களின் தாது மணல் போராட்டம் பற்றி சுமார் பத்து நிமிடம் என்னிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றீர்கள். அந்த மிகக் குறுகிய காலகட்டத்திலேயே உங்களில் ஒருவர் இடிந்தகரைக்கு வந்திருந்த ஜூனியர் விகடன் நிருபர், தம்பி மகா.தமிழ்ப்பிரபாகரனிடம் “இவர்களிடம் காசே வாங்காமல் நாங்கள் வழக்கு நடத்திக் கொடுத்தோம்” என்று சொல்லியிருக்கிறீர்கள். அவர் எங்களிடம் கேட்டார். சுமார் இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் உங்கள் சேவை பரப்புரையை நீங்கள் கைவிட்டபாடில்லை. இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே, இப்போது இந்த பணப் பிரச்சினை பற்றி இங்கே நான் குறிப்பிடுகிறேன். தயவு செய்து இனிமேல் “எங்களுக்கான கட்டணம் எதுவும் வாங்கவில்லை, வழக்குச் செலவுகளுக்கு மட்டும் ரூ. 1,95,000 வாங்கினோம்” என்ற உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் ‘காலத்தினாற் செய்த’ உதவியை இதுவரை நாங்கள் காசால் அளக்கவுமில்லை; உதவியை மறக்கவும் மாட்டோம். தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள பல வழக்கறிஞர்கள் உங்களுக்கும், எங்களுக்கும் பணம் ஏதும் பெறாமல் உதவியதையும் நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும் (அவர்களையும் இணைத்துக் கொண்டு, போராட்டத்தின் வழக்கறிஞர்கள் குழுவை ஒருங்கிணையுங்கள் என்று நான் கேட்டுக் கொண்டபோது, முதலில் இணக்கம் தெரிவித்த நீங்கள், பின்னர் ஏதோ காரணத்தால் பதிலேதும் சொல்லாமல் விலகிச் சென்ற கதையை எல்லாம் இங்கேப் பேசி பலனில்லாததால், விட்டுவிடுகிறேன்).
 
இந்த நிலையில் “புதிய ஜனநாயகம்” மே 2012 இதழில் “கூடங்குளம் போராட்டம்: அனுபவங்களும் படிப்பினைகளும்” என்ற கட்டுரையில் அபாண்டமானக் குற்றச்சாட்டுக்களை அடுக்கினீர்கள்:

[1] “போராட்டங்களுக்கு அணிதிரண்ட மக்கள் மீது, அவர்களை வழிநடத்திய தலைமை மற்றும் முன்னணியாளர்கள் முழு நம்பிக்கை வைக்கவில்லை. அம்மக்களைப் பற்றிய குறை மதிப்பீடு கொண்டிருந்தார்கள்.”
 
[2] “எத்தகைய எதிரிகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும் என்ற உண்மை அங்கு போராடும் மக்களிடம் சொல்லப்படவே இல்லை.”
 
[3] “கூடங்குளம் திட்டம், ஆட்சியாளர்கள், அமெரிக்க-ரஷ்யா முதலிய மேலைநாடுகள், இந்திய ஆளும் வர்க்கங்கள் ஆகியோருக்கு எவ்வளவு முக்கியமானது; என்ன விலை கொடுத்தாவது, என்ன காரியம் செய்தாவது கூடங்குளம் திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதில் எவ்வளவு மூர்க்கமாகவும் உறுதியாகவும் அவர்கள் இருக்கிறார்கள் என்கிற விவரம் போராடும் மக்களைச் சென்றடையவே இல்லை.”
 
[4] “பால்குடம் எடுப்பதும், பட்டினி கிடப்பதும் என்ற அமைதி வழியிலேயே, காந்திய வழியிலேயே போராடி வருவதாகத் திரும்பத் திரும்ப உதயக்குமார் முதலியவர்கள் மன்றாடினர்.”
 
[5] “குறைந்தபட்சம் சிங்கூர், நந்திகிராமம் போராட்டங்களுக்கு திரண்டதைப் போன்று பரவலான மக்கள் ஆதரவைத் திரட்டியிருக்க வேண்டும்.”
 
[6] “கூடங்குளம் போராட்ட முன்னணியாளர்கள் ஜெயலலிதா போன்ற பிழைப்புவாதக் கழிசடைகளின் மீது நம்பிக்கை வைக்கும்படி சொன்னார்கள். இப்போது அவர்கள் நம்ப வைத்து வஞ்சகம் செய்து விட்டதாகப் புலம்புகிறார்கள். ஆக, மக்கள், மக்கள் மட்டுமே நம்பிக்கைக்குரிய மகத்தான சக்தி என்ற கொள்கையில் ஊன்றி நிற்கும்போதுதான் இலட்சியத்தை எட்டமுடியும் என்பது கூடங்குளம் போராட்டங்கள் நமக்குக் கற்றுத் தரும் படிப்பினை.”
 
எங்கள் மக்களைப் பற்றி எந்த மாதிரியான மதிப்பீடு நாங்கள் கொண்டிருக்கிறோம்; அவர்கள் எங்களை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்று எங்கள் மக்களிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே? எதற்காகப் போராடுகிறோம், யாரை எதிர்த்துப் போராடுகிறோம், அவர்களின் பலம் எத்தகையது என்றெல்லாம் உங்களுக்கு பாடமே எடுப்பார்களே எங்கள் மக்கள்? இடிந்தகரைக்கு வருகிற ஒவ்வொரு பத்திரிகையாளரும் இவை பற்றிய தகவல்களை எத்தனையோ முறை அருமையாகப் பதிவு செய்திருக்கிறார்களே? மேலும் உங்களின் 37 வருட புரட்சி வரலாற்றில் எந்த பரவலான மக்கள் ஆதரவையும் எந்தப் பிரச்சினைக்கும் திரட்டாத நீங்கள், எங்களுக்கு மக்கள் சக்தி பற்றியும், போராட்ட முறை பற்றியும் வகுப்பு எடுப்பது நகைச்சுவையாக இருக்கிறது.
 
விசுவாமித்திரர் கோவிலுக்கு பால்குடம் எடுத்தது கூடங்குளத்தைச் சார்ந்த இந்து மக்களே தவிர, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமோ, போராடிக் கொண்டிருக்கும் பொதுமக்களோ அல்ல. நான் அந்த மக்களோடு விசுவாமித்திரர் கோவிலுக்குப் போனேன் அவர்களுடைய மத உணர்வுகளை அவமதிக்காமலிருப்பதற்காக; எங்கள் போராட்டம் எந்த ஒரு மதத்தையும் முன்னிறுத்துவது அல்ல என்று நிரூபிப்பதற்காக. மேலும் ‘பொருள் முதல்வாதம்’ மட்டுமே சமூக மாற்றத்துக்கான அடிப்படையாக முடியாது, மக்களின் கலாச்சாரம், பண்பாடு போன்றவையும் முக்கியமானவை என்று நம்புகிறவன் நான்.
 
“ஜெயலலிதா போன்ற பிழைப்புவாதக் கழிசடைகளின் மீது நம்பிக்கை வைக்கும்படி” நான்/நாங்கள் சொன்னது போலவும், “அவர்கள் நம்பவைத்து வஞ்சகம் செய்து விட்டதாகப்” புலம்பியது போலவும் எழுதினீர்கள். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எங்கள் எழுத்தோ, பேச்சோ ஏதாவது இருக்கிறதா உங்களிடம்? அல்லது இதுவும் ஓர் அடிப்படையற்ற புரட்சிகரக் குற்றச்சாட்டுதானா?
 
மேற்கண்ட கட்டுரையில் ஒரு சுவாரசியமான தகவலை குறிப்பிட்டிருக்கிறீர்கள்: “கூடங்குளத்திலிருந்து வெகுதொலைவிலுள்ள சென்னை மக்களிடம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர இயக்கங்கள் அணு சக்தி அணு உலை எதிர்ப்பு இயக்கத்தை எடுத்துச் சென்றபோது கூட முதலில் கடும் எதிர்ப்பையே கண்டார்கள். ஆனால், அவர்கள் பிரச்சார முயற்சியில் அழுந்தி நின்று இயக்கத்தைத் தொடர்ந்தபோது, ஆதரவு தருபவர்களாக மக்கள் மாறினர்.” அற்புதமானப் புரட்சியாக இருக்கிறதே? இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்? “அணு சக்தி அணு உலை எதிர்ப்பு இயக்கத்தை” எப்படி எடுத்துச் சென்றீர்கள்? என்னென்ன நிகழ்வுகள், எங்கெங்கு, எத்தனை முறை, எப்படியெல்லாம் நடத்தினீர்கள்? எந்தவிதமான “கடும் எதிர்ப்பை” எதிர்கொண்டீர்கள்? “அழுந்தி நின்று இயக்கத்தைத் தொடர்ந்த” வித்தை பற்றியும் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்?
 
சிங்கூர், நந்திகிராமம் போல கூடங்குளம் போராட்டத்தை மாற்ற வேண்டும் என்று பல இடங்களில் உங்களில் சில தோழர்கள் பேசியிருக்கிறீர்கள். அப்படிப் பேசுவது, நம்புவது உங்கள் கருத்துரிமை. அதில் நான் தலையிட விரும்பவில்லை. ஒருமுறை உங்கள் கலைக்குழுவினர் இடிந்தகரை மேடையில் இதே கருத்தை வலியுறுத்திப் பாடினார்கள். இந்த வன்முறைக் கருத்துக்கு நான் உங்களிடம் எதிர்ப்பு தெரிவித்தபோது, “சும்மா ஒரு எழுச்சிக்காகவே அப்படிப் பாடினார்கள்” என்று விளக்கம் அளித்தீர்கள். உங்களின் புரட்சியையும், அதன் தீரத்தையும், உண்மைத் தன்மையையும் நான் அன்றைக்கு தெளிவாகப் புரிந்துகொண்டேன்.
 
கடந்த 2012 செப்டம்பர் மாதம் நாங்கள் கடலோரத்தில் நடத்திய அணுஉலை முற்றுகைப் போராட்டத்தின்போது முதல் நாளும், இரண்டாம் நாளும் பல்வேறு அமைப்பினர் பங்கு கொண்டதைப் போல நீங்களும் கலந்து கொண்டீர்கள். காவல்துறை தாக்குதலின்போது என்னையும், தோழர்கள் புஷ்பராயனையும், முகிலனையும் மக்கள் படகுகளில் ஏற்றி அப்புறப்படுத்தியபோது, மை.பா. நன்மாறன் (சேசுராசு), பங்குத்தந்தை செயக்குமார், மில்டன், கெபிஸ்டன் போன்றோர் இடிந்தகரையில் இருந்து போராட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டிய நிலை எழுந்தது. அவர்களுக்கு ஒத்தாசையாக நீங்களும் இருந்து உதவியதை எங்கள் மக்கள் மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். பின்னர் நாம் நேரில் சந்தித்தபோது, நான் எனது நன்றியைத் தெரிவித்தேன்; அதை மேடையிலும் அறிவித்தேன். ஆனால் நீங்கள் உங்களை மட்டுமே முன்னிறுத்தி ஒரு மாற்று வரலாற்றையே வடித்திருந்தீர்கள் உங்கள் இணையதளத்திலும் (“கூடங்குளம்: போர்க்குணம் கமழும் எழுச்சி – போராட்டத் தொகுப்பு” அக்டோபர் 8, 2012), உங்கள் இதழிலும் (புதிய ஜனநாயகம், அக்டோபர் 2012).
 
பின்னர் நீண்ட நாட்களாக எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தோம் நாம். இந்நிலையில் அக்டோபர் 18, 2013 அன்று மதியம் எங்கள் போராட்டத் தலைவியர் திருமதி. சுந்தரி, திருமதி. சேவியர் அம்மா போன்றோரின் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தாது மணற்கொள்ளை சம்பந்தமாக விண்ணப்பம் ஒன்றைக் கொடுக்க திருநெல்வேலிக்குச் சென்றிருந்தார்கள். நீங்களும் அதேப் பிரச்சினை சம்பந்தமாக ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்குப் போயிருக்கிறீர்கள். உங்கள் புரட்சியை மட்டுமே நடத்துவதற்குப் பதிலாக, எங்கள் குழுவில் தலையிட்டு, வந்திருந்தப் போராளிகளில் ஒருசிலரைத் திசைதிருப்பி அங்கிருந்த பத்திரிகையாளர்களோடும், காவல்துறையினரோடும் மோதச் செய்து, அவர்களைக் கைது செய்ய வைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறீர்கள். எங்கள் போராளிகளின் தெளிவான பார்வையால், புரிதலால், செயல்பாட்டால் அவர்கள் தங்களை காத்துக் கொண்டார்கள். அழையா விருந்தாளிகளாக நீங்கள் உள்ளே நுழைந்து, தலைவராக எத்தனித்தது, தவறாக வழிநடத்தியது கண்டிக்கத் தகுந்தது.
 
