இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு வியூகம் என்பது இரட்டைப் போக்காகவும், நேர்மையற்றதாகவும் இருக்கிறது. விவேகமற்ற முறையில், மதத்தின் மீது அது தொடுக்கும் தாக்குதல், பயங்கரவாதத்தின் வேர்களையும் அதன் போக்கையும் பலப்படுத்துவதற்கு மட்டுமே உதவும்

முஸ்லீம்களை பயங்கரவாதிகளாகச் சித்தா¢த்து, பாரதீய ஜனதா கட்சி பலத்த குரலில் ஆதாரமற்று எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளுக்கு உடன்பட்டுப்போகும் மொன்னைத்தனத்தையே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கைக்கொண்டு வருகிறது. 'பயங்கரவாதத்தை வேரறுக்கும் திராணியற்றவர், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல். அந்தப்பதவிக்கு பொருத்தமற்றவர். பதவியிலிருந்து அவர் விலகவேண்டும்' என்று 'காவித்தனமாய்' அவை வைக்கும் கோ¡¢க்கைகளால் உசுப்பேற்றப்படும் பாட்டீல், தனது பதவியின் புஜ பலத்தைக் காட்டவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகி, குயுக்தியான நடவடிக்கைளுக்கு மூலகர்த்தா ஆகியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் அட்டை பெற்றிருக்கும் நிர்வாகச் சீர்திருத்த ஆணையத் தின் தலைவரான வீரப்பமொய்லியோ, இன்னும் ஒருபடி மேலேபோய், பாரதீய ஜனதா கட்சியின் ஊதுகுழலாகவே மாறிவிட்டிருக்கிறார். 'பயங்கரவாத ஒழிப்புச்சட்டம் கடுமையாக, புதிதாகக் கொண்டு வரப்பட வேண்டும்' என்று, அவர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தில், திருவாய் மலர்ந்து அரசுக்கு பா¢ந்துரை செய்கிறார். அந்தப் பா¢ந்துரை, பாரதீய ஜனதா கட்சியின் முக்கியக் கோ¡¢க்கைகளில் ஒன்றான கொடிய 'பொடா' சட்டத்தைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பதை ஒத்தே இருக் கிறது. போலீஸ் சொல்லும் செய்தியை அப்படியே சாஷ்டாங்கமாக நமஸ்கா¢த்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் அவரது பா¢ந்துரை வலியுறுத்துவதாக இருக்கிறது.

இதனடிப்படையில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சமீபத்திய பயங்கரவாத ஒழிப்பு நட வடிக்கைகள் அமைந்து வருகின்றன என்பது, தற்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 13 ம் தேதி நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பின், இஸ்லாமிய சமூகத்துக்கு நெருக்கடியும், வாழ்தலுக்கான நிச்சயமற்றத் தன்மையும் அதிகா¢த்து வரு கிறது. அதன் ஒருபடிதான், செப்டம்பர் 19ம் தேதியின் பட்டப்பகலில், டெல்லி ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் முன்பு, அரசு தன் கோரமுகத்தைக் காட்டியதும்!

டெல்லி போலீஸின் பயங்கரவாதத் தடுப்பு சிறப்புப்பி¡¢வு, ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 -ல் குடியிருந்த மொகம்மத் அதீப் அமீன் மற்றும் மொகம்மத் சாஜித் ஆகிய இரு இளைஞர்களை பயங்கரவாதிகளாகக் குற்றம்சாட்டி சுட்டுக்கொன்றது. மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாக வும் இரண்டுபேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் போலீஸ்தரப்பில் தொ¢விக்கப்பட்டது. 'இவர்கள்தான் நாட்டில் நடந்த, சமீபத்திய அனைத்து குண்டுவெடிப்புச் சம்பவங்களையும் திட்டமிட்டு நடத்தியவர்கள்' என்று அது வலியுறுத்துகிறது. இந்த நடவடிக்கை முழுவதும் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் 'தனிப்பட்ட கவனத்தின்' போ¢ல் நடந்தேறியதாகச் சொல்லப்படுகிறது.

