வரதட்சணை கொடுமையின்னுHut

பொறந்த வீடு வந்து சேர்ந்தா

நான் பெத்த மூத்த மக...

காலேஜில் படிக்கும் கடைசி மகனுக்கு

பீஸ் கட்டப் பணமில்ல...

பாதில விட்டுப்போட்டு

காரேஜில் சேர்ந்துகிட்டான்...

வச்சிருந்த கால் பவுனும்

மளிகைக் கடை பாக்கின்னு

அடகுக் கடை போயிருச்சு...

கார்ப்பரேஷன் குழாயில்

குடிநீரே வர்ரதில்ல..

குடத்துக்கு ஒரு ரூபாய்

குடுத்து மாளவில்ல...

ஓலைக் குடிசைன்னாலும்

இருக்கிறது சொந்த வீடு

வாடகைப் பிரச்சனைன்னா

ரோட்டுக்கு வந்துருப்போம்...

இவ்வளவு பிடுங்கலிலும்

இருக்கவே இருக்குது...

இலவச தொலைக்காட்சி..!

காற்றாலை புண்ணியத்தில்

கரண்ட்டும் வந்துச்சுன்னா,

மறந்திருப்போம் கவலையெல்லாம்...

கரன்ட்டே இல்லன்னாலும்

சமாளிக்க வழி இருக்கு...

தெருமுக்கில் டாஸ்மாக்கு

பொண்டாட்டி மறைச்சு வச்ச

பணமிருக்கு குவாட்டர் வாங்க...

அழுத்தும் கஷ்டமெல்லாம்

ஆறுதல் சொல்லி சொல்லி

ஓடுது எங்க வாழ்க்கை...

எப்பத்தான் விடிவுகாலம்

அதுமட்டும் தெரியலங்க...

 

- சுந்தர்,ருவாண்டா, மத்தியக் கிழக்கு ஆப்பிரிக்கா

Comments

11 comments

11
Mohan Kumar
Nice Kavidhai
Cliff & a Bird
Congratssssssssssssssssss Sundar! Do write more!
Aakash
Excellent Kavithai. தண்ணீருக்கு குடத்துக்கு ஒரு ரூபாய் கொடுக்க வழி இல்லாதவன், மனைவி மறைத்து வைத்த காசில் குவாட்டர் வாங்கி "ஆறுதல்" பெறுகிறான். தமிழ் நாட்டில் ஒரு சாதாரண தமிழனின் நிலையை அப்பட்டமாகக் காட்டும் இந்தக் கவிதை ஆகச் சிறந்த ஒன்று.

நன்றி.

ஆகாஷ்
தர்மபுரி
madhavi.s
ரொம்ப சரியா சொல்லிபுட்டிங்க ஆறுதல்,

.தொடரட்டும் உங்கள் எழுத்துகள்.
Raja
இலவச தொலைகாட்சி வழங்கும் அரசாங்கத் திட்டத்தைக் கேவலப் படுத்தும், இந்தக் கவிதையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
Sudhir.J
Nice to see from you sundar god bliss u,
continue your journey Best of thoughts.

Sudhir.J
madhavi
asaththitinga
Vijayan
Sundar, its good but few things i cant accept.
Rajesh
It was umm.. gd.. but not upto the mark...

For a beginer it would have been excellent !!!????!!!

Keep writing!
ASHRAFF MOHAMED
VERY VERY GOOD... REFLECT THE LIFE OF POOR TAMILIANS... KEEP IT U P
kasiraman
nice kavidhai

kudam 1 Rs. illa rwanda la 1 RWF

Theru munaiyil tasmac illa mitzig

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.