தினமும் குளியல்
பாதாளச்சாக்கடைக்குள்
உணவு இடைவேளை
மலம் அள்ளிய கையோடு
அள்ளிக் கொட்டுகிறோம்
எவன் எவனோ
பேண்ட பீயை
இருந்தாலும் பார்ப்பதில்லை
இது எவன் சாதிப் பீயென்று
மூத்திரச் சந்துக்குள்ளதான்
முடிந்தவரை தூங்குகின்றோம்
மூச்சு போனதுன்னா
போனது போனதுதான்
எங்காச்சும் இழவுன்னா
எடுத்தெறிஞ்சு ஓடுகின்றோம்
பொணம் பொசுக்கி முடிச்சாத்தான்
சோறுதண்ணிக் காய்ச்சுகின்றோம்
செருப்பு தைச்சு கிடைச்ச காசு
செலவுக்கு இருந்தாலும்
வட்டிக் கட்டி முடிச்சபின்பு
வறுமைதான் மிஞ்சுதுங்க...

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.