இரு இளைஞர்களைச் சுட்டுக்கொன்ற இந்தச்சம்பவம், ஊழல் மன்னனும் பெரும் பிளாக் மெய்லருமான ரஜ்பீர் சிங்கை, அன்ஸல் பிளாஸாவில் வைத்து, கொடூரமாகச் சிதைத்துக் கொன்ற என்கவுண்டரை போலவே இருக்கிறது.

இதற்குமுன்பு, 35 பேரை என்கவுண்டா¢ல் 'போட்டு'த் தள்ளியதில் புகழ்பெற்ற 'இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் ஷர்மாவை, இந்த இருஇளைஞர்கள் சுட்டுக்கொன்றதால், அதன்போ¢ல் நடத்தப்பட்ட என்கவுண்டர் தாக்குதல் சம்பவம் இது' என்று போலீஸ¥ம், அரசும் ஒரேகுரலில் பொய்யாய்ப் புனைந் துரைக்கின்றன. 'நல்லதொரு போலீஸ் அதிகா¡¢யையே சுட்டுக்கொன்றுவிட்டார்கள்' என்று அரசின் நடவடிக்கைளுக்கு, பா¢தாபத்தை சம்பாதித்துக்கொள்ள முயன்ற அவர்களது புழுகுமூட்டை யுக்தி, தற்போது அவிழ்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிகாரவர்க்கம் வெளியிடும் அறிக்கைகள், முற்றிலும் கட்டுக்கதைகள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது.

அதிகாரவர்க்கம் வெளியிட்டிருக்கும் இன்னொரு கேலிக்கூத்து அறிக்கையைப் பார்ப்போம். வாரணாசி, ஜெய்ப்பூர், பெங்களூரு, அஹமதாபாத் ஆகிய இடங்களில் சமீபத்தில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. அதில் பாவப்பட்ட... ஒன்றுமறியாத அப்பாவி மக்களே பெரும்பாலும் உயி¡¢ழந்தனர். இந்தச்சம்பவங்களை நடத்தியது, இந்தியன் முஜாஹிதீனின் முக்கியத்தலைவரான அதீப் அமீன் என்கிறது, டெல்லி போலீஸ். ஆனால் மும்பை போலீஸோ, அதற்கு முற்றிலும் மாறாக... அனைத்துச் சம்பவங்களும் - டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவம் உட்பட - நான்குபேருடன் கைது செய்யப்பட்டுள்ள மொகம்மத் சாதிக் ஷேக்கின் திட்டமிடலின்படியே நடந்தேறியது என்று சாதிக்கிறது.

இந்த முரணான அறிக்கைகள், கைது செய்யப்பட்டுள்ள அத்தனை பேரும் தவறாகப் பிடிக்கப்பட்டு, வதைக்கு உள்ளாக்கப்படுகிறார்களோ எனும் ஐயத்தை உருவாக்கியுள்ளது. ஜூலை மாதம் மும்பையில் நடந்த ரயில் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக, பலர் கைது செய்யப்பட்ட சம்பவமும் இதன் அடிப்படையில்தான் என்று எண்ணவும் தோன்றுகிறது.

டெல்லி போலீஸ் சொல்லும் அறிக்கைகளுக்கு எதிரானவையாகவே உள்ளன, வாரணாசி, ஜெய்ப்பூர், அஹமதாபாத் போலீஸ் சொல்லும் தகவல்கள். அந்தச்சம்பவங்களை முறையே வலியல்லாஹ், ஷாபாஜ் ஹ¥சைன், அபு பஷீர் மற்றும் அப்துல் சுபான் குரேஷி என்ற தவ்கீர் ஆகியோர் நடத்தியதாகச் சொல்கின்றன. இதில் தவ்கீர், மத்திய புலானாய்வுத்துறையினரால் 'சதித் திட்டங்களை தீட்டியவர்' என்ற வர்ணிப்புடன் பிரபல்யமாக்கப்பட்டவர்.

