திருச்சியில் தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு, பெரியாரிய உணர்வாகள் கூட்டமைப்பின் சார்பில் திசம்பர் 23 அன்று மாலை 4.00 மணிக்கு உறையூர் அண்ணாமலை நகர், சாஸ்திரி சாலை வழி பத்தாயிரம் கணக்கில் பெரியாh தொண்டர்கள் பங்கேற்ற நீண்ட நெடிய “கருஞ்சட்டைப் பேரணியும்” அதனைத் தொடர்ந்து உழவர் சந்தைத் திடலில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்ட தமிழின உரிமை மீட்பு மாநாடும் மாலை 5 மணிக்கு  நடைபெற்றது. அனைத்து பெரியாரிய இயக்கங்களின் தலைவர்களும், படைப்பாளிகளும், செயல் பாட்டாளர்களும், தமிழறிஞர்களும், ஆய்வாளர் களும் பங்கேற்று மாநாட்டில் உரையாற்றினர். இந்த மாநாட்டில் பெரியாரியத்தின் முக்கியத்துவம் குறித்தும், காவிப் பாசிசத்தை வீழ்த்த வேண்டியதன் அவசியம் குறித்தும், தமிழினத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை மீட்க வேண்டியதன் அவசியம் குறித்தும் உரையாற்றினர். மாநாட்டு மேடையில் மூன்று இணையர்களுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது.

kolathurumani Thiru 600மாநாட்டில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் வரவேற்புரை யாற்றினார். மாநாட்டிற்கு தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமையேற்றார். மாநாட்டின் நோக்கம் குறித்தான நோக்கவுரையை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசினார். தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன் மாநாட்டின் தீர்மானங்களை முன்மொழிந்தார். திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் வே.ஆனைமுத்து, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான், தியாகி இம்மானு வேல் பேரவையின் தலைவர் பூ.சந்திரபோசு, தமிழக மக்கள் சனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம்.செரீப், ஆய்வறிஞர் பேரா. க.நெடுஞ்செழியன், சொல்லாய்வு அறிஞர் அருளியார், பண்பாட்டு ஆய்வாளர் பேரா. தொ.பரமசிவன், பொருளியல் அறிஞர் பேரா.ஜெயரஞ்சன், தாளாண்மை உழவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோ.திருநாவுக்கரசு, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவர் முருகவேல்ராசன், புதிய குரல் அமைப்பின் தோழர் ஓவியா, தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், சமூக செயல்பாட்டாளர் பேராசிரியர் சரஸ்வதி, கரும்பனை கலை இலக்கிய ஊடகத்தளத்தின் தோழர் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, மக்கள் அரசு கட்சியின் தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், வழக்கறிஞர் பாலமுருகன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தோழர் நிலவழகன், காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் மகேசு, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், திரைப்பட இயக்குநர் கோபி நயினார், சின்னத்திரைத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் தோழர் கவிதா பாரதி, டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தீபக், தமிழ்த்தேச நடுவத்தின் தோழர் கண.குறிஞ்சி, தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.சு.நாகராஜன், நீரோடை அமைப்பின் தோழர் நிலவன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், தற்சார்பு விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கி.வே.பொன்னை யன், இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கத்தின் தோழர் பாவெல், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சௌ.சுந்தர மூர்த்தி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் தோழர் பார்த்திபன், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் தோழர் வினோத், கீற்று இணைய ஊடக ஆசிரியர் நந்தன், தமிழ்தமிழர் இயக்கத்தின் தோழர் பரிதி, தமிழர் உரிமை இயக்கத்தின் தோழர் சுப்பு மகேசு, ஐந்திணை கலை பண்பாட்டு இயக்கத்தின் தோழர் காஞ்சி அமுதன், எழுத்தாளர் தோழர் பாமரன் ஆகியோர் மாநாட்டில் சிறப்புரையாளர்களாக பங்கேற்றனர்.

கருஞ்சட்டைப் பேரணியில் பல பல்லாயிரக்கணக்கில் இருபால் இளைஞர்களும் கலந்துக் கொண்டு பெரியாரின் கொள்கை கோட்பாடு சார்ந்த முழக்கங்களை வானதிர முழங்கி திருச்சியையும் தமிழகத்தையும் உலுக்கிவிட்ட னர். இது பெரியாரின் தத்துவங்கள் உயிர்ப்புடன் துடிப்புடன் தமிழ் மண்ணுடன் பின்னிப் பிணைந்துள்ள தின் வெளிப்பாடாகும். இப்பெரியாரின் “கருஞ்சட்டைப் பேரணியும் மாநாடும்” தமிழக, தமிழர்களின் எதிரிகளை நிலைகுழைந்து நடுநடுங்க வைத்து விட்டது. தமிழர் உரிமை மீட்பு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

பெரியாரின் கருஞ்சட்டைத் தோழர்களின் எழுச்சி

தமிழ் மொழியும் தமிழர் வாழ்வும் செழிக்க வேண்டு மெனில், தமிழர்களிடையே ஒற்றுமை வேண்டும் என வலியுறுத்தி,

