நீண்ட நாட்களுக்கு முன்னர் இணையத்தில் உலாவிக் கொண்டு இருந்த பொழுது ஒரு குறிப்பிட்ட செய்தியினைத் தாங்கிக் கொண்டு இருந்த ஒரு படத்தினைக் காண நேர்ந்தது. அந்தச் செய்தியின் அடிப்படைக் கரு இது தான்

"அனைத்து அரசுத் துறைகளிலும் திறமைகள் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்து எடுக்காது சாதியின் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்து எடுத்து அவர்களுக்கு சலுகைகளும் வழங்குகின்றனர். பிற்படுத்தப்பட்டோருக்கு இத்தனை சதவீத இடங்கள், தாழ்த்தப்பட்டோருக்கு இத்தனை சதவீத இடங்கள் என்று வேலைகளை சாதிகளின் அடிப்படையில் வழங்குகின்றனர். இத்தகைய நடைமுறையை கிரிக்கெட் விளையாட்டிலும் அரசு நடைமுறைப்படுத்தலாமே...இந்திய அணியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இத்தனை இடங்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு இத்தனை இடங்கள் என்று இடங்களை வழங்கி அவர்களுக்கு ஏற்ப கிரிக்கெட் ஆட்டத்தின் விதிமுறைகளையும் மாற்றலாமே. தாழ்த்தப்பட்டவர் ஒரு ஓட்டம் எடுத்தால் அதற்கு நான்கு ஓட்டங்கள் வழங்கலாம்...பிற்படுத்தப்பட்டோர் ஒரு ஓட்டம் எடுத்தால்  இரு ஓட்டங்கள் வழங்கலாம்...இவ்வாறு இந்திய கிரிக்கெட் அணியின் சட்டங்களையும் மாற்றலாமே...திறமைக்குத் தான் இந்நாட்டிலே மதிப்பு கிடையாதே" என்பதே அக்கருத்தின் சாரம்.http://www.hoaxorfact.com/Politics/wipro-chairman-mr-azim-prem-jis-comment-on-reservation.html

இட ஒதுக்கீட்டை தாக்குவதாக அமைந்து இருக்கும் இக்கருத்தினை விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி கூறியதாகவே இணையத்தில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அது மெய்யா என்பது எனக்குத் தெரியவில்லை...மெய்யாக இருப்பீனும் அக்கருத்தினை கூறியவரைப் பற்றி காணவோ அல்லது விமர்சனம் செய்யவோ நமக்கு எந்த ஒரு தேவையும் இல்லை. நமது இலக்கு அவர்கள் கூறியதாக கூறப்படும் கருத்தே ஆகும். இட ஒதுக்கீட்டை கிரிக்கெட் விளையாட்டிலும் கொண்டு வர வேண்டியது தானே என்று நக்கலாக கூறப்பட்டு இருக்கும் கருத்தினைப் பற்றியே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது... கூடவே கிரிக்கெட் விளையாட்டினைப் பற்றியும் தான்.

இன்றைய தேதியில் இந்தியாவில் உள்ள மக்கள் பலருக்கு விளையாட்டு என்றாலே அது கிரிக்கெட் மட்டுமே. கிரிக்கெட் விளையாட்டுக்கு அத்தகைய வரவேற்பு...விளம்பரம்...மோகம் மக்களின் மத்தியில் இருக்கின்றது. இத்தகைய சூழலில் கிரிக்கெட் விளையாட்டினைப் பற்றியோ அல்லது அந்த விளையாட்டு வீரர்களை பற்றியோ நாம் மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் கூற ஆரம்பித்தால் இந்திய மக்களால் 'தேச விரோதி..தேச பக்தி இல்லாத அற்பப் பதர்..' என்றும் இன்னபிற வாழ்த்துரைகளிளாலும் சிறப்பிக்கப்படுவது நிச்சயம். ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாது நாம் சில விடயங்களைக் கூறியாக வேண்டிய நிலை நமக்கு இருக்கத் தான் செய்கின்றது. சரி இப்பொழுது நம்முடைய கருத்துக்களைக் காணலாம்...

இந்திய கிரிக்கெட் அணியில் நிச்சயமாக இட ஒதுக்கீட்டினை அரசு கொண்டு வந்தாக வேண்டும் என்பதே நமது முதன்மையான கருத்து. வில்லங்கமான கருத்தாகப் படுகின்றது தானே. ஆனால் இந்தக் கருத்தினை இப்போதைக்கு நடைமுறைப்படுத்த முடியாது. ஏனென்றால் எனது இந்தக் கருத்தில் சில பிரச்சனைகள் இருக்கின்றன.

முதல் பிரச்சனை,

இந்திய கிரிக்கெட் அணி என்ற ஒரு அணி உண்மையிலேயே நம் நாட்டில் கிடையாது. பிசிசிஐ (BCCI) என்ற தனியார் நிறுவனத்தின் அணி தான் இன்று இந்திய அணி என்ற பெயரில் விளையாடிக் கொண்டு இருக்கின்றது. மற்றபடி இந்திய அரசுக்கும் அந்த அணிக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.

இரண்டாவது பிரச்சனை,

அரசு நிறுவனங்களில் மட்டுமே இட ஒதுக்கீட்டினை அரசு அமல்படுத்த முடியும். தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டினை கொண்டு வரும் சட்டத்தினை அரசாங்கம் இன்னும் இயற்றவில்லை. ஆகையினால் பிசிசிஐ தேர்ந்து எடுக்கும் கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீட்டினை இந்திய அரசால் கொண்டு வர முடியாது. நிற்க.

இப்பொழுது சில... இல்லை இல்லை பல கேள்விகளும் மாற்றுக் கருத்துக்களும் உங்களின் மனதில் நிச்சயம் தோன்றி இருக்கும். அவற்றிக்கு நான் விடையினைக் கூற வேண்டும் என்றால் நாம் சில விடயங்களைத் தெளிவாகப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

௧) இந்திய அணி என்றால் என்ன?

srikanthஇந்திய தேசத்து அணி என்றால் இந்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியான விளையாட்டுத் துறையின் கீழ் அவை வர வேண்டும். அரசாங்கமே விளையாட்டு வீரர்களையும் அணிகளையும் தேர்வு செய்யும். அவர்களுக்கு உரிய ஊதியங்கள் மற்றும் இன்ன பிற சலுகைகள் ஆகிய அனைத்தையும் அரசே கவனித்துக் கொள்ளும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய அரசாங்கக் கல்லூரிகளை எடுத்துக் கொள்ளுங்கள்... அவற்றின் அனைத்து செயல்பாடுகளும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்... அத்தகைய கல்லூரிகளையே நாம் அரசுக் கல்லூரிகள் என்று ஏற்றுக் கொள்வோம். மாறாக தனியார் கல்லூரிகளை நாம் அரசாங்க கல்லூரிகள் என்று அழைக்க முடியாது. அவ்வாறே இந்திய விளையாட்டு அணிகளிலும் எந்த விளையாட்டுகளில் அனைத்து பொறுப்புகளும் அரசின் வசம் இருக்கின்றனவோ அந்த விளையாட்டு அணிகளே இந்திய அணிகள் ஆகும். மாறாக எந்த ஒரு தனியார் நிறுவனமோ தனது அணியினை இந்திய அணியாக கூறுவது இயலாது... அது சரியான ஒன்றாகவும் இருக்காது.

௨) அப்படி என்றால் பிசிசிஐ என்பது தனியார் நிறுவனமா?

