அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிப்பு, நல்லிணக்கம் இவையெல்லாம் இஸ்லாம் போதிக்கும் நற்குணங்கள். அதேநேரம் உரிமை மீட்பு, சமூக நீதி, சமூக பாதுகாப்பு ஆகியவற்றுக்காக போராடுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. அநீதிகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராக சக்திகேற்ப எதிர்ப்பது முஸ்லிம்களின் கடமையாகும் என கூறப்படுகிறது.

யுத்தம் என்பது பல வகைப்படும். அது தமிழில் வன்முறை, கலகம், தாக்குதல், புரட்சி என பல உள் அர்த்தங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.

பொதுமக்களை துன்புறுத்தாமல் நடைபெறும் எந்த வகை தாக்குதல்களும் அநீதிக்கு எதிரான யுத்தங்களின் ஒரு பகுதி என்பதை அறிவுடையோர் ஏற்றுக்கொள்வார்கள்.

tmmk_american_embassy_640

கடந்த 14.09.2012 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்ட சம்பவங்களை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்கள் அனைவரும், குறிப்பாக முஸ்லிம்கள், ஏகாதிபத்தியம் மற்றும் ஆக்ரமிப்புகளின் எதிர்ப்பாளர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் அளவே இல்லை.

இதை, இதைத்தான் எதிர்பார்த்தோம் என குடும்பத்தோடும், நண்பர்களோடும் திரும்ப, திரும்ப அந்த சம்பவங்களை தொலைக்காட்சிகளில் பார்த்தப்படியே இருந்தனர்.

நிதானமாக பேசக்கூடியவர்கள் கூட, நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் திரைப்படத்தை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஆதரிக்கும் அமெரிக்க அரசின் திமிர்த்தனத்திற்கு எதிராக இது போன்ற எச்சரிக்கை தாக்குதல்கள் அவசியம்தான் என்றனர்.

முஸ்லிம் நாடுகளிலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக அல்லது சரிபாதியாக வாழும் நாடுகளிலும் அமெரிக்க தூதரகங்கள் எச்சரிக்கப்படுவது / தாக்கப்படுவது ஆச்சரியமல்ல.

ஆனால், முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் ஒரு நாட்டில் அதுவும் அமெரிக்காவின் மிக நெருங்கிய நடுவண் அரசு ஆட்சி செய்யும்போது தடைகளையும், தடுப்புகளையும் மீறி அமெரிக்கத் தூதரகம் சென்னையில் தாக்கப்பட்டது அமெரிக்காவின் ஆணவத்தின் மீது விழுந்த அடியாகும்.

அதுவும் உ.பி, பீஹார், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களைவிட முஸ்லிம்கள் சதவீத அடிப்படையில் குறைந்து வாழும் தமிழகத்தில் முஸ்லிம்கள் தங்கள் தன்மான உணர்வை வரம்புக்குட்பட்ட அளவில் வெளிப்படுத்தியிருப்பது தமிழக‌ முஸ்லிம்களை உலக அளவில் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது.

இயந்திரத் துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகள், தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் என எதைப் பற்றியும் கவலைப்படாது, காவல் அரண்களை உடைத்து முன்னேறி அமெரிக்கத் தூதரகத்தை சேதப்படுத்தியதும், சுவர் ஏறி குதிக்க முயன்றதும் சாதாரண வீரமல்ல. தியாக உணர்வும், உயிரைப் பற்றிக் கவலைப்படாத அர்ப்பணிப்பும் கொண்டவர்களால் மட்டுமே இத்தகைய வீரதீரங்களை நிகழ்ந்த முடியும்.

அதுவும் ஒரே நேரத்தில், அண்ணாசாலையில் ஒரு புறம் மறியல், ஆயிரம் விளக்கு மசூதி அருகே அறவழி ஆர்ப்பாட்டம், மறுபுறம் காவல் அரண்களை உடைத்து முற்றுகை என பலமுனைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஏழாயிரம் முதல் பத்தாயிரம் பேர் வரை மக்கள் கூடியிருந்தும், எல்லோரும் அமைதியாக கலைந்தது அதை விட முக்கியமானதாகும்.

அண்ணா சாலையில் தூதரதம் தாக்கப்படும்போது, ஆங்காங்கே அமெரிக்கக் கொடிகள் தீவைத்து எரிக்கப்பட்டன‌. இந்நிகழ்வுகளை சாலைகளில், பேருந்துகளில், வாகனங்களில் அமர்ந்தபடியே பொதுமக்கள் ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர். போராட்டக்காரர்கள் வாகனங்களையோ, பொதுமக்களையோ தாக்கவில்லை. தமுமுக தொண்டரணியினர் ஒருபுறம் போக்குவரத்தை சீர்செய்து, வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் பாதுகாப்போடு அனுப்பி வைத்தனர். இதை மோட்டார் சைக்கிளில் பயணித்த பலரும் பார்த்துவிட்டு, தொண்டரணியினருக்கு நன்றி தெரிவித்ததைப் பார்க்க முடிந்தது. மறுபுறம் தமுமுக தலைவர்கள் மக்களை சமாதானப்படுத்தியதையும், தொண்டர்களை கட்டுப்படுத்தியதையும் பார்க்க முடிந்தது.

இலங்கையில் முன்பு கொழும்புவில் கட்டுநாயகா விமானத் தளத்தை அதிரடியாய்ப் புகுந்து விடுதலைப் புலிகள் தாக்கினார்கள். பொதுமக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அதுபோன்ற ஒரு தாக்குதலாகவே இச்சம்பவத்தை ஒப்பிட வேண்டியுள்ளது.

அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்களின் ஆவேசத்தில் உண்மை, உணர்வு, சத்தியம் கலந்திருந்தது. அவர்களின் முகத்தில் அதைப் பார்க்க முடிந்தது. அவர்கள் செய்திகளில் இடம்பெற வேண்டும் என்பதற்காக எதையும் செய்யவில்லை என்பதை அறிய முடிந்தது. மாறாக, எங்கள் நபிகளை இழிவு செய்தால் எதையும் செய்வோம் என்பதை வெளிக்காட்டும் வகையிலேயே அவர்களது நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

ஈழத்தமிழர்களுக்காக போராடும் தமிழ் உணர்வாளர்களால், இலங்கைத் தூதரகத்தின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளது. அதே சமயம் உலகின் பலஹீனமான ஒரே வல்லரசு என்றும், சர்வதேச போலீஸ்காரன் என்றும் மார்தட்டும் அமெரிக்காவின் சென்னை தூதரகத்தை தாக்கியதன் மூலம் தமுமுகவினர் உலக கவனத்தை பெற்றிருக்கிறார்கள். இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது.

