1.1.2010 ஆங்கிலப் புத்தாண்டு அன்று ‘உத்ர’ இலக்கிய அமைப்பு சார்பில் கவிஞர்கள் சந்திப்பு - 2010 ஏலகிரி மலையில், நிலாவூரில் உள்ள நண்பர்களின் விடுதியான ஆர்க்கிட் என்னும் விடுதியில் நடந்தது. இச்சந்திப்பில் பிரம்மாராஜனின் ‘ஜென் மயில்’ கவிதைத் தொகுப்பு குறித்து பழனிவேளும், ஜீ.முருகனின் ‘காட்டோவியம்’ கவிதைத் தொகுப்பு குறித்து ராணிதிலக் மற்றும் குமார் அம்பாயிரம் ஆகியோரும், குலசேகரனின் ‘ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி’ கவிதைத் தொகுப்பு குறித்து ஸ்ரீநேசனும், நீலகண்டனின் ‘முயல் போல் வாழும் காமம்’ கவிதைத் தொகுப்பு குறித்து குலசேகரனும் கட்டுரைகள் வாசித்தனர்.

ஒவ்வொரு கட்டுரை வாசிப்புக்குப் பின்பும் அது பற்றிய விவாதம் இன்றைய கவிதைகள் கலந்துரையாடலாகவும் விரிவு பெற்றது. இந்த கலந்துரையாடல் வட தமிழகக் கவிஞர்களான பிரம்மராஜன், ஜீ.முருகன், பழனிவேள், குலசேகரன், ஸ்ரீநேசன், ராணிதிலக், குமார் அம்பாயிரம், நீலகண்டன், பயணி, முருகேசன், கணேசலங்கன், கா.சுரேஷ், சரவணன், சி.சுபாஷ், மையம் ராஜகோபால் மற்றும் நண்பர்களும் பங்கேற்றனர். ராணிதிலக்கின் ‘விதி என்பது இலைதான்’ குறித்து கண்டராதித்தன் கட்டுரை எழுதி வந்திருந்தும் உடல் நலக்குறைவால் நிகழ்வில் வாசிக்கப்படவில்லை. இரண்டாவது அமர்வில் பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ நாவல் குறித்து விரிவாக விவாதம் செய்யப்பட்டது. உலகத் தரத்தில் வைத்துப் பார்க்கக் கூடிய தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாக இந்த நாவலை அனைவருமே கருதினார்கள். இச்சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் இவ்விதழில் வெளியாகின்றன. ராணிதிலக்கின் கட்டுரை மட்டும் ‘அடவி’ பிப்ரவரி இதழில் வெளியாகியுள்ளது.

விழித்துக் கொண்டே காணும் கனவு-முயல் போல் வாழும் காமம் : நீலகண்டன் கவிதைகள்

குலசேகரன்

இது நீலகண்டனின் முதல் கவிதைத் தொகுப்பு என்றும், கடந்த பத்தாண்டுகளாக அவர் எழுதியவையென்றும் பின்னட்டையில் குறிப்பு உள்ளது. அந்தக் காலக் கிரமப்படி கவிதைகள் உள்ளே வரிசைப்படுத்தப்பட்டுள்ளனவாகத் தெரியவில்லை. இருப்பினும், நடுப்பகுதியிலுள்ள இறுக்கமான, இருண்மையான கவிதைகள் ஆரம்பக் காலங்களில் எழுதப்பட்டவையென்றும், முன் மற்றும் பின்னாலுள்ள உரைநடைத்தன்மை வாய்ந்தவை பிற்காலத்தவை என்றும் கொள்ளலாம். ஏனெனில், ஆச்சரியமூட்டும்படி தமிழ்க் கவிதைகளின் போக்கும் இப்படியேத்தானிருக்கிறது. அதை இக் கவிதைகள் கவனமாக பிரதிபலித்திருக்கின்றன.

முதலாவதாக, இந்தக் கவிதைகளில் மிகுந்துள்ள படிமங்கள் மிக அசாதாரணமானவையாகவும், அதனால் ஈர்ப்போடும் உள்ளன. ஒரு கவிதையிலேயே பல மாறுபட்ட படிமங்கள் அடுக்கப்பட்டுள்ளதால் பல குரல் தன்மையை இவை இயல்பாக கொண்டிருக்கின்றன. உதாரணமாக, üவெட்டப்பட்ட முடிச்சு மரம், கிழிந்த பாவாடை வானமென, சுனை நீரின் பிரசவ முனகல், ஒட்டகங்களாகத் திட்டுக்கள் போன்றவை. இந்தப் படிமங்களும் காட்சிகளால் அல்லாமல் சொற்களாலேயே உருவாக்கப்படுகின்றன. முயல் போல் மறைந்து வாழும் என்பதில் குழி முயல் என்று கூறப்படாமல் வெட்டவெளியில் அலைகின்ற முயல் என்று குறிப்பிடப்படுவதால் இது வேறு தளத்துக்கு மாற்றமடைவது ஓர் எடுத்துக்காட்டு.

மனித முயற்சியால் எழுதப்படவியலாத ஒரு கணிப்பொறி இயற்றியவை போன்ற அமானுடத்தன்மை வாய்ந்த பல சொற் சேர்க்கைகளும் கவிதைகளில் இணைக்கப்பட்டிருக்கின்றன. (பாலைவனம் தலை சாய்த்தவாறு, மணல் பயணிகள் தீராத வேட்டையை, ஆண் உணர்வு எலும்பு முறிய.) கவிதை சொல்ஙூக்கு மட்டுமே அனுபவமான பிரத்யேகமான வினோதக் காட்சிகளும் கலந்து வருகின்றன. (தண்டவாளத்தினடியில் காகம் உணவைப் பதுக்கி வைத்தல், மேல் வானில் அஸ்தமிக்கும் சூரியன், எலும்புகளை சுட்டு எரித்தல்.) இம் மொழியில், நாட்டார் பேச்சு வழக்குத் தன்மை படிந்திருப்பது மட்டுமில்லாமல், சில கவிதைகளின் வெளிப்பாட்டு முறையாகவும் அமைந்துள்ளன. (சாரைப் போடும் எறும்பு, உதிரிய, எலும்பு வரியிட்டு.) அதே போல் அற்புதக் கதைகளை மாற்று வாசிப்பு செய்வதையும் இந்த கவிதைகள் மேற்கொள்கின்றன. (தங்க நிற மீன், சூரிய மகாராஜா, நாடிழந்த மகாராணி போன்ற கவிதைகள் உதாரணங்கள்.)

இவை பெரும்பாலும் தன்னிச்சையான எழுத்து முறையின் விளைவுகள் என்று எண்ண ஏது இருக்கிறது. ஏனெனில், பிரக்ஞை பூர்வமான எழுதுதஙூல் இத்தகைய சாத்தியங்களை உருவாக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மேலும், இம் முறையிலுள்ள ஆபத்தாக, படிமங்கள் வற்றி ஓய்கிற போது நேர்மாறாக தேய்ந்து போன உருவகங்கள் தோன்றுவதையும் காணலாம். (வெப்ப தேவன், யோனிக் கடல், விழிக்குவளைகள், வெளிச்சப் பூக்கள், வெறுமைச் செடி, மனக்கரங்கள் போன்றவை.) அதே போல், ஒரு படிமத்தால், குறியீட்டால், அதர்க்கமான வார்த்தைகளாலும் கூட நிரப்ப முயற்சிக்கப்பட வேண்டிய நிறைய இடங்கள், காலம் சார்ந்த உருவகங்களால் போகிற போக்கில் இட்டு மூடப்படுகின்றன. (கால தேவன், காலத் தோட்டம், காலத்தின் தாழ்ப்பாள், காலத்தின் கால்கள், காலத்தின் கங்குகள்.) அவை கவித்துவமற்று வெறும் சொல்லாக மிதக்கின்றன. ஏனெனில், அத்தகு கவிதைகள் தன்னளவில் எவ்விதக் காலப் பிரக்ஞையையும் கொண்டிராமல், அவற்றை இணைப்புச் சொற்களாக வைத்திருக்கின்றன என்பதே.