ஆம். பிசிசிஐ என்பது தனியார் நிறுவனமே. அதனை அந்த நிறுவனமே கூறியும் இருக்கின்றது. சமீப காலமாக இந்திய அரசு கிரிக்கெட் விளையாட்டை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் பிசிசிஐ தனது பண பலத்தையும் மற்ற அரசியல் செல்வாக்கினையும் வைத்துக் கொண்டு அரசுக்கு பிடி கொடுக்காமல் ஆடிக் கொண்டி இருக்கின்றது. அதாவது அரசின் சலுகைகளை அந்த தனியார் நிறுவனம் பெற்றுக் கொள்ளுமாம் ஆனால் அரசின் கீழ் அது வராதாம். இதுவே பிசிசிஐ இன் நிலை.

http://www.deccanherald.com/content/130248/bcci-takes-government-says-its.html

http://articles.timesofindia.indiatimes.com/2012-04-27/lucknow/31439613_1_bcci-arjuna-award-sports-federation

௩) அப்படி என்றால் பிசிசிஐ இன் சார்பாக விளையாடும் வீரர்கள் இந்திய விளையாட்டு வீரர்கள் இல்லையா?

நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகின்றீர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிறுவனம் உங்களுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு இருக்கும். நீங்கள் இன்ன பணியினைச் செய்ய வேண்டும் அதற்கேற்றார்ப் போல் அந்நிறுவனம் சம்பளம் வழங்கும். அந்நிலையில் நீங்கள் அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் ஆகின்றீர்களே தவிர்த்து அரசாங்க ஊழியர்களாக கருதப்படமாட்டீர். அதனைப் போன்றே தான் பிசிசிஐ இன் கிரிக்கெட் வீரர்களும். அவர்களுக்கு பிசிசிஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருக்கின்றது. அவர்கள் பிசிசிஐயிடம் இருந்து சம்பளம் பெற்றுக் கொண்டு அதற்காக விளையாடுகின்றனர். அவர்களைத் தேர்வு செய்வதும் அவர்களுக்கு சலுகைகள் மற்றும் சம்பளம் போன்றவற்றை முடிவு செய்வதும் முழுக்க முழுக்க பிசிசிஐ நிர்வாகத்தின் கையிலேயே இருக்கின்றது. இந்திய அரசு அந்த விடயங்களில் தலையிட முடியாது. பிசிசிஐ அதன் விருப்பத்திற்கேற்ப அணியினைத் தேர்வு செய்துக் கொள்ளும்...விளையாடும்... பணம் பார்க்கும்... அரசாங்கம் வேடிக்கை மட்டுமே பார்க்கலாம்!!! இந்நிலையில் அந்த வீரர்கள் பிசிசிஐயின் வீரர்கள் ஆகின்றனரே தவிர்த்து இந்திய வீரர்கள் ஆக மாட்டார்கள். நிற்க.

இப்பொழுது இரு கேள்விகள் எழலாம்...!!!

ஒன்று - அட என்னங்க, அரசாங்கத்தின் கையில் இருக்கும் மற்ற விளையாட்டுத் துறைகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று காணுகின்றீர்கள் தானே? ஒரு துறையிலும் பெரிய சாதனைகள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த விளையாட்டின் வீரர்கள் எங்கோ ஒரு மூலையில் பெயரும் இல்லாது பிழைக்க வழியும் இல்லாது இருக்கின்றனர். இந்நிலையில் நன்றாக இருக்கும் கிரிக்கெட் விளையாட்டையும் அரசின் வசம் தந்து விட்டு அதையும் நாசமாக்கச் சொல்லுகின்றீர்களா? ஒரு விளையாட்டாவது நன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா? அரசாங்கம் தேர்வு செய்தால் தான் அவன் இந்திய வீரனாக ஆகின்றானோ...அப்படி என்றால் அரசாங்கம் திறமை இல்லாதவர்களை எல்லாம் சேர்த்து ஒரு அணியை உருவாக்கும்... அதனை இந்திய அணி என்று ஏற்றுக் கொள்வீர்... ஆனால் திறமையான வீரர்களை கொண்டு ஒருவன் தனியாக அணியினை அமைத்தால் அதனை இந்திய அணி என்று நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்? அப்படித் தானே...!!!

பதில்: அரசாங்கம் என்பது மக்கள் தேர்ந்தெடுத்த/ மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பினை மக்கள் கேள்வி கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால் தனியார் நிறுவனங்கள் என்பன அவ்வாறு இல்லை. அவர்களை மக்கள் கேள்விக் கேட்க முடியாது. இன்றைய நிலையில் பிசிசிஐ முழுக்க முழுக்க தமிழர்களை மட்டுமே கொண்டு ஒரு அணியினை அமைத்தாலும் அதனை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது. அவர்கள் திறமையின் அடிப்படையில் அணியினைத் தேர்வு செய்யலாம், மொழியின் அடிப்படையில் தேர்வு செய்யலாம், சாதியின் அடிப்படையிலும் தேர்வு செய்யலாம்...அது அவர்களின் விருப்பம். அவற்றை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அந்நிலையில் ஒரு தனியார் நிறுவனம் அதன் விருப்பதிற்கேற்ப தேர்வு செய்யும் ஒரு அணியினை இந்திய நாட்டின் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அணியாக நாம் கருத முடியாது. ஏனெனில் அந்த அமைப்பினை குறித்து நாம் கேள்விகளோ அல்லது அவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கங்களோ நாம் எழுப்பவும் கோரவும் முடியாது. எனவே மக்களின் பங்கு சிறிதும் இல்லாத தனியார் அமைப்புகள் தேர்வு செய்யும் அணியினை நாம் எக்காரணம் கொண்டும் மக்கள் அனைவரையும் குறிக்கும் இந்திய நாட்டு அணியாக ஏற்றுக் கொள்ள முடியாது. திறமை இல்லாதவர்களை அரசாங்கம் தேர்ந்து எடுத்தால் அதனை சுட்டிக் காட்டி கேள்விகளை கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது. ஆனால் அதே உரிமை தனியார்களிடத்து செல்லுபடியாகாது.

இரண்டு - பிசிசிஐ இன் அணி இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அதனை ஏன் ஊடகங்கள் இந்திய அணி என்று கூறுகின்றன... இந்திய அரசும் ஏன் அதனை மெளனமாக வேடிக்கைக் கண்டுக் கொண்டு இருக்கின்றது?

இந்த கேள்விக்கும் சரி முதல் கேள்வியில் நான் பதில் கூறாது விட்ட பகுதியான 'அரசாங்கத்தின் கையில் இருக்கும் மற்ற விளையாட்டுத் துறைகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று காணுகின்றீர்கள் தானே? ஒரு துறையிலும் பெரிய சாதனைகள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த விளையாட்டின் வீரர்கள் எங்கோ ஒரு மூலையில் பெயரும் இல்லாது பிழைக்க வழியும் இல்லாது இருக்கின்றனர்' என்பதற்கும் ஒரே விடை.

அரசியல்!!!

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால்,

பார்ப்பன‌ அரசியல்!!!

ஆம். பார்ப்பன‌ அரசியலே மற்ற விளையாட்டுத் துறைகள் இந்திய நாட்டில் வளராது இருப்பதற்கும், கிரிக்கெட் இவ்வளவு பெரிய விளையாட்டாக வளர்ந்து நிற்பதற்கும் காரணம் ஆகும்.

"ஆரம்பிச்சிடீங்களா...இதுக்கும் பார்ப்பன‌ன் தானா பழி போடுவதற்கு கிடைத்தான்" என்று நண்பர்கள் சிலர் இந்நேரம் பேச ஆரம்பித்து இருப்பர். இந்நிலையில் நாம் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே வைத்தோம் என்றால் நம்மை 'இவன் பார்ப்பன‌ர்களை குறை சொல்வதையே குறியாக வைத்து இருக்கின்றான்... சாதிகளை யாரும் பார்க்காத இக்காலத்திலும் சாதியினைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான்' என்று பழியினை நம் மீது திருப்பி விடுவர். எனவே நாம் குற்றச்சாட்டுகளோடு சில ஆதாரங்களையும் வைக்க வேண்டி இருக்கின்றது. அதற்கும் சில விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது.