இதில் அதீப் அமீனுக்கு, பஷீர் என்று இன்னொரு பெயரும் இருப்பதாக போலீஸ் திட்டமிட்டுச் சொல்லி வருகிறது. இதனை அதீப் குடும்பத்தினரும் அவரது நண்பர்களும் அப்படி ஒருபெயர் அவருக்கு இருந்ததில்லை என்று திட்டவட்டமாக மறுக்கின்றனர். இங்கு அதீப்பின் அடையாளத்துடன் பொய்யாகப் புனைந்துரைக்கப்பட்ட இல்லாத நபரை அரங்கேற்றும் போலீஸின் அரக்கத் தன்மை காணக் கிடைக்கின்றது. டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு முன்பு, அஜாம்கா¡¢லுள்ள யூனியன் பேங்க்கிலிருந்து அதீப் அமீன் 3 கோடி ரூபாயை எடுத்தாகவும், அதைக்கொண்டுதான் நிழல் நடவடிக்கைகளையும் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நடத்தியதாகவும் காட்சிப்படுத்துகிறது. ஆனால் ஊடகங்களின் விசாரணை, போலீஸின் பொய்யுரைகளை தண்டவாளத்தில் ஏற்றுகின்றன. ஜூலை மாதத்திலிருந்து செயல்படுத்தப்படாமலிருக்கும் அதீப் அமீனின் வங்கிக்கணக்கில் இருப்பதோ வெறுமனே 1,400 ரூபாய் தானாம்!

ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 -ல் சமீபத்தில் குடிவந்த மொகம்மத் அதீப் அமீன், அதற்கு முறையாக பத்திரம் பதிவு செய்திருக்கிறார். அதை போலீஸ் ஆய்வு செய்திருக்கிறது. போலீஸால் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் அவர்கள், உண்மையிலேயே பயங்கர வாதிகளாக இருந்தால், வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் செயல்படுவார்களா என்ன?

ஜாமியா நகர் என்கவுண்டர் சம்பவத்துக்கு ஒருவாரம் முன்பிருந்தே அந்தப்பகுதி, போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பே 'குண்டுவெடிப்புச் சம்பவங்களின் மூளை இவர்கள்' என்று, திட்டமிட்டு என்கவுண்டர் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

ஜூலை 26 ம் தேதி அஹமதாபாத் குண்டு வெடிப்புச்சம்பவத்தில், குண்டுகளை வைத்ததாக போலீ ஸால் குற்றம்சாட்டப்பட்டு, அதீப் அமீனின் கூட்டாளியாக வர்ணிக்கப்படும் சாகிப் நிஸார், ஜூலை 22 ம் தேதியிலிருந்து 28 ம் தேதிவரை டெல்லியில் எம்பிஏ தேர்வில் கலந்து கொண்டிருக்கிறார் என்று ஆவணங்கள் காட்டுகின்றன.

என்கவுண்டர் சம்பவத்தை நோ¢ல்கண்ட பல சாட்சிகள், போலீஸ் வெளியிட்டிருக்கும் பொய் அறிக் கைகளைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளனர். தி¡¢க்கப்பட்டுள்ள அந்தஅறிக்கையில், எதுவுமே உண்மையில்லை என்று அப்பட்டமாகியிருக்கிறது.

சம்பவம் நடந்த அன்று, அதீப் அமீன் குடியிருந்த ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 க்குள் போலீஸ் நுழைகிறது. நான்காவது தளத்திலிருக்கும் அந்தவீட்டிலிருந்து இரண்டுபேரை வலுக் கட்டாயமாக வெளியே இழுத்து வருகிறது. கிட்டத்தட்ட நூறுபடிகளுக்கும் மேலான அந்த குறுகலான நடைபாதையில் 'தரதர'வென்று இழுபட்டு வந்த அவர்கள், தரைப்பகுதியில் குவிந்திருக்கும் போலீஸ் முன்னால் நிறுத்தப்படுகின்றனர். பெரும் ஆயுதப்படையுடன் போலீஸ் அங்கே குவிக்கப்பட்டிருந்தது. அதில் முக்கிய நபராக, 'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவும் இருக்கிறார்.

