கேள்வியற்ற தேசபக்திக்கும் போர் வெறிக்கும் பலியாவது பகுத்தறிவும் ஜனநாயகமுமே

மாற்றுக் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படாத காலகட்டத்தில் இந்த மாற்றுக் கருத்துடைய கட்டுரை வெளியாகிறது. புல்வாமா நோய் பற்றியுள்ள இவ்வேளையில், வெற்றிகரமாக இந்தியப்படை எல்லை கடந்துசென்று பாகிஸ்தான் நிலைகளைத் தாக்கி அழித்துத் திரும்பியுள்ள உற்சாகமான வேளையில் இது வெளியாகிறது. நாடு முழுதும் பாகிஸ்தானுக்குத் தக்க அடிகொடுத்து விட்டோம் என்ற பெருமித உணர்வு பெருகி ஓடுகிறது. ஊடகங்கள் அரசின் தீர சாதனையைப் போட்டிபோட்டு வாழ்த்துகின்றன. நடிகர்கள் துவங்கி கிரிக்கெட் வீரர்கள் வரை மக்களனைவரும் அரசுக்கு வாழ்த்துப் பத்திரங்கள் வழங்குகின்றனர்.

modi with soldiers bodyஇவையனைத்தையும் பார்க்கும் என் மனதுள் ஏதோ ஒரு சங்கடம். வேறு வகையில் சிந்தித்துச் செயல்பட வேண்டிய வேளையில் மாறுபட்டுச் செயல்படுகிறோமோ என்ற தயக்கம் மறுபுறம்.

சமாதானத்திற்குத் துணிவு வேண்டும்

நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது, சர்ச்சில் காலப் போர்த் திரைப்படம் ஒன்றைப்பார்த்து, மிகுந்த உற்சாகத்துடன் என் அப்பாவிடம் சர்ச்சிலின் வீரதீர யுக்திகளை வியந்து புகழ்ந்தேன். அவர், “சர்ச்சில் ஒரு போலி வீரர். அவர் காந்திஜியின் காலணியைத் தொடவும் தகுதியற்றவர். போர் சிறுவர்களுக்கு உசுப்பேற்றி வீர முழக்கமிடச் செய்யலாம். எல்லாம் வெற்று ஆர்ப்பாட்டம். அது ஒரு தொற்றுநோய். ஆனால் சமாதானம் உருவாக்க மாபெரும் துணிவு தேவை. வெகுசிலரே அத்தகைய துணிவு பெற்றோர்” என்றார்.

அன்று அவர் சொன்ன வார்த்தைகள் இன்று இப் பொழுது பொருத்தமானதாக என் நினைவில் வருகிறது. போர் என்றவுடன் மாபெரும் ஒற்றுமை உணர்வு வியத்தகு அளவு பற்றியெரிகிறது. இந்த உணர்வு வேற்றுமையை ஏற்றுக் கொள்ளாது. நாட்டுப் பற்று என்பதை மக்கள் பெரும்பாலும் வார்தையளவிலேயே புரிந்து கொண்டு சார்பு உணர்வுடன் பொங்குகிறார்கள். எங்கள் பகுதியில் இருக்கும் காராச்சி ஹோட்டல் பலகை தாக்கி உடைக்கப்பட்டது. போர் புனிதம் பெறும்போது, தேசபக்தி என்ற பெயரில் உணர்ச்சிப் பொங்கல் நிகழ்கிறது. சந்தேகம், முரண்பாடு, கேள்வி எதற்கும் இடமிருப்பதில்லை. பல்நோக்குப் பார்வைக்கு இடமே இல்லை. ஆளும் அரசுடன் மக்கள் ஒன்றிப் போய் விடுகின்றனர். மோடி நேற்று வரை சந்தேகத் துடன் பார்க்கப்பட்டார், சீர்கெட்ட தலைவனாக, ஒதுக்கப்பட்டார், விமர்சிக்கப்பட்டார். அமித்ஷா போரும், நாட்டின் பாதுகாப்பு வாக்கு வங்கியின் சாவியாகிறது என நினைக்கிறார்.

