விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி "விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்" என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகளாக அந்த யுத்த களத்திலே நின்றிருந்த போராளிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியாத சிங்கள இராணுவம், அங்கே தலைமுடி கத்தரிக்கப்பட்டிருந்த சில பெண் போராளிகளை இனம் கண்டு கைது செய்துதான் அவர்களூடாக அவர்களுக்குத் தெரிந்த மற்றைய போராளிகளை கைது செய்ய முடிந்தது. சில போராளிகள் யுத்த களத்தில் காயம் அடைந்திருந்த வேளையில் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். சில போராளிகள், சில தளபதிகள் சிங்கள அரசப் படைகளை எதிர்த்து கண்ணுக்கு எட்டும் தூரம்வரை நின்று போராடியிருக்கிறார்கள். சிங்களப்படைகள் நெருங்க நெருங்க துப்பாக்கி ரவைகள் முடியும் வரை நின்று போராடியிருக்கிறார்கள். அவர்கள்தான் அங்கே உடனடியாக கைது செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் வைத்தே உடனடியாக பழி தீர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்..!

prabakaran_250உலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.

ஆனால், விடுதலைப் புலிகளோ... கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில் ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வைத்து தவபாலன் (இறைவன்) என்ற போராளி தான் சுடப்பட்டு இறக்கும் வரை "புலிகளின் குரலை" இறுதி வரை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு சில போராளிகளும் பட ஒளிப்பதிவுகள் செய்தமையால்தான் மக்களின் பேரவலங்கள் இன்று உலகின் பார்வைக்கு வந்தது! பின்னால், சிங்கள இராணுவ வீரர்கள் தங்கள் கைகளில் அகப்பட்ட இளைஞர்கள், யுவதிகளையும், சில போராளிகளையும், பன்னிரெண்டு வயதேயான பாலச்சந்திரனையும் சுட்டுக்கொல்வதை தங்கள் கைபேசியூடாக படம் பிடித்து வைத்திருந்ததை சில சுயலாபங்களுக்காக வெளியிட்டிருந்தனர். (இன்னும் நிறைய வரலாம்)

மக்களோடு மக்களாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளை இனம் காண சிங்களப் படைகளால் முடியாமல் போகவே, சில பொது மக்களை பிடித்து துன்புறுத்தி மிரட்டியதால் அந்த மக்கள் மூலம் சில போராளிகள் இனம் காணப்பட்டார்கள். சிலரை ஒலிபெருக்கிகள் மூலம் "சரணடையுமாறு" அறிவுறுத்தப் பட்டுக்கொண்டிருக்கையில் தங்கள் பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் தங்களால் பாதிப்படையக்கூடாது என்பற்காக தாங்களாகவே முன் வந்து சரணடைந்தார்கள். சில போராளிகளுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் இல்லாததால் அவர்கள் சரணடையாமல் மக்களோடு மக்களாகவே வாழ்கின்றனர். இக்கருத்துக்களை ஏன் இங்கே பதிவு செய்கிறேன் என்றால், "மக்கள் வேறு, புலிகள் வேறு" என்று புலம்பிக் கொண்டிருக்கும் சில சர்வதேச பரப்புரையாளர்களுக்கு தெளிவுபடுத்தத்தான்.

இனியாவது புரிந்து கொள்ளுங்கள்... அங்கே, இறுதிவரை போராடியது அங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஈழமக்களுக்குச் சொந்தமான புலிகள்தான் என்று! இனி ஒரு போதும் மக்களையும் புலிகளையும் பிரித்து எந்த சக்திகளாலும் இனம் காணமுடியாது!.

இவைகள் ஒரு புறமிருக்க, விடுதலைப் புலிகளின் பலத்தையும், அவர்களுக்கு சர்வதேச ரீதியாக எழுந்த பேராதரவையும் பார்ப்போம்.

இராணுவக் கட்டமைப்புடன் நின்றுவிடாமல்... எந்தவிதமான வெளிநாட்டு உதவிகளுமின்றி எந்த நோக்கத்திற்காக விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்களோ... அந்த நோக்கத்தின் அடிப்படையில் மக்களுக்கு நீதியான, நியாயமான, சுதந்திரமான, பாதுகாப்பான நல்லாட்சி வழங்கும் நோக்கிலே பல அமைப்புக்களையும், பல உள்கட்டுமானங்களையும் உருவாக்கினார்கள். பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் சென்றடையக்கூடிய சகலவிதமான நலத்திட்டங்களையும் உருவாக்கினார்கள்.

காவல்துறையில் இருந்து நீதிமன்றுகள், வங்கிகள், தொலைக்காட்சி சேவைகள், வானொலி சேவைகள், பத்திரிகைகள் என ஓர் அரசாங்கத்திற்குத் தேவையான... இன்னும் ஏராளமான கட்டமைப்புக்களை உருவாக்கியிருந்தனர். உலக வரலாற்றில் தனித்தனி நாடுகள் வைத்து அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ நாடுகள் வறுமை, வறட்சி, உணவுப் பஞ்சம், கலாச்சார சீரழிவு மற்றும் மக்களை கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க முடியாமல், அந்த மக்களே அரசைக் கலைத்து ஆட்சிக் கவிழ்ப்பு செய்த வரலாறுகளும் நிறைய உண்டு! இந்த நாடுகளுக்கெல்லாம் பலநாட்டு உதவிகள் கிடைத்தும், தனிநாடு, தனி அரசாட்சி என்று இருந்தும் அங்கு எல்லாக் கொடுமைகளும் இன்றும், இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது!

உலக நாடுகளின் பாரிய உதவிகளுடன் இலங்கை அரசாங்கம் பல தடைகளைப் போட்டு ஒரு சிறுபான்மை இன மக்களை நசுக்கிக் கொண்டு வர, அந்த மக்களே விழிப்படைந்து, எழுச்சியடைந்து எந்த நாட்டு உதவிகளுமின்றி விடுதலைப் புலிகளாக உருவாகி திருப்பித் தாக்கத் தொடங்கி கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக போராடி தமக்கான ஒரு சுதந்திர தேசத்தை உருவாக்கியிருந்தார்கள்.

பூகோள ரீதியாக இந்தியா தவிர வேறு எந்த நாடுகளும் அருகினில் இல்லை. இந்தியா கூட கடல் கடந்துதான் இருக்கிறது! உதவிகள் கேட்டு ஓடவும், உயிரைப் பாதுகாக்க வேறு இடங்களில் போய் பதுங்கிக் கொள்ளவும் எந்தவிதமான பாரிய இடங்களும் இல்லை! ஒரு சிறிய தேசம் அது! அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் துறைமுக வசதிகள் இல்லை, விமானத்தளங்கள் இல்லை, சீரான போக்குவரத்து வசதிகள் இல்லை, எரிபொருள் வளங்கள் இல்லை, எந்தவிதமான மூலவளங்களும் இல்லை..! பல நெருக்கடிகள், பொருளாதாரத் தடைகள், பலநாட்டு மறைமுக அழுத்தங்கள் இன்னும் நிறைய இருந்தும்.... எப்படி உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு விடுதலைப் படையை உருவாக்கி முப்படைகளையும் கட்டியமைத்து தனியாக ஒரு தேசத்தை உருவாக்கி (ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளாதது மட்டும்தான்) தனி அரசாங்கத்தை நடத்திக் காட்ட முடிந்தது?

