எப்போது முடிப்பதென்ற

தீர்மானத்துடனே

தொடங்குகிறது

முதல் உருட்டல்

ஒவ்வொரு உருட்டலிலும் நிகழ்கிறது

ஒரு வெற்றியும்

ஒரு தோல்வியும்

திரும்பத் திரும்ப

உருட்டப்படுகிறது

வென்றவரே வென்றாலும்

தோற்றவரே தோற்றாலும்

இதுதான் கடைசி உருட்டலென்ற

இருவரின் உடன்படிக்கையையும் மீறி

வென்றவர் தோற்கும்

தோற்றவர் வெல்லும்

 ஏதோவோர் புள்ளி

தொடங்கி

வைத்துக் கொண்டே

இருக்கிறது

மீண்டும் மீண்டும்

ஒர் புதிய உருட்டலை

 - க.ஆனந்த்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.