tmmk_american_embassy_641

தி ஹிந்து, இந்தியன்  எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, டெக்கான் கிரோனிக்கல் உள்ளிட்ட ஆங்கில ஏடுகள் அகில இந்திய செய்தியாக முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளன. இந்தியாவில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்படுவது இதுதான் முதல்முறை என தினகரன் வியந்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களும் தமுமுகவை சுற்றிதான் ஊடகங்கள் ஓடின! அதே சமயம் தமுமுக தலைமை இதை எப்படிப் பார்க்கிறது என்று தெரியவில்லை. நமது போராட்டங்களில் இது தேவையா? 18 ஆண்டுகாலம் ஒரு கட்டுக்குள் நடைபெற்று வந்த நமது பயணத்தில் இது ஒரு நெருடலா? அறிவுஜீவிகளும், ஊடகங்களும் இதை எப்படி பார்ப்பார்கள்? என குழம்பலாம்! பல கோடி செலவிட்டாலும் கிடைக்காத முகவரியும், நற்சான்றிதழும் தமுமுகவினருக்குக் கிடைத்திருப்பதை மறந்துவிடக் கூடாது.

காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடுகளும், அலட்சியமுமே தாக்குதலுக்கு வழி ஏற்படுத்தியிருக்கிறது. தமுமுக தலைவர்கள் உயிரைப் பணயம் வைத்து தொண்டர்களையும், மக்களையும் கட்டுப்படுத்துவதை ஊடக‌ங்களே பாராட்டுகின்றன.

காரணம், இப்போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தமுமுகவுக்கு ஒரு காலத்திலும் உதவிக்கு வரப்போவதில்லை. துக்ளக் ‘சோ’, குருமூர்த்தி போன்றவர்களும், வியர்வை சிந்தாத ஆற்காடு நவாப் போன்றவர்களும் தமுமுகவிற்குத் தேவையில்லை. மக்களும், அவர்களின் உணர்வுகளுமே இயக்கங்களுக்கு பலம் சேர்க்கும்.

சென்னை அமெரிக்க தூதரகத்தின் மீதான தாக்குதல் ஒரு நீண்ட நாளைய எதிர்பார்ப்பாகும். நசுக்கப்படும் ஒரு சர்வதேச சமூகத்தின் கோப அலைகள் கரையைக் கடந்துள்ளன. ஆக்ரமிப்பு எண்ணம், ஃபாஸிஸம், மதவெறி, முதலாளித்துவத் திமிர், ராணுவ தலைக்கன‌ம் கொண்ட ஒரு வன்முறை தேசத்திற்கு எதிராக விடுக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச மிரட்டல் தான் இது.

ஈராக்கில் 6 லட்சம் மக்களையும், ஆப்கானிஸ்தானில் 2 லட்சம் மக்களையும், ஜப்பானில் அணுகுண்டு வீசி பல லட்சம் மக்களையும் கொன்று, இன்றளவும் உலகை அச்சுறுத்தும் அமெரிக்காவை பணியவைக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.

இது மக்களே முன்நின்று நடத்திய ஒரு தாக்குதல். அங்கு அரிவாள், ஆயுதங்கள், குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை. கற்களும், கைகளில் கிடைத்த கம்புகளும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது திட்டமிட்ட தாக்குதலும் அல்ல; கட்டுமீறிய மக்கள் உணர்வுகளின் வெளிப்பாடு.

அடக்கப்படுவதாக, ஒடுக்கப்படுவதாக, நசுக்கப்படுவதாக கருதும் ஒரு சமூகம் ஜனநாயக வரம்புக்குட்பட்டு நிகழ்த்திய குறைந்தபட்ச யுத்தம்!

ஆங்கிலேயர்களை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய அஹிம்சைப் போராட்டங்களின் போது ‘சௌரி - சவுரா’ தாக்குதல் சம்பவங்கள் எப்படி எதிர்பாராமல் நடந்ததோ அது போலத்தான் இதுவும். அதனால், காந்தியடிகளின் மொத்த போராட்டங்களையும் வரலாறு விமர்சித்துவிட்டதா என்ன?

தமுமுக தோழர்களே... உங்களுக்கு எங்களின் புரட்சிகர வாழ்த்துகள்...! உங்களின் வீரதீர நிகழ்வுகளை வரலாறு அங்கீகரிக்கும்! சமகால மக்கள் பாராட்டுகிறார்கள்!

தோழமையுடன்...

இரா.இளஞ்செழியன், ஷி.ராஜா, கி.இஸ்மாயில், ஷி.அஸாருதீ

Comments

17 comments

17
பகுத்தறிவாளன்
இஸ்லாமியர்களுக்கு மொழிப்பற்றை விட மதப்பற்றே முதன்மையானது என்பது இதன் மூலம் உண்மையாகிறது.

ஈழத் தமிழர் விவகாரத்தில் இதை செய்வதற்கு அவர்கள் ஏன் தயங்க வேண்டும் ?

அழகான தமிழ்ப்பெயர்கள் ஆயிரமிருந்தும் அவர்கள் அரபியில் மட்டும் அவர்கள் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும் காரணமென்ன ?

தமிழ் நாட்டில் உள்ள மசூதிகளில் ஏன் அரபியில் பாங்கு பாடுகிறார்கள் ?

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் மற்ற மதங்களே இல்லாமல் செய்வது இழி செயலாக தெரியவில்லையா ?

குறிப்பு : நான் அனைத்து மதங்களுக்கும் எதிரானவன்.
Padmanaban
இந்தக்கட்டுரை கீற்று தளத்தில் வந்தது ஆச்சர்யமாகவும் வேதனையாகவுமிருக்கிறது.

ஈராக் போர், ஆப்கனில் தாக்குதல், பாகிஸ்தானில் ஆளில்லாத விமானத்தாக்குதல் என பல நிகழ்வுகள் நடந்தும், அப்பொழுது வாய்திறக்காத இம்மக்கள், இவர்கள் பார்க்காத ஒரு படத்தை எதிர்த்து இவ்வளவு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி கூடங்குளம் பிரச்சனையை இருட்டடிப்பு செய்ய உதவியிருக்கிறார்கள் எனச் சொன்னால் அது மிகையல்ல.

