மோடி அரசு மக்களுக்கு எதிரானது!

மூன்று ஆண்டுகளில் இந்தியரைப் பாழாக்குவர்!

உலகம் முழுவதிலும் கி.மு.4000-இல் 8.5 கோடி மக்கள் இருந்தார்கள். கி.பி.1-இல் உலகத் தில் 20 கோடி மக்கள் இருந்தார்கள். அப்போது மனிதனின் சராசரி வயது 5 மட்டுமே. ஏன்?

நல்ல நீரும், நச்சு நீரும் இருந்தன. நச்சு நீரைக் குடித்தவர்கள் உடனே செத்தார்கள். பாம்புகள், காட்டு விலங்குகள் இவற்றின் கடியாலும் மக்கள் செத்தார்கள். இனம் தெரியாத நோய்களுக்கு வைத்தியம் இல்லாமல் செத்தவர்கள் அதிகம். எனவேதான் அப்போது சராசரி வயது 5.

இந்த இயற்கை உயிர்க்கொல்லிகளை அடுத்து, மதங்கள் மனித உயிர்களைக் கொன்றன.

ஜொராஸ்ட்ரியம், பிராமண மதம் (அ) இந்து மதம் மூத்தவை; மூவாயிரம் ஆண்டுகள் பழைமையானவை. அடுத்து, 2600 ஆண்டுகளுக்குமுன் தோன்றியவை சமணமும், பவுத்தமும்.

2016 ஆண்டுகளாக இருப்பது கிறித்துவம்; 1600 ஆண்டுகளாக இருப்பது இஸ்லாம்.

இவ்வளவு மதங்களும் மக்களை நல்வழிப்படுத்தத் தோற்றுவிக்கப்பட்டவை என்றுதான் எல்லா மதக்காரர்களும் சொன்னார்கள். ஆனால் அது பொய்யாகி விட்டது. ஏன்?

‘அரசு’ என்கிற அமைப்பு உருவாவதற்கு முன்னும், பின்னும் “என் மதம் தான் உண்மையான மதம்” என்று கூறி, அதை ஏற்காதவர்களை மக்களே கொன்றார்கள்; பின் அரசுகளே கொன்றன. உலகத்தில், மதம் காரணமாகக் கொல்லப்பட்ட மனிதர்களே அதிகம் பேர்.

இது, இந்து மதம் தவிர்த்த எல்லா மதங்களாலும் ஏற்பட்ட உயிரிழப்பு. பிறவி சாதி - பிறவி வருண ஏற்பாட்டை உருவாக்கியது இந்து மதம் ஒன்றே. மத அடிப்படை, வருண அடிப்படை என்கிற இரண்டு கருவிகளாலும் இந்துக்களில் பெரும்பாலானவர்களை - கீழ்வருணத்தாரை, கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் - புஷ்யமித்ரசுங்கன் காலந்தொட்டு, கி.பி.19ஆம் நூற்றாண்டு வரை கோடிக்கணக்கான இந்து கீழ்ச்சாதி மக்களை - சமணர்களை - பௌத்தர்களை - இஸ்லாமியர்களைக் கொன்றொழித்தது இந்து மதமே.

அறிவியல் நோக்கு தோன்றாத காலந்தொட்டு, அறிவியல் விளைவித்த அணுகுண்டு வீசப்பட்ட 1945 வரையில் மதம் காரணமாக மக்களிடையேயும் ஆதிக்கம் செலுத்தும் நோக்கம் காரணமாக ‘அரசு’களிடையேயும், வர்க்கங்களுக் கிடையேயும் நடத்தப்பட்ட போர்களில் கொல்லப்பட்டவர்களை விட, மதங்களுக் கிடையேயும் வருணங்களுக்கிடையேயும், மத-சாதிகளுக்கிடையேயும் நடந்த இடைவிடாத சண்டைகளால் செத்துப்போனவர்களே அதிகம் பேர்.

இவ்வளவு சாவுகளுக்குப் பிறகும் இன்றைய உலகில் 750 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இந்தியாவில் 130 கோடி மக்கள் வாழ்கிறார்கள்.