௧) இன்றைய கிரிக்கெட் அணியில் விளையாடும் பதினோரு பேரில் பாதிக்கு மேற்பட்ட இடத்தினை பிடித்து இருப்பவர்கள் பார்ப்பன‌ர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதாவது இந்திய தேசத்து மக்கள் தொகையில் வெறும் நான்கு சதவீதம் இருக்கும் பார்ப்பன‌ர்கள் கிரிக்கெட் அணியில் 60 சதவீத இடத்தினை பிடித்து இருக்கின்றனர். இந்நிலை இன்று தான் என்று இல்லை கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றை பார்த்தாலே நமக்கு புரிந்து விடும்...இந்நிலை ஆரம்ப காலத்தில் இருந்தே இந்தியாவில் இருந்து வந்துக் கொண்டு இருக்கின்றது என்று. உதாரணத்துக்கு சில பார்ப்பன‌ கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள்

ரவி சாஸ்த்ரி

சுனில் கவாஸ்கர்

சச்சின் டெண்டுல்கர்

ராகுல் டிராவிட்

சௌரவ் கங்குலி

ஜவகல் ஸ்ரீநாத்

வெங்கடேஷ் பிரசாத்

அணில் கும்ப்ளே

V.V.S. லட்சுமணன்

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

சுனில் ஜோஷி

மனோஜ் பிரபாகர்

அஜீத் அகர்கர்

ரோஹித் ஷர்மா

இஷாந்த் ஷர்மா

சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த்

ரவீந்திர அஷ்வின்

சடகோபன் ரமேஷ்

நிலேஷ் குல்கர்னி

L. சிவராம கிருஷ்ணன்

வேங்கர்சர்கார்

இன்னும் இந்தப் பெயர்களின் வரிசை நீண்டு கொண்டே போகும். காரணம் பிசிசிஐ-காக விளையாடிய மக்களுள் பெரும்பான்மையானோர் பார்ப்பன‌ர்களே. இதில் நாம் ஆச்சர்யப்பட வேண்டிய விடயம் ஒன்றும் இல்லை. பிசிசிஐயே பார்ப்பன‌ர்களின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம் தானே. ஒரு பார்ப்பன‌ நிறுவனம் பார்ப்பன‌ர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது ஆச்சரியப்படத் தக்க விடயம் அல்ல தானே.

௨) பார்ப்பன‌ர்களுக்கு அடுத்தப்படியாக கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருப்பதில் மற்ற உயர் சாதியினரே முன்னிலையில் இருக்கின்றனர். உதாரணத்துக்கு ஜட் இனத்தினைச் சார்ந்தவர்களும் ராஜ்புட் இனத்தினைச் சார்ந்தவர்களும் பெரும்பாலும் இன்று இந்தியாவில் திகழும் சாதியக் கட்டமைப்பில் பார்ப்பன‌ர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள். அவர்களே கிரிக்கெட் அணியில் பார்ப்பன‌ர்களுக்கு அடுத்தப்படியாக இடம் பெற்று உள்ளனர். உதாரணம்,

அஜய் ஜடேஜா

விரேந்தர் செஹ்வாக்

கௌதம் கம்பீர்

விராட் கொஹ்லி

M.S. டோனி

யுவராஜ் சிங்

ஹர்பஜன் சிங்

கபில்தேவ்

மேலும் பலர்....!!!

௩) அதுவும் குறிப்பாக தமிழகத்தினை நாம் இப்பொழுது எடுத்துக் கொள்வோம். தமிழகத்தில் கிரிக்கெட் விளையாடாத கிராமங்கள் கிடையாது... ஏன் தெருக்களே கிடையாது என்றே நாம் இன்றுச் சொல்லலாம். அப்படி ஒரு செல்வாக்கு மக்களின் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இருக்கின்றது. ஆனால் தமிழகத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை சற்று பார்த்தோம் என்றால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் பார்ப்பன‌ர்களாகவே இருக்கின்றனர். உதாரணம்...

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

சடகோபன் ரமேஷ்

W.V. இராமன்

L. சிவராம கிருஷ்ணன்

ஹேமங் பதானி

லக்ஷ்மிபதி பாலாஜி

ரவீந்திர அஷ்வின்

S.பத்ரிநாத்

முரளி கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

அபினவ் முகுந்த்

முரளி விஜய்

இன்னும் பலர்.... இவர்கள் அனைவருமே பார்ப்பன‌ர்கள்.

ஏன் தமிழகத்தில் நன்றாக கிரிக்கெட் விளையாடக் கூடிய ஒரு பிற்படுத்தப்பட்ட வீரனோ அல்லது தாழ்த்தப்பட்ட இனத்தினைச் சார்ந்த வீரனோ இவர்களுக்கு கிட்டவில்லையா என்ன? என்று கேள்வியோடு தமிழகத்தின் பிசிசிஐ தேர்வுக் குழுவைப் பார்த்தால் தேர்வுக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் பார்ப்பன‌ர்கள் என்றே நமக்கு செய்தி வருகின்றது. என்ன விந்தையப்பா... விளையாடுபவர்களும் பார்ப்பன‌ர்கள்... விளையாடுபவர்களைத் தேர்வு செய்பவர்களும் பார்ப்பன‌ர்கள்... ஆனால் இவர்கள் யாரும் சாதியினைப் பார்ப்பதில்லை. சாதியினைப் பார்க்காமலேயே இந்தளவு ஒரு ஒற்றுமை நிச்சயம் ஆச்சர்யம் தான்...இல்லையா!!!

௪) இது வரை பிசிசிஐ யின் சார்பாக கிரிக்கெட் விளையாடிய வீரர்களில் இரண்டே இரண்டு பேர் தான் தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து வந்தவர்கள் என்றே நமக்குத் தகவலும் கிடைக்கின்றது. அதாவது இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் இருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மக்களில் இருந்து இது வரை இரண்டே இரண்டு பேர் தான் பிசிசிஐ-யால் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் பெயர் நம்மில் எவருக்கும் தெரியாது (பல்வாங்கர் பாலு (Palwankar Baloo) - இவர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் விளையாடியவர்), மற்றொருவர் வினோத் காம்ப்ளி. இவர்கள் இருவரையும் தவிர தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட்டினை சர்வதேச அளவில் விளையாட வேறு எவரும் தேர்வாகவில்லை என்பதும் ஒருத் தகவல்.

அதாவது மக்கள் தொகையில் நான்கு விழுக்காடே இருக்கும் பார்ப்பனர்கள் மத்தியில் இருந்து வரிசையாக கிரிக்கெட் வீரர்கள் வந்துக் கொண்டே இருக்கும் பொழுது சமுகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களின் இருந்து மிக மிக குறைந்த அளவிலேயே மக்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கின்றனர். ஆச்சர்யமான விடயம் தான் அல்லவா....!!!