அதுமட்டுமில்லாமல், தூதரக தாக்குதலை பாராட்டி எழுதியிருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. ஈழ தமிழர்களின் மீது நடந்த தாக்குதலுக்கு எதிராக செயல்படும் பிரதான நாடு அமெரிக்காதான். அவர்களை எப்படி கீற்று தளம் இப்படி தூற்றுகிறது என்பது வியப்பு. இந்திய தேசத்தின் அழுத்தத்தின் காரணமாக அவர்களால் இலங்கைக்கு எதிராக முழு சுதந்திரத்தோடு இன்னும் செயல்படமுடியாத சூழல். சரி நாம் இந்தப்படத்தை பற்றி பேசுவோம்.

இந்த கட்டுரையின் ஆசிரியர் அந்த படத்தை பார்த்தாரா என தெரியவில்லை. நான் பார்த்தவரையில் அது ஒரு குப்பை. ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற படங்களால் இஸ்லாம் மாசடையும் என எப்படி இந்த மக்கள் நம்புகிறார்கள்? நான் தெரிந்துகொண்ட வகையில் இஸ்லாம் ஒரு உன்னதமான மதம். இது போன்ற தவறான குப்பைகாளால் அம்மதத்தை ஒன்றும் செய்ய முடியாது.

அடுத்ததாக இப்படத்திற்கு எப்படி அமெரிக்க பொறுப்பாகும்? அமெரிக்காவைப்பற்றி தவறான நிறைய படங்கள் பல நாடுகளில் தயாரித்து வெளியிடப்பட்டிருக்கிறது என்பதும், அதற்காக அமெரிக்க மக்கள் அந்ததந்த நாடுகளின் தூதரகத்தின் முன் போராட்டமோ தாக்குதலோ நடத்தவில்லை என்பதையும் கட்டுரை ஆசியர் கவனத்தில் கொள்ளவேண்டும். உண்மையான கருத்து சுதந்திரம் உள்ள நாடு அமெரிக்கா. நியூயார்க் நகரத்தில் இருக்கும் ஒரு மசூதியில் இன்னும் ஒசாமாவிற்கு ஆதரவான கருத்தை பரப்பும் குழுக்கள் இருக்கத்தான் செய்கிறது. அவரை ஒரு கடவுள் என சொல்வதும் அதுபற்றிய துண்டுபிரசுரத்தை கொடுப்பதும் நடந்துகொண்டுதானிருக்கிறது, அவர்களை யாரும் தடை செய்யவில்லை, தாக்கவில்லை. உண்மையான கருத்து சுதந்திரமிருப்பதாலே இது இங்கு சாத்தியம். விடுதலைப்புலிகளின் கொடியை நம்மால் சென்னையில் எடுத்துச் சென்றால் நம்ம காவல்துறை கண்டிப்பாக வழக்குதொடர்ந்து உள்ளே தள்ளும். ஆனால் நாம்தான் மிகப்பெரிய சனநாயக நாடு? விந்தையாக இருக்கிறது.

தமிழக இஸ்லாமியர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள் என்பதை யாரும் உணர்ந்தாக தெரியவில்லை. அவர்கள் மற்ற மதத்தினரோடு இணக்கமாக தொடர்ந்து இருக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்வதோடு இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடாமல் தொடர்ந்து இஸ்லாத்தின் நன்மைகளை பரப்ப வேண்டும்.

