ரொம்ப சிம்பிள்... பார்ப்பானுக்குப் பயன்பட்டால் ராஜராஜன்..... இல்லையெனில் கிராதகன்... இதுதான் இன்றளவும் நிலவுகிறது நீடிக்கிறது. அரசியல் தலைவர்களில் பார்ப்பனர்களால் கொண்டாடப்படும் தலைவர்கள் யார்? பார்ப்பனர்களால் வெகுஜன விரோதியாகக் காட்டப்படும் தலைவர்கள் யார்? யார்? என்பதைப் பார்த்தாலே இந்த உண்மை புரிந்துவிடும்!

தலைவர் கலைஞரும் விபி சிங்கும் லாலுவும் இன்றளவும் பார்ப்பனர்களால் மிகக் கடுமையாகத் தூற்றப்படுகிறார்கள்... காரணம் என்ன? எந்தப் பார்ப்பானின் தட்டுச் சோற்றைப் பிடுங்கிக் கொண்டனர் இவர்கள்? இல்லை.... ஆனால், காலங்காலமாக உழைக்காமல் உண்டு கொழுத்துக் கொண்டிருந்த பார்ப்பன மேலாதிக்கத்தின் அதிகாரத்தில் கைவைத்தார்கள்! சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று ஒதுக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த உழைக்கும் வர்க்கத்தை அதிகார பீடத்தில் அமர்த்தினார்கள்! பார்ப்பானுக்குத் தெரிகிறது யார் தங்களுடைய எதிரி என்று ? நாம்தான் பார்ப்பனர்களில் நல்லவர்களைத் தேடி மெனக்கெடுகிறோம்...

நமக்கான வரலாறுகளை அழிக்கப், பார்ப்பான்....

அழிக்க முடியாதவற்றைத் திரிக்கப், பார்ப்பான்...

இரண்டும் முடியாதெனில் அதைத் தனதாக்கப், பார்ப்பான் ...

மதமெனும் பேய் பிடியாதிருக்க என்ற வள்ளலாரை

நேரிடையாக வசப்படுத்த முடியாத பார்ப்பனர்கள் பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற சூத்திரர்களை வைத்து வள்ளலாருக்கும் விழா, ஆர்.எஸ்.எஸ்க்கும் வரவேற்பு என நாடகம் நடத்தினார்கள். ... இந்த வரலாற்று மோசடிகளை எல்லாம் தோலுரித்து, பார்ப்பன எதிர்ப்பைக் கூர்தீட்டிய இரு தலைவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும்..... அம்பேத்கரின் தொண்டர்களிடம் ஏற்பட்ட பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையின் வீரியக் குறைவால் இன்று அம்பேத்கரையும் சுவீகரிக்கும் முயற்சியில் தமிழ்நாட்டிற்கு வெளியே ஓயாது இயங்குகிறார்கள் பார்ப்பனர்கள்.... ஆனால், பெரியார் தொண்டர்களின் ஓயாத பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையால் இன்றளவும் பெரியாரை எதிர்க்குறியீடாகவே வைத்திருக்க முடிகிறது பார்ப்பனர்களால்.

வள்ளலாரையும் காந்தியாரையும் கொல்ல முடிந்த பார்ப்பனர்களுக்கு பெரியார் ஒரு பெரிய விசயமில்லைதான். .. ஆனால், அவர்கள் மீதான தாக்குதலுக்கு ஏற்படாத எதிர்வினைத் திட்டம் பெரியாரின் தொண்டர்களிடம் இருப்பதே இன்றளவும் பார்ப்பனர்களின் அச்சத்திற்குக் காரணம்....

பார்ப்பன எதிர்ப்பு என்பது ஏதோ தனிப்பட்ட ஓர் இன எதிர்ப்பன்று. .... அது ஓர் ஆதிக்க எதிர்ப்பின் அடையாளம். ... தன்மான மீட்பின் குறியீடு... சுயமரியாதை, சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றைப் பேச, செயல்படுத்தத் துணிகிற யாரும் பார்ப்பன எதிர்ப்பைப் பேசாமல் கடந்து போய்விட முடியாது.....

இன்றைய சூழலில், வகுப்புவாரி உரிமை என்கிற இட ஒதுக்கீட்டு உரிமையைப் பார்ப்பனரல்லாத சமூகத்தினரிடையே ஓங்கி முழங்குவதுதான் பார்ப்பனர்களை அம்பலப்படுத்தவும் தனிமைப்படுத்தவுமான ஆயுதமாக இருக்க முடியும். ...

எனவே, பார்ப்பனர்களால் இன்றளவும் திட்டமிட்டுப் பறிக்கப்படுகிற பார்ப்பனரல்லாதார் சமூகத்தின் கல்வி - வேலைவாய்ப்பு உரிமைகளுக்கான ஒரு தொடர் பரப்புரையை வெகுமக்களிடம் பரவலாக முன்னெடுப்பதுதான் காலத்தின் தேவையான நடவடிக்கையாக இருக்க முடியும்... உண்மையைச் சொல்லத் தாமதிப்பது கூட, பொய்கள் உலவுவதற்கான அவகாசமாகிவிடக்கூடும் ! கூடிச்சிந்திப்போம்!

- காசு.நாகராசன்

Pin It