போலீஸ் காட்டிய வலுப்பிரயோகத்தில் இழுபட்டபோது நைந்து போயிருந்த அதீப் அமீனும், சாகிப் நிஸாரும் நிற்கவே திராணியற்றவர்களாக இருந்தார்கள். அந்தப்பகுதியையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போலீஸ், நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் இருவரையும் மேலும் நையப்புடைத்துத் தள்ளியது. போலீஸ் கும்பல் சுற்றிநின்றுகொண்டு 'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவின் தலைமையில் அவர்களை வெளுத்துக் கட்டும்போது, போலீஸ்காரன் ஒருவனின் துப்பாக்கி ஒன்று, கூட்டத்தில் முழங்குகிறது. அதிலிருந்து வெளிப்பட்ட குண்டுகள் 'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவைத் தாக்குகிறது. ஷர்மா தரையில் வீழ்கிறார்.

அதன்பின்பே கண்மூடித்தனமாக அதீப் அமீனும், சாகிப் நிஸாரும் எதிர்ப்பு காட்ட முடியாத point - blank range ல் சுட்டிக் கொல்லப்படுகின்றனர். சவக்குழியில் வைக்கப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட சாகிப் நிஸா¡¢ன் புகைப்படத்தில் தோளிலும், மார்பிலும் குண்டுகள் துளைத்த பெருந்துவாரங்கள் காணப்படுகின்றன. தலையின் முன்பகுதியில் குண்டுதுளைத்த நான்கு ஓட்டைகள் இருந்தன. தலையில் ஒருகுண்டு புகுந்தாலே உயிர்போய்விடும் என்று அறிவியலே சொல்லும்போது, அடுத்தடுத்து குண்டுகளை தலையில் செலுத்தியிருப்பது, போலீஸின் கடைந்தெடுத்தக் கோழைத்தனத்தையும் காட்டு மிராண்டித்தனத்தையும் ஒருசேர நமக்கு புலப்படுத்துகிறது.

'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை, ஹெட் லைன்ஸ் நியூஸ் சானலுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த அறிக்கையை அந்த சானல் வெளியிட்டிருக்கிறது. அதில், நேருக்கு நேரான என்கவுண்டர் மோதலில் துப்பாக்கியால் அவர் சுடப்படவில்லை என்றும் அவருக்கு பின்புறத்திலிருந்து வந்து துளைத்த குண்டுகள், பக்கவாட்டில் வெளியேறியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் போலீஸ¥ம், அரசும் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 க்குள் அவர் நுழைந்தபோது, அங்கிருந்த அதீப் அமீனும், சாகிப் நிஸாரும் சரமா¡¢யாகச் சுட்டதில் அவர் உயி¡¢ழந்ததாக பா¢தாபக் கதையை உருவாக்கி உலவவிட்டிருந்தது. அதுபோல அவர் மீது இளைஞர்கள் இருவரும் பலமுறை சுட்டதில் வயிற்றிலும் நெஞ்சிலும் குண்டுகள் பாய்ந்ததாகச் சொல்லப்பட்ட இட்டுக்கட்டலும் பொய்யாகியுள்ளது.

இந்தச்சம்பவத்தில் உயி¡¢ழந்த மோகன் சந்த் ஷர்மா உள்ளிட்ட மூவா¢ன் சடலங்களும் தடய அறிவி யல் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அதுபோலவே பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 க்குள்ளி ருந்த ஐந்துபோ¢ல் இரண்டுபேர் தப்பி ஓடிவிட்டதாகச் சொல்லப்படுவது, மிகப்பொ¢ய புனைக்கதை! ஏனென்றால், தப்பி ஓடிச்செல்லுமளவுக்கு அங்கே விசாலமான வழி ஏதும் இல்லை. உள்ளே செல் வதற்கும் வெளியே வருவதற்கும் மிகக் குறுகலான ஒரே பாதைதான் உள்ளது.

