0 23.02.2012 தேதி அன்று அதிகாலை சென்னை வேளச்சேரியில், இரண்டு வங்கி கொள்ளைகளில் தொடர்புடையதாக குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்ட நபர்கள் ஐந்து பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.  இந்த மோதல் கொலைகளை மக்கள் சிவில் உரிமைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. 

குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த போதிய வாய்ப்புகள் இருந்த நிலையில், காவல் துறையின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் ஒரே நோக்கில் இப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளது.  இந்த வகையான கொலைகளை நீதிமன்றத்தின் அதிகாரத்தில் அத்துமீறி தலையிடும் காவல் துறையின் போக்காகக் கருத வேண்டியுள்ளது. 

பல முறை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இந்த மாதிரியான மோதல் கொலைகளை தவிர்க்க போதிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ள போதிலும் அவற்றை நிராகரித்து காவல் துறையே தண்டனை தரும் அதிகாரத்தை கையில் எடுப்பது ஜனநாயகப் பண்புகளுக்கு எதிரான போக்காக உள்ளது.

மனித உரிமை, ஜனநாயக இயக்கங்கள் மோதல் சாவுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பது குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காக அல்ல. அரச வன்முறை சமூகத்தின் ஜனநாயகத்தை சிதைத்துவிடும் என்ற கவலையின் காரணமாகவே ஆகும். 

எனவே மேற்கண்ட மோதல் சாவில் தொடர்புடைய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும. எதிர்காலத்தில் மோதல் சாவுகளை தவிர்க்க போதிய நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை மக்கள் சிவில் உரிமைக் கழகம் வேண்டுகிறது.

முனைவர் வி.சுரேஷ்(PUCL)                                                                                                           ச.பாலமுருகன்(PUCL)
மாநில தலைவர்                                                                                                                                  மாநில செயலர்
கைபேசி-94442-31497                                                                                                                          கைபேசி-94432-13501

Comments

17 comments

17
Jayakumar
எங்கள் குடும்பத்தில் கற்பழித்து கொள்ளை அடிப்பதை நாம் பொறுத்து கொள்ள முடியும்?
keeran
ஐந்து பேரை கொலை செய்த போலீஸ் அராஜகம் ஒழிக! இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
Rajenderan
ஐயா போதும்? ஒரு தனி மனிதன் துப்பாக்கிய்யெ கையில் யெடுத்தானோ அப்பவே குட்ரவாலிதன் அவன சூட் பன்னுனதால தப்புஇல்ல இல்லன்ன அவன் காவல் அதிகாரியெ போட்டுருப்பான் தப்பிருப்பான் அப்ப ஒங்க உரிமை சட்டம் யென்ன செஇயும் அவன பிடிச்சி கொடுக்கும பொதுமக்கல் சொத்து கொல்லையடிக்கும் அவன் மனிதன் அல்ல அவன கொன்னதுல தப்பு இல்ல காவல் அதிகாரிக்கு வால்துக்கல்
santhosh
we should not allow the terrist in our state. so we should welcome police decision.
Elavarasan
35 லட்சம் கொள்ளை அடித்ததற்கு மானாவாரியாக வெடித்து சிதறிய தோட்டாக்கள், 2 ம் தலைமுறை அலைகற்றை ஊழலில் 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்தவர்களை என்ன செய்திட முடியும்???? சுரேசு கல்மாடியை பார்த்து உன்கள் துப்பாக்கியை நீட்ட முடியுமா??? இது கூட மய்ய அரசு விவகாரம், கோடி கோடியக கொள்ளை அடித்து பொறியியல் கல்லூரிகளும், மருத்துவ கல்லூரிகளும் கட்டிய முன்னாள் இன்னாள் அமைச்சர்களை போட்டு தள்ள முடியுமா???
நடராசன்
தமிழக காவல்துறையின் செலக்டிவ் அமினிசியா..

கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், உயர் அதிகாரிகளுக்கு சல்யூட்.

50 லட்சம் மட்டும் கொள்ளை அடித்தா என்கவுண்டர்.