"கொஞ்சம் பொறுங்கள்...இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கின்றது... பார்ப்பனர்கள் திறமைசாலிகள்...ஆகவே வாய்ப்பினைப் பெறுகின்றனர்... திறமையில்லாதவர்களுக்கு வாய்ப்பினை தந்து ஒன்றுக்கும் ஆகாத அணியினை உருவாக்கச் சொல்லுகின்றீர்களா" என்ற கருத்து உங்களின் மனதில் இப்பொழுது எழுந்தால்(சிலரின் மனதில் நிச்சயமாக இந்த எண்ணம் எழும்) அவர்களுக்காக...

brahmin_305"ஐயா வணக்கங்கள்... பார்ப்பனர்கள் திறமைசாலிகள் என்றே வைத்துக் கொண்டோம் என்றால்... அவர்கள் அனைத்துத் துறையிலும் அல்லவா திறமையாக விளங்க வேண்டும்... அனைத்து அணியிலும் அவர்களே சிறந்து விளங்க வேண்டும்... கபடி, ஹாக்கி, கால்பந்து...மற்றும் இன்ன பிற விளையாட்டுகளில் பார்ப்பனர்கள் செய்த சாதனைகள் யாது என்று கூறுவீர்களா?... அந்த விளையாட்டு அணிகளில் பார்ப்பனர்கள் இருக்கின்றார்களா என்பதே சந்தேகம். பார்ப்பனர்கள் மட்டுமே திறமையானவர்கள் என்றால் அனைத்து விளையாட்டிலும் அவர்கள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் திறமைகள் அற்றவர்கள் என்றால் மற்ற விளையாட்டிலும் அவர்கள் திறமையற்றவர்கலாகவே இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் நிலைமை வேறாக அல்லவா இருக்கின்றது. கபடி, கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் அல்லவா விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். பார்ப்பனர்களின் ஆதிக்கம் அங்கே இல்லையே. எனவே கிரிக்கெட் விளையாட்டில் பார்ப்பனர்கள் மட்டுமே திறமையாக இருக்கின்றனர் என்று நீங்கள் கருதுவது எங்கனம் பொருந்தும்.... வாய்ப்புகளைத் தந்தால் அந்த விளையாட்டிலும் மற்ற மக்கள் சாதனைகள் படைப்பார்கள் என்ற கூற்றினை மறுக்க உங்களால் எங்கனம் முடியும்?".

ஆனால் மற்ற விளையாட்டுக்களை விட கிரிக்கெட்-ஐ பார்ப்பனர்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டு இருப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.

௧) மற்ற விளையாட்டுகளைப் போல் கிரிக்கெட் விளையாட்டில் உடல்கள் அதிக அளவில் தொட்டுக் கொள்ள வேண்டிய தேவை கிரிக்கெட்டில் கிடையாது. கால்பந்து, கபடி, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் வீரர்களின் உடல்கள் அடிக்கடி மோத வேண்டிய சூழ்நிலைகள் நேரும். ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் அத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நிகழாது. பந்தைப் பிடித்தால் போதும்... பந்தை அடித்தால் போதும். தீண்டாமைக் கொள்கையை போற்றி வளர்த்த பார்ப்பனர்கள் இதனாலையே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் செலுத்தினர் என்று நாம் கூறினால் அதனை மறுக்க முடியுமா?

௨) சோம்பேறிகளின் விளையாட்டாக அறியப்பட்ட கிரிக்கெட்டில் உடல் உழைப்பும் கம்மி என்பதாலேயே பார்ப்பனர்கள் அந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்தனர் என்றும் அதனால் தான் இந்திய கிரிக்கெட் வீரர்களாக அறியப்பட்டவர்களின் பீல்டிங் முறையும் (பந்தை தடுக்கும் முறையும்) ஓட்டம் எடுக்கும் முறையும் (ரன்னிங் பெத்வீன் தி விக்கெட்ஸ்) யுவராஜ் சிங், முஹம்மத் கைப் போன்ற வீரர்கள் வரும் வரை வெகு சுமாராகவே இருந்து இருக்கின்றது என்பதனை மறுக்க முடியுமா?

௩) மற்றவர்களை வேலை வாங்கியே பழகிய காரணத்தினால் தான் பெரும்பான்மையான நேரம் எதிரணியின் வீரர் அடித்த பந்தினைத் துரத்திச் செல்லாமல் மற்றவர்களுக்கு கை காட்டிவிட்டு நின்ற இடத்தில் நிற்பதும், அதிகமாக ஓட்டங்களை ஓடி எடுக்காமலும், ஓடும் பொழுது தமது ஆட்டத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் தன்மையும் (அடுத்தவரை ஆட்டம் இழக்க செய்தாலும் பரவாஇல்லை தான் பாதுகாப்பாக நிற்க வேண்டும்) வீரர்களின் மத்தியில் இருந்து இருக்கின்றது என்ற கூற்றினையும் மறுக்க முடியுமா?

மேலே நாம் இட்டுள்ள கேள்விகள் வேடிக்கையாக தெரிந்தாலும் அவற்றுள் உண்மை இருக்கின்றது என்பதனை சற்றே சிந்தித்துப் பார்ப்போர் அறிந்துக் கொள்வர். நிற்க.

இப்பொழுது நாம் கிரிக்கெட் எவ்வாறு நமது தேசத்தில் இன்று அது இருக்கும் உயரத்தினை அடைந்தது என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது...

ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இன்று இருக்கும் இதே அளவு செல்வாக்கு இருந்ததா என்றுத் தெரியவில்லை. நான் அறிந்த வரையில் பள்ளியில் உள்ள விளையாட்டு ஆசிரியர்கள் எவரும் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் தந்தது கிடையாது. அவர்களைப் பொறுத்த வரை அது சோம்பேறிகளின் விளையாட்டு. மேலும் அக்காலத்தில் இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு தான் மிகவும் சிறப்பான ஒன்றாக விளங்கிக் கொண்டு இருந்தது. 1928 ஆம் ஆண்டில் தொடங்கி 1956 ஆம் ஆண்டு வரை தான் கலந்துக் கொண்ட அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கத்தினை வாங்கிக் குவித்தது இந்திய ஹாக்கி அணி. உலகைப் பொறுத்தவரை ஹாக்கி என்றால் இந்தியா... இந்தியா என்றால் ஹாக்கி. தொடர்ச்சியாக மொத்தம் 6 ஒலிம்பிக் தங்கங்கள். ஹாக்கி இந்தியாவின் தேச விளையாட்டானது. இன்றுவரை ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு அதிகமான பதக்கங்களை வாங்கித் தந்துள்ள விளையாட்டும் அது தான். ஹாக்கி மூலமாக நமக்கு கிட்டிய கடைசி தங்கப் பதக்கம் 1980 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிட்டியது. அதற்கு பின்னர் ஹாக்கி விளையாட்டிற்கு இந்தியாவில் இறங்கு முகம் தான். காரணம் எது வேண்டும் என்றாலும் இருக்கலாம்... அரசாங்கத்தின் கவனக்குறைவு, அரசியல் காரணங்கள்... எதுவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் என்னுடைய கவனம் ஏனோ 1983 ஆம் ஆண்டில் கிரிக்கெட் அணி பெற்ற உலகக் கோப்பை வெற்றியின் மீதே செல்கின்றது. அது சரியானதாகவும் இருக்கலாம் அல்லது தவறான ஒன்றாகவும் இருக்கலாம்.... இருந்தாலும் என்னுடைய எண்ணங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவே எண்ணுகின்றேன்.

பிசிசிஐ இன் சார்பாக விளையாடி வந்த கிரிக்கெட் அணிக்கு 1983 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை எந்த ஒரு மாபெரும் வெற்றியும் கிட்டியதில்லை என்பதே வரலாறு. ஆனால் 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு மாபெரும் மாற்றம் கிரிக்கெட் விளையாட்டிற்கு நேர்ந்து தான் இருக்கின்றது. காரணம் உலக கோப்பையை அந்த அணி வென்று விட்டது. போதாதா? பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள நாட்டில் பார்ப்பன‌ர்களின் ஆதிக்கம் இல்லாத விளையாட்டான ஹாக்கியே அனைத்து வெற்றிகளையும் பெற்றுக் கொண்டு இருந்த பொழுது முதல் முறையாக பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு விளையாட்டு மாபெரும் வெற்றியினைப் பெற்று இருக்கின்றது. இது ஒன்று போதாதா கொண்டாடுவதற்கு. பார்ப்பன‌ர்கள் அதிகம் உள்ள அணியான பிசிசிஐ-யின் கிரிக்கெட் அணியை தலையில் தூக்கிக் கொண்டு ஆட ஆரம்பித்தன பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள்... அவை பத்திரிக்கை ஊடகங்களாக இருக்கட்டும் அல்லது காட்சி ஊடகங்களாக இருக்கட்டும்... பிரச்சனை இல்லை... "இந்திய அணி வென்று விட்டது... உலகை இந்தியா வென்று விட்டது... நாம் உலகில் சிறந்தவர்கள்... கொண்டாடுங்கள்" என்றே அவை கிரிக்கெட்டின் வெற்றியை கொண்டாட ஆரம்பித்தன.