சிந்தனை காஷ்மீர் பற்றியும், பாகிஸ்தான் பற்றியும், முஸ்ஸீம்கள் பற்றியும் பேசும்போது சிதைந்து போகிறது. அமைதியாகத் தங்கள் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் அச்சுறுத்தப்படு கின்றனர். இந்தியர் போர் மோதல் பக்கம் திரும்பும் போது மக்கள் ஒற்றுமை குழைந்து போய் அச்சத்தில் ஆழ்கின்றனர். நமது தொலைக்காட்சிகளோ கிரிக்கெட் விளையாட்டுக்கும், போருக்கும் பேதம் தெரியாமல் வெறியூட்டுகின்றன. நாம் ஒரே நாட்டினர் என்ற வகையில் ஒருவரை ஒருவர் தட்டிக் கொடுத்துப் பாராட்டிக் கொண்டு, சுயதம்பட்டமடித்துக் கொள் கிறோம். நாம் ஒரு நாகரிகத்தின் பிரதிநிதிகள் என்பதை மறந்து விடுகிறோம். வெறியே, தேச பக்தியாகிறது. மாற்றுக் கருத்து வெளியிட வாய்ப் பில்லை. தன் நாட்டு மக்களை எதிர்கொள்வது எதிரியை எதிர்கொள்வதை விட அச்சம் தருவதாகிறது. எப்படி சக மனிதனுடன் உரையாடலைத் துவங்குவது என்பது என்ற தயக்கமே மிஞ்சுகிறது.

போர் என்பது என்ன?

இந்தியா உண்மையான போரைச் சந்தித்ததில்லை. ஐரோப்பாவும், வியட்நாமும் சந்தித்தது போன்ற நாட்டையே புரட்டிப் போட்ட போர்கள் இங்கு நடந்ததில்லை. எல்லாப் போர்களும் ஒரு எல்லையில் நடந்த மோதல்களே. ஜெர்மனி, ருஷ்யா போலப் போரின் கொடுமைகளை நம் மக்கள் அறிந்ததில்லை. தாக்குதல்கள் போரல்ல என்பதை நமது தலைவர்கள் கூட அறியவில்லை. அவர்கள் மூன்றாம் தர நாடக நடிகர்கள் போலவே போரை எதிர்கொள்கின்றனர். இந்தியா, சமூகப் போரின் கொடுமைகளையும், தியாகங்களையும், வேதனை களையும் அனுபவித்ததே இல்லை. நமது போர் பற்றிய அறிதல், போக்குவரத்து நெரிசல்களாகவே நமது ஆலோசக விற்பன்னர்கள், சர்வதேச உறவு நிபுணர்கள். அறிந்த தேசபக்தி, பாதுகாப்பு என்பன பற்றிய கருத்து அற்பமானது. இவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கும், சுதந்திரத்திற்கும் செய்த பாதிப்புகளே ஏராளம். பாதுகாப்பு என்பது பற்றி அதிகாரிகள் கருத்து ஒரு படுகொலை, எண்ணிக்கை, சவங்கள் சம்பந்தப்பட்டதே. இது பற்றி உரக்கப் பறைசாற்றிக் கொண்டிருப்பார்கள். இதனால் நாட்டின் பன்முகத் தன்மை, ஜனநாயகம் போன்றவை அழிக்கப்படுகின்றன.

போர் பற்றிய வேட்கையின் முதல் பலி ஜனநாயகமே. பகுத்தறிவு சிந்தனையைக் கொல்வது போர். பாகிஸ்தான் பற்றிய பூதம் போன்ற தோற்றத்தை வளர்ப்பதன் மூலம் நம் தலைவர்கள் பேசும்போது, நாம் எப்படிக் காஷ்மீரில் நடந்து கொள்கிறோம் என் பதை மறக்கிறோம். பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி எனப் புலம்பும் நாம் காஷ்மீரிலும், மிஜோரமிலும் நமது ராணுவம் என்ன செய்கிறது என்பதைச் சிந்திப்பதில்லை. ஜெர்மன் சுவரை பூதாகரமாகப் பேசும் நாம், உல்ஸ்டரை அற்பமாக நினைக்கிறோம். இந்தியா ஒரு ஆக்கப்பூர்வமான ஜனநாயகம் என நினைக்கும் நாம், காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் உள் நாட்டுப்போர் பல பத்தாண்டுகளாக நடப்பது

பற்றிச் சிந்தித்துள்ளோமா? ஏன் நம்மில் அற வலிமை கொண்ட, பாகிஸ்தானை சமாதானப் பேச்சுக்கு அழைக்கும் தகுதிமிக்க தலைவர்கள் இல்லை. பெரும்பான்மை வெறியும், உள்நாட்டுப் போர்களும் நமது நாகரிகத்தின் ரத்தத்தைக் குடித்துக் கொண்டுள்ள போது நாம் எத்தகைய ஜனநாயக நாடு என்பதைச் சிந்தித்தோமா? பஞ்சசீலம் தந்த நாட்டின் மக்கள் ஜனநாயக சமூகம், சர்வதேசப் பார்வை என்ன ஆனது? பாகிஸ்தான் ஒரு முரடன் போல நடப்பதால் நாம் நமது நாகரிக மரபை இழப்பதா? மோகன்தாஸ் கரம்சந்த், கான் அப்துல் கபர்கானும் நம்முடன் வாழ்ந்து உரையாடியது, அவர்களின் கனவுகளை என்னவாக்கினோம்?