அன்புடன்,
பத்மநாபன்
Bala
I was very disappointed to hear that protests against America have started in Chennai. This whole situation is so stupid. They are doing all of this because one random American who no one has ever heard of decided to make his own little video about why he doesn't like Islam. He has nothing to do with US government. He does not work for the government. And he is not famous. He is not an important person. It is just an American who is a hateful, bad person. No one in America is punished just for saying what they think. The freedom of speech is protected here, as it should be, and this man had the right to make a film about whatever he wanted to. But that does not mean that the country supports what he said. Having the freedom to say what you want is like having the freedom to eat what you want. Just because you can eat foods that are bad for you does not mean you should, and it does not mean the government thinks that bad foods are good. Most Americans didn't even know about this small film until people in other countries started protesting. And Muslims don't hate America because of one American's personal opinion. This film was made and put on the internet in July. The protests didn't start until September 11th. That shows that it was organized by a few hateful Muslims in the Middle East who were looking for a reason to protest America on September 11th. The whole problem is caused by a few hateful people in the Middle East and one hateful man in America. Because of that, four innocent Americans have been murdered, our embassies all over the world have been attacked, our government is apologizing to everyone because they have to show that they do not support the film that this man made even though they had nothing to do with it, and last week several big universities in the US are closed because they are receiving bomb threats from Muslims. The man should not have made a hateful video about any religion or group of people. And Muslims should not have reacted to one person's thoughts by saying they hate everyone and killing Americans who did nothing wrong. The whole situation is just very disappointing.
உமர்கயான்.சே
ஒரு மார்க்கத்தின் தலைவரை மிக மோசமாக சித்தரித்து எவன் வேண்டுமானாலும் திரைப்படம் எடுக்கலாம் அதை எதிர்த்தால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. அமெரிக்காவின் அயோக்கியதனத்தை ஆதரித்து கருத்திடுவது எந்த வகையிலும் நியாம் இல்லை. கீற்று இந்த கட்டுரையை பிரசுரித்ததில் என்ன தவறு இருக்கிறது. இன்றைக்கு இசுலாமிய இயக்கங்கள் பொதுவெளியில், பொது போராட்டங்களை முன்னேடுத்துவருவதை பின்னுட்டமிடுபவர்கள் பார்க்க தவறியதையே காட்டுகிறது. கூடங்குளம் போராட்டத்தை திசை திருப்புகிறார்களாம் என்ன ஒரு பார்வை தமிழகத்தில் இசுலாமிய அமைப்புகள், குறிப்பாக த.மு.மு.க. மனிதநேயமக்கள் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜாமாத் போன்ற இயக்கங்கள் கூடங்குளம் அணு உலைக்கு எதிராகவும், போராடிய மக்களை அரச பயங்கரவாதத்தின் மூலம் ஒடுக்க நினைக்கும் தமிழக அரசுக்கு எதிராகவும் தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் போராடியதை இவர்கள் மறந்து விட்டார்களா..?
தமிழீழத்திற்கு ஆதரவாக இருந்தால் மட்டும்தான் இசுலாமியர்களை ஏற்றுக்கொள்வீர்களா..?
ஆனாலும் தமிழீழத்திற்கு ஆதரவாக முதல்தியாகம் செய்தவனும் ஒரு இசுலாமியன் 1995ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று பெரம்பலூர் வீதிகளில் தன் தேகத்திற்கு தீவைத்து தனது மார்க்க நம்பிக்கையில் தற்கொலை கூடாது என்ற நிலையிலும் ஈழதமிழர்களை காப்பாற்று என முழக்கமிட்டு மடிந்தானே முதல் நெருப்பு அப்துல்ரவூப் அவனை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். தமிழ்தேசியம் பேசும் உங்களில் எத்தனை பேர் தமிழக சிறைகளில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என போராடி இருக்கிறீர்கள். கடந்த ஆறு மாதமாக அரசியல் சிறைவாசிகளின் விடுதலை வேண்டி ஒரு குரல் ஒலித்துகொண்டு இருப்பதையும் அதில் தமிழ்தேசிய போராளிகளையும், தலித்விடுதலையாளர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கியுள்ளதை உங்கள் எத்தனை பேருக்கு தெரியும்.
தமிழீழத்திற்காக அமெரிக்க உதவுகிறதாம் அதை எதிர்க்க கூடாதாம் என்ன ஒரு வேடிக்கை. உலக பயங்கரவாதி என அனைத்து சனநாயக ஆற்றல்களாலும் அம்பலப்படுத்தபடும். உலக பேட்டை ரவுடி அமெரிக்காவின் அயோக்கியதனங்களை கண்டிக்காமல் வாய் முடி மொளனியாக இருக்க சொல்கிறீர்களா..?
தமிழக இசுலாமியர்களை பொருத்தவரை தமிழகத்தின், தங்கள் தாயகத்தின் நலன்களுக்காக எப்போழுதும் களமாடுவார்கள், அதே வேலையில் தங்கள் மார்க்க விடயங்களில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளமாட்டார்கள்.
தமிழ்தேசியர்களே…
ஈழவிடுதலைப்போராட்டத்தில் அங்கு இன்னொரு சிறுபான்மை தேசிய இனமான இசுலாமியர்களுக்கும்,தமிழர்களுக்கும் இடையே ஏற்பட்ட சிக்கலை போன்று தமிழகத்திலும் ஏற்படுத்திவிடாதீர்கள்.
தமிழகத்தில் இருக்கும் சிறுபாண்மை சமுத்தையும் உள்ளடைக்கிய விடுதலை போராட்டமே வெற்றி பெரும்.
இவர்களை தவிர்த்து எந்த விடுதலையை அடையப்போகிறீர்கள்.
தேவையற்ற முரண்களை கூர்மைப்படுத்தாதீர்கள்.
அறுமையான இந்த கட்டுரை போற்றக்கூடியதே…
கட்டுரையாளருக்கும், அதனை வெளியிட்ட கீற்றுவுக்கும் எங்களின் நன்றியும், நேசிப்பும்…
வாழ்த்துக்களுடன்.
சே.ஜெ.உமர்கயான்.வழக்கறிஞர்.
முதன்மை ஒருங்கினைப்பாளர்.
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.
தமிழ்நாடு
NAJIR AHAMED
அன்புடன் பகுத்தறிவாளன் சகோதரருக்கு ,
இஸ்லாமியர்களுக்கு மொழிபற்றும் உண்டு இனப்பற்றும் உண்டு நாட்டு பற்றும் உண்டு அதனால் தான் எங்கு தமிழனுக்கு
எது நடந்தாலும் எங்காவது ஒரு இஸ்லாமிய தலைவன் குரல் கொடுப்பான்,தமிழையும் மதத்தையும் இணைக்க வேண்டாம்
தமிழ் என்று பெயர் வைத்து கொண்டு தமிழை கொச்சை படுத்தும் தலைவர்களும் தமிழே என் உயிர் என சொன்ன தமிழ்
தாயின் பிள்ளை என சொன்னவர்கள் எல்லாம் தன் மகன்களையும் பேரன்களையும் ஆங்கில பள்ளியில் தான் படிக்க
வைக்கிறார்கள் ,எங்கும் ரசூல் வழியில் செல்ல வேண்டும் என்பது எங்கள் கோட்பாடு அதனால் தான் ரசூல் ஸல் எப்படி
மக்களை தொழுகைக்கு அழைப்பு விடுதார்களோ அப்படி தான் அழைப்பு கொடுக்க முடியும் இந்த வழிமுறை எல்லா நாட்டிலும்
நடப்பது நீங்கள் சொல்லி எங்கள் மத கொள்கை மாற்றி கொள்ள முடியாது உங்களுக்கு மேலும் அறிவுரை வேண்டுமானால்
மதமே இல்லை என்று சொன்ன அப்துல்லாஹ் (பெரியார்தசனிடம்) கேளுங்கள் உங்களுக்கு சரியான விளக்கம் கிடைக்கும்
yaseen
அமெரிக்க துதரகத்தை தாக்கிய த மு மு க சகோதர்களூக்கு இந்த அடியனின் ராயல் சல்யூட்
smubarak
சூப்பர் கட்டுரை
Guest
கருத்து சுதந்திரம் என்றால் நான் கூறிய கருத்தை ஆதரங்களுடன் விமர்சிக்க வேண்டும். நான் சொல்லாத ஒரு விசயத்தையோ , நான் செய்யாத ஒரு செயலையோ சொன்னதாக ,செய்ததாக அவதூறு சொல்வது கருத்து சுதந்திரம் அல்ல. இன்றைய தலைவர்களின் மனைவியை பற்றியோ , அல்லது தலைவர்களின் பெயரில் அவரை போல வேடமிட்டு ஆபாச படம் எடுத்தால் ஒத்துகொள்வார்களா ? சாதாரண அரசியல் தலைவர்களை , சினிமாகாரர்களை பற்றி இல்லாததை சொன்னாலே அவர்களுடைய தொண்டர்களால் தாங்க முடியவில்லை. அப்படிஎன்றால் முஸ்லிம்கள் தங்கள் வழிகாட்டியாக மதிக்க கூடிய , மனிதர்களிலே முதல் இடத்தில் வைத்து போற்ற கூடிய ஒரு இறைதூதரை குறை கூறினால் அவர்களால் தாங்க முடியுமா ? என்று மற்ற மத சகோதரர்கள் சிந்திக்க வேண்டும். கருத்து சொல்பவர்கள் தங்கள் தாயாரை கெட்ட வார்த்தையால் திட்டினால் ஏற்று கொள்வார்களா ? முஸ்லிம்கள் நபியை தங்கள் குழந்தைகள், பெற்றோர்கள், ஏன் தங்கள் உயிரை விட மேலாக மதிக்கிறார்கள் இந்த விஷயம் இத்தனை வருட காலம் பத்திரிக்கை நடத்துபவர்கள் கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டும்.
அடுத்ததாக இஸ்லாமோ முஸ்லிம்களோ அறிவிப்பூர்வமான விவாதத்திற்கோ, விமர்சனத்திற்கோ ஒரு காலமும் அஞ்சுவதில்லை. குரானிலுள்ளதை விமர்சியுங்கள், நபியின் சொற்களில் செயல்களில் வரலாற்றிலிருந்து எடுத்துக்காட்டி விமர்சியுங்கள். முஸ்லிம்கள் பதில் தர தயாராக இருக்கிறோம். எல்லாவற்றிற்கும் பதில் உள்ள மார்க்கம் இஸ்லாம் (மவ்லவி பி.ஜே. , ஜாகிர் நாய்க் போன்றவர்கள் எந்த கேள்விக்கும் ,பதில் தர தயாராக இருக்கிறார்கள், எந்த விவாதத்தையும் சந்திக்க தயாராக இருக்கிறார்கள்) ஆனால் இந்த மாதிரி இல்லாததை சொல்வது பெட்டை தனம் . அவர்களுடைய இந்து மத புராணங்களில் உள்ள ஆபாச கருத்துகளை பற்றியோ, பைபிளில் உன்னதப் பாட்டு அதிகாரத்தில் உள்ள ஆபாசங்களை பற்றியோ இருப்பதை கூறி ( அவதூறாக இல்லாததை கூற தேவையில்லை ) விமர்சிக்க , விவாதம் செய்ய திராணி உண்டா ? என்று கேட்க ஆசைப்படுகிறேன்.

