மின்சாரம் தடைப்பட
முற்றத்திற்கு வந்து
முகத்தை நிமிர்த்தி
மேலே பார்கிறேன் !
தென்னங்கீற்று வழியே
தெரிந்த நிலவொளியும்
நிரை முகிலும்
என்னை ஏதேனும் எழுது
என்று சொல்வதுபோல் இருந்தது.
நிலவின் முகக்கறையாய்
நீண்ட யுத்தத்தால்
சிதைந்துபோன எம் நிலமும்
சிதறி ஓடும் முகில்களாய்
கலைந்துபோன எம் உறவுகளும்
நினைவில்வர நிறுத்துகிறேன்
எழுதுவதையும் ...................யும் .
- வாசம்