இந்தியாவிலுள்ள 105 கோடி இந்துக்களில், 95 கோடிப் பேர் பார்ப்பனர் அல்லாத கீழ்ச்சாதி சூத்திர-ஆதி சூத்திர மக்கள். 5 கோடிப் பேர் பார்ப்பனர்; 5 கோடிப் பேர் சத்திரியர், வைசியர்.

சூத்திர-ஆதிசூத்திர சாதிகள் இன்னமும் கீழ்ச்சாதி மக்களாகவே அடக்கி வைத்திட, இன்றைய நரேந்திர மோடி அரசு எல்லாம் செய்கிறது.

அப்படிச் செய்திட, 1991இல் காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம ராவ் போட்ட அடிப்படையும்; 1996இல் வாஜ்பேயி போட்ட அடிப்படையும்; 2004 முதல் 2014 வரை மன் மோகன் சிங் போட்ட அடிப்படையும் துணை நிற்கின்றன.

இவர்களுக்கு உதவும் கருவியாக இருப்பது முற்றுரிமை பெற்ற இந்திய அரசு; படை; நீதிமன்றம் இவை. இந்த முற்றுரிமை பெற்ற கருவியான இந்திய அரசைக் கைப்பற்ற, இந்தியா முழுவதிலும் உள்ள எந்தச் சூத்திரனும்-ஆதி சூத்திரனும் என் றும் துணியவில்லை.

இன்று அந்தக் கருவியைக் கைப்பற்றிக் கொண்ட சூத்திரரான நரேந்திர மோடி, இளம் பருவத்திலேயே இந்து மதக்காப்பாளராகப் உருவாகி, இன்று பிராமண மத ஏவலாளாக - பணக்கார இந்தியர்களின் கையா ளாக-உலகப் பணக்கார உலக நாடுகளுக்கு இந்தியாவைச் சுரண்டுகளமாக்கும் தரகராகப் பணியாற்றுகிறார். எப்படி?

1. இந்தியாவின் இறையாண்மைக்குக் கேடு சூழும் தன்மையில், இராணுவத்துக்கான கருவிகளைச் செய் யும் துறையிலும், வானூர்திகளை இயக்கும் துறை யிலும் 100 விழுக்காடு அந்நிய நாடுகளின் முதலீடு நுழைய அனுமதி அளித்து, 20.6.2016 அன்று நடை பெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மோடி முடிவெடுத்துள்ளார்.

இத்துறைகளை அந்நியில், மருந்துகள் உற்பத்தித் துறையிலும் 100 விழுக்காடு அந்நிய நாடுகள் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக் கடற்கரைக் குப்பமான சென்னை யிலும் மற்றும் சூரத்திலும் தொழிற்சாலைகளை அமைத் திட 1600களில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டிஷ் வெள்ளை யன்தான், 1800க்குள் படிப்படியாக இந்தியா முழுவதை யும் கைப்பற்றி முற்றுரிமை உள்ளதான “ஒரே இந்தியாவை” உருவாக்கினான்.

அன்றைய மக்களுக்குக் கல்வி அறிவு இல்லை; அன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இல்லை.

இன்றைய இந்தியாவில் 80 விழுக்காடு மக்கள் கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள்; 26 விழுக்காட்டுப் பேர் தரமற்ற உயர்கல்வி பெற்றிருக்கிறார்கள்.

உயர்கல்வி பெற்ற இளைஞர்களில் ஆயிரக்கணக் கானவர்களைத் தேர்வு செய்து, அரசுச் செலவில் மேலைநாடுகளுக்கு அனுப்பி, தரமான இராணுவக் கருவிகளையும், தரமான மருந்துகளையும் உற்பத்தி செய்யக்கூடிய மிக உயர்ந்த அறிவுத் திறனை (Highly Skilled)) உடைய கல்வியைக் கற்றுவரச் செய்து, அவர் களை வைத்து இந்திய அரசே இவற்றை உற்பத்தி செய்திட வழிகோலுவதைத்தானே அரசு செய்ய வேண்டும்?