ராஜதந்திரமாகச் சிந்தித்தாலும் நாம் இழப்பாளர்களே - ராஜதந்திரம் ராணுவம், ஆயுதம் சார்ந்ததாக மாறிவிட்டது. அதில் எவ்வித மதிப்பும், அறமும், விழுமியமுமில்லை. யுக்தி போலன்றி ராஜதந்திரம் நீண்ட பலன் கொண்டது. ராஜதந்திரம் அறத்திற்கு உட்பட்டது. ராஜதந்திர ரீதியில் பார்த்தால் நாம் ஒரு அரசியல் பூகோள வலையில் சிக்கிக் கொள்ள உள்ளோம். சீனா பாகிஸ்தானை தனது துணை நாடாகக் கருதுகிறது. அதனால் புல்வாமாவால் அதற்கு லாபமே. சீன அரசும் சமூகமும் இந்தியா எதேச்சகார ராணுவமயமான நாடாவதையே விரும்புகிறது. இந்தியா தனது மகத்தான ஜனநாயக மரபை இழந்தால் அது மகிழும். நமது ராஜ தந்திரமும் கூட போருக்கானதாக அன்றி சமாதானத்திற் கானதாக, ஜனநாயகம் தொடர்வதற்கானதாக அமைதி விரும்பும் நாடாக இருப்பதற்கானதாகவே இருக்க வேண்டும். அதன் மூலம் நாம் சீனாவை மிஞ்சி உயர முடியும். சமாதானம் என்பது ராணுவ, ஆயுத சவாலுக்கு எதிரான பெண்மைத்தனமல்ல. ஒரு நாட்டின் மூர்க்கத்தனத்திற்கு எதிரான நாகரிக அற எதிர்ப்பு.

மாற்றுக் கருத்து வாழ

நமது சகோதர இந்தியர்களுடன் விவாதிக்கும் போது நாம் சுதேசி, சுயராஜ்யம் இரண்டையும் காந்தியப் பார்வையில் பார்க்கிறோம் என்பதை உணர்த்த வேண்டும். சமாதானம் என்பது பொறுப்புடன் கூடியது. வெற்று தேசபக்திக்கு அது தேவையில்லை. நமது நேர்மையின் மீது சந்தேகம் கொண்டவர் களுடன் உரையாடுவதும், விவாதிப்பதும் சிறுமைப் படுத்தப்படுகிறது. மாற்றுக் கருத்து பிழைப்புக்கான தாகவும், ஆக்கத்திறன் கொண்டதாகவுமானது. இந்தியாவின் நாகரிகம் உலகுக்குப் பல உன்னத ஆக்கப்பூர்வமான அமைதி முன்னோடிகளான புத்தர், குருநானக், கபீர், கான் அப்துல் கபர்கான், காந்தி போன்றவர்களைத் தந்தது. நாம் இவற்றை எப்படி ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப் போகிறோம் என்ற கேள்வி, சவால் நம்முன் நிற்கிறது. அணு ஆயுதங் களும், போரும், படுகொலைகளும் கொண்ட உலகில் நம் பங்கு என்ன?

அங்கு மக்கள் சமூகம், ஆசிரமம், பல்கலைக் கழகம் ஆகியன நட்புமிக்க சகோதரத்துவச் சிந்தனை களை, சமாதான உணர்வை, உருவாக்க வேண்டும், நாடு எல்லைகள் எனும் கற்பிதங்களை மீறிய பிரபஞ்சப் பார்வையை வளர்க்க வேண்டும்.

நமது அன்பு, அமைதி, சமாதானம் உலகுக்கு ஒரு சாசனமாக, செய்தியாக வேண்டும். நாம் நமது நாகரிகப் பண்பாட்டு விழுமியங்களை மீட்டெடுத்தாக வேண்டும். இது ஒரு சத்தியாகிரகியின் கனவு களுக்கான வேண்டுகோள். சமாதானத்திற்கான சிந்தனை, லட்சியம், பரிசோதனை. இன்றைய நாடுகளின் மேலாதிக்கத்திற்கான சவால்- இந்திய நாகரிகம் இதைத் தவிர்த்து உலகுக்கு வேறு எதையும் தந்துவிட முடியாது.

(கட்டுரையாளர் மாற்றுச் சிந்தனை கற்பனைக் குழுவைச் சேர்ந்த கல்வியாளர்)

ஆங்கில மூலம் - ‘தி இந்து’ 28-2-2019