நாட்டின் வளமும் மக்கள் நலமும் காக்காத அரசு ஊழியர்கள், இப்பொழுது நிறைவான ஊதியம் பெறுகின்றனர். அனைத்து அரசு சேவை களிலும் கையூட்டு மிகுந்துவிட்டது. குறிப்பாகக் காவல்துறை, வருவாய்த் துறை, பதிவுத் துறைகளில் ஒரு சதவீதம் கூட நல்ல ஊழியர்கள் இல்லை. இவர்களால் எதிர்காலம் சிறக்காது. இவர்களின் நோக்கம் சுரண்டல் மட்டுமே தவிர, நன்மைக்கு இல்லை.

இப்பொழுது கேரளாவில், கர்நாடகாவில் மிகுதியான மழை பெய்கின்றது. மிகுதியாக வரும் மழைநீர் தமிழ்நாட்டைத்தான் கடக்கின்றது. மிகுதியான இந்த நீரைச் சேமித்து வைக்க தமிழ்நாடு அரசு வழிசெய்யவில்லை. ஆனால் 8 வழிச்சாலைக்குத் திட்டமிட்டு, திருட மக்கள் வரிப்பணத்தைச் சுரண்டத் துணை போகின்றது. நீதிமன்றங்கள் பல வழிகளை உத்தர வாகப் பிறப்பித்தும் அனைத்து மாநிலங்களும் பின் பற்றவில்லை. இயற்கை வளங்களைக் கொள்ளை யடிக்க வழிவகுக்கும் மத்திய, மாநில அரசுகள் தொலை நோக்கற்ற துரோகிகளே.

பொது மக்களில் சில வர்க்கத்தினர் பிள்ளையார் ஊர்வலம், கூழ் ஊற்றும் திருவிழா, வண்ணம் பூசும் திருவிழா என இடைக்காலத்தில் விழாக்களை ஏற் படுத்தி, கீழ்த்தட்டு மக்களை முன்னேறவிடாமல் செய்கின்றனர். பொது மக்களாகிய நாமும் ஒன்றுகூடி ஆத்திக விழாவுக்குக் காட்டும் ஆர்வம் போல், நம் வருங்கால சந்ததியினர் வளர்ச்சி பெற ஒன்றுகூடி இலவசக் கல்வி, இலவச மருத்துவம், இலவசக் குடிநீர் கிடைக்கப் போராட முன்வரவில்லை.

மண்டல் கமிசன் இடஒதுக்கீட்டில் வெற்றி பெறும் வரை அய்யா வே. ஆனைமுத்து ஒரு சிறிய அளவு உறுப்பினர்களைக் கொண்டு போராடி, மத்திய-மாநில அரசுகளில் இடஒதுக்கீடு வாங்கிக் கொடுத்தார். இடஒதுக் கீட்டால் பயன்பெறுவோர், இடஒதுக்கீட்டின் வரலாற்றைத் தெரியாமல்  பணிசெய்வோர்கள் இனி வரலாற்றை மறக்காமல் இருக்கத் தெரிந்து, அய்யா வென்றெடுத்த இடஒதுக்கீட்டை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும். முன்வராதோர், போராடாதோர் அனை வரும் தொலைநோக்கற்ற துரோகிகளே!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.