விடுதலைப் புலிகளை "தீவிரவாதிகள்" என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே...! உங்கள் சுயமூளையுடன் சற்று சிந்தியுங்கள்..!

உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை!, வாழ்ந்ததும் இல்லை! இந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை உலகில் எந்த விடுதலை அமைப்பு, விடுதலைப் புலிகள் போல் போராடினார்கள்?

* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை!

* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை!

* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் முப்பாதாயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை!

* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையதளங்கள் இருந்ததில்லை!

* முகநூல்களிலும் (facebook) வேறு சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக வந்ததில்லை!

* விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை!

* விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்... எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது? அது எப்படி சாத்தியாமானது?

* அவர்கள் தீவிரவாதிகள் என்றால், எப்படி மக்களின் பெருபலம் அவர்களுக்குக் கிடைத்தது?

பிறகு ஏன் விடுதலைப் புலிகளை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து அழிக்க வந்தன...? அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம்! அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே! அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கான தளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள்? அவர்கள்தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்றுவரையும் விடுதலைப் புலிகளை "தீவிரவாதிகள்" என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை!

இன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் "தீவிரவாதி" என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.

அந்த உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு:

* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.
* தமிழீழ வைப்பகம்.
* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
* கிராமிய அபிவிருத்தி வங்கி.
* அனைத்துலகச் செயலகம்.
* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)
* சுங்க வரித்துறை.
* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.
* அரசறிவியற் கல்லூரி.
* வன வளத்துறை.
* தமிழீழ நிதித்துறை.
* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.
* கலை பண்பாட்டுக்கழகம்.
* மருத்துவப் பிரிவு.
* திலீபன் சிறப்பு மருத்துவமனை.
* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
* சுகாதாரப் பிரிவு.
* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.
* நிர்வாக சேவை.
* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.
* மீன்பிடி வளத்துறை.
* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
* தொழில் நுட்பக் கல்லூரி.
* சூழல் நல்லாட்சி ஆணையம்.
* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.
* தமிழீழ விளையாட்டுத்துறை.
* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
* தமிழீழ போக்குவரவுக் கழகம்.
* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).
* வளங்கள் பகுதி.
* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)
* விலங்கியல் பண்ணைகள்.
* விவசாயத் திணைக்களம்.
* தமிழ்மொழி காப்பகம்.
* தமிழீழ சட்டக்கல்லூரி.
* தமிழீழ கல்விக் கழகம்.
* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.
* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).
* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).
* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).
* வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)
* அன்பு முதியோர் பேணலகம்.
* இனிய வாழ்வு இல்லம்.
* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).
* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
* சீர்திருத்தப் பள்ளி.
* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).
* உதயதாரகை (விதவைகளுக்கானது).
* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.
* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).
* எழுகை தையல் பயிற்சி மையம்.
* மாணவர் அமைப்பு.
* பொத்தகசாலை (அறிவு அமுது).
* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.
* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).
* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).
* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.
* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).
* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).
* வெளிச்சம் (மாத சஞ்சிகை).
* நாற்று (மாத சஞ்சிகை).
* பொற்காலம் வண்ணக் கலையகம்.
* அருச்சுனா புகைப்படக் கலையகம்.
* ஒளிநிலா திரையரங்கு.
* புலிகளின் குரல் வானொலி.
* தமிழீழ வானொலி.
* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.
* தமிழீழ இசைக்குழு.
* காலணி (பாதணி உற்பத்தி மையம்)
* சேரன் உற்பத்திப் பிரிவு.
* சேரன் வாணிபம்.
* சேரன் சுவையகம்.
* சேரன் வெதுப்பகம்.
* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).
* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.
* பாண்டியன் சுவையூற்று.
* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.
* சோழன் தயாரிப்புகள்.
* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.
* தென்றல் இலத்திரனியலகம்.
* தமிழ்மதி நகை மாடம்.
* தமிழ்நிலா நகை மாடம்.
* தமிழரசி நகை மாடம்.
* அந்திவானம் பதிப்பகம்.
* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.
* இளவேனில் எரிபொருள் நிலையம்.
* இளந்தென்றல் தங்ககம் (Lodge).
* 1-9 தங்ககம் (Lodge)
* மருதம் வாணிபம்.
* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).
* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).
* கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.
* மாவீரர் அரங்குகள்.
* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
* மாவீரர் நினைவு வீதிகள்.
* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.
* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.
* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
* மாவீரர் நினைவு நூலகங்கள்.
* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
* மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)

இது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் தெரியாத நிறைய அமைப்புக்கள்.

LTTE_women_wing

உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகளைப் போல் தங்கள் தேசத்திற்கென "தேசிய மலர்", "தேசிய மரம்", "தேசியப் பறவை", "தேசிய விலங்கு" போன்ற தேசியச் சின்னங்களை வைத்துக் கொண்டதில்லை.

எந்த நாட்டு உதவிகளையும் நம்பாமல், தன் சொந்த மக்களின் பலத்தை நம்பியே போராட்டத்தை ஆரம்பித்தார், தலைவர் பிரபாகரன்! இன்று தலைவர் பிரபாகரன் அவர்களையும், போராளிகளையும் "தீவிரவாதிகள்" என்று வாய் கிழிய கத்தி கொச்சைப் படுத்தி விமர்சனம் செய்து கொண்டிருக்கும் சில விசமிகளிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்...!

விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்.... எவ்வாறு மக்களின் பலமும், பேராதரவோடும் மக்களுக்கான உள்கட்டுமானங்களை உருவாக்க முடிந்தது? உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்புக்களும் இவ்வாறான உள்கட்டுமானங்களை உருவாக்கிய சரித்திரம் உண்டா..?

சிங்கள அரசாங்கம் தமிழ்க் குழந்தைகளை அனாதையாக்கியது! பிரபாகரன் அவர்கள் அந்தக் குழந்தைகளுக்குத் தந்தையானார். அப்படித்தான் செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை, செந்தளிர் இல்லம், இனிய வாழ்வு இல்லம் உருவாகியது!

சிங்கள அரசாங்கமானது ஒவ்வொன்றுக்கும் தடைபோட்டு நசுக்கிப் பறிக்கப் பறிக்க... தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொன்றையும் பாதுகாக்க பல அமைப்புக்களை உருவாக்கினார். அவைகள்தான் மேற்குறிப்பிட்ட மக்களுக்கான உள்கட்டுமான அமைப்புக்கள். இவர்தான் உங்கள் பார்வையில் தீவிரவாதியா?