வழக்கம்போல உங்கள் இணைய தளத்தில் (“மணல் கொள்ளையர்களை எதிர்த்து நெல்லை கலெக்டர் அலுவலகம் முற்றுகை,” அக்டோபர் 21, 2013) வரலாறு ஒன்றை எழுதி, உலகுக்கே அணுசக்தியின் அழிவிலிருந்து உய்வடையும் வழி சொல்லிக் கொண்டிருக்கும் எங்கள் போராளிப் பெண்களை “ஆட்சியர் அலுவலக கட்டிடத்தினுள் அழைத்துச் சென்று அமரச் செய்து கோஷங்கள் எழுப்பச் செய்தோம்” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். “நேற்று நடந்த போராட்டத்தில் ம.உ.பா.மைய வழக்குரைஞர்கள் மக்களுடன் உறுதியாக களத்தில் நின்றது, வழிகாட்டியது மற்றொருமுறை ம.உ.பா.மையம் மக்களுடன் உறுதியாக முன்னணியில் நிற்கும் என்ற நம்பிக்கையை இடிந்தகரை உள்ளிட்ட கடலோர மக்களுக்கு ஏற்படுத்துவதாக அமைந்தது” என்று நீங்கள் எழுதியிருப்பது உங்களைப் பற்றி உங்களுக்கே ஒருவித சந்தேகம் இருப்பது போலவே படுகிறது.
 
கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை, தாதுமணற் கொள்ளை பிரச்சினை பற்றியெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்கும் கடலோர மக்கள் மத்தியிலேயே நீங்கள் தொடர்ந்து பரப்புரை செய்வது ஏன்? இந்தப் பிரச்சினைகள் பற்றி போதிய விழிப்புணர்வில்லாத உட்பகுதி மக்களை சந்தித்து அவர்களிடம் பரப்புரை செய்யலாமே? கடலோர ஊர்களிலுள்ள இளைஞர்களைப் பிடித்து, என்னைப்பற்றி, எங்கள் இயக்கத்தைப் பற்றி அவர்களிடம் தவறாகப் பேசி, மூளைச்சலவை செய்வது உண்மையிலேயே தேவைதானா? இக்கேள்விகளைக் கேட்பதற்காகத்தான் இக்கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன்.
 
நான் உங்களை இன்னும் தோழர்களாக, தோழமை இயக்கங்களாகத்தான் பார்க்கிறேன். ஆனால் ‘மக்களை நம்பாத, மதிக்காத, போராட்டம் நடத்தத் தெரியாத நீயும், புரட்சியாளர்களாகிய நாங்களும் எப்படி தோழர்களாக இயங்க முடியும்’ என்று நீங்கள் கேட்கலாம். என்னைப் பொறுத்தவரை, மக்களுக்காக, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடும் அனைவரும் தத்தம் அடிப்படைக் கொள்கைகளில், சித்தாந்தங்களில் சமரசமின்றி, ஒரு பொது வெளியை உருவாக்கி, ஒன்றாக நிற்பதும், சேர்ந்து உழைப்பதும் முக்கியம் என்று நினைக்கிறேன். அம்மாதிரியான இணக்கம் இயலாமற்போனால், நாகரிகமாகப் பிரிந்து தத்தம் வழிகளில் அந்த இலக்கை நோக்கி நடக்கலாம். ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பதும், குறை சொல்வதும், குற்றம் காண்பதும், தம்மை முன்னிலைப் படுத்துவதும், பிறரைப் பழிப்பதும் முதிர்ச்சியற்ற அணுகுமுறை என்றே நினைக்கிறேன். தமிழக அரசியலில், பொது வெளியில், இம்மாதிரியான நேர்மைக்கோ, நாகரிகத்திற்கோ, உரிமையோடு இடித்துரைக்கும் பண்புக்கோ மரியாதை கிடையாது என்பதையும் அறிவேன். “நடந்ததைக் கேட்டால், அடுத்தது பகைதான்” இங்கே.
 
உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அறிவோ, ஆற்றலோ, அனுபவமோ எனக்கு இல்லையென்றாலும், என்னுள் தோன்றும் ஓரிரு கருத்துக்களைச் சொல்வதற்கு தயவு செய்து என்னை அனுமதியுங்கள்.
 
[1] நீங்கள் அனைவருமே மக்கள் பிரச்சினைகளில் அக்கறையுள்ளவர்கள், மக்களுக்காக உழைக்கும் உத்வேகம் உடையவர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சொல்லில் முழு உண்மையைப் பேணி, செயலில் முழு நேர்மையைக் கைக்கொண்டால், உங்கள் பணி இன்னும் சிறக்கும்.
 
[2] நீங்கள் பிறரோடு ஒன்றிணைந்து நடத்தும் போராட்டத்தில் தவறுகள் நடந்தால் பிறரைப் பழிப்பதும், சமூக மாற்றங்கள் நடந்தால் உங்களின் வெற்றியாகக் கொண்டாடுவதும், உங்களையே உயர்த்திப் பிடித்துக் கொள்வதும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமாகவே கொள்ளப்படும்.
 
[3] காக்கைக் கூட்டில் முட்டையிடும் குயில் போல, அடுத்தவர் நடத்தும் போராட்டத்தில் நுழைந்து புரட்சி செய்யாதீர்கள். ஒரு தலைமையில் ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருந்தால், அவர்களுடன் நின்று உதவுங்கள், அல்லது விலகிச் செல்லுங்கள். போராடும் மக்களிடையே போய் புதிய புரட்சியாளர்களைத் தேடுவது, உள்ளேபோய் நின்று குழிபறிப்பது, குழு அமைப்பது, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது – இவையெல்லாம் நேர்மையான புரட்சியல்ல.
 
[4] “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்றியங்கும் ‘புரட்சி’ ஓர் அற்புதமான சொல், செயல். இது தமிழகத்தின் அரசியலிலும், மக்கள் இயக்கங்களிலும், சினிமாவிலும் படும்பாடு வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. நாமனைவருமாகச் சேர்ந்து இந்தச் சொல்லின், கோட்பாட்டின் மகத்துவத்தைக் காப்பாற்ற முயல்வோம். “கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் எவையென அறிவுமிலார்” நிறைந்து கிடக்கும் நம் நாட்டில், நம்மைப் போன்ற சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் சேர்ந்து நிற்பதும், தேர்ந்து செயலாற்றுவதும் புரட்சியின் அடிப்படைத் தேவை. காந்திப் பெருமகனார் சொன்னது போல, நாம் காண விரும்பும் மாற்றத்தை நாமே வாழத் துவங்குவதுதானே கற்றுணர்ந்த நமது கடமை.
 
- சுப.உதயகுமார், இடிந்தகரை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

42 comments

42
மதி
உதயகுமார் ஒரு பொய்யர். ம.க.இ.க தோழர்களைப் பற்றி தமிழக மக்களுக்கு நன்குத் தெரியும். உதயகுமார் ஒன்றை கூறியதும் தமிழ்நாடு அதை அப்படியே நம்பிவிடுமா என்ன? ம.க.இ.க வினர் தான் உண்மையான கம்யூனிஸ்டு தோழர்கள். காந்தியை தூக்கிக்கொண்டு திரியும் உதயகுமார் இதை திட்டமிட்ட நோக்கத்துடன் செய்வதாகவே தெரிகிறது. இது அவர்களுக்கு எதிரான திட்டமிட்ட, உள்நோக்கம் கொண்ட விஷமப்பிரச்சாரம். அவதூறு. தோழர்கள் இதற்கு தக்க முறையில் பதிலளித்து உண்மையை நிலைநாட்ட வேண்டும்.
Sureshrajan
//கூடங்குளத்திலிருந்து வெகுதொலைவிலுள்ள சென்னை மக்களிடம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர இயக்கங்கள் அணு சக்தி அணு உலை எதிர்ப்பு இயக்கத்தை எடுத்துச் சென்றபோது கூட முதலில் கடும் எதிர்ப்பையே கண்டார்கள். ஆனால், அவர்கள் பிரச்சார முயற்சியில் அழுந்தி நின்று இயக்கத்தைத் தொடர்ந்தபோது, ஆதரவு தருபவர்களாக மக்கள் மாறினர்// அப்படி மாறிய மக்களை வைத்து அணு உலைகளுக்கு எதிராக மகைக நடத்திய புரட்சிகர நடவடிக்கைகள் குறித்தும் விலாவரியாக சொன்னால் இடிந்தகரை மக்கள் பயன்பெறுவார்கள்
manoj
மின்சார ரயிலில் சிவப்பு சட்டையுடன் இவர்கள் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தனர். கூடங்குளம் அணுவுலையை மூட வேன்டும் என்று புக்கை விற்று கொண்டிருந்தார்கள். நான் இருந்த பெட்டியில் அனைவரும் இவர்களை திட்டி தீர்த்தார்கள். சளைக்காமல அனைவருக்கும் பதில் சொன்னார்கள்.

ஒரு பெண் நாஙளே கரண்ட் இல்லம இருக்கோம் என்று கூறி காறி வெளியே துப்பினார். அவர்கள் அடுத்த பெட்டிக்கு சென்ற பிறகு ஒரு நபர் பு.மவனே, தே.மவனே என்று திட்டி தீர்த்தார். அவர்களுக்கு நான் எந்த உதவியும் செய்யாதது வீட்டிற்கு சென்ற பிறகும் மனதை கேள்விகேட்டுகொடு இருந்தது
பகத்
இவர் இந்த விசயங்களை எல்லாம் மே 9 அன்று நேரில் சென்ற மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களிடம் தெரிவிக்காமல் இப்போது ஏன் தெரிவிக்க வேண்டும்?

உதயக்குமார் அவர்களின் அவதூறுக்கு ம.க.இ.க இணைச் செயலாளர் தோழர்.காளியப்பன் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர்.ராஜூ ஆகியோர் பதிலளித்திருக்கின்றர்.

சுப. உதயகுமாருக்கு ம.க.இ.க.-வின் பதில்
http://www.vinavu.com/2013/11/06/palas-reply-to-kudankulam-udayakumars-slander/

ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சமீபத்தில் தான் தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு எதிராக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பிரச்சார இயக்கம் மேற்கொண்டனர். இச்சமயத்தில் உதயக்குமார் அவர்கள் இப்படிக் குற்றம் சாற்றுவதற்குப் பிண்ணனியில் வைகுண்டராஜனின் மிரட்டல் இருக்குமோ என்று பலமான சந்தேகம் எழுகிறது.

ஒருவேளை சீமான் போன்ற தமிழின சந்தர்ப்பவாதிகளிடம் நெருங்கிய தொடர்புடையதால் அவர்களைப் போல் இவருக்கும் ம.க.இ.க மீது அவதூறு செய்ய வேண்டும் என்ற ஆசை எழுந்ததோ என்னவோ?
bagath
புதிய ஜனநாயகம் அரசுசாரா தொண்டுநிறுவனங்களின் தலைவர்களைக் குறிப்பாகக் கூடங்குள அணு உலை எதிர்ப்பாளர்களைஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளாக சித்தரிக்கிறது. புதிய ஜனநாயகம் மே-12, 2012இதழில் கூடங்குளம் போராட்டம்: அனுபவங்களும் படிப்பினைகளும் என்ற கட்டுரையில்,அப்போராட்டத்தின் தோல்விக்கான காரணம் என்ன என்று ஆய்வு செய்து கூறும்போது இவ்வாறுகூறுகிறது, “... கூடங்குளம் திட்டம், ஆட்சியாளர்கள், அமெரிக்கா - ரசியா முதலிய மேலைநாடுகள் இந்திய ஆளும் வர்க்கங்கள் ஆகியோருக்கு எவ்வளவு முக்கியமானது; என்னவிலைகொடுத்தாவது, என்ன காரியம் செய்தாவது கூடங்குளத்தை நிறைவேற்றியே தீர வேண்டும்என்பதில் எவ்வளவு மூர்க்கமாகவும் உறுதியாகவும் அவர்கள் இருக்கிறார்கள் என்ற விவரம்மக்களைச் சென்றடையவே இல்லை” என்று கூறுகிறது. இவ்வாறுகூறுவதன் மூலம் கூடங்குள அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்துபவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புப்போராட்டத்தை நடத்தி இருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். அவ்வாறு அவர்கள்போராடுவார்களா? அரசுசாரா தொண்டு நிறுவனத்தினர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடும்போராளிகள் என்று பு.ஜ. கருதுகிறதா?