அதாவது பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு விளையாட்டு பெற்ற வெற்றியினை பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்கள் பெரிதுபடுத்த ஆரம்பிக்கின்றன... இன்றும் பெரிதுப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. காலங்களில் நாம் தெளிவாகக் கண்டோம் என்றால் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பன‌ர்களாலோ அல்லது பார்ப்பன‌ர்களைச் சார்ந்தவர்களாலோ கைப்பற்றப்பட்டே இருக்கின்றன என்பது நமக்குப் புலனாகும். அந்த ஊடகங்களின் வலிமையை வைத்தே இன்றும் அவர்கள் பல காரியங்களைச் செய்துக் கொண்டே இருக்கின்றனர். சரி இருக்கட்டும்.

1983 ஆம் ஆண்டு பிசிசிஐ-யின் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்கின்றது. பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு அணி வென்றதால் பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்கள் அதனைப் பெரிதுபடுத்தி மக்களின் மத்தியில் கொண்டு செல்கின்றனர். அங்கே ஆரம்பிக்கின்றது வேலை. கிரிக்கெட் அனைத்து ஊடகங்களிலும் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. மற்ற விளையாட்டுக்கள் பின்னால் தள்ளப்படுகின்றன. விளையாட்டு என்றால் கிரிக்கெட் தான் என்ற அளவுக்கு கிரிக்கெட்டும் சரி கிரிக்கெட் வீரர்களும் சரி மக்களுக்கு ஊடகங்களால் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

உதாரணமாக, பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் பெற்ற வெற்றியை பாடமாகவே வைத்து இருக்கின்றனர் என்பதனை நாம் அறிவோம். அதாவது தொடர்ந்து ஆறு முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கத்தினை வென்ற ஹாக்கி அணியைப் பற்றியோ அல்லது அந்த வரலாற்றினைப் பற்றியோ ஒருவன் அறிந்து கொள்ளவில்லை என்றால் யாதொரும் பிழையும் இல்லை. ஆனால் தனியார் நிறுவனமான பிசிசிஐ வென்ற கிரிக்கெட் போட்டியினைப் பற்றி அவன் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கிரிக்கெட் ஒன்று தான் விளையாட்டு என்று அவன் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வளவே...!!!

இது தான் அரசியல். இக்காலத்தில் தான் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி ஒரு தேச அடையாளமாக மக்களின் மத்தியில் புகுத்தப்பட்டது. எந்த ஊடகத்தினை எடுத்தாலும் கிரிக்கெட்... கிரிக்கெட் ...மேலும் கிரிக்கெட்...!!! ஊடகங்கள் என்பன ஒரு மாபெரும் சக்தியினை உடையவை... மக்களின் மத்தியில் ஒரு கருத்தினை பரப்பவும் அவர்களால் முடியும்; ஒரு கருத்தினை அழிக்கவும் அவர்களால் முடியும். அவற்றின் வலு அப்பேர்ப்பட்டது. அத்தகைய ஊடகங்களின் துணை இன்றி மற்ற விளையாட்டுகள் மக்களின் மத்தியில் இருந்து சிறிது சிறிதாக விடைபெற கிரிக்கெட் தனது இருப்பை வலு பெற செய்து கொண்டது. வேறு விளையாட்டுக்கள் இந்தியாவில் இருக்கலாம்... பிழையில்லை... ஆனால் அவை கிரிக்கெட் அளவிற்கு வளரக் கூடாது. அவ்வளவே. இதில் ஊடகங்கள் தெளிவாக இருந்தன... இருக்கின்றன. நிற்க.

இவ்வாறே மற்ற விளையாட்டுகளைப் பின் தள்ளி ஊடகங்களின் துணையோடு பார்ப்பன‌ர்களின் கையில் உள்ள விளையாட்டான கிரிக்கெட் தனியாரின் வசம் இருந்தும் தேச விளையாட்டாக கருதப் பெறும் அளவிற்கு புகழ் பெறுகின்றது. பார்ப்பன‌ர்களைத் தாங்கிப் பிடிக்கும் அரசும் மற்ற விளையாட்டினை வளர்க்காமல் கிரிக்கெட்டுக்கே பல்லவி பாடிக் கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் இன்றைக்கு இந்தியாவின் விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்றே வழங்கப்பெறும் காலக்கட்டத்தில், இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரையும் குறிக்கும் ஒரு அணியாக இந்த கிரிக்கெட் அணி திகழ வேண்டுமானால் அதில் இன்று இருக்கும் இட ஒதுக்கீட்டு நிலை (70% இடங்களை பார்ப்பன‌ர்களே பிடித்து இருக்கும்) மாறி மக்கள் அனைவரையும் சமமாக திறமையின் அடிப்படையில் தேர்ந்து எடுக்கும் இட ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட வேண்டும் தானே. அவ்வாறு கொண்டு வரப்படாவிடில் பிசிசிஐ என்பதன் அர்த்தத்தை பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டில் இந்திய கிரிக்கெட் (Brahmins Control Cricket in India) என்றே நாம் வைத்துக் கொள்ளலாம் தானே.

சில கேள்விகளும் பதில்களும்:

௧) பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் இருக்கின்றது என்ற ஒரே காரணத்தினாலேயே இந்திய அரசு கிரிக்கெட் விளையாட்டினை இந்தளவு ஆதரிக்கின்றது என்று நீங்கள் கூறுகின்றீர்கள்? ஏன் அதனை வீரர்களின் திறமையை அரசாங்கம் ஆதரிக்கின்றது என்று நாம் கருதக் கூடாது. ஏன் வீணாக சாதியினை இங்கே கொண்டு வர வேண்டும்?

திறமையினை அரசாங்கம் ஆதரிக்கின்றது என்றால் அனைத்து வகையான விளையாட்டுகளிலும் உள்ள வீரர்களின் திறமைகளையும் அது ஆதரித்து இருக்க வேண்டும். அவ்வாறு இருந்து இருந்தால்

1.       தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை வென்ற சாந்தி இன்று செங்கல் சூளையில் பணி செய்து கொண்டு இருக்க மாட்டார்

2.       தனக்கு பதக்கத்தினைப் பெற்றுத் தந்த வில்லினை தேசிய வில் வித்தை வீராங்கனையான நிஷா ராணி தத்தா விற்று இருக்க மாட்டார்

3.       கபடி உலகக் கோப்பையை வென்ற இந்தியக் கபடி வீரர்கள் வரவேற்க ஆட்கள் யாரும் இன்றி தானியங்கியில் தமது சொந்த செலவினில் சென்று இருக்க மாட்டார்கள்.

இன்னும் பல உதாரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம். சற்று கவனித்துப் பார்த்தோம் என்றால் மேலே நாம் கண்டவர்கள் யாரும் பார்ப்பன‌ர்கள் அல்லர். இந்நிலையில் பார்ப்பன‌ர்கள் கையில் உள்ள விளையாட்டும் சரி விளையாட்டு வீரர்களும் சரி செல்வ செழிப்போடு இருக்கும் பொழுது பார்ப்பன‌ர்கள் அல்லாதோர் விளையாடும் விளையாட்டுக்களும் சரி, அந்த வீரர்களும் சரி கவனிப்பாரின்றி இருக்கின்றனர். இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் கூறுவீர்.

௨) என்ன காரணமா...அரசாங்கம் தான் காரணம்? அரசாங்கம் கவனிக்காததற்கு பார்ப்பன‌ர்களைக் குறை கூறுவது எங்கனம் நியாயம்?

