temple burning

"ஆட்ட முடியாது என்னை
அசைக்க முடியாது!'
கொக்கரித்த அம்மா
கூண்டில் மாட்டிக் கொண்டார்
இறுதியில்!

மண்சோறு தின்னுதல்
மறியல் பண்ணுதல்
பால்குடம் எடுப்பு
பலர் மொட்டை அடிப்பு
பார்ப்பான் தொப்பை நிரப்ப
வேள்வித்தீ வளர்ப்பு
விறகுக் கட்டையால்
வெட்டியாய்த் தீக்குளித்து
காட்டுத்தன உச்சமாய்க்
காளையார்கோயில்
கோபுர எதிர்ப்பு!

பதவி ஏற்பில்,
தேம்பித் தேம்பி
அழுகிறார்கள் அமைச்சர்கள்!
கட்டிப் பிடித்துக்
கதறுகிறார்கள்
வளர்மதியும் கோகுல இந்திராவும்!

இருக்காதா பின்னே,
தொலைவில் இருந்தாலும்
தொலைக்காட்சிப் பெட்டி
அனைத்தையும் சொல்கிறதே
அம்மாவுக்கு!

அடிமைத்தனத்தின்
அளவு பார்க்க வேண்டாமா?

"தெய்வத்தை
மனிதன் தண்டிப்பதா?'
வரிஏய்ப்புத் திரைத்துறையின்
வாடகை அழுகையில்
ஒரு சொட்டுக் கண்ணீரும்
உதிரவே இல்லை!
அகவை மூப்பாம்
அரத்தக் கொதிப்பாம்!
"உடனே பிணை கொடு' என
உருட்டுக் கட்டைகள்
மிரட்டுகின்றன!
பதினெட்டாண்டாய்
இழுத்தடித்தபோது
எங்கே போயினர்
இந்த அரம்பர்கள்?

எல்லோரையும்
தன்காலில் விழவைத்து
எக்களித்த இறுமாப்பு!

வாய் திறக்கு முன்னே
பொடா தடா வழக்குப் போட்டு
புழுத்த வம்படி அரசியல்

புலிப்பீதி கிளப்பி
மக்களைப் புழுவாய் நசுக்கிய
பார்ப்பனக் கொழுப்பு

ஆயிரமாயிரம் ஆசிரியர்
அரசூழியர்களைப் பந்தாடிய
ஆரிய ஆணவம்
சமச்சீர் கல்விக்குச்
சமாதி கட்ட நினைத்த
சனாதனத் திமிர்!

சாலைப் பணியாளர்களை
இன்றளவும் சாகடிக்கும்
சவுண்டித்தனம்
அடுத்த இலக்கு
இந்திய ஆட்சியே எனக்
கனவில் மிதந்த கழிசடைப் புத்தி

ஊரான் சொத்தில்
நகை ஊர்வலம் நடத்திக்
கூடிக் குலவிய உடன்பிறவாச் சகோதரி
நேரம் ஒதுக்கி
இவையெல்லாம் நினைக்கட்டும்
குளுகுளு பெங்களூரில்
கொஞ்சநாள் இருக்கட்டும்!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.