“இந்து மதத்தில் பிறந்த காரணத்தால் மட்டுமே நான் ஓர் இந்துவாக இருக்கவில்லை. அதைநான் விரும்பித் தேர்ந்தெடுத்த நம்புகின்றவன் என்பதால் நான் ஓர் இந்து. என் கருத்துக்களின்படி இந்து மதத்தில் உயர்வு தாழ்வு கிடையாது. வருணாசிரமத்தையே எதிர்த்துப் போராட வேண்டும் என்ற டாக்டர் அம்பேத்கர் விரும்புகின்றபோது நான் அவருடைய அணியில் இருக்க முடியாது. ஏனெனில் இந்து மதத்தில் பிரிக்க முடியாத கூறு வருணாசிரமம் என்று நம்புகிறவன் நான்''

– மகாத்மா காந்தி

இவர் ஒரு மகாத்மாவா? இவரைப் போய் மகாத்மா என்று அழைப்பது நியாயமா? இவரை ஏன் வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூர் மகாத்மா என அழைத்தார்?

காந்தி மக்களின் பொது நலனுக்காகப் பாடுபட வந்தாலும் அவர்களுக்கு மன ஆறுதல் தருபவராகவும், பொதுமக்கள் அனைவரையும் ஒன்றாகக் கருதுபவராகவும் இவர் இருப்பார் என்பதால் தாகூர் இவரை மகாத்மா என்று அழைத்திருப்பார். ஆனால் இவரோ, காலகாலமாய் ஒடுக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் விடியலுக்காகப் பாடுபட முன் வந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களைத் தனது எதிரியாகப் பாவித்த அதோடு, இந்து மதத்தில் “வருணாசிரமம்'' பிரிக்க முடியாத ஒரு கூறு என்று கருதுகிற ஒருவரை நாம் மகாத்மா என்று அழைக்கலாமா?

*** 

வள்ளலார் மதவாதியா?

வள்ளலார் மதங்களை ஏற்றுக் கொள்ளாத இறை நெறியாளர். அவரது இறை நெறியாகிய சுத்த சன்மார்க்கம், சமுதாயச் சிந்தனையை உள்ளடக்கியது. சாதி, மத, சமய, கோத்திர, குல, இன, மொழி நிற வேறுபாடுகள் உள்ளிட்ட எவ்வித வேறுபாடும் இல்லாத உலக சமுதாய அமைப்பே அவரது சமுதாயக் கோட்பாடு ஆகும்.

***** 

திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது தாக்குதல் நடத்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதும், மலையைச் சுற்றி முள்வேலி அமைத்துப் பாதுகாப்பைப் பலப்படுத்தலாமா என ஆந்திர அரசு ஆராய்ந்து வருகிறது.

"தினகரன்', 06.01.2011

மலையைச் சுற்றி முள்வேலி அமைத்துப் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு முன், ஆந்திர அரசு ஏழுமலையானோடு உட்கார்ந்து பேசி, அவரின் அனுமதியைப் பெற்ற பிறகே பாதுகாப்புப் பணியைச் செய்வதே நல்லது. ஏனெனில் பொதுமக்கள் ஏழுமலையான் மீது வைத்திருக்கும் நம்பிக்கை இந்த நடவடிக்கை மூலம் குறைய வாய்ப்பு உண்டு.

Comments

2 comments

2
சுகுமாரன்
மோகன்லால் கரம்சந்த் காந்தியை மகாத்மா என அழைப்பது மகத்தான தவறு.பகத் சிங் ,சுபாஷ் ,வ.ஊ.சி ,போன்றோர் நிகழ்வுகளில் அவர் நடந்துகொண்டவை நம்பிக்கைத்துரோகம் வகையை சேர்ந்தவைதான்.
அவர்மட்டுமே வெள்ளையனுடன் போராடி-நூல் நூற்று விடுதலையை வாங்கித்தந்ததாக மிகையானவைதான் பாடங்களாக்கப்பட்டுள்ளன.
மக்கள் அனைவரும் குழுக்களாகவோ-கட்சியின் அடிப்படையிலோ போராடிக்கொண்டிருந்தனர்.சிலர் ஆயுதங்களை கையில் எடுத்துப்போராடியுள்ளனர்.
கட்டுங்கடங்காமல் போன போராட்டத்தையும் -இனி நம்மால் இந்தியாவை சுமுகமாக கட்டுக்குள் வைக்க இயலாது என்ற நிலையில் தனது கைக்கு அடக்கமான ஒருவர் வேண்டும் [மன்மோகன் சிங் போன்று] என்றேஅகிம்சை பேசும் காந்தியை வெள்ளையன் தேர்ந்தெடுத்து தலைமைப்பொறுப்பை அவர்டம் கொடுத்து அவரின் ஆலோசனைபடியே பகத்சிங்கை போட்டுத்தள்ளினான்.வ.ஊ.சி.யை வாழவிடாமல் இரட்டை ஆயுள் போட்டான்.வெளியே வந்த அவருடன் யாரையும் பேச்க்கூட விடாமல் காங்கிரசு பார்த்துக்கொண்டது.அவரின் பறிக்கப்பட்ட வழக்குரைஞர் பட்டயத்தைக்கூட ஒரு வெள்ளைக்காரர்தான் போராடி வாங்கிக்கொடுத்ததாக வரலாறு பதிவு செய்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் இருந்து வ.ஊ.சி, நலிவைநீக்க நிதி திரட்டப்பட்டு 3500 ரூபாய்கள் அவரிடம் வழங்க கொடுக்கப்பட்டது .அந்தகாலத்தில் அது மிக மதிப்பான தொகை.அதி ஒப்படைக்க வாங்கியவர் கடைசிவரை வ.ஊ.சியிடம் ஒப்படைக்க வில்லை.அது பற்றி விசாரித்தபோது கட்சிக்கு செலவாகிவிட்டதாகக் கூறாப்பட்டது.
அப்படி செலவிட்டவர்-பணத்தை ஒப்படைக்க வாங்கி மோசடி செய்தவர் வேறு யாருமில்லை.மோகன் லால் கரம்சந்த் காந்தி தான்.இது மறைக்கடிக்கப்பட்ட வரலாறு.
மகாத்மாவை உருவாக்கியது ஆங்கிலேயர்தான்.
பெலிக்சு.பூவை.
”காந்தி” உண்மை போராளிகளின் இரத்ததை தன் புகழ் தோட்டத்திற்கு பாய்ச்சிக்கொண்ட அரை நிர்வாண அகிம்சாவாதி! (பயங்ரவாதியே தேவலாம்.) சாவர்க்கரின் சீடன் கோட்சே வால் கொல்லப்பட்டதால் இந்து பயங்கரவாதம் வெளிச்சத்திற்கு வந்தது!.
பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ்,சுபாஷ் சந்திரபோஸ், சந்திர சேகர் ஆசாத்,மகாவீர்சிங், வீர வாஞ்சிநாதன்,வ,உ,சி. அண்ணல் அம்பேத்கர் போன்ற மா மனிதர்களைக் காட்டிலும் காந்தி சிறந்தவர் அல்ல என்பதுதான் ”உண்மை” வரலாறு!
மேலும்- மத்திய அரசு முன் வாய் மூடி ஈழத்தில் நிகழ்த்திய அநீதிகளுக்கு சாட்சியாக இருந்த கருணாநிதியும் எனக்கு காந்தியாகவே தெரிகிறார்! அங்கு வெள்ளைக்காரன். இங்கு மத்திய அரசு அவ்வளவுதான் வேறுபாடே!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.