10 வயது முசுலீம் பெண்ணை, உறவினரே கொன்று பலிகொடுத்தார்!

கர்நாடகாவில் பெங்களூரை அடுத்த ஹோச ஹள்ளி என்ற நகரின் எல்லையில், காவல் துறையி னர் உயிர்ப் பலி கொடுக்கப்பட்ட 10 வயதுள்ள ஆயிஷா என்கிற பெண்ணின் உடலைக் கைப்பற்றினர்.

இந்தப் பெண்ணைக் கொன்று பலி கொடுத்ததற் காக, பெண்ணின் சிற்றப்பா முகமது வாஸில் என்பவர் உள்ளிட்ட நான்கு பேர்களை ராம்நகர் மாவட்டக் காவல் துறையினர் கைது செய்தனர். வாஸில் உள்ளூர் மசூதி யினுடைய செயலாளராக உள்ளார். மேலும் ரதீஷுன்னிசா (38), நசீம்தாஜ் (33), ஒரு வேலையற்ற இளைஞன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ஆயிஷா என்கிற பெண்ணைக் கடத்தி, 1.3.2017 இல் கொலை செய்ததாகக் குற்றஞ்சாற்றப்பட்டனர். ஆயிஷா வின் உடலை 3.3.2017 அன்று மாகதி நிலையத் தைச் சார்ந்த காவலர்கள் கைப்பற்றினர்.

எதற்காக உயிர்ப்பலி?

நசீம்தாஜ் என்கிற சூனியக்காரி, ஆலோசனை சொன்னதின் பேரில், வாசில் தன்னுடைய சகோதரன் முகமது ரஃபிக் பக்கவாத நோய்க்கு ஆளாகியிருப்ப வரை மீட்க, ஒரு குமரிப்பெண் பலிகொடுக்கப்பட வேண்டுமென்று ஆலோசனை சொன்னார். ரஃபிக் என்பவருக்குப் பேய் பிடித்திருப்பதால்தான், பக்கவாத நோய்க்கு ஆளானார் என்றும் சூனியக்காரி சொன் னாள்.

வாசில் குடியிருக்கும் பகுதியில் ஆயிஷா குடும்பமும் வாழ்கிறது. உடனே ஆயிஷாவின் நிழற்படம் ஒன்றை எடுத்து, அந்தச் சூனியக்காரிக்கு வாசில் அனுப்பினார். சூரினயக்காரி அந்தப் பெண்ணை பலிகொடுத்தால் போதும் என்று அனுமதியும் தந்தாள்.

1.3.2017 புதன் அன்று, ஆயிஷா தன் தகப்பனாரின் கடையிலிருந்து வீட்டுக்கு வந்தபோது, வழி மறித்து வாசிலும், வேலையற்ற ஒரு சிறுவனும் மறை வான இடத்துக்கு அவளைக் கடத்திக் கொண்டு போய் பிளாஸ்டிக் கயிற்றினாலும், ஒரு கைக்குட்டைத் துணியாலும் அப்பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டனர். அந்த வேலையற்ற இளைஞன்தான் ஆயிஷாவை உயிரோடு கடைசியாகப் பார்த்தவன்.

வாசில் யார் யாருக்கெல்லாம் தொலைப்பேசியில் பேசினார் என்பதைச் சாட்சியமாக வைத்து, காவலர் விசாரணை செய்தனர்.

வாசில், ஆயிஷாவை ஹோசஹள்ளியில் உள்ள ஒரு புதைகுழிக்கு (Tomb) அழைத்துச் சென்று, சில சடங்குகளைச் செய்தான்; ஆயிஷாவின் கழுத்தைக் கத்தியால் அறுத்தான்.

ஆயிஷாவின் உடலை ஒரு சாக்குப் பையில் கட்டி, சிறிது தொலைவில் வீசினான்.

மகளைக் காணோம் என்று அங்கும் இங்கும் தேடிப் பெற்றோர் அலைந்தபோது, வாசிலும் அவர்களுடன் சேர்ந்த தேடுவதுபோல் நடித்தான். பெற்றோர்கள் காவல் நிலையத்துக்குப் புகார் மனு கொடுக்கச் சென்றபோது, வாசிலும் அவர்களுடன் சென்றான்.