நேர்மைக்குப் புறம்பான போலீஸின் செயல்பாடுகளும், அதன் அறிக்கைகளும், மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசின் கடப்பாடற்ற நடவடிக்கைகளும் நீசத்தனத்துடன் இருப்பதால், அரசையும் நம்பும்படியாக இல்லை. பாமர மக்கள் கூட அதை ஏற்கஇயலாது, வாழ்தலுக்கான நிச்சயமற்றத் தன்மையை உணர்ந்துள்ளனர். நடந்து முடிந்துள்ள கொடூரத்தை, கண்ணியமற்றச் செயல்களை சுதந்திரமான... நேர்மையான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தி, 'போலீஸ் சொல்வது சா¢தானா... அல்லது பொய்யா...' என்பதை மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.

சமீபத்திய சம்பவங்களால் ஒன்றுபட்டிருக்கும் இந்துத்துவ 'பயங்கரவாதி'களான பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்த் பா¢ஷத், சிவசேனா உள்ளிட்ட ஆஷாட பூதி அமைப்புகள், தங்களை சுத்த சுயங்களாக்கிக் கொண்டுள்ளதாக வேடம் போடுகின்றன. சிறுபான்மையினத்தவருக்கு எதிரான வன்முறையையும் பயங்கரவாதத்தையும் அவைதான் அடையாளத்துடனேயே நடத்துகின்றன. அதற்கு போலீஸ¥ம் தேசிய பாதுகாப்பு நிறுவனங்களும் குடைபிடிப்பதுதான் கொடுமை! இந்த இந்துத்துவ பயங்கரவாதி கள்தான், சிறுபான்மைக் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அசுர அட்டகாசத்தை, கொலைவெறியை, தீ வைப்பை, கற்பழிப்பை, சொத்துகள் சூறையாடலை ஒ¡¢சாவிலும், கர்நாடகத்திலும், மத்திய பிரதேசத் திலும், கேரளத்திலும் நடத்தியவை. அரசுகளின் ஒத்துழைப்பும் சதித் திட்டமுமின்றி இவற்றைச் செய்திருக்கவே முடியாது.

பன்முகத்தன்மை கொண்ட மதச்சார்பற்ற நாட்டில், இந்துக்கள் அல்லாத அப்பாவி மக்களை நூற்றுக் கணக்கில் கொன்று குவித்ததை ஒத்துக்கொண்டிருக்கும் அவர்களை, இந்துத்துவ பயங்கரவாதிகள் என்ற வார்த்தைக் கொண்டு யாரும் விளிப்பதே இல்லை. மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் குண்டுவெடிப்புச் சம்பவத்தை நடத்தியவர்களை, தமிழ்நாட்டில் தென்காசியில் குண்டுகளை வெடிக்கச் செய்தவர்களை, உத்தரபிரதேச மாநிலம் கான்பூ¡¢ல் குண்டுகளை விதைத்த காவிக்கும் பலை இந்துத்துவ பயங்கரவாதிகள் என்று அழைக்காமல், வேறு எப்படி அழைக்கமுடியும்?

சிறுபான்மை இனத்துக்கு எதிரானக் கொடூரங்களில் ஈடுபடும் பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்த் பா¢ஷத், சிவசேனா உள்ளிட்ட ஆஷாட பூதி அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அடையாளங்கண்டு கைது செய்யப்படும் சம்பவங்கள், எப்போதாவது அத்திப்பூத்தாற் போல நடந்து விடுகிறது. ஆனால் அவர்கள் தண்டனைக்குள்ளாவது, இந்தியாவில் மிகச் சொற்பமாகவே நடந்துள்ளது.

அதேவேளையில், பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் என்று மதச் சிறுபான்மையினரை, சந்தேகத்தின் அடிப்படையில் கருணையற்ற முறையில் பிடித்துச்சென்று மிரட்டுவதும், அவமானப்படுத்துவதும், சட்ட விரோதமாகத் தண்டிப்பதும், சித்ரவதைக்கு உள்ளாக்குவதும், பல நேரங்களில் விசார ணையின்றி தண்டனை வழங்குவதும், கொல்லப்பட்டு விடுவதும் கூட வாடிக்கையாக உள்ளது.

