pho_250எப்போதும்
புதுப்பொலிவு
புத்தாடையாக
மிளிரும் உடைகள்
அரும்பிச் சிலிர்க்கும்
புன்னகை
இப்படி
புத்துணர்ச்சியுடன்
இருப்பதாய்ச் சொல்கிறார்கள்
நண்பர்கள்.
எதையும்
வெளிக்காட்டிக்கொள்ளாமல்
மறைப்பதற்கு
இந்த ஒப்பனைகள் தவிர்த்து
வழிவேறில்லை
என்பதைக்
காட்டிக்கொள்ளவில்லை
அவர்களிடம்.

உன்னுடன்...

ஊர் உணரும்
மௌன வெளிகளில்
உன் சொற்கள்
இசை கலந்து இனிக்கும்

ஒளிவெளியெங்கும்
பழுதில்லா
விழிகளால் பார்க்கிறேன்
காட்சியே இல்லை;
நீயே காட்சி.

- செம்பை முருகானந்தம்

More articles by செம்பை முருகானந்தம்

Comments

1 comment

1
Kannan
அபடியென்ன துன்பம்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.