முறையற்ற ரியல் எஸ்டேட் வணிகத்தின் பெருக்கத்தால், சென்னை போன்ற மாநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் மட்டுமே வீடு வாங்கவோ, வாடகைக்கு குடியிருக்கவோ முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பும் அறிவிக்கப்படாத ஓர் அக்ரஹாரமாக உள்ளது. பார்ப்பனர்களின் பழக்க வழக்கங்களைப் பார்த்து, பிற்படுத்தப்பட்டோரும் தங்களை நவீன பார்ப்பனர்களாக உயர்த்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கிவிடுகின்றனர்.

தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் அனுமதி கிடையாது; அசைவம் சமைக்கக் கூடாது; அசோசியேஷன் சார்பில் கொண்டாடப்படும் எல்லா இந்துப் பண்டிகைகளின் செலவையும் பராமரிப்பு கட்டணத்தில் (Maintenance charge) சேர்த்து விடுவது; நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ கோலம் போட வேண்டும்; பூஜையறையில் விளக்கேற்ற வேண்டும் என கட்டாயப்படுத்துவது எனத் தொடரும் இந்துமயத்தின் அக்கிரமத்திற்கு அளவில்லை. தீபாவளியும், வினாயகர் சதுர்த்தியும் கொண்டாடலாம்; ஆனால் மே தினமோ, பெரியார் பிறந்த நாளோ கொண்டாட முடியாது. பெரியாரியவாதிகளைப் பொருத்தவரை, இத்தகைய அடுக்குமாடிக் குடியிருப்புகள் சனாதன சிறைக்கூடங்களாகவே இருக்கின்றன.

இத்தகைய குடியிருப்புகளில் இருந்து விலகி, பெரியார் முன்வைத்த மாதிரி குடும்ப வாழ்க்கையை முயற்சித்துப் பார்க்கும் குடியிருப்பாகவே இந்த 'பெரியார் குடியிருப்பு' திட்டத்தை முன்வைக்கிறோம்.

  • ஒரு ஏக்கர் நிலப்பரப்பு இடம் வாங்கி, அதில் 20 வீட்டு மனைகள் ஏற்படுத்துவது.
  • அவ‌ர‌வ‌ர் தேவைக்கேற்ப‌ இர‌ண்டு ப‌டுக்கைய‌றை அல்லது மூன்று படுக்கையறை கொண்ட‌ த‌னி வீடுக‌ள் க‌ட்டிக்கொள்வ‌து.
  • சமையலறையில் இருந்து பெண்களுக்கு விடுதலை அளிக்கும் விதமாக, ஒவ்வொரு வீட்டிலும் தனியே சமையலறை இருப்பினும், அனைத்து வீடுகளுக்கும் பொதுவாக ஒரு சமையலறையை ஏற்படுத்தி, சமையல்காரர் மூலமாக அதில் பொது சமையல் செய்வது. அலுவலகம் செல்பவர்களுக்கு மதிய உணவு (Lunch box) தயாரித்து கொடுப்பது. சமையல் பொருட்கள், சமையல்காரர்களுக்கு ஆகும் சம்பளத்தைப் பகிர்ந்து கொள்வது. (இதில் விருப்பமில்லாதவர்கள் தனியே தங்கள் வீடுகளில் சமைத்துக் கொள்வ‌த‌ற்கும் எந்த‌ ம‌றுப்புமில்லை)
  • எந்த மதப் பண்டிகைகளும் இல்லாது, பெரியார், அம்பேத்கர் பிறந்த நாள்கள் மற்றும் மே தினத்தைக் கொண்டாடுவது.
  • அவ‌ர‌வ‌ர் சேர்த்து வைத்திருக்கும் புத்த‌க‌ங்க‌ளைத் தொகுத்து, பெரியார் குடியிருப்புக்கென‌ ஒரு பொது நூல‌கம் உருவாக்குவ‌து; தின‌ச‌ரிக‌ள், இல‌க்கிய‌ ம‌ற்றும் இய‌க்க‌ப் ப‌த்திரிக்கைக‌ளை த‌ருவித்துக் கொள்வது
  • கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், குடும்ப விழாக்கள் நடத்த ஏதுவாக ஒரு சமுதாயக் கூடம்
  • வளாகம் முழுவதும் பசுமையான, பயனுள்ள‌ மரம், செடி, கொடிகளை வளர்ப்பது
  • குழ‌ந்தைக‌ள் விளையாடுமிட‌ம்
  • உட‌ற்ப‌யிற்சிக் கூட‌ம்
  • நீச்ச‌ல் குள‌ம்
  • இவை அனைத்திற்கும் ஆகும் செல‌வை (இட‌ம் வாங்குவ‌து, க‌ட்ட‌டம் க‌ட்டுவ‌து) எந்த‌ இலாப‌ நோக்க‌மும் இன்றி, குடியிருப்புவாசிக‌ள் அனைவ‌ருக்கும் அச‌ல் விலைக்குத் த‌ருவ‌து.