பயங்கரவாதம் குறித்த சொல்லாடல் வெளிப்படும்போதெல்லாம், அரசும், போலீஸ¥ம், புலனாய்வு நிறுவனங்களும் இரட்டைத்தன்மை முறையை கையாளுகின்றனர். பயங்கரவாதம் என்ற சொல், சிறுபான்மையினருக்கு எதிராகவே பிரயோகிக்கப்படுகிறது. குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிரான பார்வையையே அது கொண்டிருக்கிறது. நீண்டகாலமாகவே இந்தப்பார்வை இருந்து வருகிறது. அரசும், போலீஸ¥ம், புலனாய்வு நிறுவனங்களும் அதைத் திரும்பத் திரும்ப பிரசாரம்செய்து, பயங்கரவாதம் என்றால் முஸ்லீம்கள் என்று அர்த்தம் கற்பித்து ஸ்திரப்படுத்திவிட்டது.

அதைத் தெளிவுபடுத்துவதுபோல, கடந்த செப்டம்பர் 22 ம் தேதி, இந்திய ஊடகங்கள் அனைத்துமே பயங்கரவாதிகள் என்று 'கெப்•பியா' என்ற துணியால் அரேபியர்கள்போல முகம் மூடப்பட்ட மூன்று போ¢ன் புகைப்படத்தை வெளியிட்டிருந்தன. அப்படி முகம் மூடி, துணி அணியச்சொல்லி அழைத்து வந்தது, டெல்லி போலீஸ். முகம் மறைக்கப்பட்ட மூவரும் பயங்கரவாதத்தை அரங்கேற்ற தேவை யான பொருட்களை வாங்கி சேகா¢த்துத் தந்தவர்களாம். இந்த இடத்தில் பயங்கரவாதம் என்றால் முஸ்லீம்கள். முஸ்லீம்கள் என்றால், சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஒசாமா பின்லேடனின் சொல்லை இங்கே நிறைவேற்றுபவர்கள் என்ற சமன்பாட்டை நிறுவ அரசு முயலுகிறது. ஒரு அரசுநிறுவனத்தால் குறிப்பிட்ட சமூகத்தை, அதன் வளமையை, தொன்மையை சிதைக்க முடியும் என்பதற்கு இதைவிட வேறு எந்த சாட்சியமும் தேவையில்லை.

குண்டுவெடிப்பு சம்பவங்கள் எங்கேனும் நிகழ்ந்தவுடன், சம்பவத்தை நோ¢ல் பார்த்த சாட்சியங்கள் சொல்லும் குறிப்பின்படி வரையப்பட்ட சிலபடங்கள் ஊடகங்களில் வெளியாகும். அவற்றின் கீழே அரபி வார்த்தையுடன் கூடிய ஒருபெயர் இருக்கும். அடுத்த சிலநாட்களில், அந்தப் பெயருக்கு¡¢யவர் கைது செய்யப்பட்டதாக செய்திவரும். இப்போது இடம்பெற்றிருக்கும் படத்திலிருப்பவர், 'கெப்•பியா' வோ... ஸ்கார்ப்போ... அல்லது பத்துரூபாய்க்கு விற்கும் பிளாட்பாரத்துண்டால் முகம் மூடியவராக இருப்பார். படத்தில் வரையப்பட்டவர் பிடிபட்டிருந்தால், அதை ¨தா¢யமாக... வெளிப்படையாக... 'அவர் தான், இவர்' என்று பகிரங்கப்படுத்தலாமே. புனைந்துரைக்கும் அரசு நிறுவனத்தால் அது ஒரு போதும் முடியாது. ஏனென்றால், படத்திலிருந்தவர் ஒருவராக இருப்பார். அவர் பெயா¢ல் பிடிக்கப் பட்டு வந்தவர் வேறு ஒருவராக இருப்பார். தன் தலையில் போட்டுக்கொள்ள வேண்டிய முக்காட்டை, பிடித்துக்கொண்டுவந்த அப்பாவியின் மீது போலீஸ் போடுகிறது. அவ்வளவுதான்!

