கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கடவுள் பக்தியையும் தாண்டி ஜோதிடத்திலும், மூடநம்பிக்கைகளிலும் அவருக்குள்ள பற்று அலாதியானது. இவர் ஆட் சியில் இருந்தபோது கோயில்களுக்கு தாராளமாக அள்ளி வழங்கியிருக்கிறார். இருந்தாலும் அவரது பதவியை எந்த கடவுளாலும் காப்பாற்ற முடியவில்லை. இப்போது முன்னாள்' ஆகியிருக்கிறார் எடியூரப்பா.

சுரங்க ஊழல் காரணமாக கர்நாடக அரசுக்கு ரூபாய் 15 ஆயிரத்து 85 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுத் தியதாகவும், எடியூரப்பாவின் குடும்ப அறக் கட்டளைக்கு முறை கேடாக ரூ.30 கோடி வழங்கியதாக வும் லோக் ஆயுக்தா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழல் ஒழிப்பு சட்டத் தின் கீழ் எடியூரப்பாவிடம் விசா ரணை நடத்த வேண்டும் என்றும் அறிக்கையில் சிபாரிசு செய்யப் பட்டு இருக்கிறது.

இந்நிலையில் காரைக்கால் திரு நள்ளாறு சனிஸ்வரபகவான் கோவிலுக்கு, 6 மாதத்திற்கு முன்பு ரிஷபம் வாகனம் தங்கத்தில் செய்ய ரூபாய் 40 லட்சம் எடியூரப்பாவால் வழங்கப்பட்டது. இந்தப் பணம் சுரங்க ஊழலில் சம்பந்தப் பட்ட பணமா என சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று செய்தி கள் கூறுகின்றன. சனீஸ்வரபகவான் கோவிலுக்கு மட்டுமன்றி, எடியூரப்பா கோயில்க ளுக்கு அள்ளி வழங்கிய நன்கொ டைகள் அனைத்தும் அவரது சொந்த நிதியிலிருந்து வழங்கப்பட் டதா? அல்லது அரசு மற்றும் ஊழல் நிதியிலிருந்து வழங்கப்பட் டதா என்பதை சட்டம் உரிய முறை யில் விசாரிக்க வேண்டும். இப்போது எடியூரப்பா அள்ளி வழங்கிய பட்டியலை பார்ப்போம்;

பெங்களூர் அருகே இருக்கும் மாதா அமிர்தானந்தமாயி நிறுவ னங்களுக்கு ரூ. 5 கோடி மற் றும் 15 ஏக்கர் நிலம்.

வொக்கலிக்கர்களின் அடிச்சுச் சங்கிரி என்ற தளத்திற்கு ரூ. 5 கோடி.

எடியூர் சித்த லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்திற்கு ரூ. 10 கோடி.

ஆந்திராவில் திருப்பதியில் விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 5 கோடி.

கேராளவில் சபரிமலையில் விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 5 கோடி.

திபெத்தில் மானசேராவர் செல் லும் புனித பயணிகளுக்கு ரூ. 3 கோடி.

குல்பர்காவில் தத்தாத்ரேய பீடத்திற்கு ரூ. 2 கோடி.

சிக்மகளூர் ரம்பாபுரி ஸ்ரீ சோமேஸ்வர மடத்திற்கு ரூ. 3 கோடி.

சிக்மகளூர் ஹரிஹரபுரா மடத் திற்கு ரூ. 1 கோடி.

15ம் நூற்றாண்டு துறவி கவிஞர் கனகதாசாவின் பிறந்த ஊரான காகிலேனேவிற்கு ரூ. 10 கோடி.

சிரவனபெலகோலா பாஹுபலி கோவில் வளாகத்திற்கு ரூ. 5 கோடி.

சமூக சீர்திருத்தவாதி பச வண்ணா பிறந்த குடலசங்கமா வில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ. 5 கோடி.

மந்த்ராலயா விருந்தினர் இல் லத்திற்கு ரூ. 25 லட்சம்.

காசி விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 25 லட்சம்.

ஹரித்வார் விருந்தினர் இல்லத் திற்கு ரூ. 25 லட்சம்.

மேற்கண்ட பட்டியலின் மொத்த தொகை 59 .75 கோடியாகும்.

புள்ளி விவரங்கள் நன்றி : இந்தியாடுடே டிசம்பர் 2010 இவை அனைத்தும் எந்த பணத்திலிருந்து எடியூரப்பாவால் வழங்கப்பட்டது என்பதை மத்திய அரசும் - சி.பி.ஐயும் கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்தால் உண்மை வெளிவரும். கோடிகளை கொட்டியும் எடி'யின் நாற்காலி தப்பவில்லை. அதோடு போனாலும் பரவா யில்லை. நில மோசடி வழக்கில் எடியின் முன்ஜாமீன் மனு தள்ளு படியாகியுள்ளதால் எப்போது சிறைக்கதவு உள்வாங்குமோ என்ற கவலையில் வேறு இருக்கும் எடி யூரப்பா விரைவில் சிறைவாசப்பாவாக மாறுவார்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.