செய்தி வருகிறது
என் அம்மா, அப்பா
கட்டி எழுப்பி
அன்பும் ஆதரவுமாய்
நகமும் சதையுமாய்
வாழ்ந்த சாட்சியம்

நானும்
என் சகோதரர்களும்
பிறந்து வளர்ந்து
பேசிப் பிதற்றிக்
கட்டிப் புரண்டு
களித்த
அந்த வீடு

என் வாழ்க்கையின்
எச்சமாய் உள்ளதாய்
செய்தி வருகிறது

என் அப்பா
இப்போது இல்லை
மேற்கூரை இடிந்துள்ளதாம்
என் அம்மா
இல்லை இப்போது
சமையற் கூடம்
குண்டு விழுந்து
நொறுங்கிக் கிடக்கிறதாம்

என் சகோதரன்
மாண்டு போனான்
வரவேற்பறை
அழகடையாளமற்றுக் கிடக்கிறதாம்

என் கண் நிறைந்த
தங்கை
என்னுடன் இல்லை.
அவள் வளர்த்தத் தோட்டம்
சுவடற்றுக் கிடக்கிறதாம்

என் வாழ்க்கையின்
நிகழ்கால எச்சமாய்
அந்த வீடு இருப்பதாய்
செய்தி வருகிறது

More articles by செம்பை முருகானந்தம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.