நீரில் மிதந்த நிலவை
இரவெல்லாம் துவளாது
கரையேற்றிய அலைகளுக்கு
பரிதியை பரிசாய் தந்தது
விடியல்
*
பேருந்துப் பயணத்தில்
சாளரக்கண்ணாடி
இடையிலிருந்தும்
எதிர்வரும் முட்செடிக்கு
முகத்தை விலக்கும்
பழகிய மூளை
கீற்றில் தேட...
குதிரைவீரன் பயணம் - ஜூன் 2006
பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள்
- விவரங்கள்
- பாம்பாட்டிச் சித்தன்
- பிரிவு: குதிரைவீரன் பயணம் - ஜூன் 2006