Pavallar Tamzhilandi 350ஆனைமுத்து உழைப்பிற்கு

அரணாக

இருந்தோன்

பெரியாரின்

பெரும்

பணிக்கே

தமிழ்

செய்யப்

பிறந்தோன்!

பகையடிக்க இவன்

தமிழோ

பாவேந்தச்

சாட்டை

உறியடிக்கு

நிகராகும்

இவன்

கவிதை

வேட்டை

இழை பிசகா தமிழ்ச்

செயலாய்

எப்போதும்

வாழ்ந்தவன்!

இறுகிய

நல்

கொள்கையரால்

தப்பாது

சூழ்ந்தவன்!

மிரட்டலுக்கு அஞ்சாத

மின்னோட்டத்

தமிழன்!

தெவிட்டலுக்கு

இடமின்றித்

தேன்

தமிழைத்

தருவன்!

தமிழேந்தி இல்லையெனும்

இச்

செய்தி

ஏற்கேன்!

தமிழ்த்

துணிவில்

இவரைப்

போல்

எவரை

இனிப்

பார்ப்பேன்!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.