மக்களுக்கான கட்டமைப்புக்கள் ஒருபுறமிருக்க.... இராணுவக் கட்டமைப்புக்களைப் பாருங்கள்...

தரைப்படைகள்

* இம்ரான் பாண்டியன் படையணி.
* ஜெயந்தன் படையணி.
* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.
* கிட்டு பிரங்கிப் படையணி.
* குட்டிச்சிறி மோட்டார் படையணி.
* இராதா வான்காப்பு படையணி.
* சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.
* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.
* சோதியா சிறப்புப் படையணி.
* மாலதி சிறப்புப் படையணி.
* அன்பரசி படையணி.
* ஈருடப் படையணி.
* குறி பார்த்துச் சுடும் படையணி.
* சிறுத்தைப் படையணி.
* எல்லைப்படை,
* துணைப்படை,
* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.
* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.
* பாதுகாவலர் பிரிவு.
* முறியடிப்புப் பிரிவு.
* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.
* ஆழ ஊடுருவும் படையணி.
* உந்துருளிப் படையணி

கடற்படைகள்.

* நீரடி நீச்சல் பிரிவு.
* கடல் வேவு அணி.
* சார்லஸ் சிறப்பு அணி.
* அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).
* சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).
* கடற்சிறுத்தை சிறப்பு அணி.
* சங்கர் படையணி.
* வசந்தன் படையணி.
* சேரன் படையணி.
* பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.

* வான்படை.
* கரும்புலிகள்.
* புலனாய்வுத்துறை.
* வெளியகப் புலனாய்வுப் பிரிவு.
* உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.
* படையப் புலனாய்வுப் பிரிவு (MI)
* வேவுப் பிரிவு.
* களமுனை முறியடிப்புப் பிரிவு.
* களமுனை மருத்துவப் பிரிவு.
* கணினிப் பிரிவு.
* பொறியியல் பிரிவு.
* விசேட வரைபடப் பிரிவு.
* அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.
* தமிழீழ படைத்துறைப் பள்ளி.
* ஆயுத உற்பத்திப் பிரிவு.
* மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.
* மாவீரர் பணிமனை.

இப்படியானதொரு இராணுவக் கட்டமைப்பை உலகில் எந்த விடுதலை இயக்கமும் கொண்டு வந்ததில்லை! ஆரம்பத்தில் உருவாகும்போது "விடுதலைப் புலிகள்" என்ற அமைப்பாகத்தான் இருந்தார்கள். காலங்களாகி வளர வளர மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழு பலத்தினாலும் "தேசிய இராணுவமாக" வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள். ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தாலும், இடைப்பட்ட காலங்களில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி சீருடையுடன் ஒரு தேசிய இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்கு ஒப்பாக இருந்தார்கள்.

எல்லா நாடுகளிடமும் முப்படைகள் இருந்தது, விடுதலைப் புலிகளிடம் ஒரு படை அதிகமாகவே இருந்தது; அந்த வீரமிக்க படைதான் "கரும்புலிகள்"! உலகில் எந்த நாடுகளிடமும் இல்லாத உயரிய ஆயுதமான, எந்தவிதமான ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளமுடியாத, எந்தவிதமான ஆயுதங்களோடும் ஒப்பிட முடியாத உயிராயுதமான "கரும்புலிகள்" விடுதலைப் புலிகளிடம் இருப்பது அவர்களுக்கு சிறப்பையும், அதிக பலத்தையும் கொடுத்திருந்தது.

அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் படைகளுடன் மோத துணிச்சல் இல்லாத சிங்கள தேசம்தான், முப்பதிற்கு மேற்பட்ட உலக நாடுகளுடன் சேர்ந்து மோதி வெற்றி கண்டதென மார்தட்டிக் கொண்டு திரிகிறது! தமிழர்கள் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல.... ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் எந்தவித உதவிகளும் இல்லாதிருந்த ஒரு மக்கள் படையுடன் முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள் மோதுகின்றன என்றால்... அங்கே தமிழனின் வீரம் எத்தகையது

என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். அங்கு தமிழனுக்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது!. இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழனின் உண்மையான வீரம்தான் முன்னிலை வகிக்கிறது. உலக சரித்திரத்தில் தமிழனுக்கென்று ஒரு குணம், தமிழனுக்கென்று ஒரு வீரம் அழியாமல் இடம் பிடித்துள்ளது! இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது! இவ்வாறு தமிழர்களின் வீரத்தை உலக வரலாற்றில் பதிய வைத்த விடுதலைப் புலிகளா... தீவிரவாதிகள்?

தன் சொந்த நாட்டு சிறுபான்மை இன மக்களை, பல நாட்டுப் படைகளோடு உலகில் உள்ள சகல கொடிய ஆயுதங்களாலும் கொன்று குவித்தால், அது தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்கிறது சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து பயங்கரவாதம் புரியும் வல்லரசுகள்!. அதே சிறுபான்மை இன மக்கள் அரச பயங்கரவாததிற்கு எதிராக உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டிப் போராடினால்; அவர்களைத் "தீவிரவாதிகள்" என்கிறது பயங்கரவாதம் புரியும் மானம் கெட்ட வல்லரசுகள்!.

ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை "தீவிரவாதம்" "தீவிரவாதம்" என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே...!

* கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று விட்டு, பின் கணவனையும் கொன்று புதைப்பதுதான்... உங்கள் ஜனநாயகமா?

* ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் நிர்வாணமாக்கி, கூடவே தாய் தகப்பனையும் நிர்வாணமாக்கி ஒவ்வொருவர் கண் முன்னாலேயே ஒவ்வொருவரையும் கூட்டாகச் சேர்ந்து மாறி மாறி கற்பழித்தும், கட்டிவைத்தும் சுட்டுக் கொல்வதுதான்.... உங்கள் ஜனநாயகமா?.

* பால்குடி பிஞ்சுகளை தாயிடமிருந்து பிரித்து, தாயைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு அந்தப் பிஞ்சுகளை அனாதையாக்கி தெருத் தெருவாக அலையவிடுவதுதான்.... உங்கள் ஜனநாயகமா?

* மட்டக்களப்பில் வயதிற்கு வந்து ஒரு வாரமே ஆன பதின்மூன்று வயதுச் சிறுமி புனிதவதியை ஏழு சிங்கள இராணுவ காட்டுமிராண்டிப் படைகள் தாயின் முன்னே கதறக் கதற கற்பழித்து அந்தச் சிறுமியை சித்தப் பிரமையாக்கியதுதான்.... உங்கள் ஜனநாயகமா?

* இதே போல் யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி கிருசாந்தியை கற்பழித்துக் கொன்று புதைத்ததுதான்.... உங்கள் ஜனநாயகமா?