அரசாங்கம் காரணம் என்றால் அரசாங்கத்தினை நடத்துபவர்கள் தான் காரணம். இன்று வரைக்கும் மத்தியில் ஆட்சியில் இருந்து இருக்கும் ஆட்சிகள் அனைத்தும் பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து இருக்கின்றன. அது காங்கிரஸ் ஆக இருக்கட்டும் அல்லது பாஜக-வாக இருக்கட்டும்... அனைத்தும் பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. சமீபத்தில் ராகுல் காந்தியும் 'நான் ஒரு பார்ப்பன‌ன்' என்று கூறிய செய்தியும் இங்கே கவனிக்கத்தக்கது. மேலும் இடதுசாரிக் கட்சியான பொதுவுடமைக் கட்சியாகட்டும் அதன் தலைமையிலும் பார்ப்பன‌ர்களே வீற்று இருக்கின்றனர். இந்நிலையில் அரசாங்கம் தான் மற்ற விளையாட்டுக்கள் வளராது இருக்க காரணம் என்று நாம் கூறினோம் என்றால் அக்குற்றச்சாட்டுகளும் பார்ப்பன‌ர்களையே சென்று அடையும்.

௩) அப்படி என்றால் அரசாங்கம் பார்ப்பன‌ர்களை மட்டுமே கவனிக்கின்றது என்று கூறுகின்றீர்களா?

குறிப்பாக அவர்களையும் மற்ற உயர் சாதியினரையுமே கவனிக்கின்றது என்றுக் கூறுகின்றோம். சான்றாக சதுரங்க விளையாட்டு வீரர் ஆனந்த ஒரு பார்ப்பன‌ர் என்று நாம் அறிவோம். சமீபத்தில் அவர் வென்ற பட்டத்திற்காக தமிழக அரசு அவருக்கு இரண்டு கோடி உருபாய் பரிசுத் தொகையை அளித்துள்ளது. இரண்டு கோடி என்பது சாதாரணத் தொகை அன்று. இத்தகைய ஒரு தொகையினை வேறு சாதியினைச் சார்ந்த வீரருக்கு செயலலிதா வழங்கி இருப்பாரா என்பதும் கேள்விக்குறியே.

௪) விசுவநாதன் ஆனந்த அவர்களால் தமிழகம் உலகப் புகழ் அடைந்து உள்ளது. அவரை பரிசுத் தொகை வழங்கி பெருமைப் படுத்துவதனை தவறு என்று கூறுகின்றீர்களா?

பரிசுத் தொகை வழங்குவது என்பது தவறான ஒன்று அல்ல. ஆனால் எவ்வளவு தொகை வழங்குகின்றோம், எப்பொழுது வழங்குகின்றோம், எவருக்கு வழங்குகின்றோம் என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கின்றது அல்லவா. ஏற்கனவே அந்த உலகப் போட்டியில் வென்றதற்காக ஆனந்துக்கு கிடைத்த பரிசுத் தொகை கிட்டத்தட்ட ஆறரைக் கோடி. அந்நிலையில் அவருக்கு மேலும் இரு கோடியினை (மின்சாரம் வாங்குவதற்காக காசில்லாது தவித்துக் கொண்டு இருக்கும் வேளையிலும்) வழங்குவது சரியான ஒன்றா? மேலும் அது தமிழக அரசின் தனிப்பட்ட செல்வமும் அன்று. அது மக்களின் வரிப்பணம்.

உண்மையிலேயே விசுவநாதன் ஆனந்தை சிறப்பிக்க தமிழக அரசினை எண்ணி இருந்தால் அந்த இரண்டு கோடியினைக் கொண்டு ஆனந்தின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி தமிழகத்தில் உள்ள சிறார்களுக்கு சதுரங்க விளையாட்டினை செம்மையாக பயிற்றிவிக்கும் பணியினைச் செய்து இருக்கலாம். அவ்வாறு மேலும் பல திறமையான வீரர்களை உருவாக்கி இருக்கலாம் தானே. அதனை விடுத்து ஏற்கனவே செல்வம் கொழிக்கும் ஒருவருக்கு கூடுதலாக ஒரு மிகப் பெரியத் தொகையினைத் தருவது என்பது சரியான செயலாக அமையாது.

ilavazhagi_with_her_family

ஆனந்த் மட்டும்தான் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கிறாரா? கேரம் விளையாட்டில் தொடர்ந்து உலகப் பட்டங்களைப் பெற்று வரும் இளவழகிக்குக் கிடைத்த பரிசுப் பணம் எவ்வளவு தெரியுமா? பத்து லட்சம் மட்டுமே. அதுவும், தமிழக அரசு தொடர்ந்து தன்னை புறக்கணித்து வருவதாக அவர் பல பேட்டிகள் கொடுத்தபின்பே, வேறு வழியின்றி அந்தப் பரிசுத் தொகையும் அவருக்குக் கிடைத்தது. காரணம், வியாசர்பாடியைச் சேர்ந்த தலித் ஒருவருக்கு மகளாகப் பிறந்ததுதான் அவர் செய்த குற்றம். (http://www.tehelka.com/story_main39.asp?filename=cr030508late_breakfast.asp)

௫) ஆதிக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு இருக்கின்றது என்றுக் கூறுகின்றீர்களே ஆனால் இசுலாமிய வீரர்களும் அந்த அணியில் விளையாடி வருகின்றனரே?

சிலருக்கு சில முகமூடிகள் தேவைப் படுகின்றது. இந்தியாவுக்கு தான் ஒரு மத சார்பற்ற நாடு என்ற முகமூடி தேவைப்படுகின்றது. அதே முகமூடி பிசிசிஐக்கும் தேவைப்படுகின்றது. எனவே தான் இசுலாமிய வீரர்களையும் பிசிசிஐ தேர்ந்து எடுக்கின்றது. என்று இந்தியா தனது முகமூடியினைக் களைகின்றதோ அன்று பிசிசிஐயும் தனது முகமூடியினைக் கலைத்து விடும்.

தொடர்புடைய சுட்டிகள்:

http://www.outlookindia.com/article.aspx?218913

http://www.thatscricket.com/news/2009/07/15/being-dalit-is-a-crime-in-indian-cricket.html

https://groups.google.com/forum/#!msg/ethiricom/x7cJtDdNxHQ/CpdCYwtPGOEJ

http://www.governancenow.com/views/columns/medals-and-meddlers

பி.கு:

மேலே கூறிய விடயங்கள் அனைத்தும் சில இணையங்களின் மூலமும் சில நண்பர்களின் தொடர்புகள் மூலமும் பெறப்பட்ட தகவல்களை மையமாக வைத்தே எழுதப்பட்டவை. இதனில் மாற்றுக் கருத்துக்களை எவரேனும் கூற விரும்பினால் தாராளமாகக் கூறலாம்.

Comments

25 comments

25
MK
seriyaana kuppai article
sabari
மேலும் ஒரு தகவல் விஸ்வனாதன் ஆனந்த் ஒன்றும் இந்திய குடிமகன் அல்ல...

அவர் தனது குடியுரிமையை வெளிநாட்டில் பெற்று வெகுநாட்களாகிறது...
Udhay
நல்ல கட்டுரை. பல நாட்களாகவே எனக்கு இருந்த சந்தேகங்கள் ஆதாரப்பூர்வமாய் நிரூபிகப்படிருக்கின்றன... கிரிக்கெட் ரசிகர்கள் கொஞ்சம் பொறுமையாய் யோசித்தால் உண்மை புரியும்...
subramanian
semma mokkai, verum kaazhpunarchi mattume vaithu ezhuthunathu.

Harbhajan Singh jatt kedyatahu MBC,Kapil dev SC,Innum pala per irukkanga.

Thiru Kumaran,T A Sekhar avungalukku ellam chance kuduthaanga,aana needikka mudiyala.

Kaif,Zaheer Khan,Irfan Pathan,Yusuf Pathan ivunga ellam muslim.

Vishwanathan Anand is the best Indian sportsman across all sports,he is the top player in Chess,2 crores in nothing for him and he also asks for nothing.

