பேருந்தில் இடம் பிடித்து

உன்னைத்தானே

உட்கார வைத்தேன்

பேனா மை வேண்டும் என்றாய்

என் பேனாவையே

எடுத்துத் தந்தேன்

தமிழ் புத்தகம் இரவல் கேட்டாய்

கேவலம் என்று பரிசாய் தந்தேன்

பென்சில் ரப்பர் எல்லாவற்றையும்

என் நினைவாய் உனக்குத் தந்தேன்

தேர்வில் மட்டும்தான்

பயமே என்றாய்

என் புத்தகத்தையே

கிழித்துத் தந்தேன்

புதிதாய் போகும் வகுப்பில் மட்டும்

யாரைக் கண்டும் அஞ்சிவிடாதே

அங்கும் இருப்பான் என்னைப் போல்

எவனாவது ஒரு இளிச்சவாயன்

- நாவல் குமாரகேசன்

More articles by நாவல் குமாரகேசன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.