அத்துடன் அதே கட்டுரையில்கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் தலைவர்களின் வர்க்கத் தன்மையைநடுத்தர வர்க்கத்தினர் என்று பு.ஜ. குறிப்பிடுகிறது. “... இது மத்தியத்தர அறிவுஜீவிவர்க்கத்தினர் உழைக்கும் மக்கள் மீது வழக்கமாகக் கொண்டிருக்கும் கீழானதொருகண்ணோட்டம்தான்” என்று குறிப்பிடுவதன் மூலம் அவர்களை நடுத்தர வர்க்கத்தினர் என்றுகூறுகிறது. ஆனால், பு.ஜ. 2004 ஜனவரியில் வெளியிட்டுள்ள “அரசுசாரா நிறுவனங்கள்:ஏகாதிபத்திய கைக்கூலிகள்” என்ற புதிய ஜனநாயக வெளியீட்டில், (ஜேம்ஸ் பெட்ராசின்ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு) அரசுசாரா நிறுவனங்களின் தலைவர்கள் பற்றிப்பின்வருமாறு கூறுகிறது “... அரசுசாரா நிறுவனங்களின் தலைவர்கள் புதியதொருவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கருதலாம். இவர்கள் பூர்வீக சொத்துடைமை அல்லதுஅரசின் ஊதியத்தைச் சார்ந்து வாழ்பவர்கள் அல்ல. குறிப்பிட்ட சில முக்கியமான,பிரபலமான மக்கள் திரள் அமைப்புகளைக் கட்டுப்பத்தும் தமது சொந்த ஆற்றலையும்,ஏகாதிபத்தியத்திடம் காசு வாங்குவதையும் சார்ந்து வாழ்பவர்கள். ஒரு புதிய வகைப்பட்டதரகுக் கூட்டத்தினரே இவர்கள். சமுதாயத்திற்கு அவசியமான எந்த உற்பத்தியிலும் இவர்கள்ஈடுபடுவதில்லை. தமது சொந்த ஆதாயத்துக்காக உள்நாட்டு ஏழ்மையை வைத்து, நிதி உதவிஅளிக்கும் எஜமானர்களுக்குத் தொண்டூழியம் செய்து காசு சேர்ப்பவர்கள்; வியாபாரம்செய்பவர்கள்” என்ற வரையறையை ஏற்று அன்று பு.ஜ. இந்தக் கட்டுரையை வெளியிட்டிருந்தது.ஆனால் இன்று இவ்வாறு நடுத்தர வர்க்கம் என்று மாற்றிக் கூறுவதற்குக் காரணம் என்ன?இது தொண்டு நிறுவனங்களின் தரகுத் தன்மையை மூடிமறைப்பதாகாதா? தொண்டு நிறுவனங்களின்வரையறைகளை மூடிமறைப்பதாகாதா?

அதே பு.ஜ. மே.12 இதழின் அதேகட்டுரையில் கூடங்குள அணு உலைப் போராட்டம் எவ்வாறு முடித்துவைக்கப்பட்டது என்பதைப்பு.ஜ.வே கூறுவதைப் பாருங்கள். “மும்பையிலுள்ள கிறித்துவத் திருச்சபை கார்டினல்மூலம் பேரங்கள் நடத்தி, நிர்ப்பந்தங்கள் செய்து, மதுரை மண்டல ஆயர் ஃபெர்ணாண்டோவைத்தூது அனுப்பிக் காரியத்தைக் கச்சிதமாக முடித்தனர் ஆட்சியாளர்கள்”. என்று கூறுகிறது.இதிலிருந்தே தெரியவில்லையா கூடங்குள போராட்டத்தின் பின்னணியில் யார் இருந்தார்கள்என்பது. சுப.உதயகுமார் உள்ளிட்ட கூடங்குள எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர்கள் தொண்டுநிறுவனங்களைச் சார்ந்தவர்கள் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகவில்லையா? ஏன்சுப.உதயகுமாரே சர்வதேச அளவில் ஒரு அமைப்பாளராக அரசுசாரா நிறுவனங்களில் பணிபுரிபவர்தான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளாரே (காலச்சுவடு பேட்டியைப் பார்க்க). எனவேஅவரும் ஒரு ஜெகத்கஸ்பர் போன்றவர்தான். இவை அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொண்டேபு.ஜ. நடுத்தரவர்க்கத்தினர் என்று அவர்களின் தரகுத் தன்மையை மூடி மறைப்பது ஏன்?

மேலும் அரசுசாரா தொண்டுநிறுவனங்கள் குறித்து எத்தகைய செயல்தந்திரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மகஇக,பு.ஜ.தொ.மு உள்ளிட்ட அமைப்புகள் வெளியிட்டுள்ள Know the Enemy என்றஆங்கிலப் பிரசுரத்தில் பின்வருமாறு எழுதுகின்றனர். (அந்தப் பிரசுரம் உலகச் சமூகமாமன்றம் (WSF), ஹைதராபாத்தில் ஆசிய சமூக மாமன்ற (ASF) மாநாட்டை சிறிவி-கட்சிஉள்ளிட்டவை, உலகளாவிய தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து டத்தியபோது அதை விமர்சித்துஎழுதப்பட்டது) “... 80-களில் மார்க்சிஸ்டு கட்சி அரசுசாரா நிறுவனங்களைஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் என்று அம்பலப்படுத்தியது. ஆனால் அக்கட்சி தற்போதுதலைகீழாக மாறி அவைகளைச் சமூக மாற்றத்திற்கானவை என்று கூறுகிறது. இத்தகைய அதிகாரபூர்வ அறிவிப்புகள் விளக்கமின்றித் தத்துவார்த்தப் போராட்டத்தை எளிமைப்படுத்திவிடுகிறது. அரசுசாரா அமைப்புகள் வெறும் பாதுகாப்பு வால்வு (Safty Valve) மட்டுமல்ல, அவைகள் ஏகாதிபத்திய அதிகார மையத்துடன் இணைந்து மறுகாலனியாதிக்கத்தை அடி ஆழம்வரை கொண்டு செல்லும் அதிகார மையமாகச் செயல்படுகின்றன.20 ஆண்டுகளுக்கு முன்னால் இ.க.க (மா லெ. விடுதலை) தீய நோக்கம் கொண்ட அமைப்புகளில்(NGOs) உள்ள சிறந்த ஊழியர்களைக் கூட்டு நடவடிக்கை மூலம் வென்றெடுப்பது என்ற அதன்வாதமும் அடிப்பட்டுப் போனது. மேலும் எந்த ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியும்கட்டாயம் அதன் நிலைப்பாட்டை, அரசுசாரா நிறுவனங்கள் (NGO's) பற்றியஊசலாட்டமில்லாத நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பது அவசியம்” என்று கூறினர். அதாவதுதொண்டு நிறுவனங்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றும், அதில் ஊசலாட்டம் கூடாதுஎன்றும் பு.ஜ. அன்று கூறியது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பு.ஜ குழுவினர் எங்கேஊசலாடக்கூடாது என்று கூறினார்களோ அங்கே, அரசுசாரா அமைப்புகள் குறித்துத் தற்போதுஊசலாடுகின்றனர். அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளதை பெருமையாகக் கூறிக்கொள்கின்றனர்.அதற்காகத்தான் அவர்களை நடுத்தர வர்க்கம் என்றும், போராளிகள் என்றும் பட்டம் சூட்டிபாராட்டுகின்றனர். புதிய காலனிய ஆதிக்கமோ அல்லது மறுகாலனிய ஆதிக்கமோ எதுவாகஇருந்தாலும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதுதான் அடிப்படை என்று ஒருபுறம்கூறிக்கொண்டே, பு.ஜ. அரசுசாரா தொண்டு நிறுவனங்களோடு கூட்டணி அமைப்பது ஒருசந்தர்ப்பவாத செயல்தந்திரமேயாகும்.
ஜோ.தமிழ்ச்செல்வன்
குமரி மாவட்ட ம.க.இ.க. வழக்கறிஞர் ஜெயராஜ பூபதியிடம் 1,90,000/- ருபாய் குறித்துக் கேட்டபோது நாங்கள், பாதிக்கப்பட்ட மக்களை பிணையில் எடுப்பதற்கு செலவு செய்தோம். ம.க.இ.க.வில் எத்தனை வழக்கறிஞர்கள் இருக்கிறோம் தெரியுமா? செலவு ஆகத்தான செய்யும். எங்களுடைய சாப்பாட்டுச் செலவுக்கு யார் கொடுப்பார்? என என்னிடம் கேட்டார். இவர்களுடைய சாப்பாட்டுச் செலவுக்கு ஏழைகளை வஞ்சிப்பதா? ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் பிணை மனு தாக்கல் செய்தால் மெம்மோவுக்கு 150/- டைப்பிங் செலவு கூடிப்போனால் 200/- ஆகும். இதில் எதற்கு இவ்வளவு ருபாய்? போராட்டத்தில் சென்றுவிட்டு, மக்களைத் தூண்டிவிட்டு அதில் பணம் அடிக்க முயலும் செயல்தான் ம.க.இ.க.விடம் உள்ளது. அதைத்தான் அவர்கள் கூடங்குளத்தில் காட்டினார்கள். எனவே, எவரும் ம.க.இ.க.வை நம்பி ஏமாந்து விடாதீர்கள். தொடக்க காலத்திலிருந்தே கூடங்குளம் போராட்டத்தில் நான் பங்கெடுத்ததால் ம.க.இ.க.வை நான் நன்கு அறிவேன்.
kumarasamy
இவர்களை முதல் முதலாக சென்னையில் மனவோசையினர் நடத்திய ரஷ்ய நாடகத்தின்போது பார்த்தேன். அந்த நாடகத்தை 'ஜனநாயக முறையில்' கைகளை முறுக்கியப்படி நிறுத்துவதற்காக வந்திருந்தனர். நாடகம் பாதிலயில் நின்று காலவநிலைய பஞ்சாத்தில் முடிந்தது. பிறகு பார்த்த்து மதுரையில் ஜ.ஒ.பி. ஊழியர் சிவராமகிருஷ்ணன் வீட்டில் . முதல் நாள் இவர்கள் வந்தால் மறுநாள் மனவோசையினர் வருவார்கள். இவர்கள் வாதிடும்போது இவர்கள் சொல்வது சரிபோல் தோன்றும். மறுநாள் மனவோசையினர் வாதிடும்போது அவர்கள் சொல்வது சரிபோல தோன்றும். இதற்குக் காரணம் போதிய அரசியல் தரவுகள் குறித்த அறிதல் இல்லாததேகாரணம் என்று கிருஷ்ண மூர்த்தி என்ற ம.லெ.இடது சாரி நண்பர் விளக்கினார் .கி.மூ.விடம் இவர்கள் - மாநில அமைப்புக் குழுவினர்- வாதம் செய்வதில்லை ஒருவழியாக மா.அ.கு. மனவோசையை முறியடித்து வெற்றி வாகை சூடியபின்னால் இவர்களின் அளுகைக்கு வெளியே சென்று விட்டேன். இவர்கள் தமிழ் நாட்டில் பலருடன் அல்லது எல்லோருடனும் வாதங்கள் - பெரும்பாலும் அவை தூற்றல்களாவே இருக்கும் - செய்து வெற்றிவாகை சூடியதாக அவர்கள் பத்திரிகைகளில் வெளியிட்டுக்கொள்வார்கள். இணையத்திலும் பார்க்கலாம். அதில் ஒருகேள்வி, நீங்கள் மாநிலக்குழு என்றால் உங்கள் மத்தியக் குழு எங்கே இருக்கிறது. எப்படி காங்கிரஸ், பி.ஜெ.பி. இடது சாரிகள் முதலியோர் பிராமணத்தலைமையில் செயல் படுகிறாரெகளோ அதுபோல இவர்களும் பிராமணத்தலைமையில்தான் இயங்குகிறார்கள்.ஈழத்தில் புலிகள், மக்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் அழிந்த பின்னால் அந்நிகழ்வு குற்றித்துஇவர்கள் வியக்காயாணங்கள் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனபதைக் காட்டும். கால் வழியாக கைவழியாக மூளை வழிந்து ஓடுவதாக இவர்களுக்கு ஒரு நினைப்பு. அவர்களிடம் அவ்வளவு மூளை இருக்கிறது. அதை அவர்களே வைத்துக்கொள் ளட்டும். சுப. உதயகுமார் போன்றவர்கள் இப்படிப்படவர்களோடு மன்றாடுவது சரியல்ல. அவர்களுக்கு அது தான் வேலை. சலிக்காமங் செய்வார்கள். உங்களுக்கு ...
Guest
dear udhaya kumar sir,

As you know very well that if PALA will lead in kudankulam struggle,they will close the project and they will get success

1. Why you are not succeeded for last 2 years struggle in kudankulam Pls analyse.

2. you are diverting the matter into money to PALA.

