இன்றைய நமது நிலைப்பாடுகள்:

தனித் தமிழீழம் என்பது மட்டுமே ஈழத் தமிழ் மக்களின் துயரற்ற, கண்ணியமான‌ எதிர்கால வாழ்விற்கான நிரந்தரத் தீர்வு. இந்த கருத்தைப் பரந்த அளவில் அனைத்து மக்களிடமும் கடந்த சில நாட்களில் நாம் கொண்டு சென்றிருக்கிறோம் – வெற்றிகரமாக.

ஐ.நா.சபையின் மனித உரிமைக் கமிஷனின் முன்பாக மார்ச் 21 ஆம் தேதியன்று ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வுரிமை குறித்து அமெரிக்க அரசு தீர்மானம் கொண்டுவரவுள்ளது. இந்தத் தீர்மானம் ஒன்றுபட்ட இலங்கை என்ற நியாயமற்ற கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே அதனை நாம் நிராகரித்துள்ளோம்.

அமெரிக்க அரசினைப் போலவே இந்திய அரசும், தமிழக அரசும், தி.மு.க. போன்ற அரசியல் கட்சிகளும், பல்வேறு ஊடகங்களும் ஒன்றுபட்ட இலங்கை என்பதன் அடிப்படையில் மட்டுமே ஈழத் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று கூறி வருகின்றன. எனவே அவற்றையும் தவறானவை என்று நாம் நிராகரித்துள்ளோம்.

நான்காம் ஈழப்போரின் போதும், அதன் முன்னரும், பின்பும் இலங்கையின் சிங்கள அரசால் ஈழத் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனை விசாரிக்கக் கால வரம்பிற்குட்பட்ட சார்பற்ற சர்வதேச விசாரணை அவசியம் என்பது நமது கோரிக்கை. நமது இந்தக் கோரிக்கையை இன்று தமிழக அரசும், தி.மு.க போன்ற அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஐ.நா.மனித உரிமைக் கமிஷன் முன்பாகக் கொண்டு வரப்படவுள்ள அமெரிக்க அரசின் தீர்மானமும், மத்திய அரசின் நிலைப்பாடும் சர்வதேச விசாரணை தேவையில்லை என்கின்றன. இனப்படுகொலை குறித்த விசாரணையை இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசே நியாயமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று அவை கூறி வருகின்றன. 2009 ஆம் ஆண்டில் இலங்கையின் தலைமை நீதிபதியாக இருந்த திரு.சரத் டி சில்வா அவர்கள் போருக்குப் பின்னர் தமிழ் மக்களுக்காக அமைக்கப்பட்ட முள்வேலி முகாமைப் பார்வையிட்ட போது கூறிய உண்மையை அவர்கள் ஏனோ மறந்து போய்விட்டார்கள். “இந்த மக்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம்; இந்த நாட்டின் நீதி அமைப்பில் அவர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்கப் போவதில்லை” என்பதுவே திரு.சில்வாவின் கூற்று.

ஐ.நா.சபை மற்றும் அமெரிக்க அரசின் மேற்பார்வையில் 2011 ஜனவரி 9-15 தேதிகளில் சூடான் நாட்டிலிருந்து தெற்கு சூடான் தனி நாடாகப் பிரிந்து செல்வதனைத் தீர்மானிப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தெற்கு சூடானைச் சேர்ந்த 98.83% மக்கள் பிரிந்து செல்வதுதான் தீர்வு என்று வாக்களித்தனர். 2011 ஜூலை 9 ஆம் தேதியன்று தெற்கு சூடான் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இதுபோலவே 1993 ஏப்ரலில் எத்தியோப்பியாவில் இருந்து எரிட்ரியா தனி நாடாகப் பொது வாக்கெடுப்பின் மூலம் பிரிந்து சென்றது. இந்த முன்னுதாரணங்களின் அடிப்படையிலேயே இலங்கையில் இருந்து தமிழ் ஈழம் பிரிந்து செல்வதற்கான பொது வாக்கெடுப்பை ஈழத் தமிழ் மக்களிடம் சர்வதேச நாடுகளும், அமைப்புகளும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன் வைத்துள்ளோம். இந்தக் கோரிக்கையின் மீதான தமது கருத்துக்களை இன்றுவரை தமிழக அரசும், தி.மு.க., அ.தி.மு.க., போன்ற அரசியல் கட்சிகளும் வெளிப்படையாக முன்வைக்க மறுத்து வருகின்றன.

இன்றைய சூழ்நிலை:

கல்லூரிகளுக்கும், விடுதிகளுக்கும் விடுமுறை அறிவித்து விட்டால் நமது போராட்டம் முடிவுக்கு வந்து விடும் என்ற தமிழக அரசின் கணக்கு தவறாகியுள்ளது. விடுமுறை அளிக்கப்பட்ட பின்னரே நமது போராட்டம் பரந்து விரிந்துள்ளது.

ஐ.நா.சபையின் மனித உரிமைக் கமிஷனில் மார்ச் 21 ஆம் தேதியன்று அமெரிக்க அரசின் தீர்மானத்தின் மீது நடக்க உள்ள வாக்கெடுப்பிற்குப் பிறகு நமது போராட்டம் முடிவுக்கு வந்து விடும் என்பதே அரசு மற்றும் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நமது போராட்டத்தினைக் கண்டு தமிழக அரசியல் கட்சிகள் பொதுவான அச்சத்தைக் கொண்டிருக்கின்றன. நமது கோரிக்கைகளுக்கு உடன்படாது போனால் வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமக்குப் பின்னடைவுகள் ஏற்படலாமோ என்ற அடிப்படை அச்சம் அவற்றிற்கு இருக்கத்தான் செய்கின்றன. என்றாலும் கூட, அவை தனி ஈழம் தொடர்பான பொது வாக்கெடுப்பு குறித்த தமது நிலைப்பாட்டை இன்றளவும் மாற்றத் தயாராயில்லை. என்ன காரணத்திற்காகவோ, கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தினை முதலில் ஆதரித்ததைப் போலவே நமது போராட்டத்திற்கும் தமிழக அரசு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. மார்ச் 21-ற்குப் பிறகு இந்த நிலைப்பாடு தொடருமா என்பது தெரியாது.

காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் இடது கம்யூனிஸ்டு போன்ற தேசியக் கட்சிகளும் நமது கோரிக்கைகளை இன்றளவும் உதாசீனப்படுத்தி வருகின்றன. இந்து பத்திரிகையோ நமது நிலைப்பாடு தவறானது என்று தலையங்கம் எழுதியுள்ளது.

ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டு வரும் அமெரிக்க அரசிற்கு இன்றளவும் நாம் ஒரு பொருட்டாக இல்லை என்பதுதான் இன்றைய உண்மை நிலை.

இனப்படுகொலைக்கான விசாரணை குறித்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலேயே இலங்கைக் கடற்படையானது தமிழக மீனவர்களை அடித்து இழுத்து சென்றிருக்கிறது. இது குறித்து மத்திய அரசானது வழக்கம் போலவே எவ்விதக் கவலையும் கொள்ளவில்லை.

எனவே, சில அடிப்படைக் கேள்விகளை நாம் இங்கு நம்மிடமே எழுப்ப வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
லட்சக் கணக்கில் பெருந்திரளாக இன்று நாம் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்தினை நம்மால் எவ்வளவு காலத்திற்குத் தொடர முடியும்?

நாம் முன் வைத்துள்ள கோரிக்கைகளை பரந்த அளவில் பிறருக்குத் தெரிவிப்பதில் நாம் வெற்றியடைந்துள்ளோம். ஆனால், அவற்றை நம்மால் நிறைவேற்றிட முடியுமா? போராடுவதற்கான சூழ்நிலையை அரசும், கல்வி நிறுவனங்களும் அடைத்திடும் பட்சத்தில் நமது கோரிக்கைகளை நிறைவேற்றிட நாம் மேற்கொள்ள வேண்டிய குறைந்தபட்ச நடவடிக்கைகள் யாவை?

அரசுகளின் செயல்பாடுகளும், நாமும்

இலங்கையின் மீது பொருளாதாரத் தடையைக் கொண்டு வருவதன் மூலம் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியை மத்திய அரசு துரிதமாகப் பெற்றுத் தரவேண்டும் என்ற தீர்மானத்தைத் தமிழக சட்டசபை 2011 ஜூன் 8 ஆம் தேதியன்று இயற்றியது. மேலும், போர்க் குற்றங்களை செய்த குற்றவாளிகளின் பெயர்களை ஐ.நா.சபையை வெளியிட வைக்க வேண்டும் என்றும் அது மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு இன்றளவும் கண்டு கொள்ளவேயில்லை. மாறாக, இலங்கை அரசுக்கு உதவிடும் பல்வேறு நடவடிக்கைகளை அது பின்னர் மேற்கொண்டது.