ஒரே மொழி பேசுகிறார்கள் என்பதற்காக இலங்கையில் உள்ள தமிழர்களை ( முஸ்லிம் தமிழர்களெல்லாம் இவர்களுக்கு தமிழர்கள் அல்ல , இந்துக்கள் மட்டுமே தமிழர்கள் ) தங்கள் உடன்பிறப்புகளாக சித்தரித்து இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் செய்கின்றனவே அதனை எதோ உரிமை தியாகப் போராட்டம் போல இங்குள்ள மீடியாக்களும் சித்தரிக்கின்றணவே , கூடங்குளத்தில் மின்சாரம் உற்பத்தியானால் அனைத்து தமிழ் நாட்டவர்க்கும் நன்மை என்று பாராமல் போராடுபவர்களை விடுதலை போராளிகள் போல் சித்தரிகின்றனவே இதுவெல்லாம் அரசியலாக தெரிய வில்லை. முஸ்லிம்கள் விஷயம் என்றால் மீடியாக்களுக்கு அறிவு ஞானம் அதிகம் வந்து விடுவது இயல்பாக உள்ளது
போராடியதால தான் இந்தியாவின் கூகுளில் அந்த படம் தடைசெய்யப் பட்டது. இதையும் தாண்டி இந்திய முஸ்லிம்கள் எதிர்பார்ப்பது அமெரிக்க அரசிடம் இந்தியா தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்பது. ஒரு இந்து கடவுளின் பெயரையோ உருவத்தையோ பிற நாடுகள் தவறாக பயன்படுத்தி விட்டால் இந்திய பாராளுமன்றத்திலேயே கண்டனம் தெரிவிக்கப் படுகிறது. சீக்கியர்களுக்கு அமெரிக்காவில் ஒரு பிரச்சினை என்றால் இந்தியா இங்கிருந்து எகிறுகிறது. முஸ்லிம்கள் விஷயம் என்றால் கண்டும் காணாமல் இருப்பது ஏன், ? என்பதே இந்தியாவில் உள்ள கோடானு கோடி முஸ்லிம்களின் கேள்வி ?
Padmanaban
பின்னூட்டம் என்ற பெயரில் எதையும் திணிக்க முடியாது. என்னுடைய பின்னூட்டத்தில் இஸ்லாமையோ அல்லது இஸ்லாமிய சகோதரர்களையோ குறை சொல்லவில்லை. அமெரிக்கா செய்யும் எல்லா செயல்களையும் நியாயப்படுத்தி பேசவில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். அந்தப்படத்தை பார்த்தபிறகுதான் நான் கருத்து எழுதினேன். திரும்பவும் சொல்கிறேன் அது ஒரு குப்பை. யாரோ ஒரு பைத்தியக்காரன் செய்த செயலுக்கு எப்படி ஒரு தேசம் பொறுப்பேற்க முடியும்? என் அறிவுக்கு எட்டிய வரையில் இது ஏதோ அந்த படத்திற்கு எதிராக நடக்கும் போராட்டம் மாதிரி தெரியவில்லை. அமெரிக்காவிற்கு எதிராக தங்களின் எதிர்ப்பைக்காட்ட ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் உண்மை. உண்மையான நியாமான காரணத்தை சொல்லி போராடுங்கள். சக மனிதானாக நாங்களும் உடன் வருகிறோம். கடவுள் என்பவர் மக்களை காப்பவரே. கடவுளை பாதுகாக்க வேண்டிய அவசியமோ, தேவையோ, அதிகாரமோ மாநிடப்பிறவிகளுக்கு கிடையாது. அப்படி செய்தால் நாம்தான் கடவுளை அவமதிக்கிறோம் அல்லது அவரின் சக்தியின் மீது சந்தேகப்படுகிறோம் என அர்த்தமாகும். இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். இந்துக்கள் என்றால் திருடர்கள் என அர்த்தம் கற்பித்தவர் கருணாநிதி. அதற்காக அவரை யாரும் தாக்கவில்லை. திரும்பவும் சொல்கிறேன்... உண்மையான காரணத்தை கண்டறிந்து அமைதி வழியில் போராடுங்கள். வன்முறைக்கு நம்மண்ணில் இடம் கொடுக்க கூடாது. அது நமக்கே கேடாகத்தான் முடியும். என்கருத்தை ஒரு இந்துவின் கருத்தாக பார்க்காமல் சக மனிதனின் கருத்தாக பார்க்கவும். தனது பின்னூட்டத்தில் பெயர் சொல்லக்கூட தைரியமில்லாத ஒருவர் பல சவால்களை விட்டிருக்கிறார். தடித்த வார்த்தைகளை தவிர்ப்பது நலம். அதுமட்டுமில்லாமல் ஒரு தனிமனிதன் செய்த தவறுக்கு இந்திய அரசாங்கம் அமெரிக்க தேசத்திற்கு எதிராக கண்டனம் சொல்ல வேண்டுமென எதிர்பார்ப்பது சரியாக இருக்குமா?
நம்பி்க்கையாளன்
சகோ.பத்மநாதன் மிக அழகாக சொல்லியிக்கிறீர்கள். இதை நீங்கள் நடுநிலையோடு பார்ப்பதாகவே நான் நினைக்கிறேன். அதுபோல பொது இடத்தில் கருத்து சொல்லும் நாம் நாகரீகம் பேனுவது மிக அவசியம். அதை நீங்கள் மிக அழகாக சொல்லியிருக்கிறீகள்.