இந்த வகையில், நனவோடையைப் பின்பற்றி கவிதை எழுதுகையில், சக பிரதிகளின் வரிகளையும் எடுத்தாள நேர்வதையும் நிரூபிப்பது பெரும் சிரமமுடையது. அன்று துடித்த வீழ்ந்த பகலை மீண்டும் மிதித்து நடப்பவளேý (பிரமிள் கவிதை) என்கிற வரி பருவத் திமிரோடு மிதித்து நடந்தாள் துடித்துக் கதறியது ஒரு பகல் என்பதாக கவிதை சொல்ஙூயின் கட்டுப்பாட்டை மீறியும் நிகழலாம். சுசீலாவின் கர்ப்பம் அலசி விடுவதாக (நகுலன்) என்பது காதயின் கர்ப்பம் அலசி விடுகிறது என்று திரிந்து வரலாம். பறவையையும் சிறைக் கம்பிகளையும் வரைவது (ழாக் பிரேவர்) வேறொன்றாக உருவாகலாம். அன்பின் கைப்பள்ளம், இடமும் இருப்புமற்று, சிறுமணல் என்ற ஏற்கெனவே பிறருடைய வார்த்தை இணைப்புகளும் ஆழ் மனதினின்று அங்கங்கே வெளிப்படலாம். பகலின் ஒற்றைக் கதவைத் திறந்து, பகலைத் தட்டி உள்ளே நுழைந்தேன் என்று கூறியது கூறலாக நேரலாம். இப்படி, தானாக எழுதிச் செல்வதை மிகுதியாக சார்ந்திருப்பதால்தான் கவிதை சொல்.

அளவற்ற அதி யதார்த்த பாணியையும், அதிகமாக மாய யதார்த்தத்தையும் கைக்கொண்டு கனவு நிலைக்கு செல்கிறார் என்று படுகிறது. விந்து ஆறோடும் நட்சத்திரப் பிரதேசம், முதலையின் அறும் அந்தரங்க உறுப்பு, நரம்பில் புடைத்த வானிலிருந்து உதிரும் வெண்ணுதிரம் என்பவனெல்லாம் காட்சிப்படுத்திக் கொள்வதில் சிக்கல் பெறுகின்றன. மாய யதார்த்தங்களோவெனில் அவற்றின் முக்கியத்துவம் கூட்டப்படாமலே சர்வ சாதாரணமாக நிகழ்த்தப்படுகின்றன. அறைகள் நகர்வது, அறை சுழல்வது, இருப்பிடம் அசைவது, போன்றவை கவிதைப் போக்கில் முழுதான நம்பகத்தன்மையை உண்டாக்கத் தவறுகின்றன. இவற்றை வலிந்து புனையப்பட்டவனாகவும், கவிதையனுபவத்திற்கு புறம்பாக உள்ளதாகவும் சிலர் வாசிக்கக் கூடும். ஏனெனில், அவை கவிதை உருவாகி வரும் அனுபவத்தை செழுமையாக திரட்டிக் கொள்வதில் தடைக்கற்காளாகிவிடுகின்றன. மேலும், மனித யத்தனங்கள் எல்லைக்குட்பட்டன என்பதால் இவற்றின் வீச்சும் வரையறைக்குட்பட்டே இயங்கும் எனக் கருதவும் வேண்டியிருக்கிறது.

இத் தொகுப்பின் தலைப்புக் கவிதையை வாசித்துப் பார்க்கலாம். ஓர் இளம் பெண் உடலுறவு அற்றிருக்கிறாள். (நிரப்பப்படாமல் காலியாயிருக்கிறாள் என்பது கவிதை வரி.) அதனால் அவளை எவ்வித முன் நிபந்தனைகளும் கொள்ளாமல் புணர உங்களை வேண்டுவதாக உள்ளது இக் கவிதை. ஆனால், பல வித தடைகளால் நீங்கள் செயலற்று இருப்பதால் அவள் இறந்து போய் விடுகிறாள். இதிலுள்ள படிமங்களின்படி பார்த்தால், கழுகிடமிருந்து தப்பிக்க முயல் முயன்று கொண்டிருக்கிறது. அதாவது, மனிதரின் இயல்புணர்ச்சிகள் எப்போதும் அவர்களை செலுத்திக் கொண்டிருப்பதை எப்படியோ உணர்த்துகிறது. எனவேதான் படிமங்களே கவிதைகளை ஆளுகின்றன எனலாம்.

இக் கவிதைகள், காதலினால் உண்டாகும் தனிமையையும் அதனால் குரோதத்தையும் கொண்டிருப்பதாக பின்னட்டைக் குறிப்பில் கவிஞர் ஸ்ரீநேசன் கூறியுள்ளார். அவ்வகையிலான குரோதம் என்கிற ஒரு கவிதை கடவுளின் விளக்கு அணைந்து விட்டிருந்தது என்ற உருவகத்தோடு ஆரம்பிக்கிறது. இரவில் இப்படி, தானாக எழுதிச் செல்வதை மிகுதியாக சார்ந்திருப்பதால்தான் கவிதை சொல், அளவற்ற அதி யதார்த்த பாணியையும், அதிகமாக மாய யதார்த்தத்தையும் கைக்கொண்டு கனவு நிலைக்கு செல்கிறார் என்று படுகிறது. விந்து ஆறோடும் நட்சத்திரப் பிரதேசம், முதலையின் அறும் அந்தரங்க உறுப்பு, நரம்பில் புடைத்த வானிலிருந்து உதிரும் வெண்ணுதிரம் என்பவனெல்லாம் காட்சிப்படுத்திக் கொள்வதில் சிக்கல் பெறுகின்றன. மாய யதார்த்தங்களோவெனில் அவற்றின் முக்கியத்துவம் கூட்டப்படாமலே சர்வ சாதாரணமாக நிகழ்த்தப்படுகின்றன. அறைகள் நகர்வது, அறை சுழல்வது, இருப்பிடம் அசைவது, போன்றவை கவிதைப் போக்கில் முழுதான நம்பகத்தன்மையை உண்டாக்கத் தவறுகின்றன. இவற்றை வலிந்து புனையப்பட்டவனாகவும், கவிதையனுபவத்திற்கு புறம்பாக உள்ளதாகவும் சிலர் வாசிக்கக் கூடும். ஏனெனில், அவை கவிதை உருவாகி வரும் அனுபவத்தை செழுமையாக திரட்டிக் கொள்வதில் தடைக்கற்காளாகிவிடுகின்றன. மேலும், மனித யத்தனங்கள் எல்லைக்குட்பட்டன என்பதால் இவற்றின் வீச்சும் வரையறைக்குட்பட்டே இயங்கும் எனக் கருதவும் வேண்டியிருக்கிறது.

அதேபோல் மாபெரும் குற்றவாளி என்கிற கவிதையில், எதற்காகவோ பெரும் குற்றவுணர்வு கொண்டு தன்னை தண்டித்துக் கொள்ள சிலுவையில் அறைய) நினைத்துக் கொள்கிறது ஒரு நான். அதனால் விகாசப்பட்டு இரு கரங்களையும் இரட்சகனைப் போல் நீட்டுகிறது. (பரப்பிக் கொள்கிறேன் என்றிருக்கிறது கவிதையில்.) இயேசுவுக்கும் மேலாக தன்னை உயர்த்திக் கொண்டு அதிக அன்பு பாராட்டவும் முனைகிறது. இயேசுவினுடைய காலத்தில் மொழியில்லாமலிருந்தது என்கிற தவறான தகவலும் இங்கு தேவையற்றோ, திசை மாற்றவோ தரப்படுகிறது. இவ்வாறாக கடவுளுக்கு மாற்றாக, அல்லது அதிகமான ஆளுமையோடு நான் என்கிற தன்னிலையை தொடர்ந்து உருவாக்கவும் இது போன்ற கவிதைகள் முற்படுகின்றன. அவை கடவுள் இல்லாத காஙூயான பீடங்களில் தம்மைப் படைத்துக் கொள்ள முயலுகின்றன. மற்றொரு கவிதையில், காஃப்காவின் கதையில் ஒருவன் பூச்சியாக மாறுவதைப் போல் நான் ஒரு தவளையாக மாறுகிறது. அப்படி மாறினாலும் சிறியதொரு கலங்கிய குட்டையைக் கூட பிரபஞ்சமாகவே எண்ண விரும்புகிறது. இதைப் போல் ஏதோ ஒரு வகையில் சுயம் தொடர்ந்து திருப்தியை அடைய முயற்சிப்பதை காட்டுகிறது.

