சாணிப்பால் சவுக்கடி என்று

மூர்க்கமாய் செயல்பட்ட அது

சுவரைக்கட்டுவது இடிப்பது

பாதையை மறிப்பது திறப்பதென்று

கண்ணாமூச்சி காட்டும் அது

தேங்காய் சிரட்டையை

டிஸ்போசபிள் கப்பாய் மாறுவதென

நவீனமாய் தொழிற்படுகிறது

ஏழுகடல் ஏழுமலை தாண்டி

ஏதோ ஒரு குகையில்

கூண்டுக்குள்ளிருக்கும் கிளிக்குள்

தன் உயிரை ஒளித்து வைத்திருக்கும் அசுரனைப்போல்

அகமனத்தில் தன் உயிர் இருப்பதாக

நம்பும் அது

தன் பெண்களின் யோனிகளுக்கு கவசமிட்டு

தன் குறி தீண்டித் திளைத்த

யோனிகளை நினைத்து அரற்றியபடி

அழுகி விழுந்த குறியை

கையிலெடுத்துக் கொண்டு அலைகிறது

யோனியைத் தேடி

- சக்தி அருளானந்தம்

More articles by சக்தி அருளானந்தம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.