* உயிரற்ற உடலைக்கூட விட்டு வைக்காமல் கற்பழித்து விட்டு, பின் அந்த உயிரற்ற உடலின் அந்தரங்க உறுப்புக்களை வெட்டியும், சிதைத்தும் அலங்கோலமாக்குவதுதான்..... உங்கள் ஜனநாயகமா?

* இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து எரிகுண்டுகளையும், நச்சுக் குண்டுகளையும் போட்டு கூண்டோடு துடிக்கத் துடிக்க கொன்று குவிப்பதுதான்.... உங்கள் ஜனநாயகமா?.

* உயிரைப் பாதுகாக்க பதுங்குக் குழிக்குள் ஒளிந்தவர்களையும், இந்த உலகை பார்க்கும் முன்னே தாயின் கருவறைக்குள் பிஞ்சுக் குழந்தைகளையும் கொன்று புதைப்பதுதான்..... உங்கள் ஜனநாயகமா?

இப்படியாக....

ஈழத்தமிழன் ஒளிந்துகொள்ள இடமேதுமில்லாமல் அலைந்து அலைந்து இறுதியில் நிராயுதபாணிகளாக அரச படைகளிடம் அடைக்கலமாக அவர்களை வயது வித்தியாசமின்றி கொன்று குவித்து களைத்துப் போய் முடியாமல் காயம்பட்டவர்களையும், கையில் அகப்பட்டவர்களையும் செத்த பாம்பினைப் போல் கைகளைக் கட்டி வரிசையாக தெருக்களில் விறகுபோல் அடுக்கி வைத்து கவச வாகனங்களால் மிதித்து துடிக்கத் துடிக்க சாகடித்தீர்களே.... இதுதான் உங்கள் ஜனநாயகமா?

மேற்கண்ட கொடுமைகள் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள முடியாத மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆயுதம் ஏந்தி போராடி தங்களை தற்காத்துக் கொண்டால்.... அவர்கள் உங்கள் பார்வையில் தீவிரவாதிகளா?

அவ்வாறெனில்....

உங்கள் பார்வையில் விடுதலைக்காக ஆயுதம் வைத்துப் போராடும் மக்கள் "தீவிரவாதிகள்" என்றால்.... கொடிய ஆயுதங்களை வைத்து மக்களை அநியாயத்திற்கு கொன்று குவிக்கும் அரசாங்கம் "தீவிரவாத அமைப்பாகத்" தெரியவில்லையா?

மாறாக... விடுதலைப்புலிகள்

ஒரு சிங்களப் பெண்ணைக் கற்பழித்திருந்தாலோ.....

சிங்கள மக்களைக் கொன்று குவித்திருந்தாலோ....

அல்லது, வேறு சில அமைப்பினர்போல் நிராயுதபாணிகளாக செய்தி சேகரிக்கச் சென்ற ஒவ்வொரு பத்திரிகையாளர்களையும் பிடித்து தலைகளை தனியாக அறுத்தெடுத்து படம் பிடித்துக் காட்டியிருந்தாலோ.... நீங்கள் சொல்லலாம், அவர்கள் பயங்கரமான தீவிரவாதிகள் என்று..!

எது ஜனநாயகம்....?
எது தீவிரவாதம்....?
யார் தீவிரவாதி....?
யார் ஜனநாயகவாதி....?
அப்படி, அவர்கள் என்ன செய்தார்கள்...?

தங்கள் இனத்தை அழித்து மக்களை கொன்று குவித்து வரும் அரச படைகளை மட்டுமே எதிர்த்துப் போராடினார்கள். இவர்கள்தான் உங்கள் கண்களுக்கு "தீவிரவாதிகளாக" தெரிகிறார்களா? உரிமைகள் மறுக்கப்பட்டு, உணர்வுகள் நசுக்கப்படும் போது, அங்கே தீவிரவாதம் வளர்ந்தே தீரும்! இங்கு "தீவிரவாதம்" என்ற சொற்பதம் "சுதந்திர விடுதலையை" தீவிரமாக வேண்டி நிற்கும் தீவிரவாதமே!!!

தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்பட்டு விமர்சிக்கப்படும் விடுதலைப் புலிகள் என்ன, வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களா? அந்த அரச பயங்கரவாத அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்ட மக்கள்தான், தங்கள் உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டி விழிப்படைந்து, எழுச்சியடைந்து விடுதலைப் புலிகளாகத் திருப்பித் தாக்கினார்கள். அந்த மக்கள்தான் விடுதலைப் புலிகள்! விடுதலைப் புலிகள்தான் அந்த மக்கள்!

விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால்....

குந்தியிருக்க ஒரு வீடில்லாமல், நடந்து திரிய ஒரு தெரு இல்லாமல், முகவரி சொல்ல ஒரு ஊர் இல்லாமல், மொத்தத்தில் உயிரோடு, பாதுகாப்போடு வாழ ஒரு சுதந்திரமான நாடு இல்லாமல்..... நாடு நாடாக அலைந்து சுதந்திர விடியலைத் தேடிக்கொண்டு தமக்கான ஒரு தேசத்தை உருவாக்கி நிம்மதிப் பெருமூச்சுடன் வாழத் துடித்துக் கொண்டிருக்கும்... உலக அரங்கில் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தமிழர்களும் தீவிரவாதிகள்தான்!

இன்றும், என்றும் தமக்கான ஒரு விடியல், தமக்கான ஒரு சுதந்திர தேசம் கிடைக்கும் வரை தாயகத்திலும் சரி, தமிழகத்திலும் சரி, புலம்பெயர் தேசங்களிலும் சரி எங்கெல்லாம் தமிழர்கள் சுதந்திர விடியலுக்காக தீவிரமாக இறங்கி போராட்டங்களை நடத்துகின்றார்களோ.... அங்கே வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள்தான்!

இதற்கு எதிர்மாறாக விடுதலைப் புலிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்பவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும்; அவர்கள் மானம், வெட்கம், சூடு, சொரணை, மனச்சாட்சி அற்றவர்களே! வேற்று மொழியர்களாக இருந்தால்.... அவர்கள் "பயங்கரவாதம்", "தீவிரவாதம்", "சுதந்திர தாகம்" , "விடுதலைப் போராட்டம்" போன்ற சொற்பதங்களின் உள்ளர்த்தம் தெரியாத முட்டாள்களாக இருப்பார்கள்!

விடுதலைத்தீ என்பது அனைத்து தமிழ் பேசும் மக்கள் மனதிலும் எரிந்து கொண்டிருக்கிறது! எந்த தமிழ் பேசும் மக்களின் மனதில் விடுதலைக்கான தீ எரிகிறதோ..... அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்பதை சிங்கள அரசும், சர்வதேசமும் மறந்து விடக்கூடாது! விடுதலைத் தீ என்பது எளிதில் அணைந்து விடாது! யாரும் அணைக்கவும் முடியாது! அந்தத் தீ எதற்காக எரிய ஆரம்பித்ததோ அதை அடையும்வரை எரிந்து கொண்டே இருக்கும். அதுவரையும் விடுதலைப் புலிகளும் வளர்ந்து கொண்டே இருப்பார்கள்!

