இதை விட கீழ்த்தரமான செயலை 'நாம் தமிழர்' என்ட பெயரில் சீமானும் அவர் சார்ந்த உறுப்பினர்களும் எங்கள் மாவீரர்களுக்கு செய்யவே முடியாது.

ஆயிரம் மாவீரச் செல்வங்களை தமிழீழம் என்ட ஒரு கனவிற்காக விதைகளாக்கி அவர்களுக்காக என்டு ஒரு நினைவுப்பாடலை உருவாக்கி அந்தப் பாடலை வருடத்தில் ஒரு தடவை அதுவும் அந்த 6.05 மணிக்கு மட்டுமே புலிகள் ஒலி ஒளிபரப்பு செய்வார்கள்.

மாவீரர் பாடல்:

மொழியாகி
எங்கள்
மூச்சாகி நாளை
முடிசூடும்
தமிழ்மீது
உறுதி

வழிகாட்டி
எம்மை
உருவாக்கும்
தலைவன் வரலாறு
மீதிலும்
உறுதி

விழிமூடி இங்கே
துயில்கின்ற
வேங்கை
வீரர்கள்
மீதிலும்
உறுதி

இழிவாக வாழோம்!
தமிழீழப்போரில் இனிமேலும்
ஓயோம் உறுதி

தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே

தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே

இங்குகூவிடும்
எங்களின்
குரல்மொழி
கேட்கிதா ?
குழியினுள்
வாழ்பவரே

இங்குகூவிடும்
எங்களின்
குரல்மொழி
கேட்கிதா ?
குழியினுள்
வாழ்பவரே

தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே

உங்களைப்
பெற்றவர்
உங்களின்
தோழிகள்
உறவினர்
வந்துள்ளோம்

உங்களைப்
பெற்றவர்
உங்களின்
தோழிகள்
உறவினர்
வந்துள்ளோம்

அன்று செங்களம்
மீதிலே
உங்களோடாடிய
தோழர்கள்
வந்துள்ளோம்

அன்று செங்களம்
மீதிலே
உங்களோடாடிய
தோழர்கள்
வந்துள்ளோம்

எங்கே! எங்கே!
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்

எங்கே! எங்கே!
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்

ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்

ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்

தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே

வல்லமை தாருமென்றுங்களின்
வாசலில்
வந்துமே வணங்குகின்றோம்

வல்லமை தாருமென்றுங்களின்
வாசலில்
வந்துமே வணங்குகின்றோம்

உங்கள் கல்லறை
மீதிலும்
கைகளை வைத்தொரு
சத்தியம்
செய்கின்றோம்

உங்கள் கல்லறை
மீதிலும்
கைகளை வைத்தொரு
சத்தியம்
செய்கின்றோம்

வல்லமை தாருமென்றுங்களின்
வாசலில்
வந்துமே வணங்குகின்றோம்

சாவரும்போதிலும்
தணலிடைவேகிலும் சந்ததி
தூங்காது

சாவரும்போதிலும்
தணலிடைவேகிலும் சந்ததி
தூங்காது

எங்கள் தாயகம்
வரும்வரை தாவிடும்புலிகளின்
தாகங்கள்
தீராது

எங்கள் தாயகம்
வரும்வரை தாவிடும்புலிகளின்
தாகங்கள்
தீராது

எங்கே எங்கே
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்

எங்கே எங்கே

ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்

ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்

ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்

இந்தப் பாடலை உருவாக்கிய புலிகள் அமைப்பு அதை ஏன் ஓர் ஒலிநாடாவாக வெளியிடாது வைத்திருந்தார்கள் என்ற காரணம் தெரியுமா?

இல்லை அதை ஏன் வேறு எந்தவோர் ஒலிபரப்பில் கூட ஒலிபரப்பு செய்வதில்லை என்ட காரணமாச்சும் தெரியுமா?

இதை ஓர் எழுதப்படாத சட்டமாகவே அவர்கள் கடைப்பிடித்தார்கள். இந்தப் பின்னனி தெரியாது, நாம் தமிழர் கட்சியினர் கதைப்பதும், அதற்கு நாம் பதில் கொடுப்பதும் தான் புலிகள் மௌனத்தில் விளைந்த கொடுமை இங்கே. இதே கொடுமையைத் தான் நாம் தமிழரும் செய்யினம்.

இது தொடர்பாக அன்பர் செந்தூரன் பேஸ்புக் தளத்தில் கீழ்க்காணும் இரண்டு தகவல்களைக் குறிப்பிட்டிருந்தார்.

1) 1998ம் ஆண்டளவில் இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, அய்க்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மகேஸ்வரன் அவர்கள் விடுதலைப் புலிகளின் தேசிய எழுச்சிப் பாடல்களை தனது பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தினார். இதனால் விடுதலைப் புலிகளின் கடுமையான கண்டிப்புக்கு உள்ளானார். விடுதலைப் புலிகளுக்கு அமரர் மகேஸ்வரன் அவர்கள் இந்த சம்பவத்துக்கு முன்னரும் இந்த சம்பவத்துக்குப் பின்னரும் பல வழிகளில் உதவி செய்தவர். (குறிப்பாக எரிபொருள், போக்குவரத்து)

2) 2002ம் ஆண்டளவில் யாழ்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளிதழ், தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உதயன் பத்திரிகையைப் பார்த்துக் கொண்டு இருக்கும் புகைபடத்தைப் பிரசுரித்து தனது பத்திரிகைக்கான விளம்பரமாக பயன்படுத்தியது. இதனால் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான திரு வித்தியாதரன் அவர்களை உடனடியாக வன்னிக்கு அழைத்த விடுதலைப் புலிகளின் தலைமை வித்தியாதரனை கடுமையாக கண்டித்ததுடன் பெரும் தொகையான பணமும் அபாரதமாக விதிக்கபட்டது.

ஆனால் உதயன் பத்திரிகை தமிழீழ தேசியப் போராட்டத்துக்கு உறுதுணையான பத்திரிகை. அத்துடன் இந்த வித்தியாதரன் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அமரர் அன்டன் பாலசிங்கம் அவர்களுக்கும் உற்ற நண்பர்.

தமக்குப் பல வழிகளிலும் உதவி செய்த, தமிழீழத்தை சொந்த இடமாகக் கொண்ட, தமிழீழ அரசியலில் பெரும் புள்ளிகளாக விளங்கிய இந்த இருவர் மீதே கடுமையாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் - விடுதலைப் புலிகள் இயக்கமும் தமிழீழ மக்களும் தெய்வங்களாக மதிக்கும் மாவீரர்களுக்குரிய பாடலை தமது கட்சி அரசியலுக்குப் பயன்படுத்தியதை எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்"

என்று குறிப்பிட்டிருந்தார்.

அப்படியான ஒரு பாடலை, அதன் வரிகளை தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி, தங்கள் தனிப்பட்ட கீழ்த்தர அரசியல் விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தும் இந்த நாம் தமிழர் கட்சியை, ஓர் ஈழத் தமிழனாக‌ எப்படி ஏற்றுக் கொண்டு பொறுத்துக் கொண்டு போவது?

naam_tamizhar_paadal_450

(நாம் தமிழர் கொள்கை ஆவணத்தில் திருத்தி வெளியிடப்பட்டிருக்கும் பாடல்)

ஏற்கனவே புலிகளின் இலட்சினைகளைப் பயன்படுத்தியும், அதன் அரசியல் கட்டமைப்பின் பெயரைச் சொல்லியும் தங்கள் அரசியலை வளர்ப்பது என்று வந்து, இப்போது 'மாவீரர் பாடல் அவமதிப்பு' வரை வளர்ந்து விட்டுள்ளது. இதை இனி மேலும் பொறுத்துக் கொண்டு, இவர்கள் தான் தமிழர் பிரதிநிதிகள் என்றும், இவர்கள் மூலம் தான் தமிழீழம் மீட்கப்படப் போகிறது என்றும் விளக்கங்கள் சொல்லிக் கொண்டு திரியும் ஈழத்தமிழ் உறவுகள் ஒருகணம் எண்ணிக் கொள்ளுங்கள், நீங்கள் போகும் பாதை சரிதானா என்று!

மே 17 முள்ளிவாய்க்கால் அழிவுகள் கண்டு உலகத் தமிழினம் முழுதும் சோகங்களும் கண்ணீருமாய் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஓரிரு நாட்களுக்குள்ளாகவே தேசியத் தலைவருடன் தனக்கு இடம்பெற்ற சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு, அதை முதலில் தான் ஒரு இயக்கமாக உருவாக்குகிறேன் என்ற போதே தொற்றிக் கொண்ட கேள்விகள், பின்னாளில் அதையே ஒரு கட்சியாக அறிவித்து, அரசியல் சதிராட்டம் தொடங்கிய போது, அதன் உள்நோக்கம் மேலும் வெட்ட வெளிச்சமாகியது. பின்னாளில் புலிகளின் இலட்சினையை தனது கொடி என்றும், தொடர்ந்து புலிகளின் அரசியல்துறை நாங்கள் என்றும் வந்தவர்கள் இப்போது கட்டி நிக்கும் வேசம் மிக மிக கேவலமானது.

ஒவ்வொரு காலத்திலும் தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தமது அரசியல் இலாபங்களுக்கு ஈழத்தைப் பயன்படுத்துவது போன்று இன்று சீமானும் தனது பங்கிற்கு 'மாற்று அரசியல், புரட்சி அரசியல்' என்று அதே ஈழ மோகத்தைத் தான் வேறு வடிவில் தனது அரசியல் உள்நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார். இதை அவரது தொடர்ந்து வரும் செயற்பாடுகள் வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டு வருகின்றன‌.

வேடிக்கையும் வேதனையானதும் என்னவெனில், தேடுவார் அற்று, ஆதரவு வேண்டி தவித்து நின்ற ஈழத்தமிழ் உறவுகள் சீமானின் இந்த உணர்ச்சி அரசியல் பால் ஈர்க்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து அவர்களைத் தனது கட்சி உறுப்பினர்களாக உள்வாங்கிக் கொண்டு, அவர்கள் மூலம் ஈழ ஆதரவு தனக்குப் பெரிதும் உள்ளது போன்ற ஒரு தோற்றப்பாட்டை அவர் வெளி உலகிற்குக் காட்ட முனைவதும்தான். இதை அந்த உறவுகள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய அரசியல் ஆட்சி முறையில் அங்கு ஆட்சிக்கு வரும் எந்த கட்சியும் மத்திய அரசையோ, அங்கு வெளிவிவகாரத் திட்டங்களை உருவாக்கும் புலனாய்வு அமைப்புகளை மீறியோ எதுவுமே செய்து விட முடியாது. இது புலிகளுக்கு நீண்ட ஆதரவும் பெரும் உதவியுமாக இருந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் முதல் தெளிவாகவே வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற ஒன்று. ஆக தமிழக அரசியல் தலைவர்கள் மேல் உள்ள மதிப்பும் ஒரு மரியாதையும் அன்று தொட்டு இறுதிக் கணம் வரை புலிகளிடமும் அதன் தலைமையிடமும் வெளிப்படுத்தப்பட்டதேயொழிய அவர்கள் எப்போதும் தமிழகத் தலைமைகளை நம்பி தமது போராட்டதை ஒப்படைத்ததுமில்லை; கைவிட்டுப் போனதும் இல்லை. இதை இறுதி யுத்த காலத்தில் அரசியல்துறை பொறுப்பாளருக்கும் தமிழக அரசியல் தலைமையான கருணாநிதிக்கும் இடையில் இருந்த தொடர்பாடல்களே சான்று.

வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களை வைத்து அரசியல் செய்ய முடியாது. உணர்வுள்ள இளைஞர்களை உசுப்பி எழுப்புவதாக பலர் குறிப்பிடும் இந்த செயலைச் செய்ய சீமான் தேவையில்லை; இந்த நாம் தமிழர் தேவையில்லை. எந்தக் கட்சியும் அரசியலும் இல்லாத 'முத்துக்குமார்' அதை செய்து காட்டி விட்டான்.

tamil_eelam_flag Naam_Thamilar_flag
புலிகளின் இலட்சினை நாம் தமிழர் இலட்சினை

நாம் தமிழர் தனக்கென ஒரு தனித்துவ அடையாளத்துடன் களமிறங்கியிருக்கலாம். அப்படி இறங்கினால் அரசியல் போட்டியில் வெல்ல முடியாது என்று புலி அடையாளங்களுடன் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். எது சந்தையில் அதிகம் விற்பனை ஆகும் என்று பார்த்து அதை விளம்பரம் செய்வது தான் வழமை. அதைத் தான் சீமான் இன்று செய்வது. தமிழக அகதி முகாம்களிலும் வீதிகளிலும் பல தசாப்தங்களாக அல்லலுறும் ஈழத்தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய அரசியல் உதவிகளே நிறைந்திருக்க, இவர் செய்யப் போவதாக சொல்லும் அரசியல் புரட்சி நடக்கக்கூடியதா என்று சிந்தித்துப் பாருங்கள்.

எங்கள் பிரச்சனை என்னவென்றால் நீங்கள் தாராளமாக‌ புரட்சி செய்யுங்கள்; அரசியல் செய்யுங்கள். ஆனால் புலிகளின் இலட்சினைகளையோ, புலிகளின் சின்னங்களையோ, மாவீரர் அடையாளங்களையோ உங்கள் அரசியலுக்கு இழுக்காதீர்கள். இன்று அந்த அதிகாரம் யாருக்கும் கொடுக்கப்பட்டதல்ல. அது முள்ளிவாய்க்காலுடன் மௌனிக்கப்பட்ட ஓர் அமைப்பு.

முடிந்தால் இணையத்தில் எழுதும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள், உங்கள் தலைமையிடம் சொல்லுங்கள், 'அண்ணா! நாம் நமக்கென தனித்த அரசியல் செய்யலாம். புலிகள் இலட்சினை எதுவும் வேண்டாம்' என்று. அது தான் நீங்களும் உங்கள் கட்சியும் செய்ய வேண்டியது. ஆனால் இதை நீங்கள் செய்வீர்கள் என்று நாம் நம்பவில்லை. ஏனெனில் உங்கள் அமைப்பு இயக்கமாக உருவானபோது, அதில் உறுப்பினர் என்று பெயரைப் பதிவு செய்தவன் நான். பின்னாளில் கொடியில் புலிகளின் அடையாளம் வந்தபோது அப்போது அதை சீமானிடம் நேரடியாக சுட்டிக்காட்டினேன். 'தனக்கு இது தொடர்பாக ஒன்றும் தெரியாது அடுத்த முறை இப்படியான தவறு நடக்காது' என்று சொன்னார். ஆனால், அன்று தொட்டு இன்று இந்த மாவீரர் பாடல்வரை எதுவுமே நீங்கள் திருத்தியதில்லை. அனைத்தும் ஒரு திட்டமிட்ட செயலாகவே உங்கள் தனிப்பட்ட அரசியலுக்கு விளம்பர நோக்காகவே பயன்படுகிறது. முடிந்தால் இந்த முறையாவது இவை அனைத்தையும் மாற்ற முடிகிறதா பாருங்கள் . இல்லாவிட்டால் இந்த எதிர்ப்பு நிச்சயம் தொடரத்தான் செய்யும்.

"புலிகள் இல்லை; அதன் தலைமை இல்லை; இங்கே யாரும் உரிமை கோர வர முடியாது. வந்தால் உங்களுக்கு அதிகாரம் தந்தது யார் என்று கேட்பேன்." இது தான் இணையதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் கேட்கும் அதிகாரத்தின் தொனி. தள்ளி இருந்து வேடிக்கை பார்த்த உங்களுக்கே இவ்வளவு அதிகாரம் வந்தால் உள்ளேயே இருந்த எமக்கு எவ்வளவு வரும்? நாங்கள் கட்டளைக்குப் படிந்து பழகியவர்கள். அது தான் வேறுபாடு.

நீங்கள் புலிகளையும் மாவீரர்களையும் மதிப்பவர்களாக இருந்திருப்பின் புலிகள் ஆட்சியில் இருந்தபோதே இந்த அரசியலைத் தொடங்கியிருக்க வேண்டும். அப்போது தெரியாத எதை இப்போது புதிதாக கண்டுபிடித்தீர்கள்?

வன்னியில் போர் நடந்தபோது அங்கு சென்று வந்தவர் தானே சீமான். அப்போது வெளிவராத புகைப்படம் எதற்காக புலிகள் அழிவின் பின் வெளிவந்தது?

வன்னியில் யுத்தம் வந்தபோது வெளியான தொலைபேசி செய்தியில் தணிக்கை செய்யப்பட்ட சீமானிடம் சொல்லுங்கோ என்ற வரிகள், ஏன் புலிகள் அழிவின் பின்னால் தணிக்கை நீக்கப்பட்டது?

இப்படி எம்மிடம் கேள்விகள் பல! இந்த தொலைபேசி பதிவு பற்றி உலகத்தில் பலரிடம் பல பதிவு உண்டு. அப்படிப் பார்த்தால் ஒவ்வொருத்தனும் புதிய கட்சி தான் ஆரம்பிக்க வேண்டும்.

நாம் தமிழர் என்று புலம்பெயர் நாடுகளில் நிதி சேகரித்தும், அதன் பின்னால் சில ஈழ ஆதரவாளர்களை உள்வாங்கிக் கொண்டும் இயங்க தொடங்கிய இவர்கள், ஆவணத்தில் 'இது இந்திய குடியுரிமையாளர்களுக்கு மட்டுமானது' என்று பதிந்திருக்கிறார்கள். காரணம், உலகத் தமிழர் முழுவ‌தும் இணைவதாக இருப்பின் அது இந்தியாவில் தடை செய்யப்படலாம் என்ற அச்சம்தான். ஆக இங்கு உள் நோக்கம் வேறு; வெளி நோக்கம் வேறு. புலிகள் அடையாளம் கட்சி வளர்க்க; கட்சி செயற்பாடு தமிழகத்தில் மட்டும்.

'பெரியாரின் பேரன்' என்று வந்தவர், இன்று 'பெரியார் துரோகி' என்கிறார். 'நான் திராவிடன்' என்று மேடையில் முழங்கியவர், 'இன்று திராவிடன் துரோகி' என்று சொல்கிறார். 'இன்று தேசியத் தலைவரின் தம்பி, எங்கள் தலைவன்' என்கிறார். நாளை என்ன செல்லுவார் என்று நீங்களே யோசியுங்கள்!

முத்துக்குமார் ஏற்றி வைத்த தீயிற்கு மேலே மேடை போட்டவர்தான் சீமான். வடிவாக உற்று நோக்கினால் முத்துகுமாரின் தியாகத்திற்கு வந்த உணர்வுகளே சீமானின் பின்னால் நிற்பதுவும். அதைத் தனக்கான ஒரு அரசியலாக புலிகளின் அடையாளத்தைக் கொண்டு  அவர் தொடங்கியுள்ளார். அவரது இந்த அரசியல் செயற்பாடு இந்தியாவில் எவ்வளவு தூரம் சரியாகப் போகமுடியும்? இந்த ஆவணம் தமிழகத்தில் குழப்பங்க‌ளையும், மத ரீதியான பகைமையையும் தான் வளர்க்க முனையுமே அன்றி இது ஒற்றுமைக்கு வழி சமைக்காது. பலர் சொல்வது போல ஈழத்தமிழர்களாகிய நாம் சீமானை ஆதரிப்பது, நமக்கு இலாபத்தைக் காட்டிலும் பல மடங்கு எதிர்ப்பினைத் தான் உருவாக்கித் தரப் போகிறது.

- துரைரத்தினம் தயாளன்

Comments

24 comments

24
sp.maragathaselvam
agree
Ilakkuvanar Thiruvalluvan
கருத்தை உள்வாங்கிப் பயன்படுத்துவதில் தவறு எதுவும் இல்லையே!
தமிழ் மூவேந்தர்களை அடையாளப்படுத்தும் விதமாகப் புலி,வில்,மீன் பொறித்த கொடிகளையும் படங்களையும் தமிழ் அமைப்புக்ள பலவும் தமிழ் இதழ்களும் பயன்படுத்துகின்றன. சென்னை மாநகராட்சி முததிரையிலும் இம் மூன்றையும் காணலாம். எனவே இவற்றைக் குறை கூறாமல் கொள்கை அடிப்படையிலும் செயலடிப்படையிலும் நிறை குறை காணுங்கள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
senthilnathan
கண் தெரியாதவன் கண்காட்சிக்கு செல்வது போல, புலிகளின் அரசியல் தெரியாத புண்ணாக்குகள் இங்கே புலம்புகின்றது. புலிகளின் இலட்சினையை பயன்படுத்தி விட்டார் சீமான். ஐயோ அது பிழைப்பு வாதா அரசியல் என்று கூவுகிறார்கள்.

அடே கோமாளிகளா ? சீமான் அரசியல் பிரவேசமே ஈழம் தான் என்பதை புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு சீமான் மீதும் நாம்தமிழர் கட்சியின் மீதும் வன்மத்தை வளர விட்டு இருகின்றீர்கள் ?

இதே சீமான், ஈழகொடுமையை வீதிவீதியாக பேசிய போது அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்யும் போது மாவீரர்களின் உறுதிமொழி எடுத்து கொண்டே சிறையினுள் சென்றார். வெளியில் வரும்போதும் மாவீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டே வெளியேவந்தார். எனவே சீமான் அரசியலின் அடிநாதம் தோன்றிய இடமே பிரபாகரன் தானே ? அந்த மாபெரும் தேசியத்தலைவனை நெஞ்சிலே நிறுத்தி
அண்ணன் வழிப்பாதை
அண்ணன் மொழி கீதை என்று நடக்கின்ற போராளிகளின் தொகுப்பே நாம்தமிழர் கட்சி.

எனவே உங்களின் அறியாமைக்கும் அவதூறுக்கும் அளவே இல்லையா ?
முதலில் புலிகளின் அமைப்பை முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள் அல்லது நாம்தமிழர் கட்சியை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். பிறகு எங்கள் ஆவணத்தை விமர்சிக்கலாம்.

இந்த ஆவணம் வெளியிடுவதற்கு முன்னரே சீமான் இந்த உறுதிமொழிகளை தனது அரசியல் மொழியாக்கியவர் என்பதை உணருங்கள்.

எங்கள் பாட்டன் காலத்துகொடி இந்த புலிக்கொடி... இதை எங்கள் அண்ணன் ஈழத்தில் ஏந்தினான்...அவன் தம்பிகள் இங்கே ஏந்துகிறோம்.

உங்களுக்கு என்ன பிரச்சனை ?

மலையாளமேனன் கொண்டுவந்து ஆரிய பாப்பாத்திகிட்ட கொடுத்த இரட்டை இலை
அண்ணாவின் கைப்பட்டு இன்று தெலுங்கு குடும்பத்தில் உதித்து மறைகின்ற உதயசூரியன்
தெலுங்கு வைக்கோ கொண்டுவந்த பம்பரம்
தெலுங்கு தண்ணி வண்டி தங்கசாமி விஜயகாந்தின் முரசு

இப்படி ஏதாவது ஒரு இலட்சினையை வைத்தா மகிச்சி அடைவீங்களா ?. முதல்ல இந்த சின்னம் வச்சுருக்கும் அந்த கட்சிகாரனுக்கே தெரியாது, எதற்கு பம்பரம் ? எதற்கு முரசு ? எதற்கு இரட்டை இலை ? எதற்கு உதயசூரியன் ? என்று

போங்க போய் வரலாற்றை படியுங்கள்... எவர் தடுத்தாலும் தமிழன் அரசியல் ஓங்கும்.....
AathiPrakash
நாம் தமிழர் என்னவோ மக்களை மயக்கி வெறியூட்டி ஆட்சியை பிடித்து சர்வாதிகாரத்தில் ஈடுபடுவது போலவும், நீங்கள் அதை எதிர்த்து போராடுவதாகவும் நினைத்துக்கொண்டு அதன் மீது வெறி கொண்ட மிருகம் போல பாய்கிறீர்கள். இந்த பதிவை போடும் முன் நாம்தமிலருக்கு இதை திருத்தும்படி உணர்த்தினார்களா? இவ்வளவு வன்மத்தையும் குரோதத்தையும் தேமுதிக போன்ற கோமாளி தெலுங்கு கட்சிகள் வளர்ந்த பொது நீங்கள் காட்டவில்லை ஏன் சீமான் தமிழர் என்பதாலா? நான் உங்களிடம் ஒன்று கேட்டுக்கொள்கிறேன் கீற்று முழுநேர நாம்தமிழர் தூற்றும் இணையமாக மாறியுள்ளதை தக்கவைத்துக்கொள்க அப்போதுதான் உங்கள் முகமுடி கிழிந்து அப்பாவியாக உங்களை நம்பும் தமிழர்கள் எங்களோடு இணைய வழி ஏற்படும்,
Guest
ஐயா நானும் ஈழத்தமிழன்தான் அது யார் ஐயா துரைரெத்தினம் அவர் என்ன ஈழதமிழரின் பிரதி நிதியா. எழுதலாம் என்பதட்கக இப்படி எழுதி எதை சாதிக்க போரிங்கள்.ஏட்கனவே நாடகம் போட்டு140000 மக்களை உயிரோடு புதைச்சாசு எனி என்ன மீதி பேரையும் கொண்றால் திருப்தியா??
ஈழக்களம்
புலிகள் விடுகிற தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறோம் என்றுசொல்லியே ஒருகூட்டம் தமிழினத்தை முள்ளிவாய்க்கால்கரை கொண்டுவந்து அழித்து ஈழத்தமிழினத்தையே அடிமையாக்கி நடுத்தெருவில் விட்டுவிட்டது. இன்று இன்னொருகூட்டம் சீமானைத் திருத்தப் புறப்படுகிறதா தமிழ்நாட்டில் எத்தனை பேரைக் கொலைசெய்யத் திட்டம் போட்டிருக்கிறீர்கள்.. நீங்கள் ஒன்றரை இலட்சம் மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டு சாகடித்த பின்பும் ஈவு இரக்கமின்றி எழுதுகிறீர்களே. நீங்கள் மிருகமா அல்லது ஒரு பாவப்பட்ட ஜென்மமா? இன்று தமிழர்களுக்கு இருக்கிற ஒரேவழியே சீமான் தான் என்பதை அறியாத நீங்கள் தமிழினத்தைக் காக்கப்போகிறீர்கள். அவனுடைய ஆவணத்தில் தலைவரையும் , மாவீரர்களையும் எவ்வளவு மதித்து எழுதியிருக்கிறார், இதுகூட உங்களுடைய கண்னுக்குத் தெரியவில்லையா. ஐயா துரைரத்தினமே அறிவாளிகள் கூட்டமென்று சொல்லி எங்களை இதுவரை அழித்ததே போதுமையா. சீமான் அண்ணா படத்தொழிலைவிட்டு இங்குவந்துவிட்டார் அங்கு ஒரு வெற்றிடம் இருக்கிறது. தெவையென்றால் சீனான் அண்ணையை சிபார்சு செய்யச் சொல்கிறேன். நீங்கள் நல்லாயிருக்கணும் அங்கு சென்று உங்கள் சேவையைத்தொடருங்கள்
Swathi Swamy
யாராவது முதலில் சீமானிடம் தன்னுடைய கட்சிக்கு இன்னொரு போராட்டக் குழுவின் கொடியையும் அந்த போரளிகளின் துயில் பாடலையும், இலட்சினையும் களவெடுத்தது மிகக் கேவலமான செயல் என்றும் அதை விடுத்து...தனக்கென்று சுயமான கொடியையும், உறுதி மொழியையும் வடிக்கச் சொல்லுங்கள். ஒரு தலைவன் என்பவன் இன்னொருவர் பின் தொடரக்கூடிய வல்லமையுடையவனாயிருக்க வேண்டுமே தவிர இன்னொருவரின் சுயத்தை சுரண்டுபவனாய் இருக்கக் கூடாது..! அது சரி சுயமாக நிற்க சீமான் என்ன பிரபாகரனா?? தமிழகத்தின் அரசியல்வாதி தானே??
வண்டாரியான்
*மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை முடி சூடும் எம் தமிழ் மீது உறுதி!*

*வழிகாட்டி எம்மை உருவாக்கும் தமிழர் வரலாற்றின் மீதும் உறுதி!*

*விழி மூடி துயில்கின்ற வீர வேங்கைகள் மீதும் உறுதி!*

*இனிமேலும் ஓயோம் ! *

*இழிவாக வாழோம் ! உறுதி! உறுதி!!*

*வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை கட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை*

*வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர்!*

* நாம்தமிழர் ! நாம்தமிழர் !! நாம்தமிழர்!!!*

//என்று ஒவ்வொரு கூட்டத்தின் தொடக்கத்தின்போதும் {நஞ்சுண்டு
நாட்டுக்காய் மடியும் உன்னதத்தை உலகத்திற்கு உணர்த்திய எம் தேசியத்
தலைவனையும் அவன் வழி நின்றவர்களையும்} தங்கள் நெஞ்சினில் நிறுத்தி இந்தியனுக்கும் திராவிடனுக்கும் அடிமையாய் வாழ்ந்த என் தமிழன் இன்று தன்
சுயம் உணர்ந்து நெஞ்சை நிமிர்த்தி நிற்க்கிறான். தாயக விடுதலையில் பாடாற்ற வேண்டிய என் சக தமிழன் வெறும் பார்வையாளனாக கூட்டத்தில் பங்கேற்றாலும்
உறுதிமொழியைக் கேட்டு உடல் சிலிர்த்து நிற்க்கிறான்.அது உங்களுக்கு அச்சத்தை
ஏற்ப்படுத்துகிறதா?.//

//"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் " என்று தமிழக வீதிகளில் கேட்க்கும் உரத்த
முழக்கம் உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறதா? //

//தமிழீழத்தில் நடக்கும் நிகழ்வுகள் {இன அழிப்பு}தமிழ் நாட்டு கிராமங்களை சென்றடையவில்லை என்றும் , சென்றடையாமல் தடுத்து ஆங்காங்கே ஏற்றப்பட்ட இன
எழுச்சியை ஒடுக்கிய உன் இனத்தின்{திராவிட} அதிகார அடக்குமுறையை மீறி எம் உறவுகளின் வீடுகளுக்கு எடுத்துச் சென்றதால் வீட்டுக்கு ஒரு தமிழன் "நாம்
தமிழர்" என்று களம் காணுவது உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறதா?//

//ஆண்டாண்டு காலமாய் அந்நியனை{தெலுங்கனையும் -கன்னடனையும்} ஆளவிட்டுவிட்டு அடிமையாய் வாழ்கிறோம் என்பதைக்கூட அறியா எம் இன மக்கள் இன்று "தமிழை வாழவைப்போம் தமிழனையே ஆளவைப்போம்"என்று ஆர்ப்பரிப்பது உனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறதா?//

//கண் முன்னே 1 1/2 இலட்சம் ஈழத்தமிழர்களும் ,565 தமிழகமீனவர்களும் கேள்வி கேட்க நாதியின்றி படுகொலை செய்யப்பட்டபோது.நாங்கள் நம்பியிருந்தவர்கள் {அனைவரும் உன் இனத்தார்கள்} எங்கள் வேலையை சுலபமாக்கிவிட்டீர்கள் என்று இந்தியத்திடமும் ,சிங்களத்திடமும் கால் நக்கி
கழித்திருந்ததை கண்ட பிறகுதான் எம்மின விடுதலைக்கான முன்னெடுப்பில் ஈழத்தமிழன் என்றும் தமிழகத்தமிழன் என்றும் புலம்பெயர் தமிழன் என்றும் பாராமல் "நாம் தமிழர்"என்று என் பாட்டன் ஏந்திய புலிக்கொடியை, என் அண்ணன் ஏந்திய புலிக்கொடியை இன்று சீமானும் அவனின் தம்பிகளும் தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்து பரவிவாழும் பன்னிரண்டு கோடி மக்களுக்கும் ஒரே கொடி அது புலிக்கொடி என்று கைகளில் ஏந்தி களத்தில் நிற்பது உமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறதா?//

அற்ப சுகத்துக்காய் இனத்தைக் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் ,,,,,டக்லஸ்,கருணா,சேரன்,ஷோபாசக்தி,ப.சிதம்பரம்,சு.ப.வீ ,,,,,}வரிசையில் {துரைரத்தினம் தயாளன்}உன்னையும் வெளிப்படுத்தியமைக்கு நன்றி.

//புலிகளின் இலச்சினையை பயன்படுத்துவது இந்தியாவிற்கு உறுத்துவதை விட உம்
போன்ற திராவிட வல்லூறுகளுக்கு கண்ணை உறுத்துகிறது. உறுத்தட்டும் நாங்கள் எதிர்பார்த்ததும் அதுதான். .//

//சுற்றிவளைத்து ஏன் பேச வேண்டும்?திராவிட அரசியல் தமிழர்கள் ஆகிய எமக்கு இனித் தேவையில்லை.தமிழையும்,தமிழரையும் பழித்துப் பேசிய ஈ.வெ.ரா.இராமசாமி நாயக்கரும் இனி எங்களுக்குத் தேவையில்லை.(நாயக்கர் என்று நான் கூறவில்லை.பெரியார் திரைப் படத்தை ஆந்திராவில் வெளியிட்ட போது தன் சாதி பாசத்தை படத்தின் தலைப்பாக பயன்படுத்தி இருப்பதைத்தான் பயன்படுத்தி இருக்கிறேன்}-அது மட்டும் இல்லாமல் பெரியாரே பல
இடங்களில் தன்னை நாயக்கர் என்றும் தன்னை தமிழர் இல்லை என்றும் தான் கன்னடன் என்றும் கூறியிருக்கிறார் //

//திராவிடத்தை விமர்சிப்பது தமிழரிடையே எவ்வாறு பிரிவினையை ஏற்படுத்தும் என்பதை உங்களின் அரசியல் அறிவால் எங்களுக்கு விளக்கவும்? திராவிடத்தை
விமர்சனம் செய்வது, தமிழருக்கும் திராவிடத்திற்கும் இடையேதான் முரண்பாட்டை
வெளிப்படுத்தும் என்பது தெள்ளத் தெளிவு.
இந்த முரண்பாட்டை உணர்த்துவதுதான் "நாம் தமிழர் என்ற அரசியல்" அமைப்பே.

// //எங்கள் மொழி:தமிழ் ,நாங்கள் :தமிழர்கள் ,எங்கள் நாடு :தமிழர்நாடு ,எங்கள் தலைவன் பிரபாகரன் ,இனி எவனாவது எம்மை திராவிடன் என்றால் எம் முதல் பகைவன் அவந்தான் .//

கீற்று இணையம் கட்டுரையாளரிடம் இருந்து கேள்விகளுக்கு பதில் பெற்றுத் தருமா?

இன்னும் எழுதுவேன்.....
Jegan
அண்ணன் சீமானுக்கு கிடைத்த ஆதரவு 2014 வரை தொடர்ந்தால், காங்கிரஸ் மற்றும் DMK பாராளமன்ற தேர்லளில் வெல்ல முடியாது, பெறகு மத்தயில் ஆட்சி மாறும் என்பதால் சீமானுக்கு கிடைத்த ஆதரவை தகர்க இபொழுதே வேலைகளை தொடங்கி விட்டார்கள்..
ULAKATHAMILAR
சீமானின் ஆவணம் இவ்வளவு கருதுப்போரை உண்டாக்கி இருப்பது மிக்க மகிழ்ச்சி. நான் ஒரு இலங்கை தமிழனாக இருப்பதால் சில விழயங்களை உங்களிடம் இருந்து அறிய விரும்புகிறேன். தமிழகத்தில் வாழ்கின்றவர்களில் எவ்வளவு வீதமான மக்கள் தங்களை திராவிடராகம உணர்கின்றனர்? எவ்வளவு வீதமான மக்கள் தங்களை தமிழராக உணர்கின்றனர்? இவ் இரண்டுமே இல்லை என்று எவ்வளவு வீதமான மக்கள் உணர்கின்றனர்?
திராவிடர் ஆரியர் என்ற சொற்கள் ஆங்கிலயர் காலத்திலேயே பாவனைக்கு வந்த சொற்கள் இப்போது அந்த சொற்களுக்கு இருக்கும் அர்த்தம் என்ன. பார்ப்பனரும் ஆரியரும் தமிழரை அடிமைப்படுத்துகிறார்கள் என்று பல
இடங்களில் வாசிக்க முடிகிறது. இப்போது ஆரியர் என்று சொல்லும் போது எந்த இனத்தை குறிக்கிறீர்கள். ஆரியரை இனம்காணுவது எப்படி? திராவிடர் என்று சொல்லும் போது கன்னடர், தெலுங்கர், மலையாளி,
தமிழர் போன்றவர்களை குறிக்கிறது. ஏன் தமிழர்கள் மாத்திரம் திராவிடம் என்ற சொல்லுக்கு முக்கியத்துவம்
கொடுக்கிறார்கள்?
திராவிடம் என்றால் என்ன? ஆரியம் என்றால் என்ன என்ற தற்க்கால வரைவிலக்கணம் என்ன? இது சமந்தமான ஆக்கங்கள் இருப்பின் பின்னுட்டம் இடவும்.
சாதி சமயம் தவிர்ந்த காரணங்களை அறிய விரும்புகிறேன். நிர்வாகம் சம்மந்தமான காரணங்களை அறிய விரும்புகிறேன்.
thevarajah
ulakathamilar

your comment is superb and corretct
thevarajah
those who never made any mistake throw the first stone. those who never helped to save tamils should not open thier mouth. Seeman did and does somthing for Tamils. plase write your positve and not to blame those who does something useful
prabakaran
தமிழராகிய நமக்கு கிடைத்து இருக்கும் கடைசி தலைமையை நாம் தமிழராக பயன்படுத்தி தமிழர் விடுதலை அடையாவிட்டால் எம் இனம் அடிமையாக பலனோரு ஆன்டு அடிமைபட்டு இருக்கும் ,
ஆறுமுகம்
இம்மென்றால் சிறைவாசம் இதுதான் தமிழ் இ(ஈ)ன துரோகி ஆட்சியிலும் தமிழ் இன விரோதி ஆட்சியிலும் நடந்தது. இந்நிலையில் போராளிகளின் வரிகளை பயன்படுத்தவே அஞ்சுகிற சூழலில் அதை மாற்றி உரியவர்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை சீமான சரியாக செய்கிறார். அது போராளிகளை அவமதிப்பதாக கட்டுரையாளர் கூறுவது காழ்ப்புணர்ச்சி அல்லது திட்டமிட்ட திசைதிரும்பும் செயல் காரணம் போர் உச்சத்தில் இருந்த நிலையிலும் போருக்கு ஆதரவாக தமிழில் இணைய தளங்களில் சிங்கள அரசு கைக்கூலிகளை வைதது பரப்புரை செய்தது கட்டுரையாளர் போன்றவர்களுக்கு ஈழத்தமிழர் மீதும் போராளிகள் மீதும் பற்று இருந்தால் தெரிந்திருக்கும். சீமான் தான் காங்கிரஸை மண்னைக் கவ்வ செய்தவர். ஜனநாயக பயங்கவாதி என இன்று ப.சிதம்பரத்தை தேர்தலில் தோல்வி அடைய செய்து உண்மை முகத்தை தோலுரித்து காட்டியவர். தமிழ் பெயரில் ஆதரித்து கொலைக்கு உடைந்தாக இருக்கவில்லை தமிழன் செத்தபோது மாநாடு நடத்தி பாராட்டுகளை பெற்றுக் கொள்ளவில்லை தமிழின விடுதலை போராட்டத்தை பயங்கரவாதமாக தனது தனிபட்ட உறவு பாதிக்கப்பட்டதென்று தடைசெய்யவில்லை. உங்களை போன்றவர்கள் கட்டுரைகளை தீட்டி களங்கம் கற்பிக்க மட்டுமே முடியும். கடும் விமர்சனங்களுக்கு காரணம் தங்கள் வியாபாரம் படுத்து விடும் என்ற கவலையன்றி வேறு இல்லை. மற்றவர்கள் போராடுவதை அவர் தடுக்கவில்லை அவர் போராட்டத்தை அவர்வழியில் நடத்த உரிமை உள்ளது. அணைவரது கருத்தையும் அவர் நடமுறை படுத்த முடியாது. உங்களுக்கு விரும்பம் இல்லாவிட்டால் ஒதுங்கி கொள்ள வேண்டியது இல்லை வேறு கட்சி தொடங்கி நடத்துவது தானே. ஏன் சீமான் மீது விமர்சனம். மறைக்க நினைப்பதெல்லாம் முடியாமல் போகிறதே என்ற ஆதங்கமா ? எத்தனை நாள் தான் தமிழனை திராடவித்தின் பெயரில் ஏமாற்றி பிழைப்பு நடத்துவீர்கள் ...
Ragu
ஏன், நீங்கள், எங்கள் தமிழை தப்பு தப்பாக எழுதுகிறீர்கள்.
Real Peace
The sensational song "மொழியாகி......." brings tears in my eyes whenever I listen to it. I respect and cherish this song but I will not have any objection if Seeman wants to use a part or full lengh of this song for his political activity.

We desperately need the support of Seeman, we should not offend him for whatever he has done here.
முரளி
ஐயா . புலிகளின் இலட்சினை பயன் படுத்த கூடாது. புலிகளின் பாடல்கள், படங்களை பயன் படுத்த கூடாது. மாவீரர்களையும் பாடல்கள் பயன் படுத்த கூடாது. என இந்திய அரசின் வார்த்தைகளை நீங்கள் தமிழில் சொல்கிறீர்கள். தாங்களுக்கு சிங்கள, இந்திய அரசுகளின் சார்பாக நன்றி. முரளி
vasan
துரைரத்தினம் தயாளன், நீர் குட்டையைக் குளப்ப
நாம் பலவீனமானவர்கள் அல்ல.
வண்டாரியான்
துரைரத்தினம் தயாளன் அவர்களிடம் இருந்து கீற்று இனயத்தார் இன்னும் எனக்ககான பதில் வாங்கித் தரவில்லை....
சில்வான் ராசன்
திராவிடம் பேசும் எல்லா பெரிய மனிதர்களும் காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு பிரச்சனையப் பத்தி என்னய்யா சொல்றீங்க? எந்த மலையாளியாவது, கன்னடனாவது, தெலுங்கனாவது தன்னை திராவிடன் என்கிரானா? இந்த திராவிட அடையாளமே வேன்டாம், தமிழனாகவே வாழ்கிறோம், தமிழனாகவே அடையாளப்படுத்திக்கொள்வோம். தமிழ் நாட்டுக்குப் பிழைக்க வந்த ஆரியனிடமும் மற்ற திராவிடனிடமும் அனைத்தையும் இழந்ததை விட என்ன சாதித்து விட்டோம்? பிற மாநிலங்களில் வாழும் திராவிடர்களை விடுங்கள், தமிழ் நாட்டில் வாழும் எந்த தமிழரல்லாத திராவிடனாவது வீட்டில் தமிழ் பேசுகிரானா? கொஞ்சம் சிந்தியுங்கள். தமிழ் நாடு தமிழருக்கே!
செந்தோளன்
இந்த பதிப்பிர்கு அப்பால், உங்கள் கருத்துக்களில் இருந்து ஒன்றை மட்டும் நான் புறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. நாங்கள் இன்னும் யாராவது ஒருவனிடம் மட்டுமே விடுதலை தளத்தினை அல்லது பொறுப்பினை கையளிக்க உள்ளோம், பல தளங்களீல் முன்னேறூம் பக்குவம் எங்களிடம் இன்னும் வரவில்லை. தவறுகளை ஏற்றுக்கொள்ளும் ,திருத்திக்கொள்ளும் அல்லது ஆய்வுக்கு உட்படுத்தும் மனப்பாண்மை எங்களிடம் இன்னும் வளரவில்லை.

துரைரத்தினம் தயாளன் அவர்கள் புலிகளின் புனிதத்தை யும் நாம் தனமிழர் ஆதரவாளர் கட்சியின் நியாயத்தையும் நிலை நிறுத்த முயற்சிக்கின்றார்க்ளே தவிர வேரு ஓன்ரும் இல்லை
unmai tamilan
சிலரின் முகமுடிகள் கிழிகின்றன ...அதை கண்டு சிலர் பதறுகிறார்கள் . பாய்கிறார்கள் ...ஆனாலும் நாம் தமிழரின் இடம் அண்ணா ஹசாரே
போராட்டம் போன்று ஒரு உணர்வை கிளப்பும் ..அவ்வுளவுதான் ..
சீமானிடம் நாங்கள் ஒரு நல்ல மாற்றத்தை எதிர்பார்த்தோம் .. ஆனால் மிஞ்சியது ஏமாற்றமே ! கருணாநிதி தனது அறுபதாவது வயதில் என்ன செய்தரோ அதை சீமான் இப்போதே செய்கிறார் ..
அவரது தம்பிகளும் தங்க கம்பிகளும் ஆட்சி அதிகாரத்தை ருசிக்க அலாய் பறக்கிறார்கள்..இவர்களிடம் தமிழக மக்கள் மிக விழிப்போடு இருக்க வேண்டும் ...தங்கள் இருப்புக்காக யாரையும் காட்டி கொடுக்க தயங்க மாட்டார்கள் .அதன் முடிவுகள் தான் பெரியார் ,திராவிடம், நாம் தமிழர்
இந்திய கட்சி ...போன்றவை ...
ssrinivasan
திராவிடம் பேசி தமிழ் நாட்டையே அழித்து விட்டார். தமிழா நீ துஙகாமல் இரு. தெலுங்கன், மலையாலி, கன்ன்டன் இவனை பார். நம் முதல் விரோதி திராவிடன்.
selvakumar.k
திரவிடம் பெசி பிழப்பு நடதும் பீட்ச்ஷை கரர்கல் நடுவில் தமீழன தலைவன் அன்னன் பிரபகரன் வழிழில் நென்சுரம் கொன்டு நடைபொடும் அன்னன் சிமான் தமிழகதில் உல்ல
ஒரெ தமிழ்ன தலைவன் வரவெர்க மனம் இல்லமல் பொனாலும் வழில் நீர்காமல் இருந்தல் நல்லது,
தமிழ் மொழி பொருக்காக தன்டவலதில் தலி வைத்து பதவி கிடைதது என் தமிழ் சகதொரனின் என் தொப்புல் கொடி உரவுகல் தலைகள் தாய் மன்னில் துன்டிபதை பார்து கன்டும் கனமல் கடுதாசி எழுதி என்ரு டெசொ நாடகம் நடைத்தும் க க பொன்ர தலைவர்கள் உஙகள் கன்னுகு தெரியவில்லய பொங்கய பொஇ வெள்ய பருங

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.