He makes a lot of money in life and also is a proud Indian/Tamil.
ஷாலி
வழிப்போக்கன், நன்றாக அடித்து விளையாடி விட்டார். ஆனாலும் இன்றைக்குள்ள சூத்திர இளைஞர் ஒருவர் கூட இந்தக்கட்டுரையை ஆதரிக்கமாட்டார்கள். ஏனெனில்,கிரிகெட் போதையானது அவர்கள் நாடி நரம்பு இரத்த நாளங்களில் ஒன்று கலந்து ஓடும் அளவிற்கு ஊடகங்களால் தயாரிக்கப்பட்டு விட்டனர். சுருக்கமாக சொன்னால்இவர்கள் கிரிகெட் ரோபோக்கள். மண்டையில் எதுவும் ஏறாது. தர்ப்பையை பிடித்த கைகள்தான் மட்டையைப்பிடிக்கவேண்டும் என்ற எழுதப்படாத விதி, பூமத்திய ரேகை பூணுலாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டி நடக்கும்போதும் ஊரடங்கு உத்தரவு போட்டதுபோல் நாடடைங்கி விடும். ஸ்கோர் எண்ணியே தேசபக்தியை நிரூப்பிப்பார்கள். அலுவலகங்களில் கமெண்டரி கேட்டே கதி மோட்சம் அடைவார்கள். இது ஒரு நாள் இழவு என்றால் நாமும் அழுது தொலைக்கலாம்,ஆனால் தொடர்ந்து வருடம் முழுவதும் ஏதாவதொரு நாட்டோடு மட்டையடித்து சூத்திரர்களை மொட்டையடித்து துட்டை பிடிங்கி விடுகிறார்கள்.
கிரிகெட் எனும் நச்சு மரத்தை பார்ப்பனர்கள் திட்டமிட்டு உரம் போட்டு வளர்த்து பெரும் விருட்சமாக்கிவிட்டார்கள் . BCCI என்றால் என்ன பொருள் BRAHMINS CRICKET CLUB OF INDIA. இந்த விருட்சத்தை வெட்டாமல் வேறு விளையாட்டுக்களை வளர்க்க முடியாது.இந்தியாவில் கிரிகெட் தடை செய்யப்படும் நாள்தான் நமக்கு இரண்டாவது சுதந்திர நாள். ஐயகோ! அப்பொன் நாள் எந்நாளோ!
Praba
சரியான குப்பை!. ஆம், குப்பையை கிளறினால் சிலருக்கு நாற்றம் எடுக்கத்தான் செய்யும். கிரிக்கெட் எனும் குப்பையில் ஊறிக் கிடக்கும் நாற்றம் பிடித்தவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. சிறந்த கட்டுரை.
முன்பு ஒரு முறை நக்கீரன் இதழில் இது போன்ற கட்டுரை வந்தது. அதில் இந்திய கிரிக்கெட் கேப்டன், வீரர்கள் என பட்டியலிட்டு இருந்தனர். அத்தனையும் அவாள்…..
chinnadurai kodisundaram
நானும் சிரு வயதில் இந்த மானங்கெட்ட கிரிக்கெட்டின் மேல் பைத்தியமாக இருந்திருக்கேன். அதர்க்காக இப்பொழுது வெட்க்கபடுகிறேன்
Natarajan
Cricket is a lazy game played by the lazy for the lazy. A German sports scientist made a comparative study of various sports, on the basis of speed,skill and stamina. He has rated cricket in the third category. Basketball is rated as the sports requiring highest level of speed skill and stamina. Most popular sport of the world viz., football(soccer) also requires very high skill and stamina. Except the goalkeeper other ten have to run on an average 8 km, in different directions. The players lose about 3 kg in 90 minutes. Best sport in the world is football. India ranks 153 in football. Cricket in India will not go to that low level reasons well known.
China wanted to introduce cricket. They entrusted the job to an expert.finally it went through the report and concluded cricket as a lazy sport and filed the report.
Table tennis, chess come under second category of sports requiring much skill and stamina too.
Cricket is a media sports and come under third category. Once media stops the hype it will have a natural death. Cricket is a poisonous game killing other sports which require body strength and stamina.
Cricket is a highly paying sports in India only.the money they get is only a pittance when compared to a basket ball player or soccer player gets.
Indian sports can grow only when.......?
nishanthan
நல்ல கட்டுரை ,தவிர மேலும் ஒரு தகவல்
என்னதான் பார்ப்பனர் இந்த விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தினாலும் பார்ப்பனர் ஒருவர் அணியின் தலைவராக இருந்தபொழுது இந்த அணியால் நாட்டுக்கு உலக கோப்பையை பெற்றுத்தர முடியவில்லயே ! கபில் தேவ் ,மற்றும் டோனி ஆகிய இரண்டு பிற்படுத்தப் பட்டவர்கள் அணியின் தலைவராக இருந்தபொழுது தான் அணி உலகக் கோப்பையை பெற முடிந்தது , என்ன தான் பார்பனர்கள் திறமை ,மயிறு, மட்டை என்று பீத்தினாலும் தலைமைத்துவப் பண்பு என்னவோ அது பிற்படுத்தப்பட்டோருக்கே சொந்தம் ,,நரேந்திர மோடி ,லல்லுப் பிரசாத் யாதவ் ,எம்ஜிஆர் ,கருணாநிதி ,என்று அதன் பட்டியல் நீளும் , நான் சொல்வது பொய் என்றால் ஒரு முறை டோனியை அணித் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்குங்கள் ,,அப்பொழுது தெரியும் இந்திய அணியின் நிலைமை
Chandar
Cricket is popular among mass only because of its simplicity and not because of Paarpaans as you are telling. To play cricket, you just need a bat or something that resembles bat or a ball or something that resembles a ball(trash paper ball would also do. we can take a printout of your article, trash it and roll it). According to the demand, you can play it anywhere, everywhere(even in a closed 10/10 room with one pitch catch).

Indians and Pakistan lost their way in Hockey because of the introduction of synthetic turf and not because of the suppression of Paarpaans.

Pakistan, Srilanka and Bangladesh are equally interested in cricket and that too post 1980s. Do you want to say, paarpaans are responsible for that also ?

I have seen at least one carrom board, in every paarpaans house. It is a popular indoor re-creation. But what would you prefer if you are given an option of watching cricket or carrom in a television. Now you can ask what about chess and why it is getting more publicity. Go and ask the international chess federation why are they paying more for just an indoor game.