கடைசிக் கவிதையாக உள்ளது தங்க நிற மீன். நீண்ட காலமாக வறண்டிருக்கும் பூமியில் மழை பெய்வதால் விவசாயிகள் தொடர்ந்து நிலத்தை உழ வேண்டியிருக்கிறது. அதைப் போலவே, இரவெல்லாம் அவர்கள் புணர்ந்து கொண்டிருக்கிறார்கள். முதஙூல் உழுவதற்கு சமமாக புணர்ச்சி வைக்கப்பட்டு, பிறகு வறட்சியான மண்ணுக்கு பசுமை நிலமும், ஆற்றுக்கு சமுத்திரமும், நீலவால் மீனுக்குப் பின்னால் தங்க நிற மீனும் கவிதையின் இணைகளாக உண்டாக்கப்படுகின்றன. இதன் விளைவாக சந்தோஷமும் துயரமும் ஒன்றாக ஆக்கப்படுகிறது. நாட்டார் வழக்கு சாயலுள்ள இந்தக் கதையைக் கூறும் இக் கவிதை இப்படி முரண் நிலைகளாலேயே வளர்ந்து இனம் புரியாத உச்சத்தை அளிக்கிறது.

சவாரித் தோழி என்கிற கவிதை களவு போன இரு சக்கர வாகனத்தைப் பற்றி, திருடனிடமும், நண்பர்களிடமும், கடைசியாக கடவுளிடமும் கூறுவதைப் போல் தனக்குள் உரையாடுகிறது. பொதுவாக வாகனத்தில் செல்வதை புணர்ச்சி உறவுக்கு ஒத்ததாக சொல்வார்கள். ஆனால், இக் கவிதை மேலும் வஙூந்து மழைக்காக குடிசையில் ஒதுங்கி வாகனத்தோடு உடலுறவு கொள்வதாக கூறுகிறது. (இதை கற்பனை செய்ய முடியவில்லை.) பிறகு, அந்த வாகனம் கிடைக்காது என்று தெரிந்த பின்பு அது இழப்பை ஏற்றுக் கொள்கிறது. இப்படியாக கவிதை மிகையாக நடித்து பிறகு அசலான கவித்துவத்தை அதன் இறுதி வரிகளில் நிகழ்த்துகிறது. மௌனியின் கதாபாத்திரங்கள் காரணமே இல்லாமல் துயரம் கொண்டவர்களாகவும் அதில் இன்பம் அனுபவிப்பவர்களாகவுமிருப்பார்கள். அது போல் இந்தக் கவிதை ஏனோ உண்டாகும் துயரத்தைக் கொண்டாடுவதற்காக புணர்ச்சியைக் காட்டிலும் அதை இழந்த துன்பத்தை நிரந்தரமாக்க முற்படுகிறது.

அதே போல் பூமி இறந்து விட்டது என்கிற கவிதையில் பூமி இறந்ததற்கான காரணங்களாக பின்னாலுள்ள வரிகளை எதிர்நிலைகளில் வைத்து புரிந்து கொள்ளலாம். வானத்தைப் பறையாக்கி சற்று வருத்தமிருந்தாலும் ஆனந்தமாக அடிக்கும் தோட்டியை கவிதை சொல்லியாகவும் காணலாம். ஆனால், அகில உலகத்தையும் படைக்க வல்லமையுள்ள அவன் அதை அழிப்பதிலேயே மகிழ்ச்சி கொள்கிறான். பொதுப்புத்திகளுக்கு மாறான இக்கவிதையையும் எதிர் கவிதை என்று சொல்லலாம்.

கால கதி என்கிற கவிதை, கடும் தனிமையிலும் வெறுமையிலும் எழும் சில பிரமைகளை படிமங்களாக முன் வைக்கிறது. காரண காரியமற்று எழும் நட்பின் சிக்கல்களையும் ஆராய்கிறது. இதில் காலம் பற்றிய பிரக்ஞை இல்லாமல் அது ஒரு சொல்லாக தனித்து நிற்கிறது. இடையில் நிறைய படிமங்கள் கற்களைப் போல் சுதந்திரமாக அடுக்கப்பட்டுள்ளன. உள்ளுக்குள் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு பரிசீலித்துக் கொண்டிருப்பதால் வாசிப்பிலும் பெரும் ஆளுமைப் பிளவை பாறை உடைகிற படிமமாக உண்டாக்கிவிட முடிகிறது.

நீர்க்குமிழ் என்கிற கவிதை வினோதங்களையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் சிறுவனின் உலகமாக விரிகிறது. பூவாங்காய், பப்பாளிக் குழாய் சகிதமாக அவன் நீர்க்குமிழை உண்டாக்குகிறான் என தர்க்கத்தோடு எழுதப்படுகிறது. ஆனால், அந்த நீர்க்குமிழியில் அவன் விழுகிற காரணம் காட்டப்படுவதில்லை. அது வாசிப்புக்கே விடப்படுகிறது. வெட்ட வெளி என்பதற்கு பதிலாக வெற்று வெளி என்று குறிப்பிடப்படுவதால் சிறுவன் தனிமையிஙூருக்கிறான் என்பதாகவும், அதனால் அவன் குமிழியில் புகுவதாகவும் கருதலாம். ஆனால், அதை பால் வீதியில் சுழன்று கொண்டிருப்பதாக எண்ண ஏதில்லை, புத்தகப் பாடங்களோடு அவன் பிணைந்திருந்தால் தவிர. அவன் மற்றொரு குமிழிக்கு தாவுவதின் விருப்பமும் வெளிப்படையாக சுட்டப்படுவதில்லை. அதே போல், புகும்போது உடையாத குமிழி தாவும் போது மட்டும் உடைகிறது. ஆயின், அதன் வாழ்க்கை அந்த ஒரு கணம்தான் என்பதாக பின்னுள்ள வரிகளின்படி வாசிக்கலாம். பிறகு அச் சிறுவன் நீர்க்குமிழிகளையெல்லாம் உடைத்துவிட பால்வீதி காஙூயாகின்றது. இப்போது சிறுவனின் நீர்க்குமிழியாக அவனுடைய சிறார் உலகு உடைபடப் போகிறது என பொருட்படுத்தலாம். ஏனெனில், சிறுவன் எழுப்புகிற குமிழியில் தானும் உருமாறும் மாயம் இயல்பாக நடத்தப்படுவதில்லை. அதை வாசிப்பே நிகழ்த்திக் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறது.

இக் கவிதைகள், கலைத்துப் போடப்பட்ட தனித்துவமிக்க படிமங்களாலும், வித்தியாசமான சொல்லிணைவுகளாலும் நேரடியான ஒற்றை வாசிப்பை நிராகரிக்கின்றன. கவிதைகள் தாம் உருவாக்குவதை தாமே மறுத்தும் கொண்டிருக்கின்றன. சிக்கலும் சிடுக்கும் கொண்ட மொழியின் வழியாக எளிமையின் மகத்துவமுள்ள அனுபவங்களையும் தர முயலுகின்றன. கவிதையிள் சாராம்சமான குழம்பிய மனநிலையிஙூருந்து அபூர்வமான தெளிவை எட்டவும் முனைகின்றன.

பொதுவாக திரும்பவும் உருவாகி நிலை பெற்றுக் கொண்டிருக்கும் கவிதை வடிவத்தை பரிபூர்ண சுதந்திரத்துடன் இந்த கவிதை சொல்லி முதலில் உடைக்கிறார். தனக்கென்று கட்டுப்பாடுகள் எதையும் விதித்துக் கொள்ளாமல், தன்னை அதற்கு ஒப்பும் கொடுக்கிறார். சுயேச்சையாக மன ஓட்டங்களை தொடர்ந்து சென்று பிரக்ஞை நிலையிலிருந்து கவிதைகளை திறந்த பிரதியாகப் படைக்கிறார். இதனால் புத்தம் புதிய வாசிப்புகளை அடைய முடியும் பேரனுபவம் கிடைக்கிறது.

ஆயிரம் தலைமுறைகள் தாண்டி- குலசேகரன் கவிதைகள் குறித்து

ஸ்ரீநேசன்

தமிழ்க்கவிதை செய்யுள் தளையிலிருந்து மீண்டு புதுக்கவிதையாகப் பரிணமித்த பின்பும் யாப்பு, அணி கூறுகளை முற்றும் களையாமலேயே இருந்தது. எதுகை, மோனை, சந்த ஓசை நயங்களையும் உவமை, உருவகம் போன்ற அணி அலங்காரங்களையும் அது தன்னகத்தே கொண்டிருந்தது. உள்ளடக்கத்தில் தனிமனித கவிதைகள் சமூக கவிதைகள் என பாகுபாடுகளைக் கொண்டும் படிமக்கவிதை, குறியீட்டுக்கவிதை என மேலைநாட்டு கவிதை அணிகளைக் கொண்டும் திகழ்ந்தது. சிற்சில சர்ரியலிச முயற்சிகளும் நடந்தன. பின்பு தலித், பெண்ணியம், பின் நவீனத்துவம் போன்ற கோட்பாட்டுக் கவிதைகளாகவும் தமிழ்க் கவிதை தொடர்ந்தது.