- வல்வை அகலினியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

23 comments

23
Jay
மிகவும் அருமை
Eelapriyan
அகிளினியன் அவர்களே ...

இவரானதொரு சிறந்த கட்டுரையை படைத்தமைக்கு மிக்க நன்றிகள் இந்த கட்டுரையானது உலகில் வாழும் சகல தமிழ் பேசும் மக்களையும் சென்றடையவேண்டும் அதைபோல் உலகில்வலும் வேற்றுமொழி மக்களும் விடுதலைபுலிகளின் போரரட்ட நியாயங்களை அறிந்துகொள்ளும் வசதியாக இந்த கட்டுரையை அப்படியே ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிடவேண்டும் அப்போதுதான் விடுதலைபுலிகளின் போரட்டம்பற்றிய உண்மை தன்மை உலகம் அறிந்துகொள்ளும். 
A.MOHAMED SAHABDEEN
விதைக்கபட்ட வீரத்தையும் வீர வரலாற்றை பரைசாட்டவென்டும்
Akaliniyan
விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் இல்லை என்பதை விளக்கத்தான்... இங்கே இந்த கட்டுரையை சுருக்கமாக எழுத முற்பட்டேன். ஆனால் அவர்களைப் பற்றி எழுத எழுத நீண்டு கொண்டே போகிறது. அந்த தன்னலமற்ற வீரத்தலைவனையும், கட்டுக்கோப்புக் குலையாத போராளிகளையும், தாய் மண்ணின் விடிவுக்காக மடிந்த மாவீரர் தெய்வங்களையும் ஒவ்வொன்றாக எழுத எனக்கு இந்த ஆயுள் போதாது! அவர்களின் வீர வரலாற்றை எழுத எனக்கு தகுதிகளும் போதாது! இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் அவர்களின் வீரப்போராட்ட வரலாற்றை சில பக்கங்களில் யாரும் இலகுவில் எழுதிவிட முடியாது! அவர்கள் ஒரு முடிவற்ற சரித்திரம்! அந்த முடிவற்ற சரித்திரத்தை முழுமையுடன் எழுத யாருக்கும் இங்கு தகுதிகள் இல்லை! அவர்களே வந்து எழுதினால்தான் உண்டு!.

அது வரை காத்திருப்போம்!.

-வல்வை அகலினியன் .
kumarasamy
விடுதலைப் புலிகளை தீவிர வாதிகள் என ராஜீவ் கொலைக்குப் பின்னால் அறிவித்து மறைமுகமாக புலிகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டது அமெரிக்கா. அக்கொலைக்கு அடிப்படையாக இருந்து ஆர்.டி.எக்ஸ். என்ற வெடிபொருள் அன்று அமெரிக்காவிடம் மட்டுமே இருந்தது. முள்ளிவாய்க்கால் படுகொலை வரை அப்பொருள் புலிகளுக்கு கிடைக்கவில்லை அல்லது அவர்கள் பயன்படுத்தவில்லை. தகவல்கள் அப்படித்தான் வந்தது. உலக அளவில் விடுதலை போராட்டக்கார்கள் பயங்கர வாதிகளாக அறிவிக்கப்பட்டு பல பத்தாண்டுகள் ஆகிவிட்டது. இதில் நீங்கள் விதி விலக்கு கேட்பது... இந்தியாவிற்குள்ளும் போராடும் மக்களும் ஒன்று தீவிரவாதிகள், அல்லது பயங்கரவாதிகள் இதை அவ்வப்போது ஊடகங்களே தேர்வு செய்கிறது.
தீர்ப்பு வந்த அன்றே தினமணி தலையங்க அளவிற்கு கூட இனமான கங்காணித் தலைவர்கள் அவ்வழக்கு நடந்த லட்சணத்தை விமர்சித்து உண்மை குற்றவாளிகளான சுப்பிரமணிசாமி, சந்திராசாமி முதலியர்களுக்கு தண்டனை வாங்கித்தராமல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டி கையேந்தி நின்னது தவறு.
இதே பாணிதான் இன்று சகல மக்களுக்கும் இழைக்கப்படுகிறது. ஜெர்மன் கவிதைதான் அறங்கேருகிறது. ... இன்று என்னை கைது செய்த போது என்னை ஆதரிக்க யாருமே இல்லை. எல்லா விடுதலைப் போராட்டக்கர்ரஃகளையும் பயங்கரவாதிகள் என்று இமெரிக்கத்தலைமையில் அறிவிக்கும் போது நீங்கள் புலிகளுக்கு விதிவிலக்கு கேட்பது ...
RRaj
தலைவர் பிரபாகரன் அவர்களால் கட்டி எழுப்ப பட்ட "விடுதலை புலிகள்"களால் தான் உலகம் முழுவதும் தமிழர் என்ற ஒரு இனம் இருக்கிறது என்று அடையலாம் காட்ட பட்டது... அந்த பெருமை விடுதலை புலிகள் இயக்கத்திற்கு சாரும்....
Nadaveeran
மதிற்புக்குரிய அகலினியன் அவர்களுக்கு..!