வெள்ளம்போல் தமிழர் கூட்டம்

வீரம்கொள் கூட்டம் அன்னார்

உள்ளத்தால் ஒருவரே மற்று

உடலினால் பலராய்க் காண்பார்

என்று பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

பெரியாரின் கைத்தடிகொண்டு மட்டுமே தமிழ் மண்ணி லிருந்து காவி பயங்கரவாதத்தையும், இந்திய - பன்னாட்டு ஏகாதிபத்தியத்தையும், வடமொழி - வடவர் ஆதிக்கத்தையும் விரட்டமுடியும் என்று எண்ணிய பெரியாரியர்களும் - தமிழ்மண்ணின் அகப்புறச் சூழலை நன்குணர்ந்த உண்மை யான தமிழ்த்தேசியர்களும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பாக அய்யாவின் நினைவுநாளில் ஒன்றுகூட வேண்டும் என முடிவெடுத்து தமிழ்நாடு முழுவதும் தேனீயாய்ச் சுற்றினர்.

தமிழின உரிமை மீட்பு என்கிற ஒற்றைப் புள்ளியில் இணையும் எந்த ஒரு சிறு அமைப்பும் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் சிரத்தையோடு இருந்து ஏறக்குறைய 150 அமைப்புகளை ஒன்றிணைத்து 2018 திசம்பர் 23 அன்று திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி-யும் தமிழின உரிமை மீட்பு மாநாடு-ம் நடைபெற்றது.

karunchetti perani 600அச்சமுற்ற காவி பயங்கரவாத பாசிச அரசுகள் அடக்குமுறையை ஏவின. முதலில் பேரணிக்குத் தடை; 20.12.2018 நள்ளிரவு 2.00 மணிக்கு திருச்சி மாவட்ட மாநாட்டுப் பொறுப்பாளர் தோழர் அக்பர் அலியை அழைத்து மாநாட்டுக்கும் தடை எனத் தடைமேல் தடை போட்டனர். செந்தமிழர் இருக்கின்றார்; சிங்கங்கள் போல் திறலழித்துவிட எவரும் பிறந்தாரில்லை என வெகுண் டெழுந்த தோழர்கள் அறமன்றத்தை நாடுவோம்; அங்கும் தடை எனில் தடையை மீறுவோம் என முடிவெடுத்து மதுரை நீதிமன்றத்தின் கதவைத் தட்டினர். கருத்துரிமையின் குரல்வளைகள் நெறிக்கப்படும் போதெல்லாம் எப்போதாவது சற்றே தன் நீதிக்கோலை உயர்த்தும் அறமன்றம் தன் கோலை உயர்த்தி அனுமதி வழங்கி உத்தரவிட்டது. பல்வேறு கட்ட ஊடகச் சந்திப்புகள் நிகழ்த்தியும் எந்த ஊடக வெளிச்சமும் கிடைக்கவில்லை எனினும் செந்தமிழ் ஒன்றே நல்லொற்றுமை சேர்க்கும்; நன்னெறி சேர்க்கும் என 23.12.2018 காலை முதலே தமிழ்நாட்டின் எட்டுத் திக்கிலிருந்து திரண்டது கருஞ்சட்டைப்படை. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் தொடங்கி தில்லைநகர் சாலை ரோடு வரை கருமேகம் தரையில் விரிந்ததுபோல் கரும்படைக்கூட்டம். பிற்பகல் 3.30 மணிக்கு அனைத்துத் தலைவர்களும் ஒருங்கே நின்று கொடியசைத்து அய்யாவுக்கு வீரவணக்கம் முழங்கிடப் பேரணி தொடங்கியது. அன்று இந்தியை எதிர்க்கத் திரண்ட பெரியாரின் கருஞ்சட்டைப் படை இன்று வடவரின் ஒட்டுமொத்த ஆதிக்கத்தைக் குலைக்கப் புறப்பட்டதோ எனக் காவிகளும் காக்கிகளும் அஞ்சுகிற வகையில்

எங்கள் நாடு தமிழ்நாடு

இங்கு ஏதடா இந்து நாடு?

எங்கள் நிறம் கறுப்பும் சிவப்பும்

காவிக்கு மறுப்பு பெரியாரின் கறுப்பு

என பல்வேறு முழக்கங்களை எழுப்பி பல்லாயிரக் கணக்கில் பங்கேற்ற இப்பேரணி மாலை 6.30 மணியளவில்தான் மாநாட்டுத் திடலில் நிறைவுற்றது. முன்ன மேயே 5.30 மணிக்குத் தொடங்கிய தமிழின உரிமை மீட்பு மாநாடு புரட்சிக் கவிஞரின் கனவை நனவாக்குகிற வகையில் எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்; இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என அனை வரும் ஒன்றிணைந்து வடவரின், வடமொழியின், இந்தி - இந்திய ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை தமிழ்நாட்டி லிருந்து அய்யாவின் கைத்தடிகொண்டு விரட்டுவோம் என முழங்கினர்.

Pin It