இவைதான் இந்த‌ 'பெரியார் குடியிருப்பு' திட்ட‌த்தின் முக்கிய‌ அம்ச‌ங்க‌ள்.

இத‌ற்கான‌ இட‌த்தை சென்னை கூடுவாஞ்சேரியிலிருந்து 3.5 கிலோமீட்ட‌ர் தொலைவில் பார்த்திருக்கிறோம். ஒரு காலி வீட்டு ம‌னையின் விலை தோராய‌மாக‌ ரூ.10 இல‌ட்ச‌ம். க‌ட்டுமான‌ப் ப‌ணி அடுத்த‌ ஆண்டு தொட‌ங்குவ‌தால், அத‌ற்கு ஆகும் செலவு, வடிவமைப்பு மற்று உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து, வீட்டுமனை வாங்குபவர்கள் அனைவரிடமும் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். த‌ற்போது இட‌ம் வாங்குவ‌து முத‌ல் க‌ட்ட‌ வேலை. 20 ம‌னைக‌ளுக்கான‌ இட‌ம் உள்ள‌து. ஏற்க‌ன‌வே 7 பெரியாரிய‌வாதிக‌ள் இத்திட்ட‌த்தில் இணைந்துள்ளோம்.
 
இத்திட்ட‌த்தில் சேர இர‌ண்டே இர‌ண்டு நிப‌ந்த‌னைக‌ள்தான்:

1. சாதி, ம‌த‌ம், கடவுள், மூட‌ந‌ம்பிக்கைக‌ளுக்கு இட‌மில்லாத சமத்துவமான வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவராக இருக்க வேண்டும்.
2. பிற்காலத்தில் மனையை விற்பதாக இருந்தாலும், முதல் நிபந்தனைக்கு உட்படுபவர்களுக்கு மட்டுமே விற்க வேண்டும்.

நீங்க‌ளும் இத்திட்டத்தில் சேர‌ விரும்பினால் தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ தொலைபேசி எண்: தோழ‌ர் ஓவியா (9994782229), தயாளன் (9841150700), கீற்று நந்தன் (9940097994, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

பெரியாரியவாதிகள் இணைந்து ஒரு மாதிரி சமூகத்தை கட்டமைப்போம், வாருங்கள்!!