ஈழத்தமிழனாக இருந்தும் புலம்பெயர் தேசத்தில் அதிக ஆண்டுகள் வாழ்ந்ததனால் அறியாத நிறைய விடயங்களை உங்கள் கட்டுரை மூலம் அறிந்து கொண்டேன்.இதே போன்ற ஆக்கங்கள் நியாயமானதாக உங்களிடத்தில் இருந்து நிறைய வரவேண்டும், உமது எழுத்துக்கள் மூலம் அடுத்து வரும் எம் தமிழ் சந்ததியினரை விழிப்படைய வைக்க வேண்டும். உங்கள் கட்டுரை மூலம் நாம் அறிந்தது போல் உலகினில் வாழும் சகல இன மக்களும் எங்களின் நியாயமான போராட்டத்தின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும்படி இக்கட்டுரையானது மொழிப்பெயர்ப்பு செய்யப்பட வேண்டும். இதற்க்கு கீற்று இணையத்தளமும் தனது முழுமையான பங்களிப்பை செய்ய வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்!
Saanakkiyan
விடுதலைப் புலிகளை அமெரிக்கா தடை செய்ததிற்கு மேலும் பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று மட்டக்களப்பில் கருணா தலைமையில் 600 போலீசாரை கொன்றது. மக்களுக்கு சேவை ஆற்றும் (இராணுவம் அல்லாத) சரணடைந்த போலீசாரை யாரவது படுகொலை செய்வார்களா என்று கேட்டதாம் அமெரிக்கா அன்று. அப்படி செய்த கருணா இன்று அரசாங்கத்தோடு சேர்ந்து செயல்படுகிறார் என்பது இன்னொரு உலக அதிசயம்.
valvai Suyen
தம்பி குணசீலா.. கட்டுக்கட்டாய் சொல் சேர்த்து சுவையுற நகையுற கற்பனாவாதிகளால் முகச் சலவை செய்து பிரசுரமாகும் கட்டுரைகளின் நடுவே.. பயங்கரவாதத்திற்கும் சுதந்திர வாதத்திற்கும் நிதர்சனம் தந்து தமிழீழ சுதந்திரத்தின் உச்சாணி ஏறி உள்ளதை சொல்லி தமிழர்குல தேசியத் தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அவன் வழி நின்று மறத்தமிழ் போற்றி மறக்குலம் மேவி சுதந்திரத் தமிழீழத்திற்காய் வஞ்சகர் சதிக்கும் வல்லரசுகளின் வாழ் முனைக்கும் நெஞ்சுரம் காட்டி உயிர் தந்த உத்தமரையும் இன்னும் அதன் நோக்கிலே வாழ்கின்ற அணையாத் தணலான அன்பு நொஞ்சங்களையும் என்றும் தலை தாழ்த்தி வணங்குகிறேன் செதுக்கினாலும் உருக்கினாலும் மாற்றுக்குறையா தங்கம் தங்கம்தான் என்பதை நினைவுறுத்தி முன்வைத்துள்ளாய் உன் கட்டுரையில் உண்மையும் அதுவே ஆறா துயரினை அணைத்திட உலக நாடுகளையும் நம்பி ஏமார்ந்தே போனோம். எவன் ஏது சொன்னாலும் அவனவன் தன் வாழ்வுக்காக போடும் வேலி என்பதை நான் அறிவேன் சுதந்திரதாகத்தின் மறு பெயர் எமதீழ விடுதலை போர் என்பதற்கு மாற்றகருத்து ஏதும் உண்டோ இவ்வுலகில் அனைவரும் அறிவான் இதை... எழுகை என்பது என்றும் எளல்லாம் ஆனால் எம் தலைவன் பிரபாகரன்போல் இனி ஒருவன் வருவானா... இதுதான் என் ஆதங்கம்... லெட்ச்சியவாதிகளுக்கு சிறைக்கம்பிகள் அவன் வீட்டு ஜன்னல் கம்பிகள் நிலாவோடும் பேசுவான் உலாப் போக கதிரவனோடும் கை கோர்ப்பான் காலம் மாறினாலும் எமதீழப் போரின் வீர இலக்கணம் என்றும் அழியாது எவனாலும் அழித்திடவும் முடியாது தமிழ்கல பெருந்தலைவனின் பெருங்கட்டமைப்பை கண்டு வியந்தேன் அதை நின் எழுத்தில் நுகர்ந்தேன் காலம் கைகூடும் என்ற நம்பிக்கையில் கண்ணீர் அலைகளோடு நன்றியும் தந்தேன்....
kannan
விடுதலை புலிகள்தான் எங்கள் பாதுகாப்பு அரண் - தமிழ் ஈழ குடிமகன்
theivakan
வணக்கம் எழுத்தாளரே மிகவும் அழகாக உள்ளது உங்களின் எழுத்தின் சொற்பதங்கள். சாதாரண கிராமத்து உறவுகளும் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் உள்ளதை உள்ளபடியே கூறியிருக்கிரிர்கள்.உணர்வுள்ள உள்ளங்களை மேருகூட்டக்குடியதாக உள்ளது.உங்களின் எழுத்துக்கள் பல வாடிவங்களில் (ஈழ வரலாறுகள், ஈழ போராட்ட பரிணாம வளத்சிகள், ஈழ போராட்டம் சந்தித்த சரிவுகள், ஈழ போராட்ட சாதனைகள்,)என்று தொடரவெண்றும் என்பது எனது ஆசை.நம்புகிறேன் நன்றி.

