பியோதர் தஸ்தபேவ்ஸ்கி எழுதிய குற்றமும் தண்டனையும் (நாவல்)

உலகின் மிகச் சிறந்த நாவல் என்று போற்றப்படும் இந்த நூல் பேராசிரியை எம்.ஏ.சுசீலாவின் இனிய, எளிய மொழி பெயர்ப்பில், தமிழில் முதல் முதலாக ஒரு வரி கூடச் சுருக்கப்படாத முழுமையான பதிப்பாக வெளி வந்துள்ளது.
* 19X25 செமீ அளவு டபுள் கிரவுன் புத்தகம்
* 650 பக்கங்கள், நல்ல தாள்கள், அழகிய அச்சு
* கெட்டியான அட்டை, பைண்டிங்
* புத்தகத்தின் விலை ரூ.450

வெளியீடு: பாரதி புக் ஹவுஸ், D-28, மாநகராட்சி வணி வளாகம்,
பெரியார் பேருந்து நிலையம்,
மதுரை & 625 001.
பேசி: 9789336277


******

இடிக்கப்பட வேண்டிய உத்தபுரம் சுவர்கள்

ஆசிரியர்: டி. அருள் எழிலன்
விலை: ரூ.3
வெளியீடு: அறிவுச்சுடர் பதிப்பகம்,
7 ஆ, எறும்பீசுவரர் நகர், மலைக்கோயில்,
திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி & 620013.

நீள தீண்டாமைச் சுவரின் ஒரு சிறு பகுதி உடைக்கப்பட்டு பொதுப்பாதை ஒன்று உருவாக்கப்பட்டு ஏழு நாட்களைக் கடந்துவிட்ட பிறகும் இன்னமும் அந்தப் பொதுப்பாதையை ஒரு தலித்கூட பயன்படுத்த முடியாதபடி பதட்டம் மண்டிக் கிடக்கிறது உத்தபுரம். ஆனால், சுவரிடிப்பிற்கு முன்பே உத்தபுரம் கொடிக்கால் பிள்ளைமார் தங்களது 302 ரேஷன் கார்டுகளையும் கொண்டுபோய் மாவட்ட ஆட்சியரிடம் திருப்பிக் கொடுத்தனர். அந்த வேகத்தில் அவர்கள் மலையேறப் போய்விட்டனர். அவ்வளவுதான், தீண்டாமைச் சுவரிடிப்புச் செய்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு, காட்டுக்குள் போய் இருந்த சில நூறு குடும்பங்கள் மீது தமிழகத்தின் ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனமும் திரும்பியது. 
*****

குறிப்புகள்

ஆசிரியர் வெ.மதியரசன்
பக்கங்கள் : 80
விலை : ரூ.40
வெளியீடு: குகன் பதிப்பகம், 5, வி.கே.கே. பில்டிங்ஸ்,
வடுவூர் & 614019. திருவாரூர் மாவட்டம்,பேசி: 93450 41950.

ஆக்கிரமிப்பு

நான் மாணவனாய்
இருந்தபோது
பள்ளி கல்லூரிகளில்
எனக்குக் கற்பிக்கப்பட்டது

எந்த எந்த ஆறு ஏரிகளில்
எந்த எந்த அணைகள்
கட்டப்பட்டு உள்ளன என்று

நான் அதிகாரியானதும்
அரசு கண்டுபிடிக்கச் சொல்கிறது
எந்த எந்த ஆறு ஏரிகளில்
எந்த எந்த பள்ளி கல்லூரிகள்
கட்டப்பட்டுள்ளன என்று.
*****
தேரிக்காடும், டைட்டானியமும்

ஆசிரியர்கள்: தி.ஆனந்த ராம் குமார், இரா. ரமேஷ்,
விலை: ரூ.10
தொடர்புக்கு: சு.பாரதிதாசன். 98432 11772

ஒரு ஏக்கரில் 7 மீட்டர் தோண்டும்போது வெளியேறும் மணலின் அளவு 50 ஆயிரத்து 423 டன்.

ஒரு டன் கனிம மணலின் சந்தை விலை 233 ரூபாய். ஆக, ஒரு ஏக்கரில் இருந்து தோண்டப்படவிருக்கும் மணலின் விலை ஒரு கோடியே 17 லட்சத்து 48 ஆயிரத்து 792 ரூபாய். ஒரு ஏக்கரில் இருந்து எடுக்கப்படும் மணலில் இருந்து வரும் கனிம மதிப்பு 3 கோடியே 10 லட்சம் ரூபாய்.

ஒரு டன் மணலில் இருந்து சுமார் 50 கிலோ டைட்டானியம் டை ஆக்சைடை உற்பத்தி செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து சுமார் 2532 டன் டைட்டானியம் டை ஆக்சைடை உற்பத்தி செய்ய முடியும். இதன் இன்றைய மதிப்பு சுமார் 35 கோடி ரூபாயாகும். உற்பத்தி செலவினைக் கழித்துவிட்டால் ஏக்கருக்கு ஏறத்தாழ 18 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்.
*****

Pin It