கும்பி எரியுதே! குருதி சூடாகுதே!
தம்பியின் பிள்ளை நம் தங்க மகனுக்கா
கொடிய தண்டனை? உள்ளமெலாம் கொதிக்குதே!
இடிவந்து வீழ்ந்ததுபோல் இதயமெலாம் துடிக்குதே!

தின்னக் கொடுத்துக் கழுத்தைத் திருகுவதோ?
சின்ன மலரைத் தீயிட்டுக் கருக்குவதோ?
ஏங்கும் அவ்விழிகளில் எத்தனை பேரொளி!
தீங்கிழைத்த பாவிகளே தீர்ந்ததா உங்கள் வெறி!

குணங்கெட்ட கொடுங்கோலா! இராசபக்சே கழுகே!
பிணந்தின்று தின்றும்உன் பேய்ப்பசி அடங்கலையா?
சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்துன்னை
உவக்க உவக்க இந்தியாவர வேற்கிறதே!

உத்தமன்போல் நடிக்கும் ஓநாயே! உன்பக்கம்
எத்தனை நாடுகள் இருக்குதடா! ஒருநாளில்
மொத்தமாய் நீயும் மண்ணோடு மண்ணாவாய்!
சத்தியமாய் நாளை தமிழீழம் மலருமடா!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.