பனிப் பொழியும் குளிர் இரவில்
ஏகாந்த கருமைக்குள்
நுழைந்து படுத்தபோது
அறையைச் சுற்றி
தவளையின் கூக்குரல்கள்
புணர்ச்சியற்ற தவிப்பின் ரீங்காரமாய்

காமம் சுரந்த கண்களோடு
களைந்து கிடந்தாள் தேவதை

பிறகு
தன்னை வாரிச் சுருட்டிக்கொண்டு
வீதி வழிச் சென்றாள்

வெறுமையின் கருக்கள்
மரணத்தைத் தோற்றுவிக்க

விடியலின் தொடக்கத்தில்
தன் அறைக்குத் திரும்ப
அறையெங்கும் ஆண்குறிகள்

தன்னைத் தேடி
பின்னிரவில் வந்த கடவுள்
தன் தடயங்களை விட்டுச் செல்ல
மனமின்றி ஆண்குறிகளை
உதிர்த்துவிட்டுச் சென்றதை
உணர்ந்த பொழுது

ஒரே சீரான தாளகதியில்
பொழுது புலர்ந்தது.


...........


பட்டப் பகலில் வெட்டவெளியில்
சூரியனின் இளம் பார்வையை எதிர்நோக்கி
நிர்வாணமாய் கிடக்கிறது உடல்

யாரும் கண்டிராத தேகப்பிரதேசங்களும்
யோனியும் அவதாரத்தின்
முன் பரப்பப்படுகிறது
அவதாரத்தின் கைகள்
உடலில் பரவும் அக்கணங்களில்
எவ்விதக் கூச்சமும் அருவருப்பும்
சலிப்பும் அடையாமல்
விறைத்துக் கிடக்கிறது உடல்

அவதாரம் கனிந்த
கருணையோடு நோக்குகிறது

சவைத்துத் துப்பப்பட்ட வார்த்தைகள்
மட்டும் நீண்டு ஒலிக்கின்றன

இப்போதெல்லாம்
தன் உடல் வெறும்
வெற்றுக் கூடென
புலம்பித் தீர்க்கிறாள்
ஏகாந்தமாய். . .

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.