மேலும் இஸ்லாம் பற்றி நீங்கள் சற்று ஆழமாக தெரிந்திருந்தால் முஸ்லிம்களின் உணர்வுகளை நீங்கள் புரிந்துக்கொள்ள முடியும்.

(கட்டுரையாளர் சொல்வதுபோல கல் எறிந்தது சரி என்று நான் சொல்லவில்லை) ஆர்பாட்டம தேவைதான் அது வன்முறையாக மாறாமல் இருக்கவேண்டும் மேலும் பொது மக்களுக்கு இடையூராகவும இருக்க கூடாது. என்பதே என் கருத்து.

அது போல் விமர்சனம என்பது வேறு இழிவு படுத்துவது என்பது வேறு இஸ்லாம் விமர்சனத்தை வரவேற்கிறது அதற்கு பதில் சொல்ல நாங்கள் தயாராகவே இருக்கிறோம். உள்ளதைகொண்டு விமர்சனம் செய்யவேண்டும் இல்லாதை சொல்லி இழிவு படுத்த நினைத்தால் அதை வேடிக்கை பார்ப்பது சரியானதாகவோ சகிப்புத்தன்மை என்றோ நான் கருத வில்லை.

ஒரு பத்திரிக்கையாளர் சொன்னார் அப்துல் கலாம், சாருகான் அமெரிக்காவில் அவமானப்படுத்த பட்டபோது கூட முஸ்லிம்கள் ஏன் இப்படி ஆவேசப்பட வில்லை என்று. அவர் இஸ்லாத்தை சரியாக புரியவில்லை என்றே நாங்கள் எண்ணுகிறோம். காரணம் முஹம்மது நபி அவர்கள் ஒரு இறை தூதர் முஸ்லிம்கள் ஆகிய நாங்கள் இந்த உலகத்தில் உள்ள (மணைவி, மக்கள், செல்வம்)அணைத்தையும் விட அதிகமாக நேசிக்க கூடிய ஒரு மனிதர் அவரை விமர்சனம் செய்தால் வரவேற்கிறோம் குற்றச்சாட்டுகளுக்க பதில் சொல்கிறோம். ஆனால் இல்லாததை சொல்லி இழிவு படுத்தினால் அதை வேடிக்கை பாருங்கள் சகிப்புத்தன்மையுடன் இருங்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் சகோ. முஸ்லிம்கள் எப்படி? முஹம்மது நபியை நேசிக்கிறார்கள் என்று சற்று சிரமம் பாராமல் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் பத்மநாதன்.இது எனது ஒரு அன்பு வேண்டுகோள்.

ஆனால் ஒன்று இந்த எதிர்ப்பக்களை மட்டும செய்துவிட்டு முஸ்லிம்கள் பெயர் அளவில் வாழ்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அப்படி அல்லாமல் இன்று அநேக மக்கள் இஸ்லாம் என்றால என்ன என்றே தெரியாமல் வாழ்கிறார்கள் அவர்கள் இஸ்லாததை தெரிந்து கொள்ள முஸ்லிம்கள் முதலில் தங்கள் வாழ்வில் நடைமுறை படுத்த வேண்டும் அடுததாக அதை மற்றவர்களுக்கு தங்கள் செயல் மூலமாக வாழ்ந்து காட்டவே்ண்டும்.

மற்றபடி பகுத்தறிவாளன் சொல்கிற பெயர் வைப்பது இஸ்லாமிய கட்டளை அல்ல அது இந்திய ஜாதி முறைகளுக்கு பயந்து. இன்றும் அமெரிக்காவில் பழய பெயரிலேயே முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

அடுத்ததாக பாங்கு சொல்வது ஒரு யூனிட்டிக்காக தான் ஒரு ஒழுங்கு முறை வணக்கத்தில இஸ்லாத்தில் உள்ளது. உலகில் நீங்கள் எங்கு சென்றாலும் ஒரு முஸ்லிமால் பள்ளிவாசலை தெரிந்துகொள்ள முடியும் தொழுகையும் எந்த சிரமம் இல்லாமல் நிறைவேற்ற முடியும். இதில் மொழிபற்றோ, தேசபற்றோ, இனபற்றோ எதுவும் தடையாக இருக்காது.

ஒரு இந்தியன் முதலில் ஒரு உண்மையான முஸ்லிமாகவும் தன் தேசத்தை நேசிக்க இந்தியனாகவம் கூடிவனாகவும இருக்க முடியும்.

அது போல ஒரு அமெரிக்கன் ஒரு உண்மையான முஸ்லிமாகவவும் தன் தேசத்தை நேசிக்க கூடிய அமெரிக்கனாகவும் வாழ முடியும்.

இதை புரிந்துகொண்டால் சரி.
Padmanaban
நன்றி திரு நம்பி்க்கையாளன் அவர்களே. கண்டிப்பாக எல்லா மதங்களை பற்றியும் ஆழமாக தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்.
alaudeen
மொழியை விட இஸ்லாம் மீதான பற்று அதிகம் இருப்பதில் தவறு ஏதும் இல்லை என்றுதான் நினைக்கிறேன் . ஏனென்றால் மொழி ஒருமனிதனை
எந்த விதத்திலும் கட்டுபடுத்த முடியாது . ஒரு மொழி எப்படித்தான் எதையும் செய்ய வேண்டும் என்று வரைமுறைகளை கொடுக்கவில்லை .
ஒரு மொழியை பேசுகிற மனிதன் அந்த மொழியை பேசுகிற மக்களுக்காக மட்டும் போராடுகிற தன்மையை கொடுக்கிறது . ஆனால் இஸ்லாம்
மீதான பற்று அதிகமாக இருக்கும்போதுதான் உலகத்தில் எங்கு அநீதி நடந்தாலும் அதை யார் செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற
தைரியத்தைiயும் அதற்கான கூலி அல்லாஹ்விடம் உண்டு என்ற நம்பிக்கையையும் கொடுகிறது . மனிதனுக்கு தேவையான எல்லா நல்ல வழிமுறைகளும் இஸ்லாமில் இருக்கும்போது அதன் மீதான பற்று அதிகம் இருப்பதனால் சமுதாயத்திற்கு நன்மைதான் விளையும் . இன்றைய சூழலில் நாம் சந்திக்கின்ற அத்தனை பிரச்சனைகளுக்கும் இஸ்லாமே தீர்வாக இருக்கும்போது இஸ்லாத்தின் மீதான பற்று அதிகம் இருப்பதில்
தவறேதும் இல்லை . எவன் மது அருந்தாமல் இருக்கிறான் என்று சொல்லும் இந்த காலத்திலும் மது அருந்தாத இளைஞர்களை முஸ்லிமில் பார்க்கலாம் . வரதச்சனைக்கு எதிராக இருக்கிற இளைஞர்களை முஸ்லிமில் பார்க்கலாம் . இப்படி ஒழுக்கத்தை எல்லா விதத்திலும் போதிக்கின்ற இஸ்லாமின் மீது மொழியை விட பற்று வைப்பதில் எந்த தவறும் இல்லை . வட்டிவங்காதே பிறர் உழைப்பை சுரண்டாதே என்று சொல்வதோடு மட்டுமல்லாது அதை செயல் படுத்த சரியான வழிமுறைகளை கொடுத்து செயல்படுத்திகாட்டுகிற இஸ்லாம் மீது மனைவியைவிட செல்வத்தை
விட பெற்றோரைவிட மொழியைவிட இனத்தைவிட பற்று அதிகம் இருப்பதில் தவறில்லை . அப்படி இருப்பதினால் இவர்கள் அனைவர்களுக்கும்
மட்டுமல்லாது சமுதாயத்திற்கும் நாம் நேசிக்கிற நாட்டிற்கும் நன்மைதான் நடக்கும் .
viyasan
//மொழியை விட இஸ்லாம் மீதான பற்று அதிகம் இருப்பதில் தவறு ஏதும் இல்லை என்றுதான் நினைக்கிறேன் //