..சட்டத்தின் முன் அனவரும் சமம் என்பதை நம்புவோம்.

இந்த என்கவுண்டரை ஆதிரிப்பவர்கள் அதிகாரத்துக்கு கூழைக் கும்புடு போடும் மனநிலை உள்ளவர்கள்தான்!
m.senthil kumar
keep it up weldon police department
Rashid
ஐந்து பேரை கொலை செய்த போலீஸ் அராஜகம் ஒழிக! இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
Rajenderan perambalur
அரசியல் வாதியை யேன் சுடல கெட்டார் எலவரசன் யென்பவர் அரசியலில் இருப்பவர்கல் யாரும் காவல் அதிகாரி அல்ல புலனாஇவ்துரை பிடிக்கும்போது கட்டுபட்டு சட்டதின் முன் நின்ட்ரு வாதாடுகிரர்கல் ஆனால் கொல்லை கும்ம்பல் அப்படிஅல்ல தான் தப்பிக்க துப்பாக்கியை கைய்யில் எடுக்கிரர்கல் அதாவது ஆயுதத்தை பயன்படுத்தி சட்டத்தை மேலுகிரார்கல் அப்போதுதன் யென்கவ்ன்டர் தெவைபடுகிரது தவரு செஇயதவர்கல் யேன் துப்பாக்கியை யெடுக்கவேன்டும் சரன் அடையவேன்டியதுதானெ ?
Rajenderan perambalur
யாரைவேன்டுமானாலும் குட்ரம் சொல்லலாம் அது மனிதனின் மன நிலை மனிதநேயம் ஆனால் சட்டத்தின்முன் நிருபிக்கவேன்டும் அதுதான் உன்மையான சட்டம் சமூகம் ஜனநாயகம் யென்பது நம்முடைய சுதந்திரம் ஒவ்வொரு இன்டியனுக்கும் கிடைத்த பொக்கிசம் அதை தவராக பயன்படுத்தகூடாது அரசாங்கம் காவல்துரை நமக்கு பாதுகாப்பானது அதை வரவேர்க்கவேன்டும் எதிர்த்து புன்பட செய்யகூடாது மதிக்க கட்ருகொல்லவேன்டும் காவதுரையை கொல்லைகாரர்கல் சுட்டார்கல் அதலால்தான் வேரு வழி இல்லாமல் சுட்டுயிருக்கிரார்கல் இதை யேட்ருகொல்லதான் வேன்டும் இன்னும் மட்ர கொல்லையர்கலுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்
பலனால் திருடன் ஒருனால் மாட்டுவான் தவரான வழியில் செல்பவர்கல் குருக்குவழியில் செல்பவர்கல் யாரும் இருதி வாழ்க்கை பாதையை வெல்லமுடியாது
Elavarasan
என்கவுண்டரை எதிர்ப்போம்!' எனும் இக் கட்டுரை. கட்டுரையாளர் யுவகிருஷ்ணாவுக்கான நன்றிகளுடன் இங்கு அதை மீள்பதிவு செய்கின்றோம்.

தமிழ்நாட்டின் நடுத்தர வர்க்கத்து மொக்கைகளுக்கு மீண்டும் ஒரு தீபாவளி. இந்திய மனோபாவம் முற்றிலுமாக போர்வெறி இதிகாசமான மகாபாரதத்தை பின்னணியாக கொண்டது. எனவேதான் கொலைகளை கொண்டாடுகிறார்கள். ‘இவனுங்களை எல்லாம் நடுரோட்டுலே வெச்சு சுட்டுக் கொல்லணும் சார்’, ‘கோர்ட்டுக்குல்லாம் கூட்டிக்கிட்டு போவக்கூடாது. லாக்கப்புலேயே மேட்டரை முடிச்சிடணும்’ என்று பஸ்ஸிலும், ட்ரெய்னிலும் பொழுதுபோக்குக்கு பேசுபவர்களுக்கு எவனையோ போட்டுத் தள்ளணும் என்கிற அனாவசிய வெறி. பொதுஜனத்துக்கு இப்படியொரு கொலைவெறி இருப்பதுதான் காவல்துறை, இராணுவம் மாதிரி சட்ட அங்கீகாரம் பெற்ற கொலைநிறுவனங்களுக்கு சாதகம். ‘மனித உரிமைகளை தூக்கி குப்பையில் போடு’ என்று துப்பாக்கியில் புல்லட்டுகளை நிரப்பிக்கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.