மாநில மக்களவையின் தீர்மானத்திற்கே செவி சாய்க்காத மத்திய அரசு மாணவர்களான நமது (கால வரம்பிற்குட்பட்ட) போராட்டத்திற்கு எவ்வாறு செவி சாய்க்கும்?

2009 ஜனவரி 29 அன்று நெருப்பிட்டு வீர மரணமடைந்த முத்துக்குமாருக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியானது அரசு, கட்சிகள் மற்றும் ஊடகங்களின் தந்திரத்தால் நீர்த்துப்போன நிலையை அடைய நேரிட்டதைப் போல நமது போராட்டமும் நீர்த்துப் போகும் நிலையை எட்டாது என்பதற்கு உத்திரவாதம் உண்டா?

இதுபோன்ற தடைகளையும், இடர்பாடுகளையும் மீறி நம்மால் நமது கோரிக்கைகளை வெற்றி பெறச் செய்ய முடியுமா?

முடியும் என்றுதான் நம்மால் கருத முடிகிறது.

வெற்றிக்கான வழி என்ன?

அமெரிக்க அரசிற்கும் மத்திய அரசிற்கும் இடையில் உள்ள இன்றைய உறவைப் புரிந்து கொண்டால்தான் இதற்கான வழியினைக் கண்டறிய முடியும்.

2005 ஜூலை 18 ஆம் தேதியன்று இந்தியாவும் அமெரிக்காவும் 123 ஒப்பந்தம் எனப்படும் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை முன் வைத்தன. இந்தியாவில் இயங்கிவந்த அணு மின் நிலையங்களை ராணுவ மற்றும் மின்சார மின் நிலையங்களாக வகைப்படுத்த இந்திய அரசு ஒப்புக் கொண்டது. இதன் பிறகு வந்த காலகட்டத்தில்தான் மத்திய அரசின் செயல்பாடுகள் அனைத்துமே அமெரிக்க அரசால் இயக்கப்படுபவையோ என்ற அளவிற்கு சந்தேகத்தை எழுப்பின. 1987 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி இலங்கையின் துறைமுகங்களையும், விமான நிலையங்களையும் இந்திய அரசின் அனுமதியின்றி பிற நாடுகளின் இராணுவங்கள் உபயோகிக்க இலங்கை அரசு அனுமதி வழங்க முடியாது. ஆனால் 2007 மார்ச் 5 ஆம் தேதியன்று இலங்கை அரசும் அமெரிக்க அரசும் இதற்காக ஒப்பந்தத்தை செய்து கொண்டன. இதுகுறித்து இந்திய இராணுவ நிபுணர்கள் கவலை தெரிவித்தும் கூட ராஜீவ் வழி வந்த காங்கிரஸ் அரசு இதனைக் கண்டு கொள்ளவேயில்லை. இலங்கையின் மீது தனக்கிருந்த ஆளுமையை அமெரிக்க அரசிடம் முழுமையாக விட்டுக் கொடுப்பதில் அதற்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. இதுவே இலங்கையில் இந்திய அரசிற்கும் அமெரிக்க அரசிற்கும் இடையில் ஏற்பட்ட கூட்டின் துவக்கம்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பாராளுமன்ற ஒப்புதலை வாங்க 2008 ஜுலை 10 ஆம் தேதியன்று காங்கிரஸ் அரசு மேற்கொண்ட வரலாறு காணாத கேலிக்கூத்துகள் அமெரிக்க அரசினை மத்திய அரசு எவ்வாறு கருதுகிறது என்பதனைத் தெளிவு படுத்தியது. இந்திய மக்களின் நலனைக் காப்பதை விட அமெரிக்க அரசின் நலன்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுவே தனது கடமை என்று மத்திய அரசு நினைக்கிறதோ என்பதுபோல இதன்பின்னர் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்தன. ஆக, அமெரிக்க அரசின் ஆளுமையின் கீழ் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இயங்குகிறதோ என்ற சந்தேகம் எழத் தொடங்கியது.

2009 மே 13 ஆம் தேதியன்று பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடந்தது. மத்தியில் காங்கிரசுக்குப் பதில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்திடும் பட்சத்தில் இதுகாறும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் காங்கிரஸ் அரசால் விட்டுக் கொடுக்கப்பட்ட இலங்கையின் மீதான தனது ஆளுமையை பா.ஜ.க. ஒருவேளை கோரினால் என்ன செய்வது? அப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக பா.ஜ.க.வை முன்கூட்டியே எச்சரிப்பதற்காக மே 15 ஆம் தேதியன்று அமெரிக்கக் கப்பற்படைத் தளபதி அட்மிரல் கீட்டிங் இந்தியா வந்தார். “இலங்கைக்குள் எவரும் வரலாம்; போகலாம். சீனா வரக் கூடாது என்று இந்தியா சொல்லக்கூடாது. அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கினால் அதனால் ஏற்படும் விளைவுகளை அது தனியாகவே சமாளித்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் உதவி கிடைக்காது” என்று எச்சரித்தார். மே 17 ஆம் தேதியன்று மீண்டும் காங்கிரசே ஆட்சியைப் பிடித்ததனால் அந்த எச்சரிக்கைக்கு அவசியமில்லாமல் போய்விட்டது.

எனவேதான் அமெரிக்க அரசின் முழு ஆளுமையின் கீழ்தான் மத்திய அரசு இயங்கி வருகிறது என்று நாம் கருத வேண்டியுள்ளது.

அப்படிப்பட்ட மத்திய அரசிடம்தான் அமெரிக்க அரசின் தீர்மானத்தை மாற்றி அமைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவரும் மனு கொடுத்துள்ளார்கள். இந்த மனு வழக்கம்போல கண்டு கொள்ளப்பட மாட்டாது என்பது உறுதி.

எனவே, இப்படிப்பட்ட மத்திய அரசிடம் நமது கோரிக்கைகளை முன் வைப்பது என்பது நமது நேரத்தை விரையமாக்கும் செயலாக இருக்குமேயொழிய பயனுள்ள ஒன்றாக இருக்க முடியாது.

எனவே, நமது கோரிக்கைகளை அமெரிக்க அரசிடம் வைப்பது மட்டுமே நமக்குள்ள ஒரே வழியாக உள்ளது.

மத்திய அரசே நம்மைக் கண்டுகொள்ளாதபோது அமெரிக்க அரசா நம்மைக் கண்டுகொள்ளப் போகிறது என்ற கேள்வி எழும்.

மத்திய அரசையாவது தேர்தலின்போது மாற்றிட முடியும். அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை நமது பெருந்திரள் போராட்டங்களாலும், அர்ப்பணிப்புகளாலும் எவ்வாறு மாற்ற முடியும்? ஈராக் மீதான படையெடுப்பைக் கண்டித்து அமெரிக்காவில் நடந்த பெருந்திரள் மக்கள் போராட்டங்களையே கண்டு கொள்ளாத அமெரிக்க அரசா நமது போராட்டங்களைக் கண்டு கொள்ளப் போகிறது? என்ற கேள்வி எழுகிறது.

நமது போராட்டம் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கானது; அது தொடர்பான அமெரிக்க தீர்மானம் பற்றியது. எனவே அதனை எரிக்கின்ற, பாடையில் ஏற்றி புதைக்கின்ற சிம்பாலிக் போராட்டங்களை நாம் நடத்தி வருகிறோம். ஆனால், எரிக்கப்படுவது ஈழ மக்களின் வாழ்வுரிமைக்கான அமெரிக்கத் தீர்மானமாக இருக்கும்போது அதனை அமெரிக்கா கண்டுகொள்ளப் போவதில்லை. ஏனென்றால் இதில் அமெரிக்காவிற்கு இழக்க ஒன்றுமில்லை.

இந்தத் தீர்மானத்தினை எதிர்ப்பதற்குப் பதிலாக இந்தியாவைக் கட்டிப் போட்டுள்ள அணு சக்தி ஒப்பந்தம், பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள், வர்த்தக நிறுவனங்களினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஆகியவற்றை நாம் எதிர்க்கும் பட்சத்தில் அமெரிக்காவிற்கு அது இழப்புகளை – அதாவது சந்தை இழப்புகளை – கொண்டு வருவதாக அமையும்.

“தெற்கு சூடானை சூடானில் இருந்து பிரிப்பதற்கான பொது வாக்கெடுப்பினை நடத்தியதைப் போல தனித் தமிழ் ஈழம் அமைவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவோம்; தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட அனைவரையும் சர்வதேச அமைப்புகளின் மூலம் விசாரித்து தண்டனை அளிப்போம்” என்ற நமது கோரிக்கைகளை அமெரிக்க அரசு ஏற்றுக் கொண்டு தனது பழைய தீர்மானத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு மாற்றி அமைக்காவிட்டால் மாற்றி அமைக்கும் வரை நமது வாழ்விலிருந்து அமெரிக்க நிறுவனங்களைத் துடைத்து எறிவோம்.

