கீற்றில் தேட...

கடந்த ஆண்டு தமிழீழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதும் அதன் பின்னணியில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக சிங்கள வெறி அரசு அறிவித்து அதன் பின் இலங்கை, அரசும் இலங்கை ஊடகமும் பெறும் வெற்றி விழா கொண்டாட்டங்கள் நடந்தேறி முடிந்துள்ளது.

ஒரு நாட்டில் தன் மக்கள் என்று அரசமைப்பு சட்டம் ஏற்றுக் கொண்டபின் ஒருபிரிவு மக்களை கொன்று அழித்து அந்த மக்களின் நியாயமான உரிமை போராட்டத்தை அழித்துவிட்டு அதை எப்படி விழா எடுத்து கொண்டாடியது. உலகத்தில் இதுதான் முதன் முறையாக இருக்க முடியும். அதேபோல் விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர் ஒன்று சேர்ந்து தமிழர் அழிக்கப் பட்டதை புலிகள் அழிக்கப்பட்டதை விமர்சனம் செய்தவர்கள் தவிர மற்றவர்கள் யாரும் விழா எடுத்து கொண்டாடவில்லை. விடுதலைப் புலிகளை கடுமை யாக எதிர்த்தவர்கள் கூட விடுதலைப் புலிகளின் தோல்வியையும், அதன் தலைவர்கள் கொல்லப்பட்டதையும் ஏற்கவில்லை. விடுதலைப் புலிகளைஎதிர்த்து வந்த காலச் சுவடும் உயிர்மையும் போன்ற இதழ்கள் கூட அந்த பேர் இயக்கம் அழிக்கப்பட்டதையும் கொல்லப்பட்டதையும் தங்கள் துயரங்களை பதிவு செய்தனர். கவிஞரும் எழுத்தாளருமான மார்த்தாண்டன் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது தமிழ் இனத்திற்கு தமிழன் என்ற அடையாளம் காட்டியவன், பிரபாகரன் அவர் மரணம் நிகழ்ந்து இருக்கக் கூடாது என்றுதான் பதிவு செய்தார்.

விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட இயக்கத் தலைவர்கள் ஒருவர் கூட அவர் மரணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

உலகின் தொண்மையான இனமும் அறிவு சார்ந்த இனமும் ஆன தமிழ் இனம் நீண்ட நெடிய அறிவு மரபும் வீர மரபும் கொண்ட இனத்தை உலகம் அறிய செய்தவன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் என அவரின் எதிரிகள் கூட ஏற்றுக் கொள் வார்கள். விடுதலைப் புலிகளை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட வர் என நாமும் ஏற்றுக் கொள்ள வில்லை, ஏற்று கொள்ளவும் முடியாது. விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் பல்வேறு பிரிவினர் உண்டு. விடுதலைப் புலிகளை இன்றுவரை எதிர்த்து வருபவர்களில் பட்டியலில் கருணாநிதி, இந்து ராம், துக்ளக் சோ, செயலலிதா, ம.க.இ.க. அந்த வரிசையில் தன்னிகர் தலைவர் அ.மார்க்ஸ் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

தொடக்க காலத்தில் விடுதலைப் புலிகளை அவர் விமர்சனம் செய்ததை மாற்று இயக்கத்தினரை புலிகள் செய்த கொலைகளையும், சிறுபான்மை மக்களான முஸ்லீம் மக்களை கொலை செய்ததையும் அதை அனைத்து சனநாயக ஆற்றல்களும் எதிர்த்து வந்தன. அந்த அளவில் சரி என்பது அனைவருக்கும் தெரியும் சிங்கள இன வெறி அரசு நடத்திய இன அழிப்பு போருக்கு பின்னும் அதன் பின் அவர் இலங்கை வென்று வந்ததைப் பற்றி அவர் தீராநதியில் எழுதியதாயும் "இலங்கையில் என்ன நடக்கிறது?' சிங்கள அரசும் இந்திய அரசும் நடத்திய கோரப் படுகொலைக்கு முழு காரணம் புலிகள் தான் திரும்பத் திரும்பச் சொல்லி கொண்டு வருவதில் என்ன உள் நோக்கம் இருக்க முடியும் என்பதுதான் நமக்குப் புரியவில்லை. இலங்கை சென்று வந்ததும் அதனை விளக்கி கட்டுரை எழுதுவது அதற்காக ஒரு கூட்டம் போடுவதும் அவரின் விருப்பம்.