Comments

13 comments

13
கி.நடராசன்
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
raam
உங்கள் மீதான கடுமையான விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும் உங்களின் இந்த முயற்சி வெற்றிபெற முழு மனதுடன் வாழ்த்துகிறேன். காரணம், வீணாய்ப்போன உள்நோக்கமும் சுயநலமும் கொண்டவர்களை உயர்த்திப்பிடிக்கும் வீண் வேலையை விட இது உருப்படியான தொலைநோக்கு திட்டம். வெற்றிபெறவேண்டும் என்று வாழ்த்துக்கிறேன். வெற்றி பெறும் என்றும் நம்புகிறேன். நான் பெரிதும் மதிக்கும் பெண்ணியல்வாதியான ஓவியாவும் இதில் இணைந்திருக்கிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சி. நான் கடவுள் மறுப்பாளனல்ல என்பதால் இந்த குடியுறுப்பில் சேர முடியாமைக்காக வருந்துகிறேன். ஆனாலும் உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்
neelaventhan
பெரியாரியல் பணியில் மிக முக்கியமான, அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பாராட்டத்தக்க செயல். இயன்ற அளவு தோள் கொடுப்போம்....
இம்முயற்சி திருப்பூர் அல்லது கோவையில் முன்னெடுக்க தங்களின் அனுபவத்தை பகிர்ந்து உதவுங்கள் என உரிமையுடனும் தோழமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.
venky
It is a good move. I felt suffocating when I am forced to live in an horrible situation. Anyway, such type of Periyar colonies are more required in Tamil nadu.
கண்ணன்
பகுத்தறிவு அக்ரஹாரம்! சூப்பர்!!
இராமியா
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். இந்த நல்வழியை மற்றவர்களும் ஆங்காங்கே பின்பற்றலாம். நீண்ட காலத்தில் நல்ல பலனைக் கொடுக்கும்.
கி.பிரபா
உருப்படியான திட்டம். எவற்றை மூடநம்பிக்கைகள் எனப் பெரியார் சொன்னார் என்ற உண்மைகளைப் பற்றிய விவரங்கள் இன்று வரை முழுமையாகக் கிடைத்தததாகத் தெரியவில்லை. தங்களின் முயற்சி தொலைநோக்குத் திட்டமே! என்றாலும் இன்னும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். இத்திட்டத்தில் இணைபவர்கள் தமிழனாக இருப்பார்களா? பெரியார் கன்னடம் என்பதால் வேற்றுமொழியாளர்களும் இணைந்துள்ளார்களா? அல்லது இணைவார்களா? மொழிச்சிக்கல் இல்லா நோக்காக இருப்பின் நலமே! பெரியாரின் கொள்கைப்படி வாழ்வது தவறன்று. அதிலும் கலப்படம் செய்யாதிருத்தல் வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என உள்ளவர்களின் இணைதல் உள்ளதா? ஆக இப்படி பல்வேறு வினாக்கள் உள்ளன.ஆகவே பெரியார் கொள்கை எனச் சொல்லிக் கொண்டு வாழ்வில் மாற்றம் என்ற பெயரில் ஏமாற்றம் கூடாதே!
Guest
வாழ்த்துக்கள் தோழர்
அதி அசுரன்
மிக மிகத் தேவையான முயற்சி. தோழர் ஓவியா, தோழர் இரமேஷ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். தோழர் நீலவேந்தன் அவர்களே, திருப்பூர், கோவை பகுதிக்குத்தான் வாகைக்குழுமம் இருக்கிறதே. அவர்கள் இதே போன்ற முயற்சியை அவசியம் முன்னெடுக்க உள்ளார்கள். ஏற்கனவே திட்டம் உள்ளது. காத்திருங்கள்.
பூ.மணிமாறன்.9488107167.
மிக ஆக்கபுர்வமான திட்டம். பெரியாரியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் சீரிய முயற்சி.கி.பிரபா சொல்வது போன்று பார்க்க தேவை இல்லை. முதலில் இது போன்ற முயற்சிகள் முன்னெடுப்பது மிக அரிது .வரவேற்கிறோம். தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
mani
திட்டமிட்டவர்களிடம் சில கேள்விகள்
1. பத்து லட்ச ரூபாய் ஒரே தவணையில் கட்ட முடியாதவர்களுக்கு எதாவது மாற்றுத் திட்டம் உள்ளதா?
2. வீடு வாங்கிய பிறகு ஒரு பெரியாரியவாதி பெரியாரின் கொள்கையில் அவரை வாசித்து முரண்பட நேர்ந்தால் அதே நேரத்தில் தொடர்ந்து முற்போக்காளராகவும் இருந்தால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?
3. பொது சமயலறையில் மாட்டுக்கறி உணவுக்கு முக்கியத்துவம் உண்டா?
4. வீடு வாங்குவதில் இட ஒதுக்கீடு கறாராக பின்பற்றப்படுமா? அதில் க்ரீமி லேயருக்கு என தனியாக எதுவும் உள்ளதா?
5. ஒரு பெரியாரியவாதியை எப்படி வரையறை செய்வீர்கள்? அதாவது நான் இதற்கு தகுதியானவனா என எப்படி கண்டுபிடிப்பது?
6. தனித்து வாழும் பெண்களுக்கு மற்றும் அரவாணிகளுக்கு என இட ஒதுக்கீடு உள்ளதா ? அவர்களில் உள்சாதி ஒதுக்கீடு எப்படி கடைபிடிக்கப்படும் ?
7. ஆதிக்க சாதியில் பிறந்து அதே சாதியில் மணம் முடித்தவருக்கு அங்கு இடம் உண்டா ?
8. பிறந்த நாள் மட்டும்தான் கொண்டாடுவீர்களா ? அல்லது வேறு ஏதேனும் பிரச்சாரம் போராட்டம் எல்லாம் இடம்பெறுமா?
9. பெரியாரை முழுதுமாக ஏற்காத அல்லது விமர்சனம் செய்யும் கம்யூனிஸ்டுகளுக்கு அங்கு இடம் உண்டா?
10. அவரவர் சேர்த்து வைத்த புத்தகத்தை மட்டும்தான் படிப்பீர்களா ? அல்லது பெரியாரை விமர்சிக்கும் புத்தகங்களுக்கு அங்கு இடமில்லையா?
viyasan
1). புல‌ம்பெய‌ர்ந்த‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளும் அங்கு வீடு வாங்க‌ முடியுமா?