Ellathukkum paarpaan mela pazhi podaratha niruthunga...
Chandar
@Nishanthan: I heard cricket is a team game. India won World Championship in Australia in 1985 under Sunil Paarpaan Gavaskar. Under Rahul Dravid, India won 17 consecutive one day chases. Ganguly is the best captain till date. Lot of Corporate companies are headed by Paarpaans. Forget politics, please be reminded that a paarpanathi heading us.
m.k.murugan
//cricket is popular among mass only because.....................(trash paper ball would also do we can play it anywhere,everywhere// சந்தர் அவர்களே! இதுக்கு பேர் தான் முழுப் பூசணிக்காய சோற்றுக்குள் மறைப்பது! கிரிக்கெட் சிம்ப்லான விளையாட்டாம்! பத்துக்கு பத்துக்கு ரூமுக்குள் விளையாட முடிந்ததால் அவ்வாறு விளையாடப்படுவதில்லை!1.நகரங்களில் இடப்பற்றாக்குறை-பெருகும் மக்கள்தொகைக்கேற்ப open space திறந்த வெளிகளின் இருப்பை உறுதி செய்யாத ஆள்வோரின் போக்கு! 2.பதினொண்ணும்,பதினொண்ணுமாய் ஆட்களைத் திரட்டாமல் ஒரே ஒருவரே 10*10 க்குள் விளையாடிக் கொள்ளலாம்!(சுவற்றில் பட்டு பந்து உங்களிடம் தானே வரப்போகிறது!) என்னால் கால் பந்தை,ஆக்கியை ஏன், இன்னொருவர் கூட இருந்தால் கபடியைக்கூட 10*10 அறையில் விளையாட முடியும்! சந்தர்! கபடியை 10*10க்குள் விளையாடுங்கள்! பிடிபடாமல் இருப்பதிலும், பிடிப்பதிலும் expert ஆகிடுவீர்கள்!
எளிமையான விளையாட்டு, எவ்வளவு நேரம் நடக்கிறது! கழுதைக்கு பேரு முத்துமாலையாம்! இந்த விளையாட்டை குறைசொன்னால் தேசத்துரோகி போல் பார்க்கப்படுகிறோம்! மீடியாக்களால் தான் இவ்விளையாட்டு வேண்டுமென்றே வளர்க்கப்பட்டது! ஐயா, கனவான்களே! தேசிய விளையாட்டான ஆக்கி ல் இந்தியாவை முதலிடத்துக்கு கொண்டுவந்து தேசபக்தியை நிரூபித்துக் கொள்ளுங்கள்!
Chandar
@M K Murugan: You made a point. Create is best practiced by playing against a wall. What ever you say cricket is simple and it can be played in simplest form. 10X10 roomil kabadi vilayaduvadharkku peyar wrestling. It is also popular in India. But it will hurt. Come on Murugan, no one has branded you a desadrohi. Come out of your inferiority complex. Dont blame paarpaan for anything and everything.
சேயோன்
@chandar

//Cricket is popular among mass only because of its simplicity and not because of Paarpaans as you are telling.//

கிரிக்கெட் விளையாட்டு எளிதான விளையாட்டாகவே இருக்கட்டுமே...ஆனால் அத்தகைய எளிதான விளையாட்டில் பிராமணர்கள் மட்டுமே திறமைசாலிகளாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தினையும் யாராவது இயற்றி விட்டார்களா என்ன? அவ்வாறு சட்டங்கள் எதுவும் இல்லாத பொழுது எவ்வாறு பிராமணர்கள் மட்டுமே தொடர்ந்து அந்த அணியில் விளையாடி வருகின்றனர் என்று நீங்கள் கூற முடியுமா?

மேலும் தனியாரின் கையில் இருக்கும் ஒரு விளையாட்டிற்கு எதற்கு தேசிய விளையாட்டினைப் போன்ற ஒரு மாய தோற்றத்தினையும் ஊடகங்கள் வழங்க வேண்டும்?
குமார்
http://www.expressindia.com/news/blogs/showblogdetails.php?contentid=232690

- அசிம் ப்ரேம்ஜியின் கருத்தல்ல...
Chandar
@Seyon, If you dont like cricket, then why are you worrying about, caste representation in cricket. Apart from brute strength, cricket requires some mental calmness also and physical endurance to stay long in the pitch. Whatever Paarpaans mentioned in the article (except for few like Srikkanth, but this guy changed the way the game is played), all have proven themselves in Test levels and have matched the world class. Even Kambli has proved that. But with Kambli it was a different story. His downfall was only because of his drug activities. Similarly Sivaramakrishnan(Paarpaan). He was the best legspinner at his time. But he couldnt shine, because he was a drug addict. Even now I have put my son in a cricket coaching and see lot of brahmin boys including my son. But I dont see lot of members from other communities. If they really want, they can always join. No one is stopping. Paarpaana blame pannaradha niruththunga. Munnera vazhiya paarunga.
Jayakumar
உண்மை எப்பொழுதுமே கசக்கும். இந்த கட்டுரை ஆதாரங்களுடன் இருந்தாலும் அதை ஏற்க மறுக்கிறீர்கள். இதிலிருந்து தெரிகிறது நீங்கள் ஒரு பார்ப்பனர் அல்ல நீங்கள் கிரிக்கெட் தான் இந்தியாவுக்கு புகழ் தேடி தருகிறது, மற்றும் கிரிக்கெட் மூலமே தேச பக்தியை வளர்க்க முயலும் கூட்டம் என்று. எனக்கு எப்பொழுதே தெரியும் கிரிக்கெட் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் தான் இருக்கிறது. உதரணத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடிய 99 சதவிகிதம் பேர் பார்ப்பனர். 1 அல்லது 2 தவிர.
அது கூட யார் என்று எனக்கு ஞாபகம் இல்லை. எனக்கு தெரிந்தவரை பார்ப்பனர்களே ஞாபகத்துக்கு வருகிறார்கள்.
தெரிந்தால் சொல்லுங்களேன் Mr. MK, Subramanian.
ahamed
100% மிகச் சரியான கருத்து. வெகு சன ஊடகங்கள் பார்பனியத்தை தவிடுபொடியாக்கும் வரை இதே நிலை தான் இந்த இந்தியாவில் தொடரும்.
subramanian
Umesh Yadav,Varun Aaron,Ajinkya Rahane,Harbhajan Singh,Zaheer Khan,Mohammad Kaif,Irfan Pathan,Yusuf Pathan,Kapil Dev etc etc.
Asuran
வெகு நாட்கள் இருந்த சந்தேகம் ... நிவர்தியானது...
raghunath
yethani nallukuthan intha badrinath murali vijay pondra songihalluku chance kudupenga intha nilamai kattayama maranum athuvum tamil nadu cricket board should encurage people out of chennai and other than cross belts.
கணேஷ் எபி
நல்ல கட்டுரை. இப்படித்தான் என்று அடித்துக் கூறாமல் ஒரு விவாதத்தில் பங்கேற்பது போன்ற அடக்கமான நடை கவர்கிறது. ஆனால் இந்தக் கிரிக்கெட் அணியில் முஸ்லீம்கள் இடம் பெறுவது குறித்த உங்களின் கருத்து சரியானதாகத் தோன்றவில்லை. வெறும் மதச்சார்பின்மை எனும் முகமூடிக்காக போனால் போகிறதென்று முஸ்லீம்களுக்கு பி.சி.சி.ஐ. இடம் ஒதுக்க வாய்ப்பில்லை. 'மதச்சார்பற்ற' எனும் முகமூடி இந்திய அரசாங்கத்துக்குத் தேவையாயிருக்கலம். பி.சி.சி.ஐ. போன்ற பார்ப்பன மயப்பட்ட தனியார் அமைப்பு அதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளுமா? வட இந்தியாவில் பார்ப்பனர்களைப் போன்றே முஸ்லீம்களும் ஆதிக்கம் செலுத்தக் கூடிய பிரிவினர்தான். (விதிவிலக்குகள் இருக்கலாம்.) பாலிவுட்டில் முஸ்லீம்களின் ஆதிக்கம் கணிசமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. (சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கான், சாயிப் அலி கான் போன்ற பெரும் ஸ்டார்களை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.) கிரிக்கெட் அணியில் தென்னிந்தியாவிலிருந்து அசாருதீன் தவிர வேறு முஸ்லீம் வீரர் யாரும் நிலைத்ததில்லை. பார்ப்பனர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் பி.சி.சி.ஐ.யில் முஸ்லீம்களுக்கு குறைந்த பட்ச 'லாபி' இருக்கும் என்று படுகிறது. அப்படி இருப்பதும் ஒரு வகையில் நல்லதுதான்; முழுமையான பார்ப்பன அணியாக இருப்பதைத் தடுப்பதால். இந்திய விளையாட்டை உள்ளிருந்து அழித்துக் கொண்டிருக்கும் வைரஸ் கிருமி கிரிக்கெட்.
Balaji murugan
மிக மிக நல்ல பதிவு,
koteeswaran
சரியன தகவல் மிகவும் கவனிக் வேன்டிய் விபரம் மிக்க நன்ரி
s. kumar
stupid article by a stupid fellow

cricket is popular at the cost of so many other games
govt does not do much
sponsors are not there for other games
cricketers make too much money
people still watch cricket after so many betting scams
stop watching cricket

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.