அதைச் செய்யாமல், நேற்றுவரை 49 விழுக்காடு முதல் 74 விழுக்காடு வரை அந்நிய முதலீட்டை அனுமதித்த இந்திய அரசு, இன்று 100 விழுக்காடு அந்நிய முதலீட்டை அனுமதித்தது, ஏன்? இது எங்கே போய் நிற்கும்?

முதலில் இந்திய மக்களை - படித்த இளைஞர் களை வேலை வாய்ப்பு அற்றவர்களாக ஆக்கும்; இந்தியரைச் சுரண்டும் வகையில் உயர்ந்த விலையில் மருந்துகளை விற்பதில் கொண்டு போய்விடும். இந்நிலையில் அரசியல்வாதிகளும், கல்வியாளர்களும், உயர்கல்வி கற்ற இளைஞர்களும் சுதந்தரத்தின் அருமையையும் சுதந்தர நாட்டுக் குடிமகனுக்கு உள்ள உரிமை யின் உயரிய ஆற்றலையும் மாண்பையும் அறியாதவர்களாகவும், இந்திய அரசின் மக்கள் நலனுக்கு எதிரான போக்கைக் கண்டும் காணாத வர்களான வெறும் சோற்றுத் துருத்திகளாக வும் இருப்பது எப்படிச் சரியாகும்?

“இந்தியாவுக்கு வந்து உற்பத்தி செய்யுங்கள் (Make in India))” என்று கூவி அந்நியனை அழைத்து, அவனுக்கு 5,000 - 10,000 ஏக்கர் நிலமும், நீரும், மின்வசதியும் கொடுத்து - அறிவுத்திறனுள்ள (Skilled) அந்நியர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளவும், அந்நியர்களையே பணமுதலீடு செய்யச் சொல்லியும் இந்திய இளைஞர் களின் வேலை வாய்ப்பைத் தடுப்பதும், இந்தியாவை அந்நியர்களின் சுரண்டுகளமாக மாற்றுவதும் அல்லவா, மோடி அரசின் இத்திட்டம்? இத்துடன் நின்றதா மோடி அரசு?

2. பள்ளிகளும் கல்லூரிகளும் கோடை விடுமுறைக் குப் பிறகு 2016 சூனில் திறக்கப்பட்டன.

இந்து மதத்தை, களிமண் பக்குவத்திலுள்ள இளங் குழந்தைகள், இளைய ஆண்கள் - பெண்கள் நெஞ் சத்தில் திணிக்கும் திட்டத்தை நிறைவேற்ற வசதியாக - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளையான விஸ்வ இந்து பரிஷத் வழியாக, வேதபாடசாலைகளை அமைத்து எல்லாக் குழந்தைகளுக்கும் சமஸ்கிருதமும், சமஸ் கிருதத்திலேயே மற்ற எல்லாப் பாடங்களும், வேதக் கணக்குப் பாடமும் கற்றுத்தரத் திட்டமிட்டது மோடி அரசு. இவற்றை 2016லேயே வடஇந்தியாவில் தில்லி, அமிர்தசரஸ் (பஞ்சாப்), பஸ்வாரா (இராசஸ்தான்), மதுரா (உ.பி.) தில்லியை அடுத்த குர்கான் முதலான இடங்களில் அரசு நிதி உதவியுடன் தொடங்க அரசு திட்டமிடுகிறது.

2014இல் அரியானாவில் பா.ச.க. ஆட்சி அமைந்தது. அங்கு எல்லாத் தொடக்கப் பள்ளிகளிலும் கட்டாயமாக சமஸ்கிருதம் கற்றுத்தரப்பட மாநில அரசு முடிவு செய் துள்ளது. அத்துடன் சிறுபான்மையினரான இஸ்லாமி யரின் குழந்தைகள் உருது மொழி கற்கிறார்கள். போதிய இஸ்லாமிய மாணவர்கள் பள்ளிகளில் இல்லாத இடைவெளியைப் பயன்படுத்தி, எல்லாப் பிள்ளைகளுக் கும் சமஸ்கிருதமும் கற்றுத்தர வேண்டி, உருது கற்பிக் கும் இஸ்லாமிய ஆசிரியர்கள் உட்பட எல்லா ஆசிரியர் களுக்கும் சமஸ்கிருதம் அரசின் செலவில் கற்றுத்தரப் படுகிறது.