இன்று எழுதப்படும் நவீன கவிதைகளைக் கூர்ந்து நோக்குகையில் மேற்சொன்ன அணி அலங்கார, கோட்பாட்டு வகைகள் ஏன் கடந்த பத்தாண்டுகளில் எழுச்சிப் பெற்றிருந்ததாகக் தோற்றம் தந்த தலித்திய, பெண்ணிய கவிதைகளின் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளன. மாற்றாக புனைவு தன்மையிலான புதிதான அதிகற்பனை கூறுகளைக் கொண்ட கவிதைகள் இன்று கவனத்திற்குரியனவாக உள்ளன. குலசேகரனின் இத்தொகுப்புக் கவிதைகளையும் இந்த வகையில்தான் கவிதைகளோடு இணைத்துக் கொள்ள வேண்டும்.

எழுபது கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பு குலசேகரனின் இரண்டாவது தொகுப்பு. முதல் தொகுப்பு ஒரு பிடி மண் ராமலிங்கம் கவிதைகளுடன் சேர்ந்து 1988ல் வெளியானது. முதல் தொகுப்புக் கவிதைகளுக்கும் இத்தொகுப்புக்கும் இடையே 20 ஆண்டுகள் இடைவெளி முதல் தொகுப்பு கவிதைகள் சிற்றிதழ்களோடு அதிகம் தொடர்புடையவை. இப்போதைய இத்தொகுப்புக் கவிதைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் இன்றைய முக்கியமான சிறுபத்திரிக்கைகள் பெரும்பாலனவற்றில் பிரசுரம் கண்டவை. இவை இத்தொகுப்புக்கு முந்தைய செய்திகள்.

இத்தொகுப்பின் 70 கவிதைகளும் ( ஒரு கவிதை தவிர்த்து) ஒரு பக்கத்திற்குள்ளான கவிதைகள். இன்று பெரும்பான்மை கவிதைகள் ஏதோ ஒரு வகையில் இவ்வாறு ஒரு பக்கத்திற்குள் அடங்கும் கவிதைகளாகவே வெளிவருகின்றன. குலசேகரனின் இக்கவிதைகள் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமைவதன் காரணம் அவை 18 வரிகள் முதல் 28 வரிகளுக்குள் மிகாத அளவுக் கட்டுப்பாடு அல்லது அமைப்பில் கவனம் கொண்டவையாக இருப்பதினால்தான். இது ஒரு வித வார்ப்புத் தன்மையை கவிதைகளுக்குத் தந்துவிடுகின்றது. இக்கவிதைகளில் இடம்பெற்றிருக்கும் கிறான், கிறாள், கிறது, கின்றன போன்ற திணை, பால் சுட்டும் விதிகளின் பெரும்பான்மையும் அதைக் கூடுதலாக்குகிறது. மேலும் இரண்டு அல்லது மூன்று சொற்கள் கொண்ட வரிகளும், இரண்டு அல்லது மூன்று வரிகள் கொண்ட சொற்றடராகவும் தவிர கவிதைகளின் தலைப்பும் அனைத்தும் 2 சொற்கள் கொண்டவை. இவை கவிதைகளின் அமைப்பு சார்ந்த தகவல்கள்.

எழுபது கவிதைகளில் என்னைப் பெரிதும் கவர்ந்தவை 14 கவிதைகள். பெரும்பாலும் அக்கவிதைகளை மையமிட்டே இக்கட்டுரை அமைகிறது. பிற கவிதைகளும் ஒருவகையில் கூறப்படுவதில், தொனியில், பாடுபொருளில், அமைப்பில், இந்த 14 கவிதைகளோடு சார்புடையவை எனலாம்.

இக்கவிதைகளின் மொழி நடையைப் பொருத்தவரை எளிய விவரணைத் தன்மையும் அதனூடாக அதிபுனைவு அம்சங்களையும் ஒருங்கே கொண்டவை. மொழியைப் பயன்படுத்துவதிலும் கையாள்வதிலும் ஒரு வித தேர்ந்த ஓவியன் அல்லது சிற்பியின் திறம் வெளிப்பட்டுள்ளது. இது இன்றைய கவிஞர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அரிதான வி­யம்தான். அதோடு இக்கவிதைகளில் உள்ள எளிமையை முனைந்து உருவாக்கியுள்ளார் என எண்ணுகிறேன். ஏனெனில் இக்கவிதைகள் அவை வெளியான இதழ்களில் ஒருவித இறுக்கமானத் தன்மையைக் கொண்டிருந்ததாக ஞாபகம். அதைத் தளர்த்த உரைநடைத் தன்மையை இக்கவிதைகளுக்குத் தந்துள்ளார் எனத் தெரிகிறது. ஒரு கவிதை பிரசுரம் காணும் வரை ஏன்- கண்டபின்பும் அவை தொகுப்பாக தொகுக்கப்படும் வரை கூட திருத்தம் செய்யப்படலாம் என்று கருத்துடையவன் நான். இருந்தும் பிற்காலத்தில் எவரேனும் ஆய்வுநோக்கில் கண்டு பாடபேதத்தை சுட்டும்போது பெரிதான உருமாற்ற மடைந்திருக்கக்கூடாது எனவும் கருகிறேன்.

இக்கவிதைகளின் உள்ளமைப்பில் இடம்பெற்றுள்ள முக்கியமான அம்சங்கள்

1.     கவிதைகள் அனைத்துமே விவரணைப் பாங்கைக் கொண்டு கதை கூறும் தொனியைக் கொண்டுள்ளன.

2.     விவரணைகளின் ஊடாக செயல்படும் இயக்கம் (அ) நகர்வு.

3.     அசேதனங்கள் சேதனமாதல் அல்லது உறைந்துள்ளவை உயிர்ப்பெறுதல்.

4.     எதார்த்தமாக தொடங்கபெறும் கவிதைகளில் மிக இயல்பாக மிகு புனைவு ( தன்மை உருவாதல்)

5.     கவிதைகளின் ஒரு பகுதி கற்பனையாதல் அல்லது முழு கவிதையுமே கற்பனையான தளத்தில் இயங்குதல்.

இவற்றில் முக்கியமாக குறிப்பிடக்கூடிய அம்சம் கவிதைகளில் காணக்கிடைக்கும் இரண்டு பாதைகள் என்ற கவிதையில் ரயில்வே கேட்டில் காத்திருக்கும் ஒருவன் தன்னை ரயிலில் ஒரு பிரயாணியாக காண்பதையும், புத்தக மலையில் நோட்டுப்புத்தகங்கள் மலையாகவும், கில்லி, பம்பரம், போன்றவை உடைந்த எலும்புத் துண்டுகளாவதையும் மூடிய கதவுகளில் அலமாரிக்குள் உள்ள பொருள்களினூடே நடந்து செல்லும் அவன் கால்களில் இடறும் பழைய நாட்குறிப்பில் அவளும் மற்றொருவனும் தழுவிய நிலையில் இருப்பதையும், ரோஜா மலர்வதையும் கல்யாளி ஒருவனுடைய வருகையால் உயிர்பெறுவதும் பின் அவனைக் கொல்வதும் பின் உயிர்ப்பித்தலும் குட்டிச் சிறகுகள் என்ற கவிதையில் பாடப் புத்தகத்தில் குட்டிப் போடுமென வைக்கும் மயிலிறகு ஒன்று புத்தகத்தின் நடுவே தோகை விரித்து நடனமாடுவதும், சுய ஓவியம் கவிதையில் மரத்திற்கு ஏதோ ஒரு வண்ணத்தை சிறுவன் பூச அது பச்சையாக மாறி வேகமாக வளர்ந்து படர்ந்து செல்வதும் என பல கவிதைகளிலும் இந்த ஃபேண்டஸி கவிதையின் இயல்போடு இயல்பாக இரண்டறக் கலந்து புதுமையாக காட்சியளிக்கிறது. இத்தன்மையை தமிழ்க் கவிதைகளில் உருவாகியிருந்த சர்ரியலிசத்துக்கு மாற்றான புதிய அம்சமாகக் கூறலாம்.