ஏனென்றால், இந்திய அரசு சிறுபான்மையினரான முஸ்லீம்களையும் கிறிஸ்தவர்களையும் பாதுகாக் கத் தவறிவிட்டது. பெரும்பான்மைக் குழுக்களை காப்பதிலேயே அது கவனம்செலுத்தி வருகிறது. சிறுபான்மையினர் உ¡¢மை இழந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தச் செயல்பாடுகளின் பின்னணியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்ட அறிவு முகமையின் பெருந்தலைகள் உள்ளன. இந்துத்துவ பயங்கரவாதச் சாயத்தை தங்கள் மீது ஊற்றிக் கொண்டிருக்கும் அவர்கள், முன்பெல்லாம் பாகிஸ்தான் ஆதரவுபெற்ற அந்த அமைப்புதான் இதைச் செய்தது ... அதைச் செய்தது என்று சொல்லிக் கொண்டிருந்தனர். இப்போது அதிலிருந்து மாறி சுதேசிகளாகி விட்டனர். 'குண்டு வெடிச்சுருச்சா? ஏன் கவலைப்படுற? பழியைத்தூக்கி முஸ்லீம்க மேல போடு!' என்பதாக எல்லா குண்டு வெடிப்பு சம்பவங்களையும் இந்துத்துவ கண்ணாடி மூலம் பார்த்து, முஸ்லீம்களுக்கு எதிராகச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள் என்பதும், வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள Delhi's Special Cell, Maharastra's Anti - Terrorism Squad, Special Task Forces, உள்ளிட்ட அமைப்புகள் அந்தந்த மாநிலத்தில் சகல அதிகாரங்களையும் படைத்ததாக இருக்கின்றன. அதனாலேயே ஊழலும், சட்டத்துக்கு புறம்பான குற்றங்களும், வரம்புமீறிய செயல்களும் செய்பவர்களாக இந்த அமைப்புகளில் பணிபு¡¢பவர்கள் இருக்கின்றனர். தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சொல்லி பொதுமக்களின் சொத்து களையும், பொதுச் சொத்துகளையும் சீரமைக்க முடியாத அளவுக்கு சேதத்தை விளைவித்து உள்ளனர். அதுபோல மனிதஉ¡¢மை மீறல்களையும் நீதிக்குப்புறம்பான செயல்களையும் செய்துள்ள அவர்கள், அரசுப்பணத்தில் பெருமளவு சொத்துகளை வாங்கியும் குவித்துள்ளனர்.

இந்த சம்பவங்களுக்குப் பின்பு, சிறுபான்மையின முஸ்லீம்களுக்கு எதிரான சமூக, பொருளாதாரத் தடைகள் அதிகா¢த்து வருகின்றன. பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் சம்பவத்துக்குப் பின்பு, தனியார் தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணம் வசூலிக்க அந்தப்பகுதிக்கு அனுப்புவதில்லை. பிஸ்ஸா டெலிவா¢ செய்யும் பையன்கள் அந்தப்பகுதிக்குள் செல்லவே பயப்படுகின்றனர். அந்தளவுக்கு போலீஸ், பல்வேறு பயங்கர மலிவான கதைகளைப் பரப்பிவருகிறது.

பொதுச் சமூகத்திலிருந்து பிளவுபடுத்தப்பட்டுள்ள ஜாமியா நகர்வாசிகளுக்கு, டெல்லி நகராட்சியின் அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பாகுபாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல! இது மேலும்மேலும் மன வேறுபாடுகளுக்கே வழிசெய்யும். குறைகளையும் நீதிக்குப்புறம்பானவற்றையும் சீர்படுத்திவிடவேண்டும். இல்லாவிட் டால், சமூக இணக்கம், சகிப்புத்தன்மை, மனித உ¡¢மைகளை இழந்தவர்களாகி, நாகா£கமான நாடு என்ற சொல்லிலிருந்து விலகி, வெகுதூரம் வந்துவிடுவோம்.

அதற்கான விலையை, நம்மால் கொடுக்க முடியாது!

- எஸ். அர்ஷியா

Pin It