சென்னை எழும்பூர் அஞ்சல் கணக்கு மற்றும் நிதி பொது மேலாளர் அலுவலக எஸ்.சி./எஸ்.டி. ஊழியர் நலச் சங்கத்தின் சார்பில் 22.12.2010 புதன் கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் “சாகு மகராஜர்'' படத்திறப்பு நடைபெற்றது.

sahumagarajதிருமதி. சிவகாமி சுந்தரி தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் ஆர். உதயகுமார் வரவேற்றார். சங்கரபாண்டி, மலைச்சாமி முன்னிலை வகித்தனர்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேரா.சுப.வீரபாண்டியன் சாகுமகராசரின் படத்தைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

"பாசறை முரசு' இதழின் ஆசிரியர் மு.பாலன், சாகுமகராசர் 19 ஆம் நூற்றாண்டில் பார்ப்பனியத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் செயல்பட்டதைப் பட்டியலிட்டு காட்டினார்.

இந்நிகழ்வில் முன்னாள் சங்கத் தலைவர் சி. சண்முகம், பாசறையின் நிர்வாகக் குழு உறுப்பினர் பெரம்பூர் எம். பால் மற்றும் தோழர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

சங்கத்தின் பொருளாளர் ஆர். செயபாலன் நன்றி கூறினார்.

Pin It