தி.மு.கழகத் தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஆட்சியை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கான ஆட்சியாக, ஆட்சி செய்து மக்களின் பேராதரவைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

ஆனால், அதிகார மட்டங்களினால் சில நேரங்களில் ஏற்படும் தவறுகள் முகம் சுளிக்க வைக்கிறது. 02-11-2021 தேதியிட்ட தமிழக அரசின் அரசாணை, 2022ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாள்களைப் பட்டியலிட்டு உள்ளது. அதில் 14-01-2022 ஆம் நாள் பொங்கல் என்றும், 14-04-2022ஆம் நாள் “தமிழ்ப் புத்தாண்டு” என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளதைப் பார்க்க வியப்பாக இருக்கிறது.

1935ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகளார் தலைமையில் திரு.வி.கல்யானசுந்தரனார், கா.சு.பிள்ளை, சச்சிதானந்தம் பிள்ளை, நா.மு.வேங்கடசாமி நாட்டார், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம், தா.நமச்சிவாயனார், உ.வே.சாமிநாத ஐயர் போன்ற தமிழறிஞர்களால் ஆய்ந்து இறுதி செய்யப்பட்டத் தமிழ்ப் புத்தாண்டு, தை முதல் நாள் என்பதே.

இதனை ஏற்றுத் தலைவர் கலைஞர் 2008ஆம் ஆண்டு அரசாணைப் பிறப்பித்தார். ஆனால் இவ்வாணையை 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க அரசு ரத்து செய்து ஏப்ரல் 14ஆம் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அரசாணையின் மூலம் அறிவித்தது. அந்த ஆணைதான் இன்னும் தொடர்வதாகத் தெரிகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள், நடைமுறையில் இருக்கும் அரசாணையை ரத்து செய்து, தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிவிக்க வேண்டுகிறோம்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It