கின்லே, அக்குவாபினா, ஸ்ப்ரைட், பெப்சி, கோக்கோ-கோலா, லேஸ் சிப்ஸ், ஃபோர்ட், செவர்லே கார்கள், வால்மார்ட் போன்றவற்றைப் புறக்கணிப்போம்.

அதுபோலவே நமது நாட்டையும், நமது வளங்களையும் கட்டிப்போட முனையும் அனைத்து அமெரிக்க ஒப்பந்தங்களுக்கும் பாடை கட்டுவோம்.

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான தீர்வு என்ற தீர்மானத்திற்குப் பாடை கட்டும்போது கண்டுகொள்ளாமல் இருந்த அமெரிக்க அரசானது இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தங்கள். கின் லே தண்ணீர் போன்ற பொருட்கள் ஆகியவற்றிற்குப் பாடை கட்டும்போது அதிர்ச்சி அடையும்.

இந்தப் போராட்டங்கள் அனைத்தையும் நாம் நம் கல்லூரிகளுக்குச் சென்றுகொண்டே மேற்கொள்ள முடியும் என்பதால், இவ்வகைப் போராட்டத்தினை மார்ச் 21 –ற்குப் பிறகும் கூட நம்மால் செவ்வனே நடத்திட முடியும்.

இந்த நடவடிக்கைகளே நம்மைச் சுற்றிப் படர்ந்துள்ள இருளை அகற்றும் தன்மையைக் கொண்டுள்ள முதல் நடவடிக்கைகளாம்.

இந்த நடவடிக்கைகளையே இனி நாம் கை கொள்வோம்.

நமது கோரிக்கைகளை வென்றெடுப்போம்.

- கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள்

Comments

19 comments

19
soosai fernando norway
நமது வாழ்விலிருந்து அமெரிக்க நிறுவனங்களைத் துடைத்து எறிவோம். ஆம் இதனை நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிப்போம். நல்ல இதயம் படைத்தவர்க்கும் எடுத்துச்சொல்வோம். இதயம் படைத்த இந்தியனைக் கண்டு கொள்வோம்.
chandramohan
This news should reach the students community to receuve the result tht we expect. Vazhga Thamizh!
VVijay
உண்மை இல் சரியான முடிவு. முதலில் நான் இதை என் விட்டில் செயல் படுதுகிரென்.
purushothamakumar
இச்செய்தியை தமிழகம் முழுவதும் பரப்ப வேன்டும்...
RRaj
உண்மை இல் சரியான பதிவு....மாணவர்கள் நன்றாக கவனிகிரர்கள் உலக அரசியலை... (மே 17) திருமுருகன் காந்தி அவர்களின் கருத்தும் இப்படி தான் இருந்தது... வாழ்த்துக்கள்...
கூத்தாடி
இது சரி. ஆனால், இது மட்டும் போதாது. #ஸ்டுடென்ட்ச்ஹுஙெர்ஸ்ட்ரிகெ #ஸ்டுடென்ட்ச்ப்ரொடெச்ட் மாணவர் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், திங்கள் 2503 அன்று கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந் நிலையில் போராட்டத்தை தீவிரமடையச்செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், எவ்வழியில்? எது வரையில்? கொஞ்சம் ப்ராக்டிக்கலா பேசுவோம். ஈழம் இன்றோ, நாளையொ வென்றெடுக்க முடிகிற கோரிக்கை இல்லை. அதனால், அதற்காக போராடாமல் இருந்து விடுவோமேயானால், தாயை பலர் சேர்ந்து கற்பழிக்கையில், " இத்தனை பேரை நான் என்ன செய்வது" என சாக்கு சொல்லி அதை வேடிக்கை பார்த்ததுக்கு சமம். அப்படி எனில் போராட்டம் எப்படி அமைய வேண்டும்??? எனக்கு இந்திய ஜன நாயக அமைப்பில் நம்பிக்கை இல்லை எனினும், இந்தியாவை இந்திய அரசால் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்பதால், மாணவர் போராட்டத்தின் அடுத்த நிலை ஒரு ஜன நாயாக அமைப்பாக ஒன்று திரள்வதாகத்தான் இருக்க முடியும். ஈன்டிஅன் ஃபெடெரல் ச்ய்ச்டெம்த்தை பொறுத்த வரை, அதை முற்றிலும் விசித்திரமாக தான் நடக்கிறது எனினும், பிராந்திய ரீதியான பிரச்சனைகளுக்கு (அப்படித்தான் இவ்விவகாரம் பார்க்கப்படுகிறது) எம்.பிக்களின் குரல் முக்கியம். காங்கிரஸ் சத்தியமாய் நமக்கு ஒன்றும் செய்யாது, பாஜகவும் செய்யாது. கம்யூ ஆட்சி அமைய வாய்ப்பில்லை. ஒரு வேலை கம்யூவிடம் லகான் இருத்தல் நலம். ஆனால், யோசித்து பாருங்கள், மாணவர்கள், 40திலும் வென்றால்?? இதில் ஆயிரம் அரசியல் பிரச்சனைகள் இருக்கிறது. எனக்கு தெரியும். விவாதிப்போம். ஆனால், "மாணவர்களுக்கு அரசியல் எல்லாம் தெரியாது, இது உணர்வு, இதைத்தவிர மீதி பிரச்சனைகள் எல்லாம் அவர்களுக்கு புரியாது" என நீங்கள் விவாதித்தால், உங்களுக்கு இரண்டு பதில்கள் 1. உங்களுக்கு மாணவர்களைப்பற்றி புரியவில்லை 2. கற்றுக்கொள்ளட்டுமே, இப்பொது அரசியல் தெரிந்தவர்கள் என்ன கழட்டுகிறார்கள்??? நண்பர்களே - தெரு முனையில் குரல் கொடுத்தது போதும் - இனி நம் குரல் ஒலிக்க வேண்டியது "பாராலுமன்றத்தில்" குறிப்பு : மாணவர்களே நிற்க வேண்டும் என்பதல்ல, மாணவர்கள் இயக்கமாக மாற வேண்டும் என்பதே - 25 வயசு லிமிட் இருப்பதால் :-)
rajkumar
கட்டுரையின் கேள்விகள் சரியானதுதான், ஆனால் தீர்வுகள் சரியாக இல்லை, குறிப்பாக “தெற்கு சூடானை சூடானில் இருந்து பிரிப்பதற்கான பொது வாக்கெடுப்பினை நடத்தியதைப் போல தனித் தமிழ் ஈழம் அமைவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவோம்; தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட அனைவரையும் சர்வதேச அமைப்புகளின் மூலம் விசாரித்து தண்டனை அளிப்போம்” என்ற நமது கோரிக்கைகளை அமெரிக்க அரசு ஏற்றுக் கொண்டு தனது பழைய தீர்மானத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு மாற்றி அமைக்காவிட்டால் மாற்றி அமைக்கும் வரை நமது வாழ்விலிருந்து அமெரிக்க நிறுவனங்களைத் துடைத்து எறிவோம். கின்லே, அக்குவாபினா, ஸ்ப்ரைட், பெப்சி, கோக்கோ-கோலா, லேஸ் சிப்ஸ், ஃபோர்ட், செவர்லே கார்கள், வால்மார்ட் போன்றவற்றைப் புறக்கணிப்போம்." மேலே குறிப்பிட்டுள்ளது போல் அமெரிக்க அரசு எதற்காக நமது கோரிக்கைகளை ஏற்க்க வேண்டும், இலங்கை அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் வந்தவுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எல்லம் குப்பையில் தூக்கி வீசி விடும், பிறகு நாம் என்ன செய்யபோகிறோம்?, அல்லது நீங்கள் சொல்வது போல் நமது கோரிக்கைகளை அமெரிக்க அரசு ஏற்றுக் கொண்டாள் இந்தியாவில் அமெரிக்கா கொள்ளை அடிக்க விட்டு விடலாமா? நீங்கள் குழப்பத்தில் உள்ளது போல் தெரிகிறது. குறிப்பாக ஈராக்கில் அமெரிக்கா செய்த படுகொலைகல் உலகறிந்தது, எனவே நாம் அமெரிக்காவிடம் கோரிக்கை வைப்பது கசாப்பு கடைக்காரனிடம் கருனையை எதிர்பார்பதாகும். எனவே தனித் தமிழீழத்திற்கு ஆதரவான இயக்கம் என்ற வரையரைள் மேற்கண்ட முழக்கத்தின் அடிப்படையில் மாணவர்கள் போராடுவது அதை தொடர்ந்து மக்கள் இயக்கமாக மாற்றுவதும், சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை வைப்பதும், இனப்படுகொலையில் பங்காளியான இந்திய அரசை எதிர்த்தும் போராடுவதன் மூலம் தீர்வை அடையளாம் என்பது எம்முடைய தாழ்மையான கருத்து.
raghava raj
மிகச் சரியான முதல் நடவடிக்கை !இதைச் செயல்படுத்துவதில் தமிழகத் தமிழர்கள் 7 கோடி பேரையும் ஈடுபடுத்த பரப்புரை செய்வோம்,நடவடிக்கைகள் மேற்கொள்வோம்.உடனே முனைப்புடன் செயல்படத்தொடங்குவோம் !
raja
நல்ல முடிவு நாம் இந்தியாவ நம்பி பிரயோசனம் இல்லை அமெரிகாவை எதிர்ப்போம்
ஷாலி
அன்று கிழக்கிந்திய கம்பெனி வெள்ளைக்காரன் இந்தியா வந்தது எதற்கு? நாடு பிடிக்கவா? நிச்சயம் இல்லை தன் வயிற்றை கழுவ வர்த்தகம்.வர்த்தக நோக்கம் வெற்றி பெற்றதும் பின்பு வளைத்துப் பிடித்தான் நாட்டை. இன்று கொள்கை ரீதியாக கடும் கருத்து வேறுபாடு இருந்தபோதிலும் சீனா விடம் விசுவாச நாயாக வாலை ஆட்டிக்கொண்டு பம்முகிறது வல்லரசு அமெரிக்கா.காரணம் அதே வர்த்தக நலன்தான்.உலகெங்கும் போரை துவக்கி வெற்றிகரமாக ஆயுத வியாபாரத்தில் கொள்ளை லாபம் அடிப்பது அமெரிக்கா பன்னாட்டு பகாசுர கார்பரேட் கம்பெனிகள்.வெள்ளை மாளிகை உள்ளே நுழைபவரை தேர்ந்தெடுப்பதே இக் கொலைகார கம்பெனிகள்தான்.இந்திய விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியது யார்? இதே வர்த்தக சூதாடி மான்சாண்டோ அமெரிக்காவே.அமெரிக்கர்கள் உண்டு கொழுக்க, எவரையும் வதைக்க புதைக்க தயங்க, மாட்டார்கள்.அமெரிக்காவின் வயிற்றில் அடிப்பதற்கு ஒரே வழி அமெரிக்க பொருட்களை தவிர்ப்பதே.பெப்சி குடிப்பதும் ஒன்றுதான் அமெரிக்கன் மூத்திரத்தை குடிப்பதும் ஒன்றுதான்.ஆனாலும் சிறுநீரும் உடலுக்கு நன்மையே என்று சொல்லக்கூடிய ஒரு கூட்டம் இங்கு இருப்பதுதான் இன்றைய பிரச்சினை.தன்மானமுள்ள தமிழ் மாணவர்கள் நிற்பது சரிவான பாதையல்ல.மிகச் சரியான பாதை.செல்லட்டும்! வெல்லட்டும்.!!
Thamilan
சரியான முடிவு, அனால் ஊணோ செசுரிட்ய் சொஉன்சில் மட்டும் இந்தபிரச்சசனை போய் திர்க்க சின, ருச்சிஅ அ யும் அடிபனிய அவர்கலுடைய பொருட்க்கலயும் புரக்கனிக்க வென்டும்.
ஆறுமுகம்
அடுத்த நல்வாய்ப்பு ஐ.பி.எல். என்னும் கிரிக்கெட் போட்டி வடியில் வருகிறது. போட்டியை முழுவதும் புறக்கணித்தோ அல்லது போட்டியில் இலங்கைக்கு இனப்படுகொலைக்கு எதிரான பதாகைகளை ஊடகங்கள் வழி காட்டியோ அல்லது இரண்டையுமோ பயன்படுத்தலாம். கிரிக்கெட் இளைஞர்களை மட்டுமல்ல பிற மாநிலம் மற்றும் நாடுகளையும் இன்படுகொலையை கொண்டு சென்று புரிய வைக்க முடியும். விரைந்து செயல்படுவோம்.
Pollachi Ma.Umapathy