உண்மையில் வாசில் தான் கொலைகாரன் என்று தெரிந்தவுடன், அக்கம் பக்கத்துப் பொதுமக்கள் வாசில் வீட்டுக்குள் புகுந்து பண்டங்களை அடித்து நொறுக்கினர்.

“வாசிலைக் கைது செய்” என்று கோரிப் பொது மக்கள் சாலை மறியலும் செய்தனர். காவலர்கள் பொது மக்களை அமைதிப்படுத்தினர்; தக்க நடவடிக்கை எடுப் போம் எனப் பொது மக்களுக்கு உறுதி தந்தனர்.

இந்துக்கள் பேயை நம்புகிறார்கள்; சூனியக்காரிகள் சொல்கிறபடி சாமி சிலைகள் முன் மனித உயிரைப் பலி கொடுக்கிறார்கள்.

இஸ்லாமியர்களாக மதம் மாறிய பிறகும், இந்துக் களைப் போலவே அவர்களும் பேயை நம்புகிறார்கள்; சூனியக்காரியை நம்புகிறார்கள். அவளுடைய சம்மதத் தின் பேரில், ஏதும் அறியாத 10 அகவை ஆயிஷா என்கிற பெண்ணை ஒரு புதைகுழிக்கு முன் உயிர்ப் பலி கொடுத்துவிட்டார்கள்.

மத நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் சூனியமும் எல்லா மதங்களுக்கும் சொந்தம்.

Comments

1 comment

1
முஹம்மத் அலி ஜின்னா
// இஸ்லாமியர்களாக மதம் மாறிய பிறகும், இந்துக் களைப் போலவே அவர்களும் பேயை நம்புகிறார்கள்; சூனியக்காரியை நம்புகிறார்கள். அவளுடைய சம்மதத் தின் பேரில், ஏதும் அறியாத 10 அகவை ஆயிஷா என்கிற பெண்ணை ஒரு புதைகுழிக்கு முன் உயிர்ப் பலி கொடுத்துவிட்டார்கள். //
---------------------

நரபலியை தடுத்து நிறுத்திய தியாகப் பெருநாள்:

தியாகப் பெருநாளின் முக்கியத்துவம் பற்றி பேசும்பொழுது "ஒரு பக்தனின் பக்தியை சோதிக்க அவனுடைய பிஞ்சுக்குழந்தையை பலியிடுமாறு உங்களுடைய அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமான அல்லாஹ் கட்டளையிடுகிறானே.... இவ்வளவு ஈவு இரக்கமற்ற நரபலி கேட்கும் கடவுள் தேவையா?.

"அல்லாஹ்வின் பெயரால் ஆட்டை அறுத்து சாப்பிட்டுவிட்டால் பெரிய தியாகமாகி விடுமா?. தியாகம் செய்தது ஆடு. ஆனால் அதை சாப்பிட்ட பாய் தியாகியா?. நால்லாருக்கு பாய் ஒங்க நியாயம்" என எனது ப்ராஹ்மின் நண்பர் நக்கலடிக்கிறார்..
------------------------------------------

தெளிவு: (சத்திய மார்க்கம்.காம்)

இணை தெய்வங்களுக்கு நரபலி கொடுப்பது எல்லாக் காலத்திலும் நிகழ்ந்திருக்கின்றன. இன்றும் நரபலி பற்றிய நிகழ்வுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தேறி வருவதாக ஊடகத் செய்திகளில் வாசிக்கிறோம். இறுதி வேதம் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்திலும் நரபலிகள் கொடுக்கப்பட்டன. நரபலியைக் கண்டித்து அருளப்பட்ட வசனம்:

"இவ்வாறே இணைவைப்போரில் அதிகமானோருக்கு, தமது குழந்தைகளைக் கொலை செய்வதை (நன்மை போல்) அவர்களது இணை தெய்வங்கள் அலங்கரித்துக் காட்டின. இது அவர்களை அழிவுக்குட்படுத்துவதற்கும் அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்குக் குழப்புவதற்குமேயாகும்..." (அல்குர்ஆன் 006:137).