நாளைக்குத் தென்மாநிலங்களில், பள்ளிகளில், சமஸ்கிருதம் கற்றுத்தருவதை எப்படி நாம் தடுக்க முடியும்? அதற்கான அதிகாரம் மாநிலங்களுக்கு எங்கே இருக்கிறது?

சமஸ்கிருதம்-தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டி, பஞ்சாபி, பங்களா, இந்தி மொழிகளைப் போல, பல தலைமுறைகளாக-இலட்சக்கணக்கான, கோடிக் கணக்கான மக்களால் பேசப்படுகிற வீட்டுமொழி

அல்ல. மேலும், பேச்சு வழக்கில் இல்லாத மொழி; திருமணம், திதி, கருமாதி முதலான சடங்குகளில் புராண முறைப் படி புரோகிதம் செய்யும் பார்ப்பனர்கூட அறிந்திராத மொழி; வேதபாடசாலையில் படித்த சில ஆயிரம் பார்ப் பனர்களால் மட்டுமே சடங்குகளிலும் கோவில்களிலும், பார்ப்பனர் வீட்டுச் சடங்குகளிலும் சாஸ்திரிகளால் பயன்படுத்தப்படும் மொழி. எந்தப் புரோகிதன் - எந்த சாஸ்திரி வீட்டிலும் சமஸ்கிருதம் வீட்டுப் பேச்சு மொழி யாக இல்லை.

இந்தியாவை “இந்து நாடாக” (Hindu State) ஆக்கிட, மோடி அரசு செய்கிற அடிப்படைப் பணி இது.

3. 1991 முதல் இந்திய அரசினரால் நவோதயா பள்ளி கள் நிறுவப்படுகின்றன. 6ஆம் வகுப்பிலிருந்தே மாநிலக் கல்வித்திட்டத்திலிருந்து வேறுபட்டC.B.S.E. திட்டப்படி பாடங்கள் உள்ளன. இந்தி பேசாத மாநிலங் களில் இந்தி ஒரு கட்டாயப் பாடமாக உள்ளது. இப்போது அப்படிப்பட்ட பள்ளிகள் 598 உள்ளன. இப்பள்ளிகளில் இலவசமாக - தரமான கல்வி தரப்படுவது உண்மை; திறமையான சிற்றூர்ப்புற மாணவ, மாணவியர் படிக்க வைக்கப்படுவதும் உண்மை. ஆனால் எல்லோரும் கட்டாயமாக இந்தி கற்க வேண்டும் என்பதும் உண்மை. மாநில மொழியில் கல்வி தரப்படுவது இப் பள்ளிகளில் அறவே இல்லை. அப்படிப்பட்ட பள்ளிகளை மேலும், மேலும் பெருக்குவது, வட்டார மொழிகளின் வளர்ச்சி யைத் திட்டமிட்டுத்தடுப்பதாகும். இத்தகைய கல்வித் திட்டம் எதற்காக?

4.1984 வரையில் இந்திய அரசின்கீழ் 247 பொதுத் துறை நிறுவனங்கள் செயல்பட்டன. தொடர் வண்டித் துறை, அஞ்சல் - தந்தி - தொலைபேசித் துறை - கனரக உலைகள் உற்பத்தித் துறை இவை எல்லாமே பொதுத்துறை நிறுவனங்கள்தான். வங்கித்துறை, காப் பீட்டுத் துறை இவையும் பொதுத்துறைகளே. இவற்றில் குறைந்தது 10ஆம் வகுப்புப் படித்தவர்கள் உட்பட்ட பல வகுப்பினரும், ஆண்டுதோறும் இலட்சக்கணக்கா னோர் வேலை பெறமுடியும்.