+++///கின்லே, அக்குவாபினா, ஸ்ப்ரைட், பெப்சி, கோக்கோ-கோலா, லேஸ் சிப்ஸ், ஃபோர்ட், செவர்லே கார்கள், வால்மார்ட் போன்றவற்றைப் புறக்கணிப்போம்.////+++ இவற்றின் வரிசையில் கேஎஃப்சீ, மெக்டொனல்ட் ஆகியவற்றையும் சேர்க்கவேண்டும். அதே சமயம், எனக்கிருக்கும் அச்சமெல்லாம், பொதுவாக்கெடுப்பு என்று சொல்கிறோம். அதற்கெற்ற காலம் கனிந்தபின் கேட்பதுதான் சரி என்று கருதுகிறேன். " நிறைவாகும் வரை, மறைவாக இரு" என்பது உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்களின் வைர வரிகள். அரைகுறையாக பொதுவாக்கெடுப்பு நடத்தி அதில் தோற்றுவிட்டால் எல்லாமே குடிமுழுகிப் போய்விடும். பின் என்றைக்குமே ஈழம் கேட்கமுடியாத சூழல் வந்துவிடும் என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். நம்முடைய கோரிக்கைகள் ஒரு நாளில் ஒரு பொழுதில் முடிவதல்ல, விடிவதல்ல. எனவே எடுத்துவைக்கும் அடிகளை மிக நிதானமாக அழுத்தமாக, தெளிவாக எடுத்து வைப்போம். இன்னமும் பிரச்சாரம் செய்து இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள கட்சிகளின் ஆதரவைப் பெற்று இந்தியாவில் வெற்றி காண்போம். அவ்வாறே உலக நாடுகளின் ஆதரவையும் வென்றெடுப்போம். பெரும்படையையும், அற்புதமான தலைவனையும் இழந்து நிற்கும் நாம் ஒன்று சேர்ந்து போராடுவோம். புதிய புதிய ஆதரவுகளைத் திரட்டுவோம். தமிழ் ஈழம் என்னும் ஒற்றை தளத்தில் இணைந்து போராடுவோம். வெற்றி காண்போம்.
srikrishnan
அந்நியத் துணிகள் எரிப்பு இயக்கத்​தைப் ​போல அமெரிக்கப் ​பொருட்கள் எரிப்பு இயக்கத்​தை துவங்க​வேண்டும். தமிழ்நாடு முழுவதும், ​தெருத் ​தெருவாக ​மேலே ​சொன்ன அ​மெரிக்கப் ​பொருட்கள் அ​னைத்​தையும் எரிக்க ​வேண்டும். மக்க​ளை அவற்​றை புற்ககணிக்க ​வேண்டியதன் அவசியத்​தை வலியுறுத்தி ​தெருமு​னைப் பிரச்சாரங்களும், துண்டறிக்​கைகளும் விநி​யோகிக்க ​வேண்டும்.
netikkan
தமிழ் ஈழத்தை தனி அரசாக்கும் கோரிக்கையை இன்றோ, நாளையோ, 24 மணியில் வென்றெடுக்க முடியாது! அதனால், அதற்காக போராடாமல் இருந்து விடுவோமேயானால், தாயை பலர் சேர்ந்து கற்பழிக்கையில், " இத்தனை பேரை நான் என்ன செய்வது" என சாக்கு சொல்லி அதை வேடிக்கை பார்த்ததுக்கு சமம். அப்படி எனிலிந் நிலையில் போராட்டத்தை தீவிரமடையச்செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், போராட்டம் எப்படி அமைய வேண்டும்? எவ்வழியில்? எது வரையில்? யார் எல்லாம் இணைய வேண்டும்? தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் மட்டும் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தங்கள், பொருட்கள் ஆகியவற்றிற்கு பாடை கட்டினால் மட்டும் போதாது, இந்தியத் தமிழ் மாணவர்களைப் பின்பற்றி உலகத் தமிழ் மாணவர்கள் இந்தியத் தமிழ் மாணவர்களின் வழிகாட்டலில், உலகத் தமிழர்கள் எல்லோருடைய வாழ்விலிருந்து அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய நிறுவனங்களைத் துடைத்து எறிய வேண்டும். ஐக்கிய நாடுகள் இன் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஆல் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறை ஏற்றப் பட்டு உள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 26 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்துள்ளன, 8 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன. இது சுனாமியால் அடித்தளிச் செல்ப்படும் மக்கள் கூடத்திற்கு இப்படி ஒரு சில துரும்புகளை ஒரு சில முறை தூர இருந்து வீசி எறிந்து விட்டு தமிழீழத்தில் தமிழ் இன அழிப்பை நிறுத்தி விட்டது ஆகப் பல முறை பல நாடுகளும் ஏமாற்றியது வரலாறு. மேலும் இறுதி நேரத்தில் இந்தியா வேண்டும் என்றே இலக்கை விலத்தி அதாவது இந்தியத் தமிழ் மாணவர்களின் பாரிய நேரடியான ஆகப்பலத்தை வெளியே வீசி எறிந்து உடைத்து இருக்கிறார்கள். இந்தியத் தமிழ் மாணவர்களைப் பின்பற்றி உலகத் தமிழ் மாணவர்கள் இந்தியத் தமிழ் மாணவர்களின் வழிகாட்டலில் தமது அமைதிப் போராட்டத்தை உலகம் எங்கும் வியாபிக்கச் செய்தேயாக வேண்டிய வரலாற்றுக் கடமையில் உள்ளார்கள். மேலும் இந்தியமத்திய அரசு இந்தியத் தமிழ் மாணவர்களின் பாரிய நேரடியான ஆகப்பலத்தை வெளியே வீசி எறிந்து உடைத்திருப்பத்தை தமிழ்நாட்டு அரசு ஒரு மிகப்பலமான தன் தனியதிகாரமப் பயன்படுத்தித் தமிழீழத்தில்ப் பொதுமக்கள் நலன் கருதி நேரடித் தலையீடு செய்தேயாக வேண்டிய வரலாற்றுக் கடமையில் உள்ளது!!!--- வேறு நாடுகள் சில இந்தியாவெளியே வீசி எறிந்து உடைத்தவற்றை பொறுக்கிப் பயன்படுத்தக் கூடுமா?? இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை பாஜக ஆதரிக்காது என்று அக் கட்சியின் மூத்த தலைவரான முரளிமனோகர் ஜோஷி கூறுகையில், நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வெளியுறவுக் கொள்கை இருக்க முடியாது. வெளியுறவுக் கொள்கை என்பது ஒன்றே ஒன்று தான் இருக்க முடியும் என்றார்; அதே போல அக் கட்சியின் மூத்த எம்பியான ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில், இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு கொண்டு வருவது எங்கள் அரசு இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதைக் காட்டி ஆட்சியைக் காப்ப்றிக் கொள்வதற்காகவே அன்றி இலங்கைப் பிரச்சனைக்காக அல்ல என்றார். மேலும் இலங்கை விவகாரத்தில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அந் நாட்டுக்கு எந்த உதவிகளையும் செய்யவில்லை என்பதும், இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி தருவதையும், ஆயுதங்கள் தருவதையும் தடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலங்களிலேயே இலங்கைச் சிங்கள அரசுகளுக்கு அனைத்து விதத்தமிழ் இன அழிப்பு உதவிகளும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஆயின், இந் நிலையில் இப்போது வாஜ்பாய் கால கொள்கையை பாஜக குழி தோண்டிப் புதைத்து விட்டது என்பது திண்ணம்!!! அதாவது தற்போதைய நிலைமையில் மத்திய அரசின் ஒரே ஒரு வெளியுறவுக் கொள்கை இந்தியா முழுமைக்கும் இருக்க வேண்டும் என்பதும் அதேநேரத்தில் இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை பாஜக ஆதரிக்காதும் என்பதன் மூலமும் தெளிவாகிறது. இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை பாஜக ஆதரிக்காது என்று அக் கட்சியின் மூத்த தலைவரான முரளிமனோகர் ஜோஷி கூறுகையில், நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வெளியுறவுக் கொள்கை இருக்க முடியாது. வெளியுறவுக் கொள்கை என்பது ஒன்றே ஒன்று தான் இருக்க முடியும் என்றார்; அதே போல அக் கட்சியின் மூத்த எம்பியான ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில், இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு கொண்டு வருவது எங்கள் அரசு இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதைக் காட்டி ஆட்சியைக் காப்ப்றிக் கொள்வதற்காகவே அன்றி இலங்கைப் பிரச்சனைக்காகால்ல என்றார். மேலும் இலங்கை விவகாரத்தில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அந் நாட்டுக்கு எந்த உதவிகளையும் செய்யவில்லை என்பதும், இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி தருவதையும், ஆயுதங்கள் தருவதையும் தடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலங்களிலேயே இலங்கைச் சிங்கள அரசுகளுக்கு அனைத்து விதத் தமிழ் இன அழிப்பு உதவிகளும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஆயின், இந் நிலையில் இப்போது வாஜ்பாய் கால கொள்கையை பாஜக குழி தோண்டிப் புதைத்து விட்டது என்பது திண்ணம்!!! அதாவது தற்போதைய நிலைமையில் மத்திய அரசின் ஒரே ஒரு வெளியுறவுக் கொள்கை இந்தியா முழுமைக்கும் இருக்க வேண்டும் என்பதும் அதேநேரத்தில் இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை பாஜக ஆதரிக்காதும் என்பதன் மூலமும் தெளிவாகிறது. உலக வரலாற்றில் சர்வதேச சமூகம் இதுவரை கண்டிராத நீண்டகால இனப் படுகொலை என்னும் பெரும் வரலாற்று கபளிகரத்தைச் தக்க தக்க அளவுப் பரிமானங்களுடன் அதாவது தன்னிடம் அவ்வப்போது கேள்வி கேட்கும் இந்தியா உட்ப்பட பிற நாடுகளை அடக்கும் தந்திரமாக சிறிது சிறிதாக அல்லதுவெவ்வேறு திட்டப் பெயர்களைப் பயன்படுத்தி அதாவது உதரணத்துக்கு இப்பொழுது எஞ்சியிருக்கும் தமிழீழத்தின் வடபகுதில் மீள் குடியேற்றம் என்னும் பெயரில் சிங்களக் குடியேற்றம், என்று கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தவறாமல் ஒவ்வொரு சிங்களப் பேரினவாத அரசுகளும் திட்டமிட்டு எம் தாய் நிலமான தமிழீழ மண்ணில் திட்டமிட்ட தமிழ் இனவழிப்பு தொடர்ந்து நடத்துகிறன; எல்லாப் புளி விபரங்களையும் எடுத்து சிறிலங்கா, இந்தியச் சனத்தொகையுடன் ஒப்பிட்டால் இன்று தமிழ்ழீ சனத்தொகை ஏறத்தாள 90 லட்சம் (0.9 மில்லியன்) ஆக இருக்க வேண்டும் அனால் இன்று வெறும் 15 லட்சம் (0.15 மில்லியன்), எனவே இவ்வினவழிப்பு இன்னும் சில ஆண்டுகளில் முற்றுபெற்று இலங்கைத் தீவில் அமிழ்தமான தமிழ்மொழியும், தமிழ் இனமும், எம் தாய் நிலமான தமிழீழமும் இல்லாமல்ப் பறிபோகும் அறிகுறி தெழிவாகத் தெரிகிறது; எல்லாப் புளிவிபரங்களையும் எடுத்து சிறிலங்கா, இந்தியச் சனத்தொகையுடன் ஒப்பிட்டால் இன்று தமிழ்ழீ சனத்தொகை ஏறத்தாள 90 லட்சம் 0.9 மில்லியன் ஆக இருக்க வேண்டும் அனால் இன்று வெறும் 15 லட்சம், இதனால் தமிழ் நாட்டில் தம் தொப்பிழ்க்கொடி உறவுகளாகிய தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி சத்தியத் தீயிலும் சங்கமம்மாகி எங்கும் எல்லோர் மனங்களிலும் வியாபித்தனர்!!!