"அறிவில்லாமல் மடத்தனமாகத் தமது குழந்தைகளைக் கொலை செய்தவர்களும்..." (அல்குர்ஆன் 006:140)

அரபியர்களின் பல தெய்வக் கொள்கையைப் பற்றிக் குர்ஆனில் பல வசனங்கள் அறிவிக்கின்றன. இணை தெய்வங்கள் மீது அவர்கள் கொண்டிருந்த பக்தியானது, அவர்களின் ஆண் குழந்தைகளை அவற்றிற்காக நரபலி கொடுத்திடவும் அவர்களைத் தூண்டியது. அவர்களின் இந்தச் சீர்கேடுகளையும், குழப்பங்களையும் பற்றித்தான் குர்ஆன் ஆறாவது அத்தியாயத்தின் 136-140 வசனங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இஸ்லாம் நரபலியை ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. மாறாக, நரபலியைக் கொலை என்றே உறுதிப்படுத்துகின்றது.
--------------------------

மடமை இருளில் வாழ்ந்த காட்டரபிகள் அல்லாஹ்வின் பெயராலும் இஷ்ட தெய்வங்களின் பெயராலும் நரபலி கொடுத்து வந்தனர். பல இறைத்தூதர்கள் மூலம் அல்லாஹ் இந்த கொடூர செயலை கண்டித்தான். ஆனால் அந்த மூடர்கள் கேட்கவில்லை. இறுதியாக நபி இப்ராஹிம் (அலை) மூலம் மனித இனத்துக்கு "நரபலி தடுக்கப்பட்டது" எனும் நீதியை ஐயமின்றி உணர்த்த அல்லாஹ் முடிவு செய்தான்.

ஆகையால் நபி இப்ராஹிமின் புதல்வர் இஸ்மாயில் அவர்களை நரபலி கொடுக்க அல்லாஹ் கட்டளையிட்டான். இந்த கட்டளையை கேட்ட நபி இப்ராஹிம் அவர்கள் "நரபலி தடுக்கப்பட்டது என உரைக்கும் அல்லாஹ் நரபலி கொடுக்க கட்டளையிடுகிறானே" என பிரமித்து போய்விட்டார். "நிச்சயமாக அல்லாஹ் நீதிமான். அவன் அநீதி செய்ய மாட்டான். இதில் நிச்சயமாக ஏதோ ஒரு படிப்பினை மறைந்துள்ளது" எனும் அசைக்க முடியாத நம்பிக்கை நபி இப்ராஹிம் அவர்களுக்கு இருந்தது. தனக்கு வந்த கட்டளை பற்றி தனது புதல்வர் இஸ்மாயில் அவர்களிடம் நபி இப்ராஹிம் எடுத்துரைத்தார். இஸ்மாயில் (அலை) அவர்கள் சிரித்துக் கொண்டே "அல்லாஹ்வின் கட்டளை என்றால் அதை நிறைவேற்ற என்ன தயக்கம்?. அப்படியே செய்யுங்கள்" என பதிலளித்தார்.

தனது மனதை திடப்படுத்திக்கொண்டு கத்தியால் மகனின் கழுத்தை நபி இப்ராஹிம் அறுத்தார், ஆனால் கழுத்து அறுபடவில்லை. அல்லாஹ் தடுத்து நிறுத்தினான். இதன் மூலம் "நரபலி தடுக்கப்பட்டது" எனும் நீதியை மனித இனத்துக்கு அல்லாஹ் அறிவித்தான்.

அதே சமயம், "அல்லாஹ்வுக்காக ஜிஹாத் எனும் அறப்போர் செய்து உயிரை தியாகம் செய்ய ஒரு முஸ்லிம் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். கோழையாக பயந்து ஓடக்கூடாது. கோழைக்கு சொர்க்கத்தில் இடமில்லை" எனும் நீதியையும் அல்லாஹ் மனிதகுலத்துக்கு உரைத்தான்.

"அல்லாஹ் ஒரு பொழுதும் அநீதி செய்ய மாட்டான். அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்து உயிர்த்தியாகம் செய்ய ஒரு முஸ்லிம் தயங்கக்கூடாது" எனும் படிப்பினையை இந்த தியாகப் பெருநாள் உரைக்கிறது.

அனைத்தையும் நன்கறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.