இதுபோன்ற தொகுப்புக்களை பிரசளிக்கும் ஊடகங்கள் பிற மொழிகளிலும் குறிப்பாக அங்கிலம், கிந்தி போன்ற மொழிகளிலும் பிரசிலித்தால்  தமிழன் அல்லாத பிற மொழி சார்ந்தவர்களும் ஈழ தமிழரையும் ஈழ போராட்டம் பற்றியும் அவர்கள் அறிந்துகொள்ள இலகுவாக இருக்கும்.
அப்போதுதான் தமிழன் வீரமும்  கலாச்சாரமும் சாகவில்லை என்பதை உலகம் அறியும்.
Tamiliniyan
intha katturaiyai veli ulukaththitku kaattiya en sakotharan valavai akaliniyankku ennathu anpaana nanriyai therivithu kolkiren intha katturaiyai ulakathitku aankilathil molipeyarppu seithu veliyidavendum appothuthan intha viduthalai amaippin unmaiyana karu velikondu varapadum.
valvaiyooraan
இது நலல நகைசுவையாக இருக்கிரது.உலக மஹா பாதகங்கலை எல்லாம் செய்த ஒரு மாபியா குலுவை பொராலிகலாக வர்னிப்பது.
இப்படி எந்த ஒரு இயக்கமும் வலரவில்லைத்தான்.
இரா-வெங்கடேஷ்-குடந்தை
கட்டுரையை படிக்கும் போது மனது வலிக்கிறது அய்யா..எந்த இனத்திற்க்கும் கிடைக்காத பெரும் பேறு விடுதலைப்புலிகளால் தமிழினத்திற்க்கு கிடைத்தது, ஆனால் தாய் தமிழ்மக்களால் புரிந்துகொள்ளப்படாமலேயே போனது துரதிஷ்டமானது. அங்கே புலிகள் களமாடிக்கொண்டிருக்க நாம் இங்கே அரசியல் பண்பாட்டு ரீதியில் உதவிக்கொண்டு நமது உறவுகளை காத்திருந்தோமானால் இன்று ஈழத்தையே நாம் அடைந்திருப்போம் இந்த தொப்புள்கொடி உறவினின்று நம்மை எது,யார் பிறித்தது....?!நாம் ஏன் நமது உறவுகளுக்கு எதிரியாகிப்போனோம்...எல்லா தமிழர்களும் யோசிக்கவேணும்
Moorthy Eelatamilan
ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமைதான் விடுதலைப்புலிகள் ..
உலகமே ஆச்சர்யபடும் தலைவர் எங்கள் தலைவர் அவர்கள் .
சில துரோகிகள் எங்கள் பிந்தலையில் கோழைத்தனமாக அடித்து விட்டு வெற்றி கொண்டாடுகிறார்கள் இதற்கு காலம் விரைவிலேயே பதில் சொல்லும்
இல்லை தமிழர்கள் ஆகிய நாம் சொல்ல வைப்போம்.
உங்களின் பதிவுகள் நன்றாகவே உள்ளது ...உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
நானும் ஒரு ஈழத்தமிழன்
மேலே ஒரு பதிவு வலவையூரான் என்ற பெயரில் வெளியாகி உள்ளது , அவன முதல்ல பள்ளி சென்று
தமிழ் கற்க சொல்லுங்கள் .. மன்னிக்கணும் அடிப்படை அறிவு இருகிறவந்தானே பள்ளி சென்றால் பயன்!!!
kannan
சில துரோகிகள் எங்கள் பிந்தலையில் கோழைத்தனமாக அடித்து விட்டு வெற்றி கொண்டாடுகிறார்கள் இதற்கு காலம் விரைவிலேயே பதில் சொல்லும் இல்லை தமிழர்கள் ஆகிய நாம் சொல்ல வைப்போம். உங்களின் பதிவுகள் நன்றாகவே உள்ளது ...உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
alavoudine
புலிகள் அழிவுக்கு காரணம் புலிகள்தான் தம்மை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவத்தில் அவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமா?, 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணதில் தான் உண்டு தன் வியாபாரம் உண்டு என்று இருந்த அப்பாவி முஸ்லிம் தமிழர்களை துப்பாக்கி முனையில் அவர்கள் பல பல நுற்றாண்டு காலமாய் வாழ்ந்த வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாவற்றயும் போட்டுவிட்டு உடுத்திய துணி 500 ருபாய் பணம் மட்டுமே அனுமதி என்று நான்கு மணி நேரத்தில் லாரிகளில் வைத்து விரட்டியது யார்? இரக்கமே இல்லாமல் குழ்ந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் நோயாளிகள் என்று பார்க்காமல் விரட்டியது யார்? குழ்ந்தைகள் கழுத்தில் கிடந்த சங்கிலி, வளையல் நகைகளை கொரடை கொண்டு வெட்டி எடுத்தவர்கள் யார்? கொள்ளை அடித்த பொருள்களை புத்த கோவிலில் வைத்து விற்றவர்கள் யார்? சிங்களவனா? இல்லையே புலிகளைதானே அது மட்டுமா கிழக்கு மாகாணத்தில் வாசித்த லட்சகணக்கான முஸ்லிம் தமிழர்களை விரட்டி அவர்களை அகதியாய் ஆக்கியது, காலையில் பள்ளிவாசலில் தொழுது விட்டு வந்த அப்பாவி முஸ்லிம்களை குருவி சுடுவது போல் சுட்டு கொன்றது என்று சொல்லிக்கொண்டே போகலாம், நரேந்திர மோடியை விட ஒருபடி மேலே போய் முஸ்லிம்களுக்கு அநீதி இளைத்தது புலிகள்தானே இந்த விசயத்தில் பிரபாகரன் ஓர் இந்துமதவெறியர் போல் நடந்த இருக்கின்றார் ஆனால் அவரை ஆதரிப்பது எல்லோரும் இந்து மத எதிர்பாளர்கள் இதுதான் வேடிக்கை,
அப்பாவிகளை கொலை செய்வதில் ராஜபக்சேவுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை பிரபாகரன், எத்தனை தமிழர்கள், மாற்று கருத்து உள்ள அரசியல் தலைவர்கள், சகோதர இயக்க தலைவர்கள், சொந்த இயக்கத்தை சேர்த்தவர்கள் முஸ்லிம்கள், அப்பாவி சிங்களவர்கள் சொல்லிக்கொண்டே போகலாம், 1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பொழுது 40 கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்களும் போலீஸ் இறந்தர்களே அவர்கள் தமிழர்கள் இல்லையா? இவர்கள் எல்லோரும் இந்திய அமைதி படையுடன் சேர்ந்து போய் தமிழ் பெண்களின் கற்பை சூறையாடி விட்டு வந்தவர்களா? புலிகளுக்கு உதவ போய் அவருக்கே தெரியாமல் மிகபெரிய சதியில் நளினி என்ற அப்பாவி 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுவதற்கு காரணம் புலிகள்தானே,
புலிகளுக்கு கலைஞர் துரோகம் செய்துவிட்டார் என்று சொல்லுகின்றர்களே புலிகள் மட்டும் கலைஞர்க்கு துரோகம் செய்யவில்லயா? 1989 இல் புலிகளுக்கு உதவ போய் ஆட்சியை இழந்தார், புலிகளை ஆதரித்த ஒரே காரணத்துக்காக ராஜிவ் கொலை பழியை சுமந்தார், அதனால் தானே 1991ஆம் ஆண்டு தி,மு, க படுதோல்வியை சந்தித்தது, ராஜுவை கொலை செய்தால் அந்த பழி நம்மை ஆதரிக்கும் தி மு கதிற்கு போய் விழும் என்று ஏன் பிரபாகரன் சிந்திக்கவில்லை?, எல்லோரும் தமிழர்கள் என்கின்றர்களே இலங்கைஇல் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு பிரச்சினை வந்த பொழுது புலிகள் என்ன உதவி செய்தார்கள்? தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அது எல்லோருக்கும் பொருந்தும் ஆனால் மற்றவர்களுடை பிரச்னை அவரவர்களுக்கு, 1985 களில் எல்லோரையும் போல் புலிகளை ஆதரித்தவந்தான் நான், இப்போது என்னை இப்படி எழுதுவதற்கும் காரணம்மும பிரபாகரந்தான், அப்பாவி இலங்கை தமிழர்கள்தான் பாவம் ஒருபக்கம் புலிகளும் மறுபக்கம் இலங்கை ராணுவத்தாலும் வாழ்விழந்து நிற்கின்ற்கள்,
Muralitharan Gunaseelan
சகோதரர் அலாவுதீன் (அலவொஉடினெ) அவர்களே...

நீங்கள், உங்கள் மத ரீதியாக வைத்து விமர்சனம் செய்வதை முதலில் நிறுத்துங்கள்! முதலில் தமிழன் அழிக்கப்பட்ட வரலாற்றினைப் படியுங்கள். தமிழனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், தமிழன் அழிக்கப்பட்ட வரலாறும் இன்று உலகமே அறியும். 1990 ஆம் ஆண்டுக்கு முன் என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அப்போது வரையும் நீங்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில்தானே இருந்தீர்கள்? 1987 ஆம் ஆண்டு "லிபரேசன் ஒபரேசன்" என்ற பெரும் தாக்குதல் நடவடிக்கையால் தமிழ் மக்கள் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட வரலாறுகளுலகமே அறியும்! அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இலங்கை அரசாங்கத்துக்கு உதவிக்கரம் நீட்டினீர்கள்! உங்கள் உறவுகள் யாராவது சிங்களவர்களால் அழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட வரலாறுகள் உண்டா? இல்லையே?

