நாளும் இன்னிசையால் தமிழ் பரப்புவோம்

தமிழிசை குறித்த ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழிசை தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வரும் இன்னிசை அறக்கட்டளை, வருகின்ற 2007 சனவரி கடைசி வாரம் மதுரையில் இருநாள் இசை ஆய்வு அரங்கத்தினை நடத்தவிருக்கிறது. இதில் தமிழிசை குறித்த ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. குறிப்பாக பண் புட முறை (இராகஸ்புட முறை - தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்) குறித்த கட்டுரைகள் ஆய்வரங்கத்தில் பங்கேற்பது சிறப்பாக இருக்கும்.

புதிய காற்று, அடிசில், கடவு உள்ளிட்ட அமைப்புகளோடு இணைந்து இன்னிசை அறக்கட்டளை நடத்தவிருக்கும் இந்த ஆய்வரங்கில் தமிழிசை அறிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். கட்டுரைகள் அனைத்தும் நூலாக்கம் பெறவுள்ளன. டிசம்பர் 31ஆம் நாளுக்குள் தங்களது கட்டுரையை அனுப்ப வேண்டிய முகவரி -

நா.மம்மது, இயக்குநர்,
இன்னிசை அறக்கட்டளை,

5, பனையடியான் கோவில் தெரு,
பாரதிநகர், மதுரை - 625 014.
செல்பேசி - 98426 26406.

Comments

1 comment

1
A.SHYLA HELIN
Respected sir,
I doing research work based on karunamirtha sagaram. i like to know
more from you.pl guide me.

shyla

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.