இவற்றை நிருவகிக்கும் உயர் அதிகாரம் படைத்த குழுக்கள் (Boards) தொடர்ந்து பார்ப்பனர்கள் மற்றும் மேல்சாதிக்காரர்கள் ஆதிக்கத்திலேயே இருந்தன.

1970க்குப் பிறகு பட்டியல் வகுப்பினரும், பழங்குடி யினரும் இவற்றில் ஒதுக்கீடு மூலம் வேலை பெற முடிந்தது. 1994க்குப்பிறகு பிற்படுத்தப்பட்ட வகுப்பின ரும் ஒதுக்கீடு மூலம் வேலை பெற முடிந்தது.

இவற்றில் 40 ஆண்டுகளுக்கு மேல், மேலாண்மை இயக்குநர், இயக்குநர்கள், ஆணையர்கள் போன்ற அதிகாரம் வாய்ந்த பதவிகளில் இருந்தவர்களில் முக்கால்வாசிப்பேர் பார்ப்பனர்களே. 1991இல் தனியார் மயம், உலக மயம், தாராள மயம் என்ற தனியார் ஆதிக்கப் பொருளாதாரக் கொள்கையை இந்திய அரசு ஏற்றது முதல், அவர்கள், அந்தத் துறைகளைப் பாழ டித்தார்கள்; இழப்புக்கு உள்ளாக்கினார்கள். ஊழலை யும் ஒழுங்கீனத்தையும் கழிப்பிணித் தனத்தையும் வளர்த்தார்கள்.

அதன் நேரடி விளைவாகவே, இந்திய அஞ்சல் துறை தோற்றுப் போய், பணியாளர் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. அதனால் தூது அஞ்சல் துறை (Courier Post) மற்றும் தனியார் வங்கித்துறை, தனியார் காப் பீட்டுத் துறை, தனியார் வானூர்தித் துறை முதலா னவை விரைந்த வளர்ச்சி பெற்றன.

இப்போது, மோடி அரசு, திட்டக்குழு என்பதைக் கலைத்துவிட்டு, ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பை ஏற்படுத்திய பின்னர், 2014க்குப் பிறகு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று, அவற்றை மூடு வதில் விரைந்து செயல்படுகிறது, மோடி அரசு. அண் மையில் நிதி ஆயோக் நிருவாகக் குழு கூடி, இழப்புக்கு உள்ளாகி இருக்கிற 32 பொதுத்துறை நிறுவனங்களை அடையாளங்கண்டு, அவற்றுக்குரிய பங்குகளை விற்று, அதன்மூலம் ரூ,56,500 கோடியைத் திரட்டுவ தென்று முடிவு செய்துள்ளது.

பொதுத்துறை என்பது நேருவின் காலத்து சோசலி சத் திட்டம் என்று சொல்லிச் சொல்லி, அது ஒழிக்கப்பட வேண்டும் என்று கருதி, அத்திசை நோக்கி மோடி அரசு விரைந்து செயல்படுகிறது.

அடுத்து 14 இலட்சம் பணியாளர்களைக் கொண்ட தொடர்வண்டித் துறையையும் 2017க்குள், மோடி அரசு, தனியாருக்கு விற்றுவிட்டால், அதை நம்பியி ருக்கும் பல நூறு கோடி மக்கள் அதிகமான பயணக் கட்டணச் சுமையைத் தாங்க வேண்டிவரும். பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய 95 கோடி மக்கள் பெற்றுவரும் இடஒதுக்கீடு மூலம் கிடைக்கும் இலட்சக்கணக்கான வேலை வாய்ப் பும் பறிபோய் விடும். இவை கவலைக்கு உரியவை அல்லவா?

5. நரேந்திர தாமோதர தாஸ் மோடி, தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்ற நாள் முதல், ஊரார் வரிப்பணத்தில் உலகஞ்சுற்றும் அரசியல் தலைவராகச் செயல்படுகிறார்.