— ஆனால் தூர்ரதிட்டவசமாக, உலகப்பெரும் இனம்களில் ஒன்றாகிய தமிழ்நாடினர்க்கு கடிவாளம் பூட்டிப் பிடிப்பவனாக இருக்கும் இந்திய மத்திய அரசுகள் எதுவும் கிஞ்சிட்டும் அஞ்சவில்லை. மேலும், தெட்டத்தெளிவாகத் தெரிவது என்னவெனில் இத்திட்டமிட்ட தமிழினப் படுகொலையை அண்மைக்காலமாக இந்திய மத்திய அரசில் அதிகாரத்தில் இருக்கும் காங்கிரசுத் தலைமையே முன்னின்று செயல்ப்படுதுகிறது என்பது!!! இது நம்பிகைத் துரோமாக வெந்த புண்ணில் வேல் பாச்சுவது!!!!! இப்பெரும்கொடுமை கண்ணுற்று மாணவர்கள் கொதித்து எழுந்து கிளர்ச்சியை மீண்டும் தம் கைகளில் எடுத்துக்கொண்டு முன்னணியில் நின்றேயாக வேண்டிய வரலாற்றுக் கடமையில் உள்ளார்கள். உண்ணாவிரதமிருக்கும் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகள் : 1. இலங்கையில் நடைபெற்றது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என்னும் தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து, அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும். (கண்டிப்பாக அது வெறும்போர்குற்றம், மனித உரிமைமீறல் மட்டுமல்ல). தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 2. ஈழத் தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு தனிநாட்டுத் தமிழீழமும், சர்வதேச இனப்படுகொலை விசாரணையுமே, (தேவையானால் மட்டும் பொதுவாக்கெடுப்புமே), என்னும் தீர்மானத்தை இந்திய அரசு முன்மொழிந்து கொண்டுவரவேண்டும். 3. அமெரிக்கா கொண்டுவரும் வெற்றுத்தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க வெற்றுத்தீர்மானத்தை மட்டும் கண்டிப்பாக நிறைவேற்றாதே. 4. தனிநாட்டுத் தமிழீழத்துடன் அனைத்து அரசாங்க உறவுகளையும் உருவாக்க வேண்டும். சிங்களைனவெறிஅரசிந்துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும். 5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். 6. உலகத்தமிழா்களின்பாதுகாப்பைஉறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும். 7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது. 8. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம். இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை. 12 வயது சிறுவனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது போர்க்குற்றம் எனக் கண்டித்திருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு தனிநாட்டுத் தமிழீழம் என்பதிலும் உறுதியாகவே இருக்கிறார். நம்புங்கள் நடத்துவார். நம் நரம்பு நாளம் எல்லாம் மானத்தமிழனின் வீரக்குருதி செலுத்துவார். வெல்க தமிழ்!!! மனிதநேயமும் உயர் விழுமியங்களும் நிறைந்த தமிழ் வாழும்வரை, வாழ்க புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மையார், வாழ்க உயர்திரு பழ நெடுமாறன், வாழ்க உயர்திரு வை கோபாலசாமி வாழ்க, வாழ்க, வாழ்க!!!--- சிங்களப் பேரினவாத அரசுகளுடன் சேர்ந்து கூட்டுக்குற்றம் புரிந்திருக்கும் மத்திய காங்கிரஸ் அரசுகள் ஒருபோதும் தம் எக்குற்றத்தையும் ஏற்று மனிதகுலத்திடம் மண்றாடி மன்னிப்புக் கேட்கா!!! இது வரலாறு!!! எனவே கூட்டணியில் இருக்கும் திமுக கூட்டணியில் இருந்து வெளி ஏறி காங்கிரஸ் அரசின் கோரமுகத்தை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். திமுகவை காங்கிரஸ் ஆசை காட்டிக் கழுத்தறுத்து மோசம் செய்ததை ஆதாரத்துடன் திமுக நிரூபித்து, மனிதகுலத்திடம் மண்றாடி மன்னிப்புக் கேட்கவேண்டும். தமிழீழ இனவழிப்புப் போரின் பெரும் பகுதியும், பெரும் முக்கியமும் ஆன காலப்பகுதிகளின் போது தமிழ் நாட்டில் ஆட்சியிலிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி என்ன செய்தார்??? சிதம்பரம், சோனியா காந்தி, முக்கியமாக கேள்விகேட்கும் சில செய்தியாளர்கள் கூட தமிழ் இனவழிப்பு என்றோ, தமிழினைனபடுகொலை என்றோ, தமிழீழம் என்றோ, ஈழத்தமிழர் என்றோ--- ஒரு வார்த்தையேனும் தவறியேனும் கூறவே மாட்டார்கள்!!! சற்று முன், சோனியா காந்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசுகையில், இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடந்த "கொடூரங்கள்" ("ஐயயகோ சோனியா கொலை அதுவும் நீண்ட சித்திரவதைக்கொலை, வார்த்தையில் வராது!!!!!!----" ) பற்றி பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். ("யாரால் சோனியா? எப்பொழுது சோனியா?") இலங்கை மக்களின்" மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இலங்கையில் தமிழர்களுக்கு எந்த உரிமையும் அளிக்கப்படாமல் "கொடுமை" ("ஐயயகோ சோனியா கொலை அதுவும் நீண்ட சித்திரவதைக்கொலை, வார்த்தையில் வராது!!!!!!----" ) அனுபவித்து வருகிறார்கள் என்று தகவல்கள் தொடர்ந்து வருவது வேதனை அளிக்கிறது என்றார். மேலும், இந்திய மீனவர்கள் ("அப்ப சோனியா தமிழகத்தமிழ்மீனவர்கள் மட்டும் விசர்நாய்களா?") சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், இத்தாலி வீரர்களை திருப்பி அனுப்ப முடியாது என்று இத்தாலி அரசு கூறிவிட்டது. இதனால் இரு நாட்டு உறவில் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து எம்.பி.க்கள் கூட்டத்தில் சோனியா காந்தி கூறியதாவது: இந்தியாவை எந்த நாடும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள விட மாட்டோம் என்றார்??
குமரன்
அமெரிக்க முதலாளிய நிறுவனங்களின் பொருள்களைப் புறக்கணிப்போம் என்பது சரியான முடிவே. அதே சமயத்தில் நமது நாட்டில் உள்ள முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அமெரிக்க முதலாளிகளின் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டாமா?
deva dhurai
மாணவர்களே! எச்சரிக்கையாக இருங்கள். இந்தியாவை எதிர்க்காத எந்த போராட்டமும் துரோகத்தனமானது. தெற்கு ஆசியா மண்டலத்தில் இந்தியாவை யாரும் இன்றளவில் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் கூறுவது படுகுழந்தைதனமானது.அமெரிக்காவை மட்டும் எதிப்பது என்பது[முதன்மையாக இந்தியாவை எதிர்க்காமல்] இந்தியாவை எதிர்க்க திராணி இல்லாமல் [அ]மறைமுகமாக ஆதரிக்கும் 'குட்டிமாமா'க்களின்[சிறிய கட்சிக்கள் [அ]குழுக்களின்] வேலையே இது. நமது வேலை நீங்கள் முன் வைத்த இரண்டு கோரிக்கைகளை வரும் செப்டம்பரில் கூடும் அய். நா.கூட்டத்தில் இந்தியாவை முன் வைக்க செய்வதற்கான திசையில் போராட்டங்களை ஒழுங்கமைப்பதுதான் ஆகும். கோவை மாணவர்களே 'குட்டி மாமா'க்களிடம் இருந்து தப்பியுங்கள். உங்கள் போராட்டங்களை திசைவிலகாமல் தீரமுடன் எடுத்து செல்ல வாழ்த்துக்கள்.
Salanan
தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள், பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். நான் உரையாடியவர்களில் மிகப்பெரும்பாலானோர் இம்மாதிரியான அறியாமையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ரொம்பவும் சலிப்பாக இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களும் (அனைவரும் அல்ல) இந்த விடயத்தில் இதே மாதிரியான தற்குறிகள் தான். எப்படிப்பட்ட வஞ்சகமும் அநியாயமும் ஈழ மக்களுக்கு நடந்திருக்கிறது என்பதை அறியாத மாணவர்கள் பல இடங்களில் சிரித்துக்கொண்டே குரல் எழுப்புவதையும் மறியல் செய்வதையும் புகைப்படங்களில் காண முடிந்தது. இத்தகைய அலட்சியமான செயல்பாடுகளுக்கு காரணம் அறியாமையே. இந்த அறியாமையை போக்கினால் ஒழிய ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடத்தில் குறிப்பாக மாணவர்களிடத்தில் மிகப்பெரிய மாற்றமும் விழிப்புணர்வும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இன்றைய மாணவர்கள் தான் எதிர்காலத்தில் பல்வேறு அதிகார அமைப்புக்களிலும் தொழில்களிலும் (உள்ளூரில் இருந்து உலகளவில்) பொறுப்பு வகிக்கப்போகிறவர்கள். அடுத்த தலைமுறைக்கு இந்த விடயங்களை கொண்டு போகிறவர்களும் இவர்கள் தான். ஆகவே தமிழகத்து மாணவர்கள் ஈழ விவகாரத்தில் அனைத்து