இனி ஒரு முழு கவிதை காட்டின் கதை

சிறுவனுக்கு ஒரு கதையை

தந்தை சொல்ல ஆரம்பித்தான்

என ஆரம்பிக்கிறது. இனி கவிதைக்குள் கூறப்படும் கதை தொடங்குகிறது.

ஒரு காடு இருந்தது

அது மிகவும் பெரிதானது

அடுத்தவரி,

காட்டிற்குள் சிறுவன் ஓடினான்

இச்சிறுவன் கவிதைக்குள் வரும் சிறுவனா அல்லது கவிதையில் கதைகேட்கும் சிறுவனே தாம் கேட்டும் கதைக்குள்ளே ஓடிகிறானா? என்ற வினாவை எழும்பச் செய்கிறார் கவிதையும் கதையும் தொடர்கின்றன.

பாறைகளும் கொடிகளும் அடர்ந்திருந்தன.

அவற்றைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான்

அவனைப் பிடிக்கத் தந்தையும் சென்றான்

கதையைக் கேட்ட சிறுவன் மட்டுமில்லாமல், கதையைக் கூறும் தந்தையும் கதையின் கவிதையின் பாத்திரமாகும் விநோதம் உருவாகிறது. கதையின் விநோதம் கவிதையின் விரோதமாகவும் மாற்றமடைகிறது.

குன்று ஒன்று எதிர்ப்பட்டது

சிறுவன் ஒரே தாவில் மறுபுறம் குதித்தான்

பின்னாலேயே தந்தையும் வந்ததால்

கையைப் பிடித்துத் தாண்ட வைத்தான்

தந்தையால் நம்பவே முடியவில்லை

ஆமாம் சிறுவன் நம்புகிற வகையில் கதையைக் கூறிக்கொண்டுவரும் தந்தையால் அல்ல... கதையில் வரும் தந்தையால் கதையும் கவிதையும் வளர்கின்றன.

ஒரு நதி குறுக்கிட்டது

மகனும் தந்தையும் நிற்காமல்

நீரின் மேல் நடந்து கடந்தார்கள்

சிறுவன் வேகமாக, மரங்களின் மீது

பறந்து கொண்டிருந்தான்

தொடர்ந்து கொண்டிருந்தான் தந்தை

நீரின் மேல் நடத்தல், மரத்தின் மேல் பறத்தல் ஆகிய கதையில் ஃபேன்டஸியாக மாத்திரமின்றி கவிதையின் ஃபேன்டஸி யாகவும் மாறுகிறது. தவிர தந்தை தொடர்ந்து கொண்டிருப்பது கதையையா, மகனையா என்ற வினாவும் தோன்றுகிறது.

கடைசியாக குகையை அடைந்தார்கள்

அங்கு ஒரு புலி காத்துக் கொண்டிருந்தது

சிறுவன் அதனுடைய வரிகளை

இழுத்து விளையாடத் தொடங்கினான்

இதை தந்தையால் கூறப்படும் கதையின் வரியாக என்பதைவிட கவிதையைக் கூறிக் கொண்டுவரும் கவிதை சொல்லியின் வரியாகத்தான் நாம் காண்கிறோம்.

தந்தை பயந்தபடி

குகைக்கு வெளியிலேயே அமர்ந்து

தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்

மகன் தூக்கத்திலேயே உம் கொட்டிக் கொண்டிருந்தான்.

என இறுதியை அடைகிறது கவிதை. இதில் கவிதையே ஒழு கதையாகத் தொடங்குவதும் அக்கதைக்குள் சிறுவனுக்குத் தந்தை ஒரு கதை கூறுவதாகவும், தந்தை கூறும் கதைக்குள் தந்தையும் மகனுமே பாத்திரங்களாகி இயங்குவதும் இறுதியில் கதைக்குள் பாத்திரமாயிருந்த தந்தையும் சிறுவனும் கவிதைக்குள்ளே உள்ள கதையில் கதைகூறும் தந்தையாகவும் கதை கேட்கும் சிறுவனாகவும் மாறி இறுதியில் கதை கேட்டு உறங்கி உம் கொட்டியது கதை கேட்ட சிறுவனா அல்லது கதைக்குள் காட்டில் பயணப்பட்ட சிறுவனா என திருப்பத்தையும் ஒரு சுழற்சியான குழப்பத்தையும் ஏற்படுத்தி கவிதை அனுபவமாகிறது.

இறுதியாக - இத்தொகுப்பை வாசித்து முடித்து பிறிதொன்றாக விலக்கி வைத்து அதன் தன்மை குறித்து யோசிக்கையில் முழு தொகுப்பும் ஒரு தொடர்புள்ள இயல்களைக் கொண்ட குறுங்காவியமாக தோற்றம் அளிக்கின்றது. ஏனெனில் இத்தொகுப்பின் பாடுபொருளின் பாகுபாட்டில் உருவாகியுள்ள உட்பிரிவுகளென இறந்த தாய் குறித்த நினைவுகள், இறக்கும் தறுவாயில் மரணத்தை எதிர்நோக்கியுள்ள தந்தை, அவள் (மனைவியாகக் கொள்ளலாம்) மனைவியல்லாத கற்பனைப் பெண், சிறுவன் (மகனாகக் கொள்ளலாம்) ஆகியோரைக் குறித்துக் கவிதைகள் பல பகுதிகளாகப் பகுக்கும் வண்ணம் கலைந்தும் இணைந்தும் அமைந்துள்ளன.

இறந்த தாய்க்கும் கவிஞருக்குமான நினைவுகளும், மரணத் தறுவாயில் உள்ள தந்தைக்கும் கவிஞருக்குமான கடந்த, நிகழ்கால மன உணர்வுப் பதிவுகள், சிறுவனை சிறுவனாகவும் தானாகவும் கண்டு உருவான புனைவுலகம் மனைவி மற்றும் மனைவியில்லாத கற்பனையிலான பெண்ணுக்கு கவிஞருக்கும் இடையிலான உறவில் ஏற்படும் விநோத கற்பனையும் நிஜமுமான பாலியல் உள்ளிட்ட மனப்பதிவுகள் போன்றவையும் இக்கவிதைகளில் நுணுக்கமாகவும், தனிமையும் வதையும் கலந்ததாகவும் படிமப் பிரயோகங்களுடன் குறிப்பிடத் தகுந்த கவிதைகளாக உருவாகிஉள்ளன.

பிரம்மராஜனின் ஜென் மயிலும் - பிளைன் பொயட்ரியும்

பழனிவேள்

மனிதன் கண்டறிந்தவற்றில் அவனால் கடக்கவே முடியாமல் எப்போதும் அதனுள் இருக்கச் செய்த ஒரே ஸ்தூல வஸ்து மொழியாக மட்டுமே இருக்கிறது. மொழியின் ஸ்தூலத்தைப் போலவே மனிதனின் ஸ்தூலத்தை எது அனுமதிப்பதாக தோன்றுகிறதோ அதனிடம் அவனால் சரண்புகமுடிகிறது. மனிதன் மேலும் தன் தொடர்ச்சியான பயன்பாட்டில் அதனை மிக மோசமான வஸ்துவாக்குகிறான். விஸ்தீரமான மொழிப்பரப்பு 19ம் நூற்றாண்டிற்குப் பிறகு யாவற்றையும் மனிதமயப்படுத்துவது அதாவது மொழிக்குள் கொண்டுவருவதும் அதனை புத்தி என்பதுமான கொண்டாடலில் முயன்றழிப்பது அதனை இறவாத் தகவலாக்குவது என்ற குரூர நடவடிக்கையில் காலம் காலமாக பேசப்பட்டு வந்த பலதும் நீதி, தர்கம் சாத்திரம், சகமனிதன் போன்ற கருதுகோள்கள் சொல்லாக சொற்பிறழ்வாக மாற்றியதும், கொலை என்பது மறைமுகத் தன்மையிலிருந்து நேரடித் தன்மைக்கு வந்ததும், பிளாஸ்டிக் கால மனிதனின் மொழியுடன் நிகழ்வு என்றால் மேற்கூறிய கருதுகோள்கள் அதற்கு முந்தைய காலகட்டத்தில் சொல்லின் தன்மையிலிருந்தனவா என்றால் ஆறுக்கேற்றார் போல்தான் இருந்தது. அதோடு மொழிக்கென்று பிரத்யேகத் தன்மைகள் எதுவுமில்லை.