அதாவ‌து இந்துக்க‌ள் த‌ம‌து ம‌த‌த்தில் அதிக‌ம் ப‌ற்றாக‌ இருந்தால் அவ‌ர்க‌ள் இந்துத்துவாக்க‌ள், ம‌த‌வாதிக‌ள், அவ‌ர்க‌ள் வெறுக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள், தூற்ற‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள். ஆனால் முஸ்லீம்க‌ள் ம‌ட்டும் இஸ்லாம் மீது அதிகம் ப‌ற்றாக‌ இருப்ப‌தில் த‌வ‌றில்லை. இதைத் தானே ஆர்.எஸ்.எஸ் போன்ற‌ இந்து அமைப்புக்க‌ளும் கூறுகின்ற‌ன‌.அவ‌ர்க‌ளும் இல‌ங்கை முத‌ல் இமால‌ய‌ம் வ‌ரையுள்ள‌ இந்துக்க‌ளை இன‌,மொழி வேறுபாட்டை ம‌ற‌ந்து இந்துக்க‌ளாக‌ ஒன்று ப‌ட்டு இந்து ம‌த‌த்தின் மீது அதிக‌ம் ப‌ற்று வைக்குமாறு கூறுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளை எத்த‌னை பேர் எதிர்த்து எழுதுகிறார்க‌ள். ஆனால் அலாவுதீன் ம‌ட்டும் ம‌த‌த்தின் மீது அதிக‌ம் ப‌ற்று வைப்ப‌த்தில் த‌வ‌றில்லை என்ப‌தை யாரும் எதிர்க்க‌வில்லை. பார்த்தீர்க‌ளா, கீற்றில் எப்பொழுதுமே முஸ்லீம்க‌ளுக்கு ஒரு நீதி, இந்துக்க‌ளுக்கு ஒரு நீதி தான்.
மனோகரன்
தோழர் அலாவுதீன்,
போராட்டத்தை மனமார பாராட்டுகிறேன். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல.
அதே நேரத்தில் கீழ் இருக்கும் தங்கள் கருத்துகள் ஏதோ ஈற்று கொள்ள முடியவில்லை. //ஏனென்றால் மொழி ஒருமனிதனை எந்த விதத்திலும் கட்டுபடுத்த முடியாது . ஒரு மொழி எப்படித்தான் எதையும் செய்ய வேண்டும் என்று வரைமுறைகளை கொடுக்கவில்லை . ஒரு மொழியை பேசுகிற மனிதன் அந்த மொழியை பேசுகிற மக்களுக்காக மட்டும் போராடுகிற தன்மையை கொடுக்கிறது . ஆனால் இஸ்லாம் மீதான பற்று அதிகமாக இருக்கும்போதுதான் உலகத்தில் எங்கு அநீதி நடந்தாலும் அதை யார் செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற தைரியத்தைiயும் அதற்கான கூலி அல்லாஹ்விடம் உண்டு என்ற நம்பிக்கையையும் கொடுகிறது//

[1] சாதி/மத வெறி:

தமிழினத்தின் மிகப் பெரும் போதை மதமும் அதனோடுப் பிறந்த இரட்டைக் குழந்தையான சாதியும்தான். வேலியேப் பயிரை மேய்வது போல, காக்க வந்த கடவுளே மக்களை கட்டிப் போட்டிருப்பது மிகப் பெரிய கொடுமை. வெறும் உடலும், உள்ளமும் மட்டுமல்ல மனிதன்; உயிர் என்றும் ஒன்று இருக்கிறது. எங்கிருந்து வருகிறது, எங்கேப் போகிறது என்று எதுவும் அறியப்படாத ஒரு பெரும் புதிர் அது. ஆத்மா, ஆன்மா, ஆருயிர் என்றெல்லாம் அழைக்கப்படுகிற அதனை எப்படிக் கையாள்வது என்பது மனித குலம் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுள் ஒன்று. இந்த ஆத்மனை குழப்பமான, சிக்கல்கள் நிறைந்த வாழ்வில் நங்கூரம் பாய்ச்சி நிலை நிறுத்துவது எப்படி என்பது மாபெரும் கேள்வி. நமது சமநிலையை எப்படிப் பேணி பாதுகாத்துக்கொள்வது (சென்டெரிங்) என்பதாகவே பலர் இந்தப் பிரச்சினையை அணுகுகிறோம். வெறும் பொருள் மட்டுமின்றி அருள் என்றும் ஒன்று இருப்பதை ஒத்துக் கொள்கிறவர்கள், வாழ்வின் அர்த்தம் என்ன என்று சிந்திக்கிறவர்கள், அளவிடமுடியாத பிரபஞ்சத்தை அறிய விரும்புகிறவர்கள் என பலரும் கடவுளை, ஆன்மீகத்தை நாடுகின்றனர்.