இந்தியாவில் உள்ள திறன் போதாத உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி கற்ற கோடிக்கணக்கான ஆண், பெண் களிலிருந்து ஆயிரக்கணக்கானோரைத் தேர்வு செய்து, வளர்ந்த நாடுகளுக்கு அரசுச் செலவில் அனுப்பி, கதிர்மின் உற்பத்தி, மருந்துகள் - மருத்துவக் கருவிகள் உற்பத்தி, வானூர்தி உறுப்புகள் உற்பத்தி இவற்றில் திறன்மிக்க பயிற்சி பெறச் செய்து, இந்தியரிடையே மூலதனப் பங்குகள் எழுப்பி, பொதுத்துறை நிறுவனங்களாக கதிர் வாங்கித் தகடு (Solar Panel) மற்றும் துணைக் கருவிகள் உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைத்து, போர்க் கால விசையில் கதிர் மின் உற்பத்தியைப் (Solar Energy) பெருக்கி-வேளாண்மைக்கும், வீட்டுப் பயன் பாட்டுக்கும், தொழிற்சாலைகளை இயக்கவும் தட்டுப்பாடு இன்றி மின்சாரம் வழங்குவதை விட்டுவிட்டு - உலக மானிடம் அமைதியாக வாழக்கூடாது என்று கருதி 1945 முதல் உழைப்பாளிகளுக்கு எதிராகச் செயல் படுகிற அமெரிக்கத் திருடர்களோடு கூடிக்குலவி, இந்தியா வில் புதியதாக ஆறு அணு உலைகளை நிறுவிட, நாளைக்குப் பதவியை விட்டு நீங்கப் போகிற பாரக் ஒபாமாவுடன் 7.6.2016 அன்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வந்துவிட்டார், மோடி.

உலக அளவில் திறமை அற்ற தொழில் நிறுவனம் என்று அறியப்பட்ட - அமெரிக்க “தோஷிபா வெஸ்ட் அவுஸ்” (Toshiba West House) என்ற நிறுவனமும் - இந்திய அணுமின் கழகமும் இணைந்து 6 அணு உலை களை  அமைக்கும் என்பதுதான், அந்த ஒப்பந்தம்.

2016 மதிப்பீட்டின்படி, இந்த 6 அணு உலைகளை அமைக்க 4 இலட்சம் கோடி ரூபா செலவாகும். இவை எதற்காக இந்தியாவில் வேண்டும்?

ஓர் ஆண்டில் 365 நாள்களில் 330 நாள்களில் வெயில் அடிக்கும் பகுதி, இந்தியா.

நமக்குத் தேவை இந்தியக்குடிமக்களிடம் எழுப்பப் பட்ட கடன் பத்திர முதலீடு, பயிற்சி பெற்ற இந்திய அறிவியல் - பொறியியல் - அணுவியல் அறிஞர்கள்; வல்லுநர்கள் குழுவினால் வரையப்பட்ட திட்டம் இவையே.

கூடங்குளம் அணு உலைகளை அகற்ற வேண்டிய இந்தியாவில், மேலும் 6 அணு உலைகள் ஏன்? ஏன்? என்று கேட்டு, ஒவ்வொரு குடிமகனும் மோடி அரசை எதிர்த்துக் குரல் எழுப்ப வேண்டும்.

மானிடத்தின் மாண்பை அழித்துக் கொண்டிருப் பவை மதங்கள். இந்து மதம் அதில் முதலிடத் தில் உள்ளது.

இந்துமத வெறியரான மோடி, 2017 வரை யிலும் பிரதமராக நீடிப்பது 130 கோடி இந்தி யர்களுக்கும் கேடானது.

எனவே, “இந்தியாவை இந்து நாடாக - அகண்ட பாரதமாக அமைக்கத் திட்டமிடும் மோடி ஆட்சி ஒழிக!” என மூலைக்கு மூலை குரலெழுப்பு வோம்! மக்களை அணிதிரட்டுவோம்! வாருங்கள்!

Pin It