இந்த கதியில் காலம் காலமாக மொழியின் பிரத்யேகம் கவிஞன் மட்டுமே. கவிஞன் மட்டுமே தான் தேறும் மொழியை வஸ்து நிலையிலிருந்து உயிர்ப்புள்ள அசை நிலைக்கு கிட்டதட்ட இயற்கைத்தன்மைக்கு கொண்டு செல்கிறான். மனித குழுக்கள் இழுத்துச் செல்வதற்கு எதிரான திசையில் மொழியை கவிஞன் இழுக்கிறான். அதனாலேயே கவிஞன் சபிக்கப்பட்டவனாக பைத்தியமாக, புரியாத நிலைக்களனாக அல்லாடுகிறான் எவ்வளவுக் கெவ்வளவு மொழி பழமையானதோ அவ்வளவுக்களவு கவிஞனது பைத்தியம் ஆழமானது. போலி கவிஞன் பைத்தியம் போல் நடிக்கலாம் - விருதுகள் உண்டு.

கவிஞன் பயன்படுத்தும் மொழி ஓவியத்திற்கும் இசைக்கும் மேலான கலை வடிவம் என்பதில் ஐயம் கொளத் தேவையில்லை. ஒரு இசைத்துண்டு மற்றும் ஓவியச்சலாகை கேட்கவும் பார்க்கவும் ஏற்பாடுகளும் மொழி விளக்கங்களும் தேவை. ஆனால் கவிஞனது கவிதையின் ஒரு உத்தேச வரி போதும் மனோமையத்தில் லயிக்க. இதில் துரதிஷ்டம் என்னவென்றால் பிறகலைக்கு கறையும், துறை வல்லோரும் உண்டு இது நவீன கவிதை என்று கொட்டையை ஆட்டிக்கொண்டு போய்விட முடியாது. பிறகு கவிஞனது கதி ஆப்பசைத்த குரங்குதான்.

இந்தமட்டில் கடந்த நூற்றாண்டின் கடைப்பகுதியிலும் இந்நூற்றாண்டின் முதன்மைப்பகுதியிலும் தமிழின் வலுவான சபிக்கப்பட்ட பைத்தியக்கூரல் பிரம்மராஜனுடையது. ஒருவகையில் நகுலனின் இரட்டை என்று சொல்லலாம். நகுலன் போய்சேர்ந்த இதுவரை நாவலுக்காக மட்டுமே பேசப்படுகிறார். குறைவாகவே கவிதைக்கு. ராமச்சந்திரன் என்ற பாழாய் போன கவிதையைத் தவிரவும் அவர் வேறெதும் எழுதியிருக்கவில்லையா? பிரம்மராஜனும் மொழிப்பெயர்ப்புக்காக கவிதையியல் கட்டுரைகளுக்காக விவாதிக்கப்பட்ட அளவு கவித்துவம் சார்ந்து புதிர் கிடங்காகவே இருக்கிறார்.

பிரம்மராஜனின் சமீபத் தொகுப்பு ஜென்மயில் கடந்த 30 ஆண்டுகளில் 5 ஆண்டுக்கு ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது. இவ்வளவு காலமும் படைப்பு வெளியில் சீரான கவிதை முயற்சியிருந்தும் அதுவும் கவிதைக்குள்ளே மட்டும் இருப்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. ஒவ்வொரு தொகுப்பு காலத்திலும் அன்றெழுதும் இளம் கவிஞர்களோடு விவாதத்திற்கு தயாராகவே இருக்கிறார்.

இத்தொகுப்பின் மொத்தத் தன்மையை பேசப்புகும்முன் முந்தைய தொகுப்புகளிலிருந்து முற்றீலுமாக தன்னை துண்டித்துக் கொண்டும் வெளியேறியும் விட்டார் என்பது குறிப்பிட வேண்டிய அம்சம். முந்தை தொகுப்புகளில் ஊடுறுவ முடியாமல் திண்டாடும் கிரமத்து ஆன்மாவை பிரதிபலிப்பவராக கிராமத்தை வெளியிலிருந்து தொடருபவராக இருந்தார். இத்தொகுப்பில் கிராமத்தானாகவே இருக்கிறார். ஆனால் பிரதேச வாதத்தை முன்மொழிபவராக அல்ல.

கீழை ஆன்மாவை, பலிகொள்ளும் நிலத்தை, திராணியற்ற இந்திய அடிமட்ட வாழ்வை புராணிக குறியீடுகள், உலோக மயமாதலின் சுரண்டல், பூமி மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை தனக்கே குழிபறிக்கும் மனிதமய நாசத்தை பெரிதாக விளம்பாமல் கவிதைத் தேர்வில் தேர்கிறது இத்தொகுப்பு.

கடந்த நூற்றாண்டின் பூமிக்கொடூரர்களான மேற்கை விடவும் இந்நூற்றாண்டின் பூமிக்கொடூரர்களாக கிழக்கை, கிழங்கெங்கும் கட்டவிழ்த்துக்கொண்ட கொலைத் தத்துவத்தில் அற்பமான உயிரிகள் ஒருசொல் குறிப்போல மலையடிவார கிராமத்து மனிதனாக தன்னிடம் வருவோருக்கு இரண்டு பாதைகள் காட்டுவது. கவிதை சொல்லி விரும்பினால் வருவோரிடம் பேசுவது என்று மட்டுப்பட்ட குரலை இத்தொகுப்பில் வெளிப்படுத்துகிறார் பிரம்மராஜன்.

தீவிரவாதியின் ஒரியன் நெபுலா

மம்மியை நினைவூட்டுபவனாய் மீண்டும் அந்தத் தீவிரவாதி அவன் பெயர்த்து வைத்திருந்த பாறையின் வியப்பாய் அதனுள் மனிதப்பள்ளம் பெண்ணின் ஆரஞ்சு வண்ண ஒற்றை காலணியை குறிவைத்துக் கொண்டிருக்கிறான் சில குற்றச் செடிகள் பாறைத் தலையிலிருந்து எட்டிப்பார்க்கின்றன அவன் இன்னும் மனிதன் தானாவென ஓரியன் நெபுலாவிலிருந்து சிறிய நிழல் அவன் மேல் விழத் தவிக்கிறது.

இவ்வளவு பெரிய வி­யத்தை பேசும் கவிஞன் மற்றவர்களோடான நிலை இரு உன்னெழுத்துக்கள் கவிதையில் உள்ளமட்டுப்பட்ட நிலை அரக்க சயனத்துத் திவ்ய சங்கீதம் / சொற்ப வார்த்தைகளில் வரையத் / தந்தார்கள். தங்கபேனா/ பொற்குழம்பு உருக்கி / கிறுக்கி கீறி தடங்கியுரசி முள் சரியாகி முதல் சொல் உன் என்றெழுதியும் எழுதாமல் பிடுங்கிக் கொண்டார்கள் அந்தியிருள் காரணம் சொல்லி குவிந்த விரல் மூன்றும் தொடர்ந்தெழுதும் பாவனையில் பிறசொற்களின் காற்றில்

கிழக்கை இரண்டு குறியீடுகளாக்குகிறார் பிரம்மராஜன். அப்படி குறிப்பிடுவதன் மூலம் அழித்தவற்றின் மிச்சத்தையும் நினைவூட்டுகிறார். தேவைக்கான அளவே வாழும் கல்யாண ஜென் தேவைக்கான அளவே வாழியலோடு ஒன்றும் மயில். மயில் பறவைகளிலேயே மிக புத்திசாலித்தனமான பறவை. அதற்குள் இருக்கும் வினோதம் வேறோர் பறவைக்கு வாய்க்காதது. ஜென் என்பதும் தான் பொருந்திய நிலையில் இயற்கையை குறிக்கிடாமல் வாழ்வது ஜென்னைக்கொல்ல அணுவும் மயிலைக் கொல்ல பிளாஸ்டிக்கும் போதும் என்றாலும் மேற்குவான் அரக்னிடமிருந்து வந்த வண்டியை நிற்பாட்டியிருக்கிறார்கள். அதிலிருப்பது

சாபமும் மறதியும் சகதியாய் கலந்து நதியாகத் தவறி கிழக்கு மேற்கில்

நேர்கோட்டில் குப்புறத் தூங்கும் சாக்கடை.

