kamal big boss 2

நெதர்லாந்தில் உருவாக்கப்பட்டுப் பல்வேறு விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளான “Big Brother”” என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை “Big Boss” என்று பெயரை மாற்றி இங்கு விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், ஒருபொழுது போக்கு நிகழ்ச்சியின் எல்லைகளைத் தாண்டி மக்களை மடைமாற்றும் அளவிற்கு அந்நிகழ்ச்சியை மக்களின் அன்றாட வாழ்க்கைக்குள் புகுத்தியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ‘Big Boss’ உண்டாக்கிய சர்ச்சைகளை எல்லோரும் அறிவோம். அந்நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோரியும் பல வழக்குகள் தொடரப்பட்டன. ஆயினும் “Big Boss 2” இன் ‘promo’ என்று சொல்லக் கூடிய முன்னறிவிப்பை நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். காலா திரைப்படப் பாடல்கள் மூன்று நாட்களுக்கு முன் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பார்க்கப்பட்டது. இப்போது “Big Boss 2” இன் ‘promo’ அதிகமாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு நடிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு மக்களிடம் தாங்களே பேசு பொருளாக இருக்க வேண்டும் என்று விழைவதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

இப்போது IPL நடந்து கொண்டிருக்கிறது. இப்போட்டிகள் முடிவடைந்தவுடன் Big Boss தொடங்கும். மக்களைச் சிந்திக்கவிடாமல் அவர்கள் நேரத்தில் முதலீடு செய்து பெரு முதலாளிகள் இலாபமடைகின்றனர்.

இந்த Big Boss என்னும் நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சிகளிடமிருந்து சற்றே வேறுபட்டது. உளவியல் ரீதியாக அதில் பங்கேற்போரையும் அந்நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்களையும் பாதிக்கக்கூடியது. இந்த உளவியல் பிரச்சனைகளைப் பற்றிய விவாதங்கள் நெதர்லாந்திலேயே நடந்திருக்கிறது. மேலும் சமுதாயச் சீர்கேட்டையும் ஏற்படுத்தியிருக்கிறது. “Ovia Army” என்ற அவலத்தையும் தமிழ்நாடு சந்தித்தது.

இந்த ஆண்டு என்னென்ன கூத்துகளைத் தமிழ்நாடு சந்திக்கப் போகிறது என்று தெரியவில்லை. “Big Boss” நிகழ்ச்சியின் சர்ச்சைகளே இனி விவாதப் பொருளாகும். Save Tamilnadu, Save Farmers போன்ற பிரச்சாரங்கள் மாறி “Save Bharani, Save Ovia” போன்ற பிரச்சாரங்கள் சமூக ஊடங்களில் முன்னெடுக்கப்படும்.

இவைபோக அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வேறு ஏதாவது புரியாதவற்றை சம்பந்தமில்லாமல் பேசுவார். பொதுக் கூட்டங்களில் பேசிப்பேசி, ஊர் ஊராகச் சென்று தெருத்தெருவாக மக்களைச் சந்தித்துக் கொள்கைகளைப் பரப்பித் தலைவர்கள் அரசியலுக்கு வந்தார்கள். ஆனால் ஒருபொழுது போக்கு நிகழ்ச்சி மூலம் அரசியலுக்கு அஸ்திவாரம் போட்டவர் கமலஹாசன்தான். இப்போது அரசியலில் மய்யத்தில் இருப்பதாகச் சொல்கிறார். இந்த மய்யம் இன்னும் எப்படியெல்லாம் மக்களை மயக்கப் போகிறதோ?

இன்னும் இந்நிகழ்ச்சிக்குப் பின்னால் நிறைய அரசியல் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. தமிழ்நாட்டு மக்கள்

“Big Boss” என்னும் புரட்டைப் புறக்கணிக்க வேண்டும்.

தமிழர்களே, மாலை நேரத்தில் புத்தகங்களோடு உட்காருங்கள்!

தொலைக் காட்சி ஓரத்தில் உட்காராதீர்கள்!!

Pin It