அவர் எழுதிய செய்தியும் பேசிய செய்தியும் தான் நம்மை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பழைய கதைகள் மீண்டும் மீண்டும் பேசுவதின் நோக்கம் என்ன? இந்திய அரசு இலங்கை அரசு சேர்ந்து நடத்திய தமிழின அழிப்பு போரைப் பற்றி ஒரு வார்த்தையும் எழுதாமல் பேசாமல் இந்த அழிவுக்கு காரணம் புலிகளின் தவறான அரசியல் என்று சொன்ன வேண்டிய தேவை என்ன என்பதுதான் புரியவில்லை. வன்னி வதை முகாம் பற்றி பேச அவர்க்கு ஒன்றுமில்லை. தமிழ்ப் பெண்கள் வன்புணர்ச்சி பற்றி ஒரு கருத்தும் இல்லை. குழந்தைகள் முதியோர் வதைத்து சித்திரவதை செய்ததை ஒன்றும் பேச மறுக்கிறார். அல்லது கள்ள மௌனம் சாதிக்கிறார். அவர் பேச வேண்டும் என்பது நம் விருப்பம் அல்ல.

புலிகளுக்கு ஆதரவாக பேசியவர்கள் புலிகளின் முகவர் என்று கொச்சைப்படுத்துவது புலிகளுக்கு ஆதரவாக போராடுபவர்களை உணர்ச்சிவசப்பட்டு செத்துப் போகிறார் என்று பேசுவது, இராணுவ வண்டி அடித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை இழிவுப் படுத்துவது!

தன் எண்ணத்தாலும் உள்ளத்தாலும் தமிழின வெறுப்பும் வன்மமும் கலந்த மனிதராக இன்று அ. மார்க்ஸ் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

லட்சக்கணக்கான குர்து மக்களை கொன்று அழித்த அ.மார்க்சின் ஆத்மார்த்த நண்பர் சதாம் உசேனின் ஆன்மா கூட இவரை மன்னிக்காது. பாலத்தின மக்களின் விடுதலைக்குப் போராடிய பர்விஷ் மகபத் ஆன்மாவும். அ. மார்க்சின் தமிழர் மீதான வன்முகத்தை மன்னிக்காது. அவரின் ஆத்மார்த்த நண்பர்கள் கூட சிங்கள பேரின வெறி அரசின் படுபாதகச் செயலைக் கண்டித்து எழுதும்போதும் இவர் மட்டும் ஏன் என்று நமக்குப் புரியவில்லை. விடுதலைப் புலிகள் விடயத்தில், கருணாநிதி, கருணா போன்றவர்களின் கருத்தோடு ஒத்து போவதை நாம் அவதானிக்க முடிகிறது! புலிகளின் தலைவர் பிரபாகரன் தாயார் சென்னைக்கு மருத்துவம் பார்க்க வந்தபோது இந்திய அரசு அனுமதி கொடுத்த பின்னும் கருணாநிதி ஏன் மறுக்க வேண்டும். பிரபாகரன் மீதான வெறுப்பும் வன்மமும்தான் காரணம். அப்படித்தான் அ.மார்க்சின் வன்மமும், அதனால்தான் பிரபாகரனும் புலிகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்ட பின்னும் அவர்கள் தொடர்ந்து கொச்சைப்படுத்தும், மண்ணில் புதைக்கப் பட்டவர்களைத் தோண்டி எடுத்து தன் வன்மம் தீரும்வரை அவர்களை கொத்து கொத்தாக வெட்டி போட்ட பின்தான் அ. மார்க்சின் ஆன்மா கர்த்தரிடம் சாந்தி அடையுமா என்று நமக்குத் தெரியவில்லை.

 கடைசியாக அவருக்கு நாம் சொல்ல விரும்புவதும் சொல்வதும் புலிகள் பாசிஸ்டுகள், புலிகள் பாசிஸ்டுகள், பிரபாகரன் பாசிஸ்ட், தமிழர்கள் பாசிஸ்ட், தமிழ் பாசிஸ்ட் என்று எழுதி எழுதி புலம்பி கடைசி தமிழ் இனத்தின் பாசிஸ்டாக அல்லது தமிழ் இனவாதியாக மாறாமல் இருந்தால் நல்லது. அதுவே அவருக்கும் நமக்கும் நல்லது.