நம்மால் அதனை தூளாக்கிவிட முடியும். ஆனால் வாழகற்ற தகவமைப்பின் உச்ச இலக்கணம் அதிலிருப்பதை இறக்குமதி செய்வதே. நீதி பேச யாருக்கும் யோக்யதை இல்லை கவிஞனைத் தவிர.

பிரம்மராஜனின் தொடர்ச்சியான கவிதை வெளிப்பாட்டிலும் கவித்துவத்திலும் முற்றிலும் அவரிடமிருந்தே வெகுதூரம் வந்துவிட்டதை சொல்வன இத்தொகுப்பு கவிதைகள் பரிட்ச்சார்த்த கவிதை, எதிர்கவிதை, அஃறினையின் பிரதிநிதித்துவம், மிக தீவிர கடல் உபாசனை, புதுசொல், சொல்லிணைவு, மேலதிகத்தகவல் குறிப்புகள், பொருள் மயக்கம், ஆவேசம், கவிதைப் பின்னலமைப்பு எல்லாவற்றிலிருந்தும் தாண்டிய நிலையில் மேற்கூறியவை மிக மிக குறைவான தளத்தில் புதிதான பிளைன் பொயட்ரியை எழுத முனைந்துள்ளார். இனியான கவிதையின் போக்கும் இவ்வாறே அமையவும் வாய்ப்புள்ளது. பிளைன் பொயட்ரிக்கான சில வி­யங்களை தொகுப்பில் இருந்து குறிப்பிட விழைகிறேன்.

1.     குறைவான ஜோடனைகள் அதாவது கவிதை கூறுகிறேன் டாம்பீகம் இல்லாமலிருப்பது.

2.     எளிய நேரடியான கூறுமுறை

3.     படிம, உருவக விலக்கம்

4.     தீர்மானமான கருத்தியல் தவிர்த்தல்

5.     கவிதை தொடங்கும்போது தானியங்கியாய் எழுதுவது

6.     உரைநடைத்தன்மையை பற்றிச் செல்வது

7.     பலதளத்தன்மை

8.     சொல் விரயம் தவிர்ப்பது

9.     தனிப்பட்ட ஆவேசத்தை கூட்டு சேர்க்காமலிருப்பது

10.    சொல் அடுக்கமுறையில் கவிதை உடைக்கமுடியாமல் இருப்பது.

இங்கே பிரம்மராஜன் கவிதையிலுள்ள இசையை முன்வைத்துச் செல்கின்றன. இசையயன்பதும் ஒருவகையில் மொழியின் முற்றாத நிலைதான். பித்தம் முற்றிய கவிதை சொல்லியின் கதறலும் தான் என்ற அகங்காரமும் ஆன்மாவின் விழிப்பில் மோகலுறும்போது உடலின் உச்சப்பட்ட கணித வடிவின் நீட்டலாக சொற்கள் சுண்டிய நிலையில் கவிஞன் உருகிவிடாமல் (ரொமான்டிக் முறையில்) சற்று எட்டியே நிற்கிறான். இதை சந்த எட்டி நிற்கும் கவிஞனும் கவிதையும் பிறருக்கு முன் ஊகமற்ற அனுபவமாக இருக்கிறது. பிறகலை வடிவங்களோடு சேரும் எந்த கவிதையும் முன் ஊகமற்ற அனுபவமாகவே இருக்கும்.

இதில் பிறருடையது மட்டுமல்ல முன் ஊகமற்ற நிலை. கவிஞனுடையதும் அத்தகைத்தே. முன் ஊகமற்ற அனுபவநிலை கவிதை முன் ஊகமற்றதை மறுமுறை நினைவு கூறலாக மாற்றும்போது அது கதையாக மாறி விடுகிறது. திகைப்பை திகைப்பாக சொல்வது தான் கவிஞனின் சொற்பாடு. இந்த திகைப்பு நிலையை எழுதத்தான் பல கதைசொல்லிகள் பிரம்மபிரயத்தனம் செய்கின்றனர். சங்க இலக்கியத்திலேயே திகைப்பை கவிதையாகவும், கதையாகவுமான வெளிப்படுத்திய வி­யத்தை மேற்கொளாக காட்டமுடியும்.

மீன் பிடித்துத் திரும்பும் பரதவர்கள் கரை சேர்ந்ததும் உபயோகமற்ற வாலை மீன்களை மணற்பரப்பில் வீசி விட்டு தம் சேரி திரும்புவர். இப்படி வீசப்பட்ட மீனைத் தின்ற நாயயான்று மறுநாளும் மறுநாளும் தம் பல்லிடுக்கில் இருக்கும் கறியின் நாற்றம் போகாதவாறு வேறெதனையும் உணவெடுக்காமல் பட்டினியோடு நண்பகலில் மணற்பரப்பில் அலைந்து திரியும் அந்நாய். இவ்வளவு விலாவரியாக சொல்லும் தோழி, பரத்தையோடு கூடிய காமசுகத்திற்காக இந்த நாயைப் போல் அலைகிறான் தலைவன் என்று கூறுவாள்.

இங்கே பிரம்மராஜன் கவிதையும் கதையுமான இடத்திற்கு செல்வதில்லை. கவிதையின் திகைப்பும் திகைப்பிற்கு பின்னுள்ள மனித எத்தனத்தைப் பிரகாடனப்படுத்துகிறார்.

புத்திப்பலன் என்ற கவிதை புள்ளிக்குயிலொன்று நுணா மரத்தில் / கண்கண்ட காட்சி புத்தி பாராதது/ அருமை கூந்தபனையிலமர்ந்து கூவியது / திக்கித் திக்கி / புத்திக்கு புலர் நேரம் / அகன்றுயர் ஆண்பனையில் அமர்ந்தது /

முன் ஊகமற்ற அனுபவமென்பது அதாவது திகைப்பு நுணா மரத்தில் புள்ளிக்குயிலை பார்த்தது. கூவுவதோ கூந்தபனையிலிருக்கிறது. அது இணைதேடும் விழைவாக இருக்கலாம். கூவலின் எதிர் நிகழ்வாக இருக்கலாம். இல்லை அந்த அபூர்வ புள்ளிக்குயிலே கூட இம் மாறி கத்தியிருக்கலாம். புத்திக்கு புலர் நேரம் என்பதில் குயிலைக் கொல்லும் வல்லூறு நமக்குள் வந்து விடுவதுதான் உடனிகழ்வு. இந்த அல்லாட்டத்தை பதற்றத்தை சொல்லி விடுவதுடன் கவிஞன் நிற்கிறான். இது தான் பிளைன் பொயட்ரியிலுள்ள நுட்பம் காஸ்ட்லி பிராண்டான அறச்சமாச்சாரங்களுக்கு முனைப்பு கொள்ளாதிருப்பதும், ஏறி நின்று முழங்காதிருப்பதும் தான் கவிஞனின் கவிதை முழுமை.

சுழல் வருடம் ஆண்பனைபூக்கள் / வழிநிறைக்கும் / கோடை மாலை ஆலாபித்து / பழங்கள் முற்றியுதிர் / ஆகஸ்ட் காலை வரை / ஆரஞ்சு சூரியனை அறுத்துச் சென்ற / அணில்கள் எவை / ஒரு மரங்கொத்தி குறைகூற/ மெளன பிரார்த்தனையின் ஜன்னல் / மீன்கொத்தி ஊடுருவி / இன்னும்மின்னும் இங்கெங்கோ ஏக்கம் / தேங்கியிருப்பதை பிப்ருவரியில் கரைந்து பயிலும் / அண்டங்காக்கைக் குஞ்சுகள் / உன் அந்தரங்கத்தை கூறுபோட / நிறுத்துங்கள் என / தொடுவான் கேட்கும்படி /உரக்க அலறப் போகிறாய் கச்சேரி களை கட்ட

நிறுத்துங்கள் என தொடுவான் கேட்கும்படி உரக்க அலறிப் போகிறாய் கச்சேரி களைகட்ட மெளன பிரார்த்தனையை ஊடுறுவிச் செல்லும் இன்னுமின்னும் அழிந்துகொண்டிருக்கும் இங்கெங்கோ உள்ளவற்றின் ஏக்கத்தில் அலறலும் கூட பிரார்த்தனையின் இதைத்தன்மையோடு உடலின் உச்ச கணித வடிவ நீட்டலாக மங்களம் முடிந்து பஜன் முற்ற மரக்கிளை வளர்ந்திருக்கும் புரவி நாக்கும் தேவை சிறகும் முளைத்துவிடும்அப்போது ஏதோ ஒன்று ஸரிஸாநிஸா என்று பிதற்றினாலும் சுகம். பிதற்றாவிட்டால் ராட்சத காலனியத்தில் குவாரி மலைகளை சாட்சி வைத்து பயப்பட ஒன்றுமில்லை. பயத்தை தவிரவும் தோல்விதான் தோழர் எல்லாம் உடைக்கப்படுவது தான் நிர்மூலம் தான் வாழ்வு கலை யாவும் எனும் கவிதை சொல்லியின் குரலை நாம் அர்த்தப்படுத்தமுடியும். கவிஞன் ஏகும் அர்த்தத்திற்கு போகாமல் வாசக விருப்பின் பாவத்திற்கு கவிதை தன்னை அனுமதிப்பது இசையின் லகுதான் காரணமாக இருக்க முடியும்.

