கூடங்குளத்தில் அணு உலையை எதிர்த்து போராடும் மக்கள் மீது நடத்தப்பட்ட காவல் துறையினரின்  கொடூரமான தாக்குதலைக் கண்டித்து எழுