தஞ்சையிலேபிறந்தசெல்வம்பன்னீர்செல்வம்

தமிழருக்குமுழக்கமிட்டார்இங்கிலாந்தில்!

அஞ்சாதஅரிமாவைவியந்துபார்க்கும்

அயல்நாட்டுமாநாட்டுவட்டமேசை!

பஞ்சாகப்பறந்ததுபார்பகைவர்பேச்சு!

பறையடித்துப்புகழ்க்கொடியைஏற்றிவைத்தார்!

இஞ்சியுடன்சேர்ந்துகொண்டசுக்கைப்போல

ஈரோட்டுப்பெரியார்பின்சேர்ந்துகொண்டார்!

நகரமன்றத்தலைவரென்றுவணக்கம்பெற்றார்

நாட்டுக்குக்கல்விதரும்கழகம்கண்டார்!

புகழ்மிகுந்தஇந்தியத்தின்அமைச்சருக்கே

புனைந்துரைக்கும்நெறியாளர்பதவிஏற்றார்!

திகழ்கின்றபெரும்பதவிஇங்கிலாந்தில்

தேர்ந்தெடுத்துக்கொடுத்தார்கள்! அத்தனைக்கும்

நகைமுகத்தால்தமிழருக்குநலங்கள்சேர்த்தார்

நற்பணியால்பொற்கனவால்நாளும்செய்தார்!

பூட்டிவைத்தகதவுகளால்ஏழைமக்கள்

புகமுடியாமல்தெருவில்புழுதியானார்!

கூட்டிவைத்தகுப்பைகளின்நடுவேசிக்கிக்

குலைவுற்றோர்வாழ்வதற்குக்குரல்கொடுத்தார்

தீட்டிவைத்தகொள்கைவேள்பன்னீர்செல்வம்

திசைதோறும்பகுத்தறிவுகொளுத்திவைத்தார்

மூட்டிவைத்தமடமையினைமுனைந்துசாய்த்தார்

முழங்காலால்முட்டியிட்டோர்முறுவல்கண்டார்!

நிமிர்ந்தெழுந்துநிலம்வியக்கநீதிக்கட்சி

நெடும்புகழைப்பெறவைத்தார்பன்னீர்செல்வம்!

இமயம்போல்அவர்இருந்தார்! தேங்காய்வைத்த

இளநீரைஇவர்நெஞ்சால்தோற்கவைத்தார்!

சுமைசுமந்தார்! சூழ்ந்தடிக்கும்புயல்கடந்தார்!

தோணியென்றுதமிழருக்குத்தோன்றிவாழ்ந்தார்

விமானத்தின்பயணத்தில்விபத்துநேர்ந்து

வீழ்ந்துவிட்டவேதனையால்இன்றும்நொந்தோம்!

- முனைவர்ஆலந்தூர்கோ. மோகனரங்கன் 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.