என்கவுண்டர்களுக்கு நியாயம் காட்டும் வகையில் பொதுமக்களின் கொந்தளிப்பினை சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால், தீவுத்திடல் அருகே சிறுவனை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரி மீது என்கவுண்டர் பாயவில்லை என்பதை இங்கே நினைவுறுத்திப் பார்க்க வேண்டியது அவசியம். போலிஸின் துப்பாக்கிகள் ‘செலக்டிவ்’ ஆகத்தான் தோட்டாக்களை துப்புகிறது.

கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் மட்டும் எழுபத்தைந்து பேர் என்கவுண்டரில் பலியாகியிருப்பதாக செய்திகளில் அறிகிறோம். இங்கே நடைபெறுவது ஜனநாயகமா அல்லது இராணுவ ஆட்சியா என்கிற சந்தேகம் இதனால் உருவாகிறது. குற்றவாளிகள் என்று காவல்துறை சந்தேகப்படுபவர்களை என்கவுண்டரில் போடலாம், அதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தேவை கேள்விக்குரியதாகிறது. நீதிமன்றங்கள், சட்டப் பணியாளர்களின் இருப்பு அவசியமற்றதாகிறது.

தேசப்பிதாவாக காந்தியை ஏற்றுக்கொள்ளும் தேசம், காந்தியத்தை பின்பற்றுவதாக பாவனை செய்யும் மக்கள் – எப்படி இப்படியொரு சூழல் வாய்க்கப்பட்ட இந்தியாவில் என்கவுண்டர்கள் கொண்டாடப்படுகின்றன என்பதை எப்படி யோசித்தாலும் பிடிபடவில்லை. தூக்கு, என்கவுண்டர் என்றதுமே குறிப்பாக மத அடிப்படைவாதிகளின் ஆதரவுதான் விண்ணதிர எதிரொலிக்கிறது. மதங்கள் மீது நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், எல்லா மதங்களும் ஏதோ ஒருவகையில் அன்பை போதிக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கிறோம். அப்படியெனில் இம்மதங்களை தீவிரமாக நம்புபவர்கள், பின்பற்றுபவர்கள் ஏன் அரசக்கொலைகளை ஆதரிக்கிறார்கள்? அவர்கள் தமக்கும் உண்மையாக இல்லை. தாங்கள் பின்பற்றும் மதங்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் உண்மை.
சென்னையில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஐவர் கொலையை எடுத்துக் கொள்வோம். வங்கிக் கொள்ளைகளுக்குப் பிறகு ‘துப்பு’ கிடைக்காமல் அலைந்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு ‘வீடியோ க்ளிப்’ கிடைக்கிறது. அதில் இருப்பவன் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவன் என்று அடையாளம் காட்டப்படுகிறது. ஊடகங்கள் மூலமாக அப்படம் வினியோகிக்கப்படுகிறது. துப்புக் கொடுப்பவர்களுக்கு பரிசு அறிவிக்கப்படுகிறது. நடு இரவில் யாரோ ஒரு முக்கிய அதிகாரிக்கு அனாமதேயமாக ஒரு அழைப்பு வருகிறதாம். அந்த அழைப்பு மூலமாக அடையாளம் காட்டப்பட்டவன் மறைந்திருக்கும் இடம் தெரியவருகிறதாம். துப்பாக்கிகளோடு சுற்றி வளைத்தார்களாம். எச்சரிக்கை விடுத்தார்களாம். அங்கிருந்து பொதுமக்களை சுடுவோம் என்று பதில் வந்ததாம். யோசிக்காமல் இவர்கள் சுட்டுத் தள்ளினார்களாம். உள்ளேப் போய் பார்த்தால் ஐவர் மரணமடைந்திருக்கிறார்களாம். இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு காயமாம்.

அய்யா, அடையாளம் காட்டப்பட்டவன் ஒருவன் தான். மீதியிருக்கும் நான்கு பேரும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பதை எப்படி காவல்துறை ’ஸ்பாட்’டிலேயே முடிவுகட்டி, துப்பாக்கிச்சூடு வரை போனது? கொள்ளையடித்தபோதே ’ஏர்கன்’ வைத்து ஏமாற்றியவர்கள், பதுங்கியிருந்தபோது ஒரிஜினல் துப்பாக்கி வாங்கிவிட்டார்களா? சுற்றி வளைக்கப்பட்டவர்கள் அடுத்த ஃப்ளாட்டுகளுக்குப் போய், தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி எப்படி சுடமுடியும்? ஒருவேளை ஜனநெரிசல் மிகுந்த பகுதியில் பட்டப்பகல் வேளையில் பொதுமக்களின் தலையில் இவர்கள் துப்பாக்கியை வைத்து மிரட்டியிருந்தால் இந்தக் கதை வலுவாக இருந்திருக்கும்.

தமிழகக் காவல்துறை, லாஜிக் மீறாமல் என்கவுண்டர் கதைகள் எழுதக்கூடிய நல்ல புனைவெழுத்தாளர் ஒருவரை உடனடியாக பணிக்கு அமர்த்தியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் கொள்ளையர்களை உயிரோடு பிடித்து நீதிமன்றம் முன்பாக நிறுத்தியிருந்தால் கூட அவர்களுக்கு சிறைத்தண்டனைதான் கிடைத்திருக்கும். காவல்துறை தீர்ப்பில் மரணத்தண்டனை ஐவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இது அச்சு அசலான சட்டமீறல். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலுவாக இருப்பின் இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலைவழக்கு தொடரப்பட வேண்டும்.

தமிழக மனித உரிமை அமைப்புகள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. கொள்ளை என்பது குற்றம். கொள்ளைக்கு தண்டனை கொலை என்பது அதைவிட பெரிய குற்றம். அதை மக்கள் கரகோஷத்துடன் வரவேற்பது அநியாய கொடூரம். சகிப்புத்தன்மை மிகுந்தவர்களாக அறியப்பட்ட தமிழர்கள், சவுதி அரேபியர்களாக பரிணாமம் அடைந்து வருகிறார்கள்.
L.V.SRINIVASAN
Sir,

Our state police hace donw a good thing by killing those 5 culprits. I welcome it. Now a days Makkal civil urimai kazagam supports persons who do harm to this society. Simply by law we cannot control them.
hameed
இது ஒரு தவரான செயல்.கோடி கனக்க்கில் தப்பு செஇரவன் நல்ல இருக்கான் .
வித்யா நிதி
கொள்ளையர்களை சுட்டக் கொன்றது முற்றிலும் சரியே ? கொள்ளைக் காரர்களையும் கொலைகாரர்களையும் பாதுகாப்பதுதான் மனித உரிமையா? அம்மாதிரியான மனித உரிமை தேவையில்லை. சாதாரண பொதுமக்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு அளிப்பதுதான் மனித உரிமையாகும். அதை தமிழக போலீசார் சரியாகவே செய்துள்ளனர்.