3. there is two case for one struggle
1. people 2. capitialisim you know well that PALA is always for people.

4. You can ask directly to PALA members about money which is spent for case. why you are writing and diverting the issue in different direction?

5.why you are getting afraid if PALA members canvassing in kudankulam? People will come to know that all things for struggle.
muthu
dear udhaya sir,

1. why you are getting afraid for PALA canvassing in kudangulam. people will get know all things about struggle.

2. As you know that PALA will take lead in this struggle they will get success against government.

3. For PALA,There is no need to interact with your struggle in Kudangulam, people will come soon under PALA. this also you know very well.

4. Pls analyse why you are not getting success for last two years struggle.

5. Pls dont divert the matter into money for case. you can ask directly with PALA members.have you asked before this letter for this to anyone? if it is not done means why you are not asking? this means you dont like PALA interaction in kudankulam.
6.Pls understand that if your leadership is not giving solution, people will have rights to get anything, hear anything from pala and they can fight in another direction.
SAVARIRAJ RATHINASIGAMANI
நல்ல வரிகலான தாலாட்டலான தோழமைய் ஆன அரைகூவல்.

‘பொருள் முதல்வாதம்’ மட்டுமே சமூக மாற்றத்துக்கான அடிப்படையாக முடியாது, மக்களின் கலாச்சாரம், பண்பாடு போன்றவையும் முக்கியமானவை

மக்களுக்காக, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடும் அனைவரும் தத்தம் அடிப்படைக் கொள்கைகளில், சித்தாந்தங்களில் சமரசமின்றி, ஒரு பொது வெளியை உருவாக்கி, ஒன்றாக நிற்பதும், சேர்ந்து உழைப்பதும் முக்கியம் என்று நினைக்கிறேன். அம்மாதிரியான இணக்கம் இயலாமற்போனால், நாகரிகமாகப் பிரிந்து தத்தம் வழிகளில் அந்த இலக்கை நோக்கி நடக்கலாம். ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பதும், குறை சொல்வதும், குற்றம் காண்பதும், தம்மை முன்னிலைப் படுத்துவதும், பிறரைப் பழிப்பதும் முதிர்ச்சியற்ற அணுகுமுறை என்றே நினைக்கிறேன்.

“நடந்ததைக் கேட்டால், அடுத்தது பகைதான்”

“கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் எவையென அறிவுமிலார்” நிறைந்து கிடக்கும் நம் நாட்டில், நம்மைப் போன்ற சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் சேர்ந்து நிற்பதும், தேர்ந்து செயலாற்றுவதும் புரட்சியின் அடிப்படைத் தேவை. காந்திப் பெருமகனார் சொன்னது போல, நாம் காண விரும்பும் மாற்றத்தை நாமே வாழத் துவங்குவதுதானே கற்றுணர்ந்த நமது கடமை.
சாணக்கியன்
பார்த்தீர்களா வேடிக்கையை. இதுதான் ஒரிஜினல் தமிழன் புத்தி. எந்த புற்றில் எந்த பாம்போ யாருக்குத் தெரியும்?. ---- காரியம் கைக்கூடி வரும் வேளையில் நீயா நானா என்று அடிதடி தொடங்கிவிடும். முள்ளிவாய்க்காலில் சிங்களன் நுழைவதற்கு கதவை திறந்து விட்டவன் தமிழன் ---- தமிழன் என்றோரு இனமுண்டு, காசுக்காக எதையும் செய்யும் தனிக்குணமுண்டு.
அடப்பாவி !
கீற்றுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

உங்களுடைய தளத்தில் ஒரு புதிய பொத்தானை நிறுவுங்கள், அதில் `` ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் பற்றிய அவதூறு கட்டுரைகளை 24*7 மணி நேரமும் பதிவிட தொடர்பு கொள்ளவும்`` என்று. பல NGO-கள், மக்கள்விரோதிகள் உங்களை தொடர்பு கொள்ளுவார்கள், உங்கள் பிழைப்பும் ஓடும்....
பகத்
ம.க.இ.க தோழர்களை கொள்கையளவில் எதிர்கொள்ளத் தயாரில்லாத கோழைகள் இப்படி அவதூறு செய்வதன் மூலம் சுய இன்பம் அடைகிறார்கள். தருணம் பார்த்துக் காத்திருந்தது போல பாய்ந்து பிடுங்குகிறார்கள் தமிழினவாதிகளும், ஓடு காலிகளும். தோழர். ராஜூ பகிரங்க விசாரணைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்களே, தைரியம் இருந்தால் விசாரணைக்கு ஏற்பாடு செய்யலாமே...
muthu
1. As lawyer raju said , kindly organize meeting with leaders of kudan kulam, kudankulam people with raju's lawyers to discuss about money which was spent for case.

As he said they are ready to come to discuss for this. pls allot your date and time

Then only kudankulam people get to know the real things

Waiting for your reply.......???
manoj
உதயகுமார் அவர்களுக்கு,

நான் அனுவுலை போராட்டம் எதிலும் பங்கெடுக்காதவன் தான், அனுவுலை என்பது அவசியம் , அப்துல்கலாம் மீது பற்று கொண்டிருந்தவன்.

என்னை போன்றவர்களுக்கு அனுவுலை அரசியலை அறிய வைத்து மாற்றியது வினவு தோழர்கள் தான். மின்சார ரயிலில் பிரச்சாரம் செய்து மக்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானது இவர்கள் தான்.

மக்கள் மீதான் தாக்குதல் குறித்து உடனுக்குடன் செய்தி வினவில் தான் வரும்
இரா.வெங்கடேஷ்-குடந்தை
அய்யா சுப.உ.அவர்களுக்கு வணக்கம், உங்களது போராட்டம் மக்களுக்கான,மகத்தான போராட்டம்...!இது வரை தமிழக வரலாற்றில் இதுபோன்று ,மிக பெரியஆதிக்க சக்திகளை எதிர்த்து அறவழியில் நேர்மையான உறுதியுடன் எந்த ஒரு போராட்டமும் நடந்ததில்லை அப்படி இருக்கையில் நீங்கள் எதைக்கண்டும் அஞ்சத் தேவையில்லை ....தொடர்ந்து போராடுங்கள் வெற்றி உங்களுக்கே....!
அடப்பாவி !
இந்த அவதூறு கடிதம் கூட ஒரு விதத்தில் நல்ல விசியம் தான், ஏனென்றால் சில கும்பலை சேர்ந்தவர்கள் கூடங்குளம் ண்கோ கும்பலோடு கூட்டு வைத்து
கொண்டு ம க இ க மக்களை ஏமாற்றுகிறது என்று அவதுறு செய்தனர், ஆனால் இப்பொழுது ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் கூடம்குளம் பிரச்னையை ஏன் எடுத்தனர் (மக்களின் உண்மையான போரட்டதிருக்கு ஆதரவும், ஏகாதிபத்திய – மறுகாலனிய சுரண்டலை ஒழிக்கவும் ), அவர்களது அணுகுமுறை எப்படி இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தேரிந்துவிட்டது. ண்கோ எடுபிடிகளுக்கு ம க இ க-வின் போராட்டம் எப்படி பிரச்சனையாக இருந்தது என்று வேறு வழி இல்லாமல் சொல்லிவிட்டனர்…

/கடலோர ஊர்களிலுள்ள இளைஞர்களைப் பிடித்து, என்னைப்பற்றி, எங்கள் இயக்கத்தைப் பற்றி அவர்களிடம் தவறாகப் பேசி, மூளைச்சலவை செய்வது உண்மையிலேயே தேவைதானா?/

மக்கள் முன்னால் இவர்கள் அம்பல பட்டு போவதை ஒத்துக்கொள்ளாமல் ம க இ க மீது பலி போடுகிறார்கள்…….
vkalathur seithi
ம.க.இ . க பற்றி எல்லோரும் புரிண்டுகொள்ளவேண்டிய விஷயம் எப்பொழுதும் தங்கள் நோக்கம் பற்றியே சிந்திப்பவர்கள்............. அதாவது ‘பொருள் முதல்வாதம்’ மட்டுமே அவர்களுக்கு முக்கியம் . பல போராட்டங்களில் ஒரு ஆளாக கலந்துகொள்ளும் இவர்கள் ஆரம்பத்தில் போராட்டம் நடத்துபவர்களுக்காக என்று ஆரம்பித்து இறுதியில் அவர்களின் நோக்கமான ‘பொருள் முதல்வாதம்’ என்ற நோக்கில் போராட்டத்தை திசை திருப்புவது என்பதுதான் அவர்கள் உத்தி.......... இடையில் சுப உ கூறுவதுபோல் கிடைக்கிற ஆட்களை மூளை சலைவை செய்து தங்கள் பக்கம் இழுத்து போராட்ட களத்தை தங்கள் பக்கம் திருப்புவது வேறு நடக்கும்..... இறுதியில் போராட்ட தலைமைக்கு களங்கம் கற்பித்து தாங்கள் தலைமை ஏற்பார்கள்.........
ரவிச்சந்திரன்
37 ஆண்டுகளாக இயக்கம் நடத்தி, புரட்சியை நம் தெருவின் முக்கு வரை கொண்டு வந்துவிட்ட ம.க.இ.க பற்றி இப்படியா எழுதுவது? போய் தூங்குங்கள் சுப. உதயகுமார் அவர்களே. காலையில் எழுந்து பாருங்கள் ம.க.இ.க. வின் புரட்சி நம் வீட்டின் வாசலில் காத்திருக்கும்.
திப்பு
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சுப.உதயகுமார் அவர்களுக்கு,

உண்மையிலேயே உங்களுடைய இந்த திறந்த மடல் அதிர்ச்சி அளிக்கிறது.அதிலும் கடைசியாக நீங்கள் குறிப்பிட்டுள்ள '' நம்மைப் போன்ற சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் சேர்ந்து நிற்பதும், தேர்ந்து செயலாற்றுவதும் புரட்சியின் அடிப்படைத் தேவை. '' என்ற வரிகளை படிக்கும்போது நீங்களே அதை பின்பற்றவில்லையே என வேதனையும் வருகிறது.

உங்களுடைய இந்த திறந்த மடலில் இருந்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீங்கள் ம.க.இ.க. தோழர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மீது மனத்தாங்கல் கொண்டிருக்கிறீர்கள் என அறிய முடிகிறது.அப்போதெல்லாம் அதனை பகிரங்கப்படுத்தாத உங்களுக்கு இப்போது இந்த கடிதத்தை எழுதும் அவசியத்தை ஏற்படுத்தியது அண்மையில் நடந்த இரண்டு நிகழ்வுகள் என தெரிவிக்கிறீர்கள்.

அவர்கள் குழு ஒன்றுஜூனியர் விகடன் செய்தியாளரிடம் “இவர்களிடம் காசே வாங்காமல் நாங்கள் வழக்கு நடத்திக் கொடுத்தோம்” என்று சொன்னது

அக்டோபர் 18, 2013 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தாது மணற்கொள்ளை சம்பந்தமாக விண்ணப்பம் ஒன்றைக் கொடுக்க திருநெல்வேலிக்குச் சென்றிருந்த உங்கள் குழுவில் தலையிட்டு, குழுவிலிருந்த போராளிகளில் ஒருசிலரைத் திசைதிருப்பி அங்கிருந்த செய்தியாளர்களோடும், காவல்துறையினரோடும் மோதச் செய்து, அவர்களைக் கைது செய்ய வைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது ஆகிய இந்த இரண்டு நிகழ்வுகளையும் முதலில் பரிசீலித்து விடலாம்.

உங்களுக்கு மாற்றாக அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு புதிய தலைமையை உருவாக்க அவர்கள் ''முயற்சித்த'' போது கூட அது அவர்களின் சனநாயக உரிமை என பெருந்தன்மையாக அதை அனுமதித்த,ஏற்றுக்கொண்டு அமைதியாக இருந்த, “கூடங்குளம் போராட்டத்தின் தலைமை சரியில்லை” என்ற கருத்தை ஏப்ரல் 21, 2012 அன்று திருநெல்வேலியில் நடந்த ஒரு கருத்தரங்கில் உங்களை மேடையில் வைத்துக் கொண்டே அவர்கள் சொன்னபோது கூட அது அவர்களின் கருத்துரிமை என ஏற்றுக்கொண்டு அமைதியாக இருந்த நீங்கள் காசே வாங்காமல் நாங்கள் வழக்கு நடத்திக் கொடுத்தோம் என்று சொன்னதற்காக இது அவர்கள் பரப்புரை உரிமை என ஏற்காமல் கோபப்பட்டு திறந்த மடல் எழுதி உறவை முறித்துக் கொள்ளும் அளவுக்கு போயிருப்பது சனநாயக பண்புக்கு பொருத்தமாக இல்லையே.

