h raja70, 80 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பார்ப்பனர்கள் எப்படித் திமிராகப் பேசுவார்களோ, அதே திமிருடன் இன்றும் பேசிக் கொண்டிருப்பவர், பாஜகவின் தேசியக் செயலாளர் ஹெச். ராஜா என்றார் புலவர் ஜெயபால் சண்முகம். நூற்றுக்கு நூறு உண்மையான சொல் அது!

கடந்த 15 ஆம் தேதி கூட, ஈ.வே.ரா. வைப் பின்பற்றுபவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று கூட்டமொன்றில் உளறிக் கொண்டிருந்தார். அத்தனை ஆணவத்திற்கும் சேர்த்து விழுந்தது மறுநாள் ஓர் அடி! 16.09.2017 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சாரண- சாரணியர் இயக்கத் தலைவருக்கான தேர்தலில், ஹெச். ராஜாவும், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் மணியும் போட்டியிட்டனர். அந்தப் பொறுப்புக்கு ஓர் அரசியல்வாதி போட்டியிடுவது இதுதான் முதல்முறை.

மொத்தம் பதிவான 286 வாக்குகளில், மணி 232 வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். இரண்டு வாக்குகள் செல்லாத வாக்குகள். 52 வாக்குகளை மட்டுமே பெற்று, ஹெச். ராஜா படுதோல்வி அடைந்தார்.

அடுத்தவர் தோல்வியில் மகிழ்வது நம் இயல்பில்லை. ஆனால் ஹெச். ராஜா போன்ற ஆணவக்காரர்களின் படுதோல்வி கண்டு நம்மால் மகிழாமல் இருக்க முடியவில்லை!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.