வித்யா நிதி
Ramaswamy
ஒவ்வொரு நாளும் 50 ரு 100 ரு சம்பாதிது அதுல 10 ரு சேர்த்து செலவ பாக்கிரதுகுள்ள கண்ணுல ரத்தம் வருது. வீடுல விட்டு வந்த அப்பா அம்மா பொண்டாட்டி குழந்தை எல்லாம் வீட்டுக்கு போகும்பொது உயிரொட இருபாஙலா இல்லயாணு தெரியாம பயந்துகிட்டு ஓடிகிட்டு இருக்கு வாழ்க்கை. இதுல நம்ம பணத்த கொள்ளை அடிசா நம்ம " மனித உரிமை மயிரு உரிமயெல்லாம் பாத்து அக்ஷ்ன் எடுகனுமாம். சுடும்பொது பொலிசெ ஓடி கோர்ட்க்கு போய் " சுடனுமா வேணாமா " அப்பிட்னு கேக்கணுமாம். உன் விடுல ஆட்டய போட்டா நீ எல்லா மயிரு உரிமயும் பாத்து பொருமையா அவிஙகல உக்கார வெச்சு விருந்து வை. This incident shows 2 things. 1. You cannot live just like that easily after a crime in TN. 2. POLICE is POWERFUL.
You clap when u see this in Cinema right. CLAP Now also.. HATS of To Tamilnadu Police.....
சி.மதிவாணன்
காவல்துறையைப் பாராட்ட வேண்டுமா? பாராட்டிவிடுவோம். என்ன கெட்டுப்போயிற்று?
மதுரையில் ஓர் கிராமத்தில் 5 வயது கூட ஆகாத சிறுமியை கழுத்தை அறுத்து இரத்தம் எடுத்து அதனை ‘சாமிக்கு‘க்குக் கொடுத்தார்கள் கிராதகர்கள். அப்போது திமுக ஆட்சி. திமுக பெரும்புள்ளிகள் மீது சந்தேகம் எழுந்தது. காவல்துறை யாரையும் கைது செய்யவில்லை. பெரும் போராட்டங்களுக்குப் பின்பு கொலையாளிகள் என்று இரண்டு பேரைக் கைது செய்தார்கள். அந்த இரண்டு பேரும் மர்மான முறையில் போலீஸ் காவலில்/சிறையில் இறந்துபோனார்கள். நரபலி கொடுத்தவன் எவன் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நரபலி கொடுத்தவந்தான் மாட்டிக்கொண்ட கையாட்களை போலீஸ் துணையோடு கொன்றான் என்று பகுதி மக்கள் குரல் எழுப்ப இப்போது வழக்கு சிபிசிஐடி கையில் இருக்கிறது… திமுக ஆட்சியில் செல்வாக்குள்ளவர்கள் நடத்திய நரபலியை அம்மா ஆட்சி கண்டு பிடிக்குமா?
எங்கள் பகுதியில் கல் குவாரிகள் அதிகம். வெடியில் சிக்குண்டு கை கால்.. உயிர் போனவர்கள் அதிகம். வாடிப்பட்டி காவல் நிலையத்தில் வெடிவிபத்தில் மரணம் என்ற குறிப்பை யாரேனும் காட்ட முடியுமா? பத்தாயிரம் ரூபாதான் செலவு என்கிறான் குவாரி முதலாளிகளின் கைக்கூலி..
இந்த எச்சில் பொறுக்கி நாய்களை கதாநாயகர்களாக நம்புபவர்களின் அறிவின் வயது 6க்கு மேல் இருக்காது..
யோசித்துப் பாருங்கள். நேர்மையான சினிமா கதாநாயகன் சாமி கூட லஞ்சம் வாங்கி அதனை தானம் செய்தான். லஞ்சம் வாங்காமல் போலீஸ் வேலையில் இருக்க முடியாது என்று அந்த சினிமா சொன்னது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதாக நாடகம் ஆட அம்மா இட்ட உத்தரவுதான் இந்தப் படுகொலை.
இந்தப் படுகொலைகளை நீங்கள் ஆதரித்தால் உங்கள் வீட்டில் கஞ்சா வைத்து போலீஸ் கேஸ்போடும்போது உங்களைக் காக்க யாரும் இருக்க மாட்டார்கள்.
jaysmani
சரியோ தவரோ என்கவுன்டர் மூலம் இதன் பின்னால் யார் யார்
என்பது தெரியாது அருக்கப்பட்டது வேர இலையா வேராக இருந்தால் நலம் இலையாக இருந்தால் வேரை தேடுவது அவசியம்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.