இசையோடு பிரம்மராஜன் தேர்வது இசைவிப்பனின் சொல் பாவங்களை கோர்க்கும் அமைப்பை என்றே கருதுகிறேன். கவிஞன் இதில் பாவசஞ்சாரியாகமல் பலசமயம் மூர்க்கமாகிறான். இது பல கவிஞர்களை அவர்களுக்கே விரோதமான இடத்தில் கவிதையை கொண்டு நிற்கிறது.

இசைவிப்பவனின் சொல்பாவமும் இசைக்கருவிகளை சாக்கிட்டு பேசும் கவிதை சொல்லியின் குரலில் படியயடுத்தது போன்ற ஒரு கவிதை பூர்ணா தேவியின் ...

இங்கே பிளைன் பொயட்ரியின் அம்சங்களாக குறிப்பிட்டவற்றில் இருந்து ஒரு அபாயமும் உள்ளது. நேரடித்தன்மையின் பன்முக அமைப்பை ஒரு சந்தப்பாடல் ஸ்விகரித்துக்கொள்ளும் ஏற்படும் ஆபத்து அது. சந்தப்பாடலில் உள்ள முனுமுனுப்புத்தன்மை நுகர்வின்பத்தை மையமிட்டு செல்கிறது. ஆனால் பிளைன் பெயட்ரி என்பது உள்ளுணர்வு கொந்தளிப்போடு தொடர்புடையது. கிட்டத்தட்ட வியர்வைக்கும் பாடிஸ்பிரேவுக்கும் உள்ள வித்தியாசம்.

எடுத்துக்காட்டாக

உன் காதலியின் மார்பை வியந்து கொண்டிருக்கிறது

கோயிலின் ஆண் சிலை

 பிரயாணம் முடிந்து ஊர் வந்து

தேர்நின்ற பின் பயணவழி வரைபடம் பார்த்துச் சென்ற வழியயல்லாம் எறும்பாய் தேய்ந்து செல்கிறதுபோது

 உன்னையயாரு பெண் அணைப்பாளானால்

உன் இடது மார்பில் முலை வளர்வது

 செய்நேர்த்தி கண்ட ஊமத்தை வித்துக்களை

களவு செய்த குரங்குகள்

 மேலும் ஒரே ஒரு எடுத்துக்காட்டாக முனுமுனுத்து இன்பம் கொள்ள முடியாது வரியாக

தார்வேல் முடிந்து மிச்சமான ஒரு பாறையச்சம்

 இது ஒரு எதிர்கவிதைத் தன்மையிலான வரியும் கூட தினசரித் தன்மையிலான வரிகளும் விமர்சனக் கூற்றிலிருந்து விடுவித்துக்கொள்ளும் போது அது பிளைன் பொயட்ரியின் இடத்திறிகு இயல்பாக வந்துவிடுகிறது.

பிரம்மராஜன் தன் தன்மையில் வெளியேறிய மாத்திரத்தில் துறவிகளிடம் விளையாடும் பறவைகள், விலங்குகள் போல இத்தொகுப்பில் பல்வேறு பறவைகள் அடைக்கலம் புகுந்துள்ளன. சிலந்தி, தேனி, அன்னம், புள்ளிக்குயில், வல்லூறு, புன்னைமயில், மைனாக்கள், மடையான்கள், மரத்தவளை, கடல்காகம், கொக்குகள், நீர்ப்பாம்புகள், மஞ்சள் பட்டாம் பூச்சி, பச்சோந்தி, சில்வண்டு, கிளிகள், அணில், மரங்கொத்தி, மீன்கொத்தி, அண்டங்காக்கை, வெளவால் தொகுப்பில் மற்றவைகளின் இடம் மற்றும் வெளிப்பாட்டு முறையில் முன்பே குறிப்பிட்ட அடிவாரத்து கிராமத்து மனிதனை பற்றி ஒரு கவிதையை குறிப்பிடுவது அவசியமாகிறது.

பறவைகள் இருப்பு சார்ந்து மட்டுமல்ல கவிதைகள் நெடுகவும் ஒரு தியானமும் தியான நிலை மோனமும் தொடரச் செய்கிறது. கவிதையின் அத்யந்த நிலையில் இருப்பே நடன கதியாலான தாளத்தை இந்த தியானம் உருவாக்குகிறது.

காட்டாக தர்ப்பண வயல் தர்ப்பணம் செய்ய வந்தவர் போலிருந்தார் காற்றில் சுருங்கிய நீரலை முகத்திரை விளக்கி வயலைக்கண்டார் நாலெட்டில் கணுக்கால் சேற்றில் பரம்பை இழுத்து வந்தார். எருதுகளின் பொருட்டு துக்கித்து கண்ணில் தூசியாய் சிறுத்து மறுமுறை தோளில் பயிர்த்தலைகளைப் பற்றிக்கொண்டார் வீசிய இடமெல்லாமம் இடித்து மாரிக்காலம் உயிர்தெழுந்தது அவரே நட்டார் எக்கிகளுக்கலுக்கும் எட்டாத நெல்மணிகளை விசும்புயர

ஒரு மேட்டுநில விவசாயின் நான்குமாத வாழ்வு இங்கே விவரிக்கப்படுகிறது. அதோடு மிகச்சிறந்த உரைநடை கவிதையாகவும் இக்கவிதை இருக்கிறது. துவக்கத்திலேயே கூறியதுபோல் பிரதேச வாதத்தை முன்மொழிபவராக அல்ல பிரதேச நிறத்தை வலியுறுத்துபவராக இருக்கிறார். மறவாக்கியம் வரை ஊடுறுவமுடியாத கிராமத்து ஆன்மாவும் குளோபல் தன்மையும் மாற்றமடைந்து கிராமத்தின் வாழ்வை என்பதனைவிட காடொட்டிய வாழ்வை சிபாரிசு செய்யும் தன்மை மெலிதாக இருக்கிறது.

இத்தொகுப்பிற்கே விரோதமாகவும், கட்டாயம் தவிர்க்கவேண்டிய கவிதையாக மனிதன் என்பவன் சொன்னதென்ன குறிப்பிட முனைகிறேன். எவ்விதத்திலும் தொகுப்பிற்கு வலுசேர்க்காத மிகவும் பலகீனமான கவிதையாக தோன்றுகிறது.

ஸ்ரீநேசன்

நகுலன் : நானொரு தனி ஆள்

அவர் ஒன்றைப் பற்றிதான் பலவாறாக எழுதிக் கொண்டிருந்தார்

அது ஒன்றுமில்லாததைப் பற்றியதாகவும் இருந்தது

அதில் ஒன்றுமில்லை எனவும் சிலர் சொன்னார்கள்

அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு வாசித்தார்களோ என்னவோ

அவர் கண்ணை மூடிக்கொண்டுதான் எழுதியிருக்க வேண்டும்

அது மஞ்சள் நிறப் பூனை கண்ணை மூடிக்கொண்டு நடப்பதற்கு ஒப்பானது

காலி குப்பிகளுக்கும், புத்தகங்களுக்குமிடையே இருந்தார்

எனினும் அவர் ஒரு தனி ஆளாக இருந்தார்

அவர் இருந்த இடம் யாருமற்ற பிரதேசம்

ஆனால் அங்கு எல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்தது

அவர் எழுத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பதை போல

பாரதியின் கண்ணன் என் சேவகன் கவிதையிலிருந்து
Pin It