விடயங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். புரட்சிகர அமைப்புக்கள், விவரம் தெரிந்த மாணவர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் ஈழத்தமிழர் வரலாறு, அவர்களின் யாழ்ப்பாண ராச்சியம் குறித்த வரலாறு, ஈழத்தமிழருக்கும் இந்திய வம்சாவழி தமிழருக்கும் உள்ள வேறுபாடு, பிரச்சினைக்கான காரணங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கு விளக்கி அறிவூட்ட வேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேசுவது பொது மக்களிடம் நன்றாக எடுபடுவதை கண்டிருக்கிறேன். தமிழ் அமைப்பினர் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் சாதனங்களை பயன்படுத்தி கருத்தரங்கம், கலந்துரையாடல், பிரச்சாரம் ஆகியவற்றை செய்யலாம். இப்போது போராடிய மாணவர்கள் பெரும்பாலும் சட்ட மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் புலங்களையும் சேர்ந்தவர்களே. இது போதாது. சட்டக்கல்லூரி மாணவர்களை பற்றி பொது மக்களுக்கு நல்ல எண்ணம் இல்லை. எப்போதும் கல்லூரிக்குள் ரகளை செய்பவர்கள், சாதி மோதலில் ஈடுபடுபவர்கள் என்னும் எண்ணம் உள்ளது. இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் அதிகம் பங்கெடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களுக்கு மனிதாபிமான உணர்வு இல்லையா? கடின உழைப்புக்கும் நுண்ணறிவுக்கும் சொந்தக்காரர்களான அவர்களையும் இழுத்து வரவேண்டும். தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) பிரச்சாரம் செய்து ஆதரவை அணுகி பெறுவதும் இன்றிமையாதது. இன்றைக்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் பத்து லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்களாகவும் மிகப்பெரிய பதவிகளிலும் இருக்கிறார்கள். பலர் பெரும் பணக்காரர்களாக உள்ளார்கள். ஆகையால் தான் இந்தியா போன்ற பெரிய நாடுகளின் தடைகளையும் மீறி சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக இவர்களால் உலகளவில் லாபி செய்யவாவது முடிகிறது. இன்றைய உலகில் சாதாரண மக்கள் எத்தனை கோடி பேர் ஒன்றாக சேர்ந்து கொண்டு போராடினாலும் அதற்கு பலன் அவ்வளவாக இருக்காது. ஆனால் அறிவுஜீவிகளை அதிகம் கொண்ட ஒரு சிறிய இனம் உலகத்தையே கட்டுப்படுத்த முடியும். வெறும் ஒன்றரை கோடி பேர்களை கொண்ட யூத இனம் இதற்கு ஒரு உதாரணம். இந்திய மக்கள் தொகையில் வெறும் இரண்டு சதம் கூட இல்லாத பார்ப்பனர்கள் மொத்த இந்தியாவையே கட்டுப்படுத்துவதற்கு காரணம் அவர்களின் சாதி அறிவுஜீவிகளை அதிகம் கொண்டிருப்பதால் தான். ஆகவே தமிழகத்தில் மிகுந்த ஆங்கில புலமையும் தமிழ் இன உணர்வும் கொண்ட திறமையான மாணவர்களை உருவாக்கவேண்டும். உலகெங்கிலும் நம் மக்கள் உயர் அதிகார பீடங்களை அலங்கரிக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நம் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். இலங்கை தமிழ்நாட்டை விட சிறிய நிலப்பரப்பு. சிங்களர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றரை கோடி தான். ஆனால் தனி நாடும் இறையாண்மையும் இருப்பதால் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. இந்திய அரசும் தமிழ் நாட்டையும் தமிழர்களையும் உதாசீனப்படுத்தி விட்டு சிங்கள அரசை தாஜா செய்கிறது. தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே உலகத்தின் கவனத்தை ஈர்க்க முடியும். தமிழகத்தில் இருக்கும் கட்சிகளிடையே இவ்விடயத்தில் புரிந்துணர்வும் கருத்தொற்றுமையும் தேவை. ஆனால் தி.மு.க என்னும் காட்டிக்கொடுக்கும் கூட்டிக்கொடுக்கும் நயவஞ்சக கட்சி இருக்கும் வரை தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை வருவது கடினம் என்றே தோன்றுகிறது. இவர்களின் ‘டெசோ’ சார்பில் நடந்த முழு அடைப்பே இதற்கு ஒரு உதாரணம். ஆளும் கட்சியின் ஆதரவு மறைமுகமாகவாவது இருந்தால் தான் இம்மாதிரியான போராட்டங்கள் முழு வெற்றியடைய முடியும். ஆனால் ஆளும் அ.தி.மு.க-வின் ஒப்புதல் இல்லாமல் கருநாநிதியாலும் அவரின் எடுபிடிகளாலும் அரசியல் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்டது தான் இந்த டெசோ பந்த். இப்போது தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த ஈழப்பேரழிவை முன்னிறுத்தி சுய ஆதாயம் தேட கருநாநிதி முயன்று வருகிறார். வரும் நாட்களில் இவரும் இவர் கட்சியும் எடுபிடிகளும் பல்வேறு போராட்டங்களையும் பித்தலாட்டங்களையும் முன்னெடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயல்வார்கள். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வருகிறதல்லவா? ஆகவே கொலைகாரனின் கூட்டாளியாக இருந்து ஆதாயம் தேடியது போதாதென்று பிண வீட்டிலும் ஆதாயம் தேடும் இந்த மாதிரியான திராவிட கழிசடைகளிடம் தமிழகத்து மக்கள் வரும் நாட்களில் உஷாராக இருக்க வேண்டும். அது தான் இப்போதைய தேவை. (தயவு செய்து எனது இந்த பதிவை ஈழம் சார்ந்த ஒவ்வொரு கட்டுரையின் கீழும் வெளியிடும் படி கேட்டுக்கொள்கிறேன். நான் பார்த்த பல கல்லூரி மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினை குறித்து ஒன்றுமே தெரியவில்லை. விடுமுறை கிடைத்துவிட்டது என்று குஷியாக இருக்கிறார்கள். மிகவும் வேதனையாக இருக்கிறது. ஈழத்தமிழர் பேரழிவு குறித்த விடயங்கள் இன்னும் முழு பரிமாணத்துடன் தமிழகத்தின் அனைத்து மக்களையும் சென்று சேரவில்லை. பெருவாரியான கல்லூரி மாணவர்களுக்கே ஒன்றும் தெரியவில்லை. போராட்டத்தின் போது கூட அலட்சியமாகவே சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள். மாணவர் அமைப்புக்கள் என்ன செய்கின்றன என்று தெரியவில்லை. அவர்கள் முதலில் இந்த பேரழிவை அதன் அனைத்து பரிமாணங்களுடன் எல்லா கல்லூரி மாணவர்களுக்கும் கொண்டு போய்ச்சேர்க்க வேண்டும். பிற்பாடு தான் போராட்டத்தை பற்றி சிந்திக்க வேண்டும்.).
Salanan
ஈழத்தமிழர் பிரச்சினைக்கு கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வெற்றி என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மை நிலவரம் வேறு. தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கும் கல்லூரிகளில் ஒரு சிலவற்றில் மட்டும் மாணவர் போராட்டம் தலையெடுத்தது. அந்த கல்லூரிகளிலும் அனைத்து மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. (சென்னையில் மட்டும் 500 கல்லூரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தனை கல்லூரிகளில் இருந்து எத்தனை மாணவர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர்? வெகு சொற்பமே!). கலந்து கொண்ட மாணவர்களிலும் பெருவாரியானவர்கள் peer pressure காரணமாகத்தான் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி எதுவும் தெரியாது. மேலும் கடனை உடனை வாங்கி மிகுந்த கஷ்டத்தோடு பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். ஆனால் அவர்கள் போராட்டம் கீராட்டம் என்று அலைந்து தங்கள் வாழ்க்கையில் மண்ணைப்போட்டுக்கொள்கிறார்கள் என்று பல பெற்றோர்கள் அங்கலாய்த்துகொண்டதையும் காணமுடிந்தது. பல பெற்றோர்களுக்கு இந்த போராட்டம் வெறுப்பை தான் ஏற்படுத்தியது. நிறைய மாணவர்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை கேட்டு கை கொட்டி மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தார்கள். இதை நானே வேதனையோடு கண்டேன். இங்கே எங்கே இருக்கிறது ஈழ மக்களின் மீதான கரிசனையும் மனிதாபிமானமும்? கோவையை சேர்ந்த ஒரு பேராசிரியை, இந்த போராட்டம் பிரபாகரன் மகன் கொல்லப்பட்டதை கண்டித்து நடக்கிறது என்று தொலைப்பேசியில் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தமிழகத்தில் இருக்கும் படித்தவர்களே ஈழ மக்களின் பேரழிவை இந்த லட்சணத்தில் புரிந்து வைத்துள்ளார்கள். சாதாரண மக்களை பற்றி என்ன சொல்ல?. இந்த போராட்டத்தை கம்யூனிச அமைப்புக்கள் தங்கள் கொள்கை வக்கிரத்துக்கு ஏற்ப வளைக்க முயற்சித்தன. கிறித்துவ அமைப்புக்கள் தங்கள் கொள்கை வக்கிரத்துக்கு ஏற்ப வளைத்தார்கள். திராவிட கட்சிகளோ இந்த போராட்டத்திற்குள் நுழைந்து ஆதாயம் அடைய முயற்சித்தன. ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம். எதிர்காலத்தில் என்ன ஆகுமோ தெரியவில்லை. ஆனால் இவற்றுக்கிடையில் சில விஷயங்களும் நடந்தன. அக்கிரகாரப்பண்ணை என்று அழைக்கப்படும் ஐ.ஐ.