தெரியாத ஒன்றை, புரியாத ஒன்றை, பயப்படுகிற ஒன்றை கையாள்வதற்கு மதம் முகிழ்த்தது. இன்ன மதம் என்று பெயர் வைத்து, புனித நூல் என ஒன்றை எழுதிக் கையில் கொடுத்து, ஒரு புனிதரை இறைத்தூதன் எனச் சுட்டிக்காட்டி, இவற்றைச் சுற்றி ஒரு மாபெரும் நிறுவனத்தைக் கட்டியெழுப்பி, ஒரு சில மூடப் பழக்க வழக்கங்களை இவற்றில் விரவி, சாவி கொடுத்த பொம்மைகளாய் நம்மை இயங்க வைத்து விடுகின்றனர் மதவாதிகள். இந்த மதச் சடங்கு, சம்பிரதாயங்களுக்குள் மாட்டிய பிறகு, மூளையை அடகு வைத்த பிறகு, முதுகெலும்பை இழந்துவிட்ட பிறகு, கண்டவனெல்லாம் தோள் மீது ஏறி சுபிட்சத்துக்கு அழைத்துச் செல்கிறேன், நான் சொல்வது போலச் செய் என்று நெறிப்படுத்திய பிறகு, நாம் மதத்துக்கு அடிமையாகிறோம்.

ஒரு சிலர் தம் குழந்தைகளுக்கு ஒழுக்கம், நல்லாறு பற்றி கற்பிப்பதற்கு மதம் வேண்டும் என வாதிடுகின்றனர். அதுபோல வள்ளுவர் சொல்கிறார்: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.

அதாவது தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது என மு.வ. பொருள் சொல்கிறார். தனக்குவமை இல்லாதவன் தாள் சேர்வது என்பது ஏதாவது ஒரு மதத்தில் இணைவது என்றாகி விடுகிறது. இப்படி பல காரணங்களுக்காக மேம்போக்காக சிந்திக்கிறவர்கள், குழம்பிப் போகிறவர்கள் மதம் எனும் நிறுவனங்கள் கையில் சிக்கிக் கொள்கின்றனர். ஆஸாமிகளிடமும், ஆதீனங்களிடமும் மாட்டிக் கொள்கின்றனர் நம்மில் சிலர். எப்படியோ நம் மீதான ஆளுமையை அடுத்தவனிடம் கொடுத்துவிட்டு குனிந்திருப்பதைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் உடனிருக்கும் மனிதனைக் கொல்லுகிற அளவுக்கு வெறி கொள்ள வைக்கிறது மதம்.

இந்த போதைக்குள் சிக்கிய பிறகு, சாதி போதையும் சாதாரணமாகவேத் தோன்றுகிறது. மதத்தைக் கூட சிலர் மாற்றுவதற்கு தயாராயிருக்கிறார்கள்; ஆனால் சாதி அடையாளம் மிக மிக முக்கியமானதாய் இருக்கிறது. பல இடங்களில் பல நேரங்களில் மதக் கலவரமாகத் தொடங்கும் பிரச்சினை இறுதியில் சாதிக் கலவரமாக முடிகிறது. தெற்காசியாவைப் பொறுத்தவரை, இந்த சாதி அடையாளம்தான் அடிப்படை அடையாளமாக இன்றளவும் இருக்கிறது. சாதிக்கெதிராகப் போர்க்கொடி தூக்கி முகிழ்த்த இயக்கங்களுக்குள்ளேகூட சாதி புகுந்து சதிராட்டம் போடுகிறது. இந்தியாவைப் போன்றே அண்டை நாடுகளிலும், பாகிஸ்தான், வங்காள தேசத்தில் கூட, சாதியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மதம் போன்றே எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லாததுதான் சாதியும். இரண்டையுமே பிறப்புதான் தீர்மானிக்கிறது, பெற்றோர், உற்றோர்தான் பெரிதாக்கி விடுகின்றனர் நம் மனதில். மதத்தையாவது நம்மால் மாற்றிக்கொள்ள முடியும், ஆனால் சாதியை மாற்றவே முடியாது.

தமிழகத்தில் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளே 252 இருக்கின்றன. உயர்ந்த, தாழ்ந்த சாதிகள் பட்டியல் இன்னும் நீளமானது. வேதம், குலம், கோத்திரம், என்று என்னென்னவோ உட்பிரிவுகள், கிளைகள், பிரச்சினைகள் இதில் இருக்கின்றன. பாழாய்ப் போன சாதியின் அடிப்படையில் ஊர் பஞ்சாயத்து, கட்டு, நீக்கி வைத்தல், தீண்டாமை, காணாமை, நம்பாமை போன்ற சமூக அவலங்கள் சதிராட்டம் போடுகின்றன. ஊருக்குள்ளேயே ஒவ்வொரு சாதியினரும் உயிர் வாழ தனித்தனி இடம், இடையே குறுக்குச் சுவர்கள், “கீழ் சாதியினர்” பஞ்சாயத்துத் தலைவராக வரக்கூடாது என்று விதி, அடக்கப்பட்ட சமுதாயத்தவர் கோவில்களுக்குள் போகக்கூடாது, வீட்டில் மாடி கட்டக் கூடாது, ஆண் நாய் வளர்க்கக் கூடாது என்றெல்லாம் அசிங்கமான நிபந்தனைகள், கட்டுப்பாடுகள். இப்படியெல்லாம் நம்முள் பலவந்தமாக ஊட்டப்பட்ட, நம் மீது திணிக்கப்பட்ட சாதி, மத அடையாளங்கள் நம்மை அடிமைப்படுத்தி, அலைக்கழிப்பது தமிழ் இனத்தின் மிகப் பெரிய போதை.

முழுவதையும் படிக்க இதை சொடுக்கவும்.
http://kannotam.com/site/?p=1930
sar
95% of these people have no idea about the movie.. ( i totally oppose the movie).. still just in the name of the religions giving it a bad name.. the guys who took movie suceeded in thier goal to prove how violent is this religion.. if everyone starts taking movies like this what are these people going to do..
KHAJAKADAR
SAGODARAR viyasan AVARGALUKKU INDUKKALAAGA IRUNDAALUM MUSLIMGALAAGA IRUNDAALUM CHRISTAVARGALLAGA IRUNDAALUM ELLORUMAE TANGALADHU MADATHAI ADIGA MAAGA NESIKKA DAN SEIVAARGAL ADAI MATRADAI VIDA SIRANDADAAGA DAN NINAIPAARRGAL ADU IYARKAI TAVARILLAI AANAAL TANGALADHU MADATHAI PINPATRAADA ELLOORUM TAALDAVARGAL ALIKKAPADA VENDIYAVARGAL ENDRU ENNUVADHU DAAN PAASISAM ADAI DAN NEENGAL SOLLUM RSS SEIGIRADHU
iniavan
good article......your view is a rebel's view.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.