ஆனால், உங்கள் உறவுகளில் சிலர் குடும்பங்களாக விடுதலைப் புலிகளோடு இருந்தும், போராளியாகவும், போராடி மாவீரர்களாகவும் மடிந்த வரலாறுகள் உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் சிங்கள அரசினால் பாதிக்கப் பட்டவர்கள்.... அதனால் அவர்கள் மதத்தை மறந்து தமிழர் இனமாக புலிகளோடு போராடினார்கள்! அவர்கள் போராடி மாவீரர்களாகிய கல்லறைகள் கூட நிறைய உண்டு. "கப்டன் பில்லா, மேஜர் அப்துல்லா" வரிசையில் இன்னும் நிறைய இருக்கிறார்கள். இன்னும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்றால்.... அவர்கள் அமைப்பில் இருந்த பல முக்கியமான போராளிகளின் பெயர்கள் முஸ்லிம் பெயர்களே என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழ் பெயர்களையே விரும்பும் புலிகள், ஏன் முஸ்லிம் பெயர்களை வைத்தார்கள் தெரியுமா? முஸ்லிம்கள் மேல் அவர்களுக்கு இருந்த மரியாதைதான் காரணம். "இமாரன் பாண்டியன்" என்றொரு சிறப்புப் படையணி புலிகளிடம் உண்டு. இதுதான் அவர்கள் தலைவரின் பாதுகாப்புப் படையணி. அந்தப் படையணியின் பெயரில் வரும் "இம்ரான்"என்ற பெயர் லெப்டினன் கேணல் இம்ரான் என்வரின் பெயர். அவர் இந்துவாக இருந்தாலும் அவரின் முஸ்லிம் நண்பருக்காகவே தனது பெயரை வைத்திருந்தார். விக்டர் கவச எதிர்ப்புப் பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியின் பெயர் கூட "லெப்டினன் கேணல் அக்பர்" என்ற முஸ்லிம் பெயரே..! இப்படி ஏகப்பட்ட முஸ்லிம் பெயர்களும், முஸ்லிம் போராளிகளும் உள்ளார்கள். அவர்களையும் நீங்கள் கேவலப் படுத்துகிறீர்களா?

கருணா கூட 2004ஆம் ஆண்டு சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து எதிர்த்தமையால்தான் கருணா கூட தமிழர்களுக்கு எதிரியாக்கிப் போனார். இன்று தமிழினம் அழிந்ததற்கு காருனாவும் முக்கிய காரணமே..! இதனால் கருணாவையும், கருணாவின் ஆதரவாளர்களையும் உண்மைத்தமிழன் எதிர்க்கத்தான் செய்வான். அந்த எதிர்ப்பை வைத்து கருணாவின் ஆதரவாளர்கள் தங்களுக்கு புலிகள் கொடுமைகள் செய்துவிட்டார்கள் என உறுதிப்படுத்தினாலதை எந்த விடுதலை ஆதரவாளர்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்! அதே போல்தான் 1989, 1990 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நீங்களும் நடந்து கொண்டீர்கள்! இது உலகம் அறியும்! வரலாறுகள் கூடச் சொல்லும்! சுதந்திர விடுதலைப் போராட்டத்திற்கு யார் எதிராக நின்றாலும்... அவர்கள் எதிர்த்து அழிக்கப்பட வேண்டியவர்களே! தமிழ் மக்களால் அவர்கள் எதிர்க்கப்பட வேண்டியவர்களே! அது மாத்தையாவாக இருந்தாலும் சரி! கருணாவாக இருந்தாலும் சரி! சிங்கள அரசாங்கமாக இருந்தாலும் சரி! நீங்களாக இருந்தாலும் சரி!

1958 ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையும் தமிழர்கள் அழிக்கப்பட்டு, அகதிகளாக்கப்பட்ட வரலாறுகள் உங்களுக்குத் தெரியுமா?1990 ஆம் ஆண்டு முதல் 2004 ஆண்டு வரை இதே போல்தான் நடந்தது. இது உலகம் அறியும்..! 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உங்களுக்கும், 2004 ஆம் ஆண்டு கருணாவிற்கும் புலிகளால் எதிர்ப்பு ஏற்பட்டது என்றால்... நீங்கள் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருந்தமையால்தான்! உங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனைகளை காரணமாக வைத்து புலிகளை எப்படி விமர்சனம் செய்தாலும்... உங்கள் விமர்சனங்கள் எவற்றையும் உண்மைத்தமிழன் எவனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்!

நளினியின் வரலாறு உங்களுக்கு தெரியாவிட்டால் முதலில் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்! நளினியானவர் முருகனை காதலித்தார் அவ்வளவுதான் அவர் செய்தது! எல்லோருக்கும் காதல் வருவது இயல்புதானே! அவர் முருகனுக்கு உதவி செய்யவில்லை... முருகனை காதல் மட்டும்தான் செய்தார்! அவர் முருகனை காதலித்தமையால்தான் அவரும் உடந்தையாக இருக்கலாம் என்று சிறையில் இருக்கிறாரே தவிர...புலிகளுக்கு உதவி செய்தமையால் இல்லை! நளினி புலிகளுக்கு உதவியது நீங்கள் பார்த்தீர்களா? ராஜீவ்காந்தி கொலையின் சூத்திரதாரிகளான சுப்ரமணியசுவாமி, சந்திரசாமி, ஜனார்த்தனான் வரலாறுகள் தெரியுமா?இவர்கள்தான் குற்றவாளிகளென உறுதி செய்த "ஜெயின் கமிஷன் அறிக்கையை" அரசியல் காரணங்களால் அப்படியே தூக்கி கிடப்பில் வைத்த வரலாறுகள் உங்களுக்குத் தெரியுமா?

உண்மை வரலாறுகள் பற்றி தெரியாத உங்களுக்கு நாம் விளக்கம் சொல்லி எந்தப் பயனும் இல்லை! முதலில் இன வரலாற்றைப் படியுங்கள்! ஒரு இன விடுதலைக்காகவும், சுதந்திர விடுதலைக்காகவும் யார் எதிராக வந்தாலும்... அவர்கள் எதிர்க்கப்பட்டு அழிக்கப்பட வேண்டியவர்களே! அது நானாக இருந்தாலும் சரி! நீங்களாக இருந்தாலும் சரி! இனியாவது நான் இந்து, நீங்கள் முஸ்லிம் என மத ரீதியாக பிரித்துப் பார்க்காதீர்கள்! மதங்களைக் கடந்து ஒரே இனமாக அதுவும் தனித்தமிழ் இனமாக வாழுவோம்!
அருன்வெற்றிவேல்
மிகவும் அருமை.
keeraa
மிக சிறப்பான கட்டுரை...புலிகள் குறித்து இன்னும் அறிந்து கொள்ள உதவுகிறது..
மகேந்திரன்
நண்பர் அலாவுதின் அவர்களே நீங்கள் நினைவுபடுதிய 1990 நிகழ்வுகள் அனைத்தையும் நீங்களே தெளிவு படுத்தி பாருங்கள் இந்த விரோத போக்கை கடைபிடித்தார்கள், உங்கள் இனத்தில் இருந்த சில துரோகிகளே இந்நிகழ்ச்சிக்கு காரணம்
Gobinath
Unkal katturai sirapu. Tamilan veeram theriyadum Indha ulakadhuku. Mendum yeluvam idhai Veda veeradhodu. Annan valiel povam. Unkaluku yen panivana vanakkam um nandri um
shrihary
மேதகு தலைவர் வாழ்க

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.