பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வரும் 13.06.11 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் தேவநேயப்பாவாணர் நூலக அரங்கத்தில் விடுதலை இராசேந்திரன் தலைமையில் ஈழத்தமிழர் - கச்சத்தீவு உரிமைகளுக்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சரித்திரம் படைத்த தமிழக முதல்வரைப் பாராட்டியும், இந்திய அரசை வலியுறுத்தியும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
பெரியார் திராவிடர்  கழகத் துணைத்தலைவர் ஆனூர் ஜெகதீசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாகிருல்லா, நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மய்யத்தின் பேராசிரியர் சரசுவதி ஆகியோர் கருத்துரையாற்றுகின்றனர்.
Pin It