ஆட்சியர் அலுவலகத்தில் என்ன நடந்தது எப்படி அவர்கள் மோதலை உருவாக்கினார்கள் அந்த ''மோதல்'' போராட்டத்தின் போக்கில் தானே விளைந்ததா அல்லது அவர்கள் வேண்டுமென்றே கெட்ட நோக்கில் உருவாக்கினார்களா போன்ற முழுமையான விவரங்கள் உங்கள் மடலில் இல்லை.ஆகவே அது குறித்து விவாதிக்க இயலவில்லை.ஒன்று மட்டும் சொல்லலாம்.அந்த போராட்டம் குறித்து “ஆட்சியர் அலுவலக கட்டிடத்தினுள் அழைத்துச் சென்று அமரச் செய்து கோஷங்கள் எழுப்பச் செய்தோம்” என்று அவர்கள் எழுதியதை தவறு என்கிறீர்கள்.ஒரு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதில் தங்கள் பங்களிப்பு குறித்து பொது வெளியில் பேசுவதில் தவறு ஏதுமில்லையே.போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் சொல்லியவாறு அதை உங்கள் போராளி பெண் தோழர்கள் ஏற்று செயல்பட்டிருந்தால் அதில் சிறுமை ஏதுமில்லை.நீங்கள் சொல்லியவாறு உலகுக்கே அணுசக்தியின் அழிவிலிருந்து உய்வடையும் வழி சொல்லிக் கொண்டிருக்கும் அந்த போராளிப் பெண் தோழர்களுக்கு இதனால் அவமரியாதை ஒன்றும் விளைந்து விடவில்லை.இல்லாததையும் பொல்லாததையும் கற்பனை செய்யாதீர்கள்.

மேலும் அவர்கள் காசு வாங்கிக் கொண்டுதான் வழக்காடினார்கள் என நிறுவும் முகத்தான் 1,25,000 உருவாக்களை கணக்கு சொல்லாமல் அமுக்கி விட்டார்கள் என குற்றச்சாட்டு ஒன்றையும் வைக்கிறீர்கள்.அவர்கள் இதை மறுத்து மக்கள் முன்னிலையில் நேரடி விசாரணை கோருகிறார்கள் எனபது ஒரு புறம் இருக்கட்டும்.பகுத்தறிவோடு உங்கள் குற்றச்சாட்டை எண்ணிப் பார்க்கும் எவருக்கும் அது நகைப்புக்கு உரியதாகவே தோன்றும்.அய்யா அவர்கள் உங்களிடம் உண்மையில் 1,95,000 - உருவாக்கள் வாங்கியிருந்து அதில் 1,25,000 உருவாக்களை அமுக்கி கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை எனும் கதையாக 70,000-க்கு மட்டும் கணக்கு கொடுத்து மீதி பணத்தை நாங்கள் அமுக்கி விட்டோம் என சொல்லாமல் சொல்லி இருருப்பார்களா.மொத்தத்தில் கொடுத்த பணம் முழுவதும் செலவாகி விட்டது என வாய் மொழியாக சொல்லி தப்பி இருக்க மாட்டார்களா அல்லது 1,95,000 - க்கும் கள்ளக் கணக்கு எழுதி கொடுத்திருக்க மாட்டார்களா.

மற்றபடி புதிய ஜனநாயகம் இதழில் அவர்கள் எழுதியது குறித்து நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் தான் பதில் சொல்லவேண்டும்.நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.ஒன்று மட்டும் கேட்க விருப்பம்.இவ்வளவு காலம் அது குறித்து நீங்கள் ஏன் எதுவும் பேசவில்லை.

தமிழ் மக்களுக்கான உங்கள் போராட்டத்தில் உங்களுக்கு தோள் கொடுத்த இயக்கத்தை பகைத்துக் கொள்ள துணிந்தது மேலே சொன்ன இரண்டு வலுவில்லாத காரணங்களுக்காகத்தானா.சொந்த நலன்களை துறந்து மக்களுக்காக மக்களின் நலனுக்காக போராடும் சுப.உதயகுமார் என்ற போராளியின் மனசாட்சி விடையளிக்கட்டும்.
akilan
ம.க.இ.க ஒரு போலி கமுனிஸ்டு, சந்தர்ப்பவாதிகள், பிழைப்புவாதிகள்
ssengodi
உதய குமாரை தந்திரமாக சரணடைய வைத்து கூடஙகுளம் போராட்டத்தை கைப்பற்றுவதே ம க இ க வினரின் உண்மை நோக்கம். தஙகளது விளம்பரத்துக்காக எந்த துரோகத்தையும் செய்து அதை தமது பலத்தால் நியாயப்படுத்த முயல்வார்கள். தங்களது நோக்க்ம் நிறைவேறாவிட்டால் உள்குத்து வேளை செய்து ஓடிவிடுவார்கள். குருட்டு விசுவாச்மே அணிகளின் அரசியல் அறிவு. மாபெரும் அறிவாளிகள் என்று தமக்கு தாமே புகழ்ந்து கொள்வதே தலைமையின் அரசியல் அறிவு. ஒருவித 'சைக்கோ' வால் பாதிக்கப்பட்ட இவர்கள் மக்களுக்கு நேர்மையானவர்கள் அல்ல. தலைமையோ சொந்த அணிகளிடமே நேர்மையற்றது. ஆதாரஙகள் நிறைய உண்டு.மக்கள் இவர்களை நம்புகிறார்கள் என்பது ஒரு 'முற்போக்கு மூடனம்பிக்கை'.
தமிழன்
உதயகுமாரின் கடிதத்தில் நியாயம் உள்ளது. அரசுக்கு எதிரான கருத்துக்களை உடையவர்களெல்லாம் புரட்சிகரமான சிந்தனைகளோடும், கம்யுனிச சித்தாந்தத்தோடும் தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கூடங்குளம் மக்களின் போராட்டம் காந்திய வழயில், அறவழியில் நடப்பது பாராட்டத்தக்கது. அதனால் தான் அப்போராட்டம் வெகுஜன மக்களில் ஆதரவை பெற்றுள்ளது. உதயகுமாரை விமர்சிப்பதை ம.க.இ.க. வினர் நிறுத்தட்டும். ம.க.இ.க. வினரின் பல போராட்டங்களும், செயல்பாடுகளும் வரவேற்க்கதக்கதே! அதே வேளையில் தங்களது இழுப்புக்கெல்லாம் எல்லோரும் வர வேண்டும் என நினைப்பது ஏற்புடையதல்ல.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
ம.க.இ.க.

இவர்கள் வாதம் செய்வதில் வல்லவர்கள். அவர்களுக்கு எப்படி பேசி மடக்ககுவது என்பது தெரியும். ஆனால் இங்கு தேவை வாதத்திறமையல்ல சமூக மாற்றத்திற்காக மக்களை ஒன்றினைத்து புரட்சி செய்தல்.

இது தெரிந்திருந்தால் 40 வருடமாக இப்படியேவா இருப்பார்கள்.

தாங்கள் சமூக விஞ்ஞானத்தின் பேரசிரியர்கள் என்று நம்பி மார்க்ஸ்க்கு தெரிந்த சமூக விஞ்ஞானத்தின் அ.ஆ,இ,ஈ களையே நிறைவு பெற்ற உண்மை என நம்பி இருப்பார்களா?

பாவம் இவர்களை நம்பி புரட்சி கனவுகளை கண்டுகொண்டிருக்கும் இளைஞர்கள்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
ssengodi arumai

"குருட்டு விசுவாச்மே அணிகளின் அரசியல் அறிவு. மாபெரும் அறிவாளிகள் என்று தமக்கு தாமே புகழ்ந்து கொள்வதே தலைமையின் அரசியல் அறிவு. ஒருவித 'சைக்கோ' வால் பாதிக்கப்பட்ட இவர்கள் மக்களுக்கு நேர்மையானவர்கள் அல்ல. தலைமையோ சொந்த அணிகளிடமே நேர்மையற்றது. ஆதாரஙகள் நிறைய உண்டு.மக்கள் இவர்களை நம்புகிறார்கள் என்பது ஒரு 'முற்போக்கு மூடனம்பிக்கை'."
sivaraja bopathy
ஜோ. தமிழ்ச்செல்வன், “ம.க.இ.க வை நம்பி ஏமாந்து விடாதீர்கள்” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். மார்ச் 19, 2012 அன்று போராட்டக்குழுவை சேர்ந்த வழக்கறிஞர் சிவசுப்பிரமணியனும், கூட்டப்புளி கைது செய்யபட்டபோது சக வழக்குரைஞர் என்ற முறையில், “வாருங்கள் போகலாம் என்று இவரை இடிந்த கரை செல்வதற்கு அழைத்தேன்". "எனக்கு வேறு வேலை இருக்கிறது, வரமுடியாது" என்று அப்போது வர மறுத்தார்.

அன்றைக்கு வராதது மட்டுமல்ல, அதற்குப் பிறகு மக்களைப் பிணையில் எடுப்பதற்கான வேலைகள் 15 நாட்களுக்கு மேல் தொடர்ந்தன. 15 நாளும் அவருக்கு தொடர்ந்து வேறு முக்கிய வேலைகள் இருந்திருக்கின்றன. அவர் வரவில்லை. எந்த வேலையும் இல்லாதவர்களான நாங்கள்தான் போய்க்கொண்டிருந்தோம். இந்த லட்சணத்தில் “தொடக்க காலத்திலிருந்தே கூடங்குளம் போராட்டத்தில் பங்கெடுத்ததால் ம.க.இ.க வை நான் நன்கு அறிவேன்” என்று கூச்சமே இல்லாமல் சொல்லிக் கொள்கிறார்.

“கைது செய்யப்பட்ட 200 பேரையும் 200 ரூபாய் செலவில் பிணையில் எடுத்திருக்க முடியும்” என்கிறார் தமிழ்ச்செல்வன். அப்படிப்பட்ட சாகசங்களையெல்லாம் செய்யக்கூடிய ஆற்றல் இந்த நாட்டில் ஒரே ஒரு மனிதருக்கு மட்டும்தானே உண்டு? 80 இன்னோவா கார்களில் 15,000 பக்தர்களை கேதார்நாத்திலிருந்து காப்பாற்றியவரான நரேந்திர மோடி வேண்டுமானால், 200 ரூபாயில் 200 பேரைப் பிணையில் எடுத்திருக்க முடியும். ஜோ.தமிழ்ச்செல்வனால் எப்படி முடியும் என்று சிந்தித்தபடியே நாகர்கோயில் நகரின் ஒரு குட்டிச் சுவரில் ஒன்னுக்கடிப்பதற்காக ஒதுங்கினேன்.