டி-க்குள் மாணவர்கள் ஈழ மக்களுக்காக பேரணியும் உண்ணாவிரதமும் நடத்தியது ஒரு பெரிய ஆச்சரியம். அந்த மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினை பற்றி அனைத்தும் தெரிந்திருந்தது. விஷயம் தெரிந்தவர்களை கூட்டி வந்து கருத்தரங்கமும் நடத்தினார்கள். மற்ற மாநில மாணவர்களின் ஆதரவையும் திரட்டினார்கள். ஒரிரண்டு நாட்கள் மட்டுமே நடந்தாலும் இது மிகப்பெரிய விஷயம். அவர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்த போராட்டத்தின் போது இலக்கில்லாத பல விஷயங்கள் இடம் பெற்றன. தமிழீழம் தான் வேண்டும் என்று பதாகை வைத்திருந்தது. பிரபாகரனின் படத்தை தூக்கிக்கொண்டு திரிந்தது. இதெல்லாம் இந்த போராட்டத்துக்கான ஆதரவு தளத்தை மிகவும் குறுகியதாக்கிவிடும். அனைத்திந்திய அளவிலும் உலகளவிலும் ஈழ மக்களுக்கு ஆதரவு கிடைக்கவேண்டும் என்றால் மேற்கண்டவற்றை தவிர்க்க வேண்டும். கீழ் கண்ட இரண்டு விஷயங்களை மட்டும் பிரதானப்படுத்தவேண்டும். 1. போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலையும் வக்கிரமாக நடைபெற்றன. சாதாரண பொது மக்கள் ஒரு லட்சத்தக்கும் மேல் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். இதற்கு சிங்கள படையினரும் அவர்களின் மிகுந்த உயர் மட்டத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களுமே பொறுப்பு. விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் இன்று இல்லை. கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனில் சர்வதேச அளவில் சுதந்திரமான போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இப்போது சுதந்திரமாக அதிகாரத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். 2. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் எஞ்சி இருக்கும் தமிழர்களுக்கு பிரச்சினை தீரவில்லை. அவர்களின் நிலமும் வீடுகளும் ஆக்கிரமிக்கப்டுகின்றன. வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்படுகின்றன. அவர்களின் அடையாளம் துடைக்கப்படுகிறது. வாழ வழியில்லாத இம்மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். ஒரு காத்திரமான சுயாட்சிக்கு பண்ணாட்டு சமூகம் வழி வகை செய்ய வேண்டும். தமிழர் பகுதியில் ராணுவ மயமும் சிங்கள மயமும் அகற்றப்பட வேண்டும். இதற்கு பண்ணாட்டு சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட இரண்டு விஷயங்கள் மட்டும் எப்போதும் முன்வைக்கப்பட வேண்டும். பிரபாகரனின் படம் அல்ல. தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள், பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். நான் உரையாடியவர்களில் மிகப்பெரும்பாலானோர் இம்மாதிரியான அறியாமையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ரொம்பவும் சலிப்பாக இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களும் (அனைவரும் அல்ல) இந்த விடயத்தில் இதே மாதிரியான தற்குறிகள் தான். எப்படிப்பட்ட வஞ்சகமும் அநியாயமும் ஈழ மக்களுக்கு நடந்திருக்கிறது என்பதை அறியாத மாணவர்கள் பல இடங்களில் சிரித்துக்கொண்டே குரல் எழுப்புவதையும் மறியல் செய்வதையும் புகைப்படங்களில் காண முடிந்தது. இத்தகைய அலட்சியமான செயல்பாடுகளுக்கு காரணம் அறியாமையே. இந்த அறியாமையை போக்கினால் ஒழிய ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடத்தில் குறிப்பாக மாணவர்களிடத்தில் மிகப்பெரிய மாற்றமும் விழிப்புணர்வும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இன்றைய மாணவர்கள் தான் எதிர்காலத்தில் பல்வேறு அதிகார அமைப்புக்களிலும் தொழில்களிலும் (உள்ளூரில் இருந்து உலகளவில்) பொறுப்பு வகிக்கப்போகிறவர்கள். அடுத்த தலைமுறைக்கு இந்த விடயங்களை கொண்டு போகிறவர்களும் இவர்கள் தான். ஆகவே தமிழகத்து மாணவர்கள் ஈழ விவகாரத்தில் அனைத்து விடயங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். புரட்சிகர அமைப்புக்கள், விவரம் தெரிந்த மாணவர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் ஈழத்தமிழர் வரலாறு, அவர்களின் யாழ்ப்பாண ராச்சியம் குறித்த வரலாறு, ஈழத்தமிழருக்கும் இந்திய வம்சாவழி தமிழருக்கும் உள்ள வேறுபாடு, பிரச்சினைக்கான காரணங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கு விளக்கி அறிவூட்ட வேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேசுவது பொது மக்களிடம் நன்றாக எடுபடுவதை கண்டிருக்கிறேன். தமிழ் அமைப்பினர் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் சாதனங்களை பயன்படுத்தி கருத்தரங்கம், கலந்துரையாடல், பிரச்சாரம் ஆகியவற்றை செய்யலாம். இப்போது போராடிய மாணவர்கள் பெரும்பாலும் சட்ட மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் புலங்களையும் சேர்ந்தவர்களே. இது போதாது. இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் அதிகம் பங்கெடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களுக்கு மனிதாபிமான உணர்வு இல்லையா? கடின உழைப்புக்கும் நுண்ணறிவுக்கும் சொந்தக்காரர்களான அவர்களையும் இழுத்து வரவேண்டும். தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) பிரச்சாரம் செய்து ஆதரவை அணுகி பெறுவதும் இன்றிமையாதது. இன்றைக்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் பத்து லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்களாகவும் மிகப்பெரிய பதவிகளிலும் இருக்கிறார்கள். பலர் பெரும் பணக்காரர்களாக உள்ளார்கள். ஆகையால் தான் இந்தியா போன்ற பெரிய நாடுகளின் தடைகளையும் மீறி சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக இவர்களால் உலகளவில் லாபி செய்யவாவது முடிகிறது. இன்றைய உலகில் சாதாரண மக்கள் எத்தனை கோடி பேர் ஒன்றாக சேர்ந்து கொண்டு போராடினாலும் அதற்கு பலன் அவ்வளவாக இருக்காது. ஆனால் அறிவுஜீவிகளை அதிகம் கொண்ட ஒரு சிறிய இனம் உலகத்தையே கட்டுப்படுத்த முடியும். வெறும் ஒன்றரை கோடி பேர்களை கொண்ட யூத இனம் இதற்கு ஒரு உதாரணம். ஆகவே தமிழகத்தில் மிகுந்த ஆங்கில புலமையும் தமிழ் இன உணர்வும் கொண்ட திறமையான மாணவர்களை உருவாக்கவேண்டும். உலகெங்கிலும் தமிழர்கள் உயர் அதிகார பீடங்களை அலங்கரிக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நம் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். (ஐ.நா மனித உரிமை குழுவின் தலைவராக இருக்கும் நவநீதம் பிள்ளை அம்மையார் எனும் ஒரே ஒரு நபர் சிங்கள அரசுக்கு எத்தகைய நெருக்கடியாக மாறினார் என்பதை சொல்ல தேவையில்லை) இலங்கை தமிழ்நாட்டை விட சிறிய நிலப்பரப்பு. சிங்களர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றரை கோடி தான். ஆனால் தனி நாடும் இறையாண்மையும் இருப்பதால் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. இந்திய அரசும் தமிழ் நாட்டையும் தமிழர்களையும் உதாசீனப்படுத்தி விட்டு சிங்கள அரசை தாஜா செய்கிறது. தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே உலகத்தின் கவனத்தை ஈர்க்க முடியும். தமிழகத்தில் இருக்கும் கட்சிகளிடையே இவ்விடயத்தில் புரிந்துணர்வும் கருத்தொற்றுமையும் தேவை. ஆனால் தி.மு.க என்னும் கட்சி இருக்கும் வரை தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை வருவது கடினம் என்றே தோன்றுகிறது. இவர்களின் ‘டெசோ’ சார்பில் நடந்த முழு அடைப்பே இதற்கு ஒரு உதாரணம். ஆளும் கட்சியின் ஆதரவு மறைமுகமாகவாவது இருந்தால் தான் இம்மாதிரியான போராட்டங்கள் முழு வெற்றியடைய முடியும். ஆனால் ஆளும் அ.தி.மு.க-வின் ஒப்புதல் இல்லாமல் கருநாநிதியாலும் அவரின் எடுபிடிகளாலும் அரசியல் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்டது தான் இந்த டெசோ பந்த். இப்போது தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த ஈழப்பேரழிவை முன்னிறுத்தி சுய ஆதாயம் தேட கருநாநிதி முயன்று வருகிறார். வரும் நாட்களில் இவரும் இவர் கட்சியும் எடுபிடிகளும் பல்வேறு போராட்டங்களையும் பித்தலாட்டங்களையும் முன்னெடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயல்வார்கள். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வருகிறதல்லவா? ஆகவே கொலைகாரனின் கூட்டாளியாக இருந்து ஆதாயம் தேடியது போதாதென்று பிண வீட்டிலும் ஆதாயம் தேடும் இந்த மாதிரியான திராவிட கட்சிகளிடம் தமிழகத்து மக்கள் வரும் நாட்களில் உஷாராக இருக்க வேண்டும். அது தான் இப்போதைய தேவை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.