2). "சாதி, ம‌த‌ம், கடவுள், மூட‌ந‌ம்பிக்கைக‌ளுக்கு இட‌மில்லாத சமத்துவமான வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவராக இருக்க வேண்டும்" என்கிறீர்க‌ள் அப்ப‌டியானால் க‌ட‌வுள் ந‌ம்பிக்கை ம‌ட்டும‌ல்ல‌, அத‌ன் அடிப்ப‌டையில் த‌ம்மை அடையாள‌ப்படுத்தும் முஸ்லீம்க‌ளும் அங்கு வீடு வாங்க‌ முடியாதா அல்ல‌து இந்துக்க‌ளுக்கு ம‌ட்டும் தான் இந்த‌ க‌ட‌வுள் ந‌ம்பிக்கை பிர‌யோகிக்க‌ப்ப‌டுமா?
3). சாதி, ம‌த‌ வெறிய‌ற்ற‌, பார்ப்ப‌ன‌ர்க‌ளை எதிர்க்கும் கோடிக்க‌ண‌க்கான‌ த‌மிழர்கள் உள்ள‌ன‌ர், அவ‌ர்க‌ள் இந்தும‌த‌ ந‌ம்பிக்கையுடைய‌வ‌ர்க‌ள் என்ப‌த‌ற்காக‌ இந்த‌க் குடியிருப்பில் வீடு வாங்கும் வாய்ப்பு ம‌றுக்க‌ப்ப‌டுமேயானால், இந்த‌க் குடியிருப்பை அமைக்கும் பெரியாரிஸ்டுக‌ளுக்கும் பார்ப்ப‌ன‌ர்க‌ளுக்கும் என்ன‌ வேறுபாடு?
Chandar
Message is no paarpaan is allowed. All the other communities are welcome. Daily beef and pork will be served.

90% reserved for Dravidian Indians, Muslims and Christians. 10% reserved for Dravidian tigers. Vandherigals and Paarpana aryans are not allowed.

ps: If there is a demonstration against the government, paarpaan and paapathi, we will throw stones and fire the entire plot and move on to a different area.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.