எதிரில் தமிழ்ச்செல்வனும் மோடியும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதிர்ச்சியில் சிறுநீர் உறைந்து விட்டது. அந்தக் சுவரொட்டியை உங்களுக்கும் காணத்தருகிறேன். “புதிய சிந்தனை, புதிய நம்பிக்கை – நரேந்திர மோடி - ஜோ.தமிழ்ச்செல்வன், தெற்கு எழுத்தாளர் இயக்கம்."
https://www.facebook.com/sivaraja.boopathy
sivakumar subramanian
திறந்த மனதோடு அணு உலைப் பிரச்சனைக்கு தீர்வைத் தேடும் - தூய ஜனநாயகவாதி திரு.சுப.உதயகுமார் அவர்களுக்கு சில கேள்விகள்

1. உங்கள் கொள்கை காந்தியமா? பெரியாரியமா? அல்லது வை.கோபால்சாமி, நெடுமாறன், சீமானின் தமிழ் தேசியமா? அல்லது வெறும் தன்னார்வ தொண்டு நிறுவன சேவை மட்டுமா?
2. அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் யாரால் எப்போது எங்கு துவங்கப்பட்டது? அதன் தலைவர் செயலர், நிர்வாகிகள் யார்?அதன் கொள்கை அறிக்கையை வெளியிடவும்.
3. அனுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தில் புஷ்பராயன், மை.பா, முகிலன் உள்ளனரா?
4. அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் கடந்த மூன்றாண்டுகளாக இதுவரை எத்தனை முறை கூட்டப்பட்டுள்ளது? அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படிதான் நீங்கள் செயல்படுகின்றீர்களா?
5. கூடங்குளம் அனுலை எதிர்ப்பு போராட்டக்குழு உறுப்பினர்கள் மொத்தம் எத்தனை பேர்? அவர்களின் பெயர்கள் என்ன?
6. ஜனநாயக முறைப்படி போராட்டகுழுவின் அனைத்து உறுப்பினர்களையும் கூட்டித்தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகிறதா?
7. கூடங்குளம் சிவசுப்பிரமணியம், மனோ தங்கராசு ஆகியோர் போராட்டக்குழுவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்களா? ஆம் எனில் ஏன்?
8. தமிழர் களம் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள மாற்று மொழிபேசும் மக்களை வந்தேறிகள் என எதிர்க்கும் இனவெறி பாசிச அமைப்பு.அதன் நிர்வாகிகளுடன் காந்தியம் பேசும் நீங்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் எப்படிப் பணியாற்றுகிறீர்கள்?
9. செப்.10, 11 , 2012 தடியடி, துப்பாக்கிசூட்டின் போது கைதானோர் வழக்குகளை நடத்தியது எந்த அமைப்பினர்? இடிந்தகரை மக்களை பிணையில் எடுக்க அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தொகை எவ்வளவு? அதற்கு கணக்கு எழுதி கொடுத்துள்ளார்களா? கொடுத்திருந்தால் வெளியிடவும்.
10. அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டபோதும் புஷ்பராயன் தொண்டு நிறுவனம் மீது மட்டும் அப்படி எந்த வழக்கும் பதிவு செய்யப்படாத மர்மம் என்ன?
11. முகிலன் போராட்டக்குழுவில் எந்த அடிப்படையில் எப்போது சேர்க்கப்பட்டார்?
12. முகிலன் மீதான பாலியல் குற்றாச்சாட்டுக்கு மக்கள் முன்பு விசாரணை நடத்தப்பட்டதா?
13. கருணாநிதியை காட்டமாக விமர்சிக்கும் நீங்கள், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கருணாநிதியை சந்தித்ததைக் கண்டிக்காதது ஏன்?
நீண்ட நாட்களாக இக்கேள்விகளில் பல எனக்கு உண்டு.தற்போது பலரும் தங்களிடம் கேள்வி கேட்பதால் நானும் கேட்கிறேன்.திறந்த மனத்துடன் விரைந்து பதிலளிக்கவும்.
sai
மோடியும்,தமிழ் செல்வனும் சேர்ந்து இருக்கும் போஸ்டரைப் பார்த்தேன்.இவர்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து போகவேண்டியதில்லை.அருவெறுப்பாக இருக்கிறது.

http://tpdkma.blogspot.in/
www.suraavali.blogpost.in
""கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை, தாதுமணற் கொள்ளை பிரச்சினை பற்றியெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்கும் கடலோர மக்கள் மத்தியிலேயே நீங்கள் தொடர்ந்து பரப்புரை செய்வது ஏன்? இந்தப் பிரச்சினைகள் பற்றி போதிய விழிப்புணர்வில்லாத உட்பகுதி மக்களை சந்தித்து அவர்களிடம் பரப்புரை செய்யலாமே? கடலோர ஊர்களிலுள்ள இளைஞர்களைப் பிடித்து, என்னைப்பற்றி, எங்கள் இயக்கத்தைப் பற்றி அவர்களிடம் தவறாகப் பேசி, மூளைச்சலவை செய்வது உண்மையிலேயே தேவைதானா? இக்கேள்விகளைக் கேட்பதற்காகத்தான் இக்கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன்.""

உதயகுமார் அவர்கள் ம.க.இ.க வை பற்றி நிறைய அம்பலபடுத்தி கேள்வி கேட்டுள்ளார், ஆனால் அதற்கு

வினவில் ம.க.இ.க வின் பதில்.....
""நாங்கள் கடலோர கிராமங்களிலிருந்து வெளியேற வேண்டுமென்று விரும்புகிறவர்கள் கனிம மணல் கொள்ளையர்கள் மட்டுமே என்று இதுகாறும் நாங்கள் எண்ணியிருந்தோம். உதயகுமாரின் கடிதத்தில் காணப்படும் ம.க.இ.க வுக்கு எதிரான அவதூறுகளும், கடலோர இளைஞர்களை “மூளைச்சலவை” செய்வதாக அவர் கூறும் குற்றச்சாட்டும், “வைகுண்டராசன் வலைப்பின்னல்” பற்றிய புதிய புரிதலை எங்களுக்குத் தருகின்றன. அவரது கடிதத்தில் கூறியுள்ளவை அனைத்துக்கும் உடனே பதில் அளிக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம் – நிதி தொடர்பான அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டைத் தவிர.""

இதில் கவனிக்க வேண்டியது, "அவரது கடிதத்தில் கூறியுள்ளவை அனைத்துக்கும் உடனே பதில் அளிக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம்" என்று ம க இ க ஏன் சொல்கிறது, உடனே பதில் சொல்லாததற்கு என்ன காரணம்?

ஒரு காரணமும் இல்லை, ம க இ க ஒரு பித்தலாட்டகார அமைப்பு, நான் ம க இ க வின் தொழிற்சங்கதில் (காஞ்சிபுரம் மேற்கு பகுதி ) இணை செயலாலராக பனிபுரிந்தவன். கூடன்குளம் போராட்டத்தில் ம க இ க NGO கலுடன் பச்சையான சந்தர்பவதமாகவும், அருவருக்கதக்க நடந்து கொண்டதாளும் நான் அமைப்பில் இருந்து வெளியெறினேன். நான் அமைப்பில் இருந்த போது கூடன்குளம் மக்களிடம் ஒரு பைசாகூட வாங்காமல் வழக்கு நடத்துவதாக கூறினர். ஆனால் தர்ப்போது ரூ. 1,95,000 பணம் வாங்கி உள்ளனர். அணு உலையைவிட ஆபத்தானவர்கள் ம க இ க வினர்.

இவர்களின் பிதலாட்டதை விரிவாக அடுத்த பதிவில் தறுகிறேன்.
நன்றி.
ராஜ் குமார்
manoj
போராட்ட குழுவினர் மீது பாலியல் குற்றசாட்டுகள் வேறு உள்ளதா? உதயகுமார் அதை ஏன் மூடி மறைத்தார்? அவருக்கும் பாலியல் குற்றவாளி என்று சொல்லப்படும் நபருக்கும் என்ன் தொடர்பு?

வினவு அறிவித்ததுபோல உதயகுமார் ஒரு பகிரங்ல விசாரனைக்கு முன்வருவாறா?
ஜோ.தமிழ்ச்செல்வன்
1,90,00 ருபாயை எப்படி கணக்கு காட்டவது என சிந்தித்தபடி வந்த வழக்கறிஞர் சிவராஜ பூபதிக்கு மூத்திரம் முட்டியிருக்கிறது. எனவே அவர் பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்தாமல் பொது இடத்தை அசுத்தமாகக முயன்றிருக்கிறார். டாக்டர் செல்லப்பாவின் விளம்பர அறிவுரைக்கூட ம.க.இ.க. சிவராஜபூபதிக்குத் தெரியவில்லை. ஜோ. தமிழ்ச்செல்வனும் மோடியும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த விளம்பரத்தைப் பார்த்ததும் இவருடைய மூத்திரம் உறைந்துவிட்டதாம். உறையாதா என்ன? மோடியை கண்டு காங்கிரசு ஏன் பயப்படுகிறது? ஊழலை வெளிக்காட்டுவதால் அல்லவா! அவரோடு ஜோ. தமிழ்ச்செல்வன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டவுடன் மூத்திரம் உறைந்துவிட்டதாம். மூத்திரம் மட்டுமல்ல இனி பேதியும் உறைந்துவிடும். பார்த்து செயல்படுங்கள். நீதி என்றும் வெல்லும்.
பேதி
ஜோ தமிழ்ச்செல்வன் இன்னும் கொஞ்சம் ட்ரை பன்னுங்க ம்.. ம்...
Ranjith
உதயகுமார் கண்ணியமிக்க மனிதர். ஒருவரின் எழுத்துக்களே அவரின் நற்சான்றினை நல்கும்.ம.க.இ.க.போல வசவு பாடும் அமைப்பு ஓன்று இங்கு உள்ளதா என்று தெரியவில்லை. இது போன்ற நெடிய போராட்டத்தை இவர்களால் நடத்த முடியமா. சும்மா செவப்பு சொக்கா போட்டவன் எல்லாம் புரட்சியாளன் ஆகி விட முடியாது. உடோப்பியன் புரட்சியாளர்களான இவர்களை விட்டுத்தள்ளுங்க உதயகுமார். நாங்கள் இருக்கிறோம்.
[email protected]
ம.க.இ.க நமது குரலிலும் பேசும். நமது எதிரியின் குரலிலும் பேசும். ஈழ விடுதலையை ஆதரித்து நம்து குரலிலும் பேசும். பாசிச விடுதலை புலிகளை, பிரபாகரனை முறியடிக்க வேண்டும் என்று சந்திரிகா சோ குரலிலும் பேசும். பார்ப்பனியத்தை வீழ்த்த வேண்டும் என்று நம்து குரலிலும் பேசும். பார்ப்பனிய ஆதிக்கத்தை வீழ்த்தும் இத ஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும் என்று பார்ப்பனிய குரலிலும் பேசும். தமிழ் தேசியத்தை எதிர்க்க வில்லை என்று நமது நண்பனை போல் பேசும். ஹிந்திய தேசியமே எமது இலக்கு என்று நமக்கு எதிராகவும் பேசும். -- பட்டீயூர் பாவலர்

"ம.க.இ.க வின் மறைமுக பார்ப்பனியமும் மனங்கவர்ந்த இந்திய தேசியமும்" என்ற நூலில் இருந்து.
கருப்பன்
ஜோஓஓஓஓஓஒ.தமிலுசெலுவ அண்ணன், மோடிய பாத்தால் காங்கிரசுக்கு பயம் அது சரி அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் பி.ஜே.பி.யும் முக்க்க்ககிய பங்கு வகிக்குதா....அணு உலையை எதிர்த்து இப்படி கிழிய பேசும் நீங்கள் மோடியை அணு உலையை எதிர்த்து பேச அழைத்து வரத்தான் போஸ்டர் ஒட்டினீர்கள் போலும்.....அது சரி சிவராஜ பூபதி எப்போது ஜெயராஜ பூபதி ஆனார்...ஒருவேளை அந்த பதில் நீங்க மப்புல இருக்கும்போது போட்டதோ......?
தோழன்
//“கூடங்குளத்திலிருந்து வெகுதொலைவிலுள்ள சென்னை மக்களிடம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர இயக்கங்கள் அணு சக்தி அணு உலை எதிர்ப்பு இயக்கத்தை எடுத்துச் சென்றபோது கூட முதலில் கடும் எதிர்ப்பையே கண்டார்கள். ஆனால், அவர்கள் பிரச்சார முயற்சியில் அழுந்தி நின்று இயக்கத்தைத் தொடர்ந்தபோது, ஆதரவு தருபவர்களாக மக்கள் மாறினர்.” அற்புதமானப் புரட்சியாக இருக்கிறதே? இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்? “அணு சக்தி அணு உலை எதிர்ப்பு இயக்கத்தை” எப்படி எடுத்துச் சென்றீர்கள்? என்னென்ன நிகழ்வுகள், எங்கெங்கு, எத்தனை முறை, எப்படியெல்லாம் நடத்தினீர்கள்? எந்தவிதமான “கடும் எதிர்ப்பை” எதிர்கொண்டீர்கள்? “அழுந்தி நின்று இயக்கத்தைத் தொடர்ந்த” வித்தை பற்றியும் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்?//

இந்த கேள்விகளில் ஒன்றே போதும் உதயகுமார் ஒரு உலக மகா பொய்யர் என்பதற்கு. தமிழ்நாடு முழுக்க பிரச்சார இயக்கம் நடத்தியது அனைவருக்கும் தெரிந்த வேளையில், உதயகுமார் மட்டும் வைகுந்தம் சென்றிருந்தாராம். *** ****** *****
Guest
எங்கெல்லாம் மக்கள் போராட்டங்கள் வெடித்து கிளம்புகிறதோ அங்கெல்லாம் மூக்கை நுழைத்து பிரச்சாரம் என்ற பெயரில் 'அளப்பரை' செய்வது ம.க.இ.க வின் அகென்ட. முற்றிலும் அறிந்த இந்த அறிவாளிகளுக்கு மக்களை மட்டும் முன் கூட்டி புரிந்து கொள்ள முடிவதேயில்லை. அந்த ஒரு குறைபாடு (!) தான் புரட்சி தள்ளி போக காரணம். தலைக்கு மேல் உள்ள கணத்தை இறக்கி வைத்து அனைவரையும் மதிக்க கற்றுக் கொண்டால் குறைபாடு (!) நீங்கி பார்வை தெரிய வாய்புள்ளது. அணிகளும் வீர சவடால் அடிக்கவே பழக்கப்படுத்தபடுவதால் அவர்களும் 'நாய் சேகராகவே' உதார் விடுகிறார்கள். இனவாதத்தின் கூச்சல் அரசியலுக்கு ம.க.இ.க வின் சவடால் அரசியல் மாற்று அல்ல. மாதக்க்ணக்கில் சிறை சென்ற அணிகள் இருந்தது போய் ஒரு நாள் சிறை என்றாலே ஒடி ஒளியும் 'வடிவேலு'க்கள் தான் அங்கு அதிகம். ஆனாலும் அவர்களுக்கு 'அரசியல் சந்தை' நன்றாவே உள்ளது.
maaRan
MY HUMBLE SUGGESTION AND REQUESTS... PLEASE DO NOT SPARE YOUR TIME FOR SUCH PEOPLE. YOU ARE COORDINATING THE DOWNTRODDEN AND OPPRESSED PEOPLE AND PERFORMING A REMARKABLE STRUGGLE . KOODANKULAM STRUGGLE BECOMES AN OUTSTANDING EXAMPLE GLOBALLY.
ssengodi
இது நான் தான்..........எங்கெல்லாம் மக்கள் போராட்டங்கள் வெடித்து கிளம்புகிறதோ அங்கெல்லாம் மூக்கை நுழைத்து பிரச்சாரம் என்ற பெயரில் 'அளப்பரை' செய்வது ம.க.இ.க வின் அகென்ட. முற்றிலும் அறிந்த இந்த அறிவாளிகளுக்கு மக்களை மட்டும் முன் கூட்டி புரிந்து கொள்ள முடிவதேயில்லை. அந்த ஒரு குறைபாடு (!) தான் புரட்சி தள்ளி போக காரணம். தலைக்கு மேல் உள்ள கணத்தை இறக்கி வைத்து அனைவரையும் மதிக்க கற்றுக் கொண்டால் குறைபாடு (!) நீங்கி பார்வை தெரிய வாய்புள்ளது. அணிகளும் வீர சவடால் அடிக்கவே பழக்கப்படுத்தபடுவதால் அவர்களும் 'நாய் சேகராகவே' உதார் விடுகிறார்கள். இனவாதத்தின் கூச்சல் அரசியலுக்கு ம.க.இ.க வின் சவடால் அரசியல் மாற்று அல்ல. மாதக்க்ணக்கில் சிறை சென்ற அணிகள் இருந்தது போய் ஒரு நாள் சிறை என்றாலே ஒடி ஒளியும் 'வடிவேலு'க்கள் தான் அங்கு அதிகம். ஆனாலும் அவர்களுக்கு 'அரசியல் சந்தை' நன்றாவே உள்ளது.இது நான் தான்.
கருப்பன்
அது சரி.....உதயகுமார் அண்ணாச்சி அவுகதான் ஊர்க்கூட்டம் போடுங்க நிரூபிக்கொம்னு சொல்லுதாவளே அந்த எழவு ஊர்க்கூட்டத்த போட்றவேண்டியதான......ஒருவேள அப்படி போட்டா உங்க தலயவா சீவ போறாவ.......செங்கொடி அனானிமசு கொஞ்சம் சொல்லுங்கப்பா......அப்படிய அந்த சூராவாளியோ எந்த வலியோ ராஜ்ஜுகொமாரு அடுத்த எதயோ அவுத்து வுடப்போரேனு சொன்னாவ நானும் அப்படி என்னத்தையோ சொல்லப்போரவனு இருக்னேன் எழவு சு.சாமியோட சேந்த பயலுவலா இருப்பாம்போல இன்னிக்கு வரக்கி இந்த ஆதாரம் என் கக்கத்துல இருக்குனு வித்த காமிக்கான் அவனையும் ஏதாவது சொல்லச்சொல்லுங்க......சார்வாள் உங்க வமசத்துக்கே புண்ணியமா போவும்.....
lenin
ம.க.இ.க. தோழர்களுக்கு “திறந்த
கடிதம்” ஒன்றை கூடங்குளம்
அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழுவின்
ஒருங்கிணைப்பாளர் திரு.சுப.உதயகுமார்
வெளியிட்டிருக்கிறார்.
2011 முதல் இன்றுவரை நிகழ்ந்தவை என்று பல
சம்பவங்களைக் குறிப்பிட்டு, அவை குறித்த
அவரது விமரிசனங்களையும் அதில்
எழுதியிருக்கிறார். இத்தனை நாட்களுக்குப்
பின்னர், இப்படியொரு கடிதத்தை அவர்
இப்போது எழுதுவதற்கு என்ன காரணம்?
அதையும் அக்கடிதத்திலேயே அவர்
குறிப்பிட்டிருக்கிறார்.
“கூடங்குளம் அணுமின் நிலையப்
பிரச்சினை, தாதுமணற்
கொள்ளை பிரச்சினை பற்றியெல்லாம்
நன்கு அறிந்து வைத்திருக்கும் கடலோர
மக்கள் மத்தியிலேயே நீங்கள்
தொடர்ந்து பரப்புரை செய்வது ஏன்? இந்தப்
பிரச்சினைகள் பற்றி போதிய
விழிப்புணர்வில்லாத
உட்பகுதி மக்களை சந்தித்து அவர்களிடம்
பரப்புரை செய்யலாமே? கடலோர
ஊர்களிலுள்ள இளைஞர்களைப் பிடித்து,
என்னைப்பற்றி, எங்கள் இயக்கத்தைப்
பற்றி அவர்களிடம் தவறாகப் பேசி,
மூளைச்சலவை செய்வது உண்மையிலேயே
தேவைதானா? இக்கேள்விகளைக்
கேட்பதற்காகத்தான்
இக்கடிதத்தை உங்களுக்கு நான்
எழுதுகிறேன்.”
என்று குறிப்பிட்டுள்ளார்.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின்
ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்
கடந்த அக்டோபர் 9 ஆம்
தேதியன்று தூத்துக்குடி, குமரி,
நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த மனித
உரிமைப் பாதுகாப்பு மையத்தின்
வழக்குரைஞர்கள் உதயகுமாரை இடிந்தகரையில்
நேரில் சந்தித்திருக்கின்றனர். அக்டோபர் 12 ஆம்
தேதி தூத்துக்குடியில் நடத்தவிருந்த பேரணி,
பொதுக்கூட்டம் குறித்த துண்டறிக்கைகளைக்
கொடுத்து, தாதுமணல் கொள்ளைக்கு எதிராக
நாங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தைப்
பற்றியும் விளக்கியிருக்கின்றனர்.
இச்சந்திப்பு பற்றி உதயகுமாரும்
தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அன்று தாது மணல்
கொள்ளை எதிர்ப்பியக்கத்தை வரவேற்று
வழக்குரைஞர்களிடம் உதயகுமார்
பேசியிருக்கிறார். ஆனால், தற்போது கடிதத்தில்
வேறு குரலில் பேசுகிறார். சென்ற மாதம்
வரை அவரை பல சந்தர்ப்பங்களில் நேரில் சந்தித்த
தோழர்களிடம் பேசாத பல “பிரச்சினைகளை”
இப்போது அவர் பட்டியலிட்டு அடுக்குகிறார்.
தாது மணல் கொள்ளை என்ற
பிரச்சினை பற்றி அவரது நிலை என்ன?
இதனை 16, அக், 2013 ஆனந்த விகடன் பேட்டியில்
அவர் தெளிவாக கூறியிருக்கிறார்.
“தாதுமணல் கொள்ளையர்களின்
அனுதாபிகள் எங்கள் ஊர்களில்
இருக்கிறார்கள். அதைப் பேசினால், ஊர்
மக்களிடையே பிளவு வரும்; சமுதாயப்
பிரச்னைகள் எழும்… நாங்கள்
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
மட்டும்தான். அனைத்து தீய சக்திகளுக்கும்
எதிரான மக்கள் இயக்கமல்ல ..”
என்று கூறி தாது மணல் கொள்ளைக்கு எதிரான
போராட்டங்களை தங்களால் எடுக்க இயலாத
காரணத்தை விளக்கியிருக்கிறார்.
அவரால் எடுக்க இயலாத தாது மணல்
பிரச்சினையை ம.க.இ.க வும் அதன்
தோழமை அமைப்புகளும்
எடுப்பது குறித்து நியாயமாக அவர்
மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். அவ்வாறின்றி,
“கடலோர கிராமங்களில் வேலை செய்யாதீர்கள்”
என்று ம.க.இ.க வுக்கு ஏன் அறிவுருத்துகிறார்
என்று புரியவில்லை. தாது மணல்
கொள்ளையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கடலோர
மக்கள். போராட விரும்புகிறவர்களும்
அவர்கள்தான்.
நாங்கள் கடலோர கிராமங்களிலிருந்து வெளியேற
வேண்டுமென்று விரும்புகிறவர்கள் கனிம மணல்
கொள்ளையர்கள் மட்டுமே என்று இதுகாறும்
நாங்கள் எண்ணியிருந்தோம். உதயகுமாரின்
கடிதத்தில் காணப்படும் ம.க.இ.க வுக்கு எதிரான
அவதூறுகளும், கடலோர
இளைஞர்களை “மூளைச்சலவை” செய்வதாக
அவர் கூறும் குற்றச்சாட்டும், “வைகுண்டராசன்
வலைப்பின்னல்” பற்றிய புதிய
புரிதலை எங்களுக்குத் தருகின்றன.
அவரது கடிதத்தில்
கூறியுள்ளவை அனைத்துக்கும் உடனே பதில்
அளிக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம் –
நிதி தொடர்பான அபாண்டமான பொய்க்
குற்றச்சாட்டைத் தவிர. தனது கடிதத்தில் மனித
உரிமைப் பாதுகாப்பு மையத்தின்
வழக்குரைஞர்கள் மீது உதயகுமார் கூறியுள்ள
குற்றச்சாட்டுகளை தோழர் ராஜுவுக்குத்
தெரிவித்தோம்.
அவர் இடிந்தகரை ஊர்க்கமிட்டிக்கும், இதில்
தொடர்புள்ள மற்றவர்களுக்கும் ஒரு கடிதம்
அனுப்பியிருக்கிறார். அதன் நகலை இத்துடன்
இணைத்திருக்கிறோம்.
இவண்,
காளியப்பன்,
மாநில இணைச்செயலர், மக்கள் கலை இலக்கியக்
கழகம்.
________________________
அனுப்புநர்:
ராஜு , வழக்குரைஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
கை பேசி: 94432 60164
பெறுநர்
ஊர் நலக்கமிட்டி , இடிந்தகரை
பங்குத்தந்தை , இடிந்தகரை
பங்குத்தந்தை சுசீலன் , கூட்டப்புளி
சுந்தரலிங்கம், கூடங்குளம்
திரு.சுப.உதயகுமார் ,ஒருங்கிணைப்பாளர்,
அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம்,
இடிந்தகரை.
ஐயா,
வணக்கம்.
நேற்று (5.11.2013) திரு சுப.உதயகுமார்,
இணையத்தில் தனது முகநூல் பக்கத்தில்
எங்களது வழக்குரைஞர்களுக்கு அவப்பெயர்
ஏற்படுத்தும் விதத்தில், பல தவறான
தகவல்களை எழுதியிருக்கிறார். அதன்
நகலை உங்களுக்கு இணைத்திருக்கிறேன். அதில்
கண்டுள்ள எல்லா விசயங்களையும் உங்களிடம்
எழுப்புவது என் நோக்கமல்ல. வழக்குகளுக்காக
நாங்கள் பெற்ற தொகை பற்றி அவர்
குறிப்பிட்டுள்ளவை உண்மைக்கு மாறானவை
என்பதால், அவை குறித்து உங்கள் அனைவரின்
கவனத்துக்கு கொண்டு வருவது அவசியம்
என்று கருதுகிறேன்.
சங்கரன் கோயில் இடைத்தேர்தல்முடிந்த பின்னர்,
மார்ச் 19, 2012
அன்று ஜெயலலிதா அரசு அடக்குமுறையைக்
கட்டவிழ்த்து விட்டது. கூடங்குளத்தில்
போராட்டக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன்
உட்பட 11 பேர் முதலில்
கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில்
வைக்கப்பட்டனர். இந்தக் கைதைக்
கண்டித்து சாலை மறியல் செய்த
பங்குத்தந்தை சுசீலன் உட்பட்ட
கூட்டப்புளி மக்கள் 178 பேரும்
கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில்
வைக்கப்பட்டனர்.
இதனை ஒட்டி வள்ளியூர் நீதிமன்றம்,
நெல்லை நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றம்
ஆகிய இடங்களில் சிறையில் இருப்பவர்களைப்
பிணையில் எடுப்பது தொடர்பான
பணிகளை நாங்கள் செய்தோம். 12 வெளியூர்
வழக்குரைஞர்கள் சுமார் 15 நாட்கள் இந்த
வேலைகளைச் செய்ய வேண்டியிருந்த
காரணத்தினால், போக்குவரத்து, தங்குமிடம்
உள்ளிட்ட நடைமுறைச் செலவுகள்
குறிப்பிடத்தக்க அளவு ஆயின.
இவையன்றி நீதிமன்றச் செலவுகள். குறிப்பாக
மக்கள் மீது தேசத்துரோக குற்றத்தின் கீழ்
வழக்கு போடப்பட்டிருந்ததாலும்,
அதனை அங்கீகரிக்கும் விதத்தில் நீதிமன்றம்
நடந்து கொண்டதாலும், மூத்த வழக்குரைஞர்
ஒருவரை அமர்த்த வேண்டியதாயிற்று.
அவரை வெளியூரிலிருந்து அழைத்து வர
வேண்டியிருந்த்தால் அதற்கு குறிப்பிட்ட
அளவு செலவிட வேண்டியதாயிற்று. அந்தச்
செலவுகள் குறித்த உள்விவரங்கள் அனைத்தும்
நாங்கள் உங்களிடம் கொடுத்துள்ள கணக்கில்
உள்ளன.
இச்செலவுகளுக்காக
கூட்டப்புளி பங்குத்தந்தை ராபின்சன் மற்றும்
முக்கியஸ்தர்கள் வழியாக பல தவணைகளில்
மொத்தம் ரூ. 65,000, மற்றும் கூடங்குளத்தில்
கைதானோருக்காக அந்த ஊர்
முன்னணியாளரிடமிருந்து ரூ.5000 ஆக மொத்தம்
ரூ.70,000 பெற்றிருந்தோம். அதற்கான
செலவு கணக்கை, உதயகுமாரிடமும்,
கூட்டப்புளி பங்குத்தந்தையிடமும், கூடங்குளம்
சுந்தரலிங்கத்திடமும் ஆளுக்கொரு நகல்
கொடுத்து விட்டோம்.
இதன் பின்னர் கூடங்குளம் மக்கள்
மீது போடப்பட்ட ராஜத்துரோக
வழக்குகளுக்கு எதிராக நாங்கள் நெல்லையில்
நடத்திய கருத்தரங்கினை ஒட்டி ஏப்ரல், 21, 2012
அன்று இடிந்தகரை சென்றிருந்தபோது எமது
வழக்குரைஞர்கள் சுமார் 50 பேரை மேடையில்
அமரச் செய்து, “நமக்காக ஒருகாசு கூட
கட்டணம் வாங்காமல் பணியாற்றிய
வழக்குரைஞர்களுக்கு நன்றி கூறுவதாக”
உதயகுமாரும் புஷ்பராயனும் மக்கள் மத்தியில்
அறிவித்தனர்.
பின்னர் செப்டம்பர், 2012 இல் நடைபெற்ற கடலோர
முற்றுகை, போலீசு தாக்குதல், கடலில் மனிதச்
சங்கிலி, சகாயம் மரணம் ஆகியவை தொடர்பான
பணிகளில் நாங்கள்
உங்களோடு இணைந்து ஈடுபட்டோம். இவற்றைத்
தொடர்ந்து இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் பலர்
கைது செய்யப்பட்டனர். குண்டர் சட்டம் உள்ளிட்ட
வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவ்வழக்குகள்
எதையும் போராட்டக்குழு எங்களிடம்
ஒப்படைக்கவில்லை.
“பிணையெடுப்பதில் காலதாமதமாகிறது”
என்று கருதிய மக்கள் சிலர், “நீங்கள்
வழக்கை நடத்துங்கள்” என்று எங்களைத்
தொடர்பு கொண்டு தொலைபேசியில் கேட்டனர்.
“உதயகுமார் யாரிடம்
வழக்கை ஒப்படைத்திருக்கிறாரோ அவர்கள்தான்
செய்ய முடியும். எங்களிடம்
வழக்கு தரப்படவில்லை”
என்று அவ்வாறு கேட்டவர்களிடம்
தெளிவுபடுத்திவிட்டோம். வழக்குகளை நாம்
தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர்களிடமும்
வேறு சிலரிடமும் உதயகுமார்
ஒப்படைத்திருப்பதாக பின்னர் கேள்விப்பட்டோம்.
இதற்குப் பின்னர்
திடீரென்று ஒரு புது வதந்தி பரப்பப் பட்டது.
“உங்களுக்கு இரண்டு இலட்சத்துக்கு மேல்
போராட்டக் கமிட்டி பணம் கொடுத்திருக்கிறதாமே”
என்று வள்ளியூர், நெல்லை, நாகர்கோயில்
நீதிமன்றங்களில் சில வழக்குரைஞர்கள் எங்கள்
வழக்குரைஞர்களிடம் போகிற போக்கில்
குறிப்பிட்டனர். யார் சொன்னார்கள்,
எப்போது சொன்னார்கள் என்ற ஆதாரம்
இல்லாமல், ஒரு கிசு கிசு செய்தி போல
இது பரப்பப் பட்டது. எனவே இதனை மறுத்து,
“நாங்கள் கட்டணம் வாங்காமல்தான்
பணியாற்றினோம்” என்பதைக்
கூறவேண்டியது அவசியமாயிற்று.
இப்படி ஒரு பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுவதாக
கூட்டப்புளி, இடிந்தகரை ஊர்க்கமிட்டியைச்
சேர்ந்தவர்களிடமும் கூடங்குளம்
முன்னணியாளர்களிடமும் நாங்கள்
அப்போதே சொல்லியிருக்கிறோம்.
“இப்படி கிளப்பி விடுவது யார்” என்று தாங்கள்
உதயகுமாரிடமே கேட்டதாகவும், தான்
அவ்வாறு கூறவில்லை என்று உதயகுமார்
மறுத்ததாகவும் அவர்கள்
எங்களுக்கு தெளிவு படுத்தினர். இந்த
பொய்ப்பிரச்சாரம் பற்றி நாங்கள்
முறையிட்டது உங்களில் பலருக்கும்
தெரிந்திருக்கும்.
இப்பிரச்சினையை அரைகுறையாக
விடக்கூடாது என்பதால், மே, 9 2013
அன்று இடிந்தகரையில் நேரடியாக
உதயகுமாரிடமே நாங்கள் இது பற்றி கேட்டடோம்.
நாங்கள் வாங்கிய பணம், அதற்கான
கணக்கு ஆகியவற்றின் நகலை மீண்டும்
ஒருமுறை அவர் கையில் கொடுத்தோம்.
“இரண்டு இலட்சம் வாங்கியதாகவெல்லாம்
யாரிடமும் நான் சொல்லவில்லை.
அப்படி யாராவது சொன்னால், என்னிடம்
அனுப்புங்கள். நான் விளக்குகிறேன்” என்று அவர்
எங்களுக்குப் பதிலளித்தார்.
இப்போது தனது கடிதத்தில், மொத்தம்
ரூ.1,95,000 கொடுத்தது போலவும் அதில் 1.25
லட்சம் ரூபாய் இடிந்தகரை மக்கள்
எங்களுக்கு கொடுத்ததாகவும் உதயகுமார்
எழுதியிருக்கிறார். மார்ச் 2012 நடைபெற்ற
கைது தொடர்பான வழக்குகளைத்தான் நாங்கள்
கையாண்டோம். அவை கூட்டப்புளி, கூடங்குளம்
மக்கள் மீதான வழக்குகள். அதற்கான பணத்தைக்
கொடுத்த அவர்களிடம் கணக்கும்
கொடுத்துவிட்டோம்.
இடிந்தகரை மக்கள் மீதான வழக்குகள்-
கைது என்பது கடலோர அணுஉலை முற்றுகைப்
போராட்டத்துக்குப் பின்னர்தான். இந்த வழக்குகள்
எதுவும் எங்களிடம்
ஒப்படைக்கப்படவில்லை என்பதை ஏற்கெனவே
தெளிவு படுத்திவிட்டோம்.
இடிந்தகரை மக்களிடமிருந்து 1.25 இலட்சம்
நாங்கள் வாங்கியதாக உதயகுமார் கூறுகிறார்.
ஒருபைசா கூட நாங்கள்
வாங்கவில்லை என்பதே உண்மை.
இடிந்தகரை, கூடங்குளம், கூட்டப்புளி மக்கள்
அனைவரும் இந்தக் கணம் வரை எங்களுடன்
நேசமாகத்தான் பழகுகிறார்கள். யாரும்
இப்படி ஒரு கேள்வியை எங்களிடம்
கேட்டதில்லை.
அவ்வாறு இருக்கும்போது எங்களுக்கு எதிராக
இப்படி ஒரு பொய்ப்பிரச்சாரம்
செய்வதற்கு வேறு ஏதாவது ஒரு நோக்கம்
இருக்கவேண்டும். அல்லது எங்கள் பெயரைச்
சொல்லி 1.25 இலட்சம்
ரூபாயை யாரோ கையாடல் செய்திருக்க
வேண்டும்.
இவற்றில் எது உண்மையாக இருந்தாலும்
அது மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்
என்று நாங்கள் கருதுகிறோம்.
எங்கள் மீது அடுக்கடுக்காகப் பொய்வழக்குகளைப்
போடும் மிக மோசமான
போலீசு அதிகாரிகளுக்குக் கூட,
இப்படி ஒரு பொய்க்குற்றச்சாட்டை எங்கள்
மீது சுமத்த மனம் வந்ததில்லை. வெளிநாட்டுப்
பணம் வருவதாக தன் மீது குற்றம்
சாட்டப்பட்டபோது, கண் கலங்கி குமுறியவர்
உதயகுமார். அந்த வலி மற்றவர்களுக்கும்
இருக்கும் என்பதை அவர் அறியாமலிருக்க
வாய்ப்பில்லை.
எந்த
இடிந்தகரை மக்களிடமிருந்து எங்களுக்கு 1.25
இலட்சம் பணம் கொடுக்கப்பட்டதாக உதயகுமார்
கூறுகிறாரோ, அந்த
இடிந்தகரை ஊர்க்கமிட்டிக்கும்,
கூட்டப்புளி பங்குத்தந்தை மற்றும்
ஊர்க்கமிட்டியினருக்கும், கூடங்குளம்
முன்னணியாளர்களுக்கும் என்னுடைய இந்தக்
கடிதத்தை அனுப்புகிறேன்.
இடிந்தகரை மக்கள் முன்னால் உதயகுமார்
கூறியிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக
ஒரு பகிரங்க விசாரணை நடத்தப்படவேண்டும்.
அதில் கூட்டப்புளி, கூடங்குளம்
முன்னணியாளர்களும், போராட்டக் குழுவைச்
சேர்ந்தவர்களும் பங்கேற்க வேண்டும். இந்த
வழக்குகளைக் கையாண்ட
எமது வழக்குரைஞர்கள் அனைவரும்
இடிந்தகரைக்கு வருவதற்குத் தயாராக
இருக்கிறோம்.
தேதியை இடிந்தகரை ஊர்க்கமிட்டி தெரிவிக்கட்டும்.
நன்றி.
அ.சிம்பு
உதயகுமாருக்கு ஒரு மூடிவைத்த கடிதம் திரந்து படிங்க !

நீங்க ஆம் ஆத்மி கட்சியில் சேந்த மக்கள் உங்கள ஆலர ஆலர அடிப்பாங்க!

நீங்க அ.தி.மு.க கட்சியில் சேந்த மக்கள் உங்கள அழவிட்டு அடிப்பாங்க!

நீங்க தி.மு.க கட்சியில் சேந்த மக்கள் உங்கள திக்குமுக்கட விட்டு அடிப்பாங்கத்க்!

நீங்க மா.தி.மு.க கட்சியில் சேந்த மக்கள் உங்கலால் மறக்கவே முடியாத அளவுக்கு அடிப்பாங்க!

நீங்க ப.ஜ.க கட்சியில் சேந்த மக்கள் உங்கள பஜன பாட விட்டு அடிப்பாங்க!

நீங்க காங்ரேஸ் கட்சியில் சேந்த மக்கள் உங்கள காதரவிட்டு அடிப்பாங்க!

நீங்க சி.பி.எம் கட்சியில சேந்த மக்கள் உங்கள சிதரவிட்டு அடிப்பாங்க!

எப்படி அடிவாங்கரதுணு நீங்கலே முடிவு எடுங்க உதயகுமார்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.