சமத்துவக் கல்விக்குத்
தடைகோரும் நேரமா?
ஆடுகள் மாடுகள்
மேய்க்கும் காலமா?
ஒட்டுதலும் கிழித்தலும்
ஆசிரியர் பணியா?
கல்வி வரலாற்றில்
தீராத பிணியா?
வள்ளுவர் படத்தையே
தாள் ஒட்டி மறைப்பதா?
வென்று விட்டோம் என்றே
ஆரியம் உரைப்பதா?
எப்படி எம் பிள்ளைகள்
நூல் இன்றிப் படிப்பார்கள்?
எப்படிக் காலாண்டுத்
தேர்வை முடிப்பார்கள்?
ஏழைப் பிள்ளைக்கு
இல்லையே நூல்கள்...
ஏளனமாய்ச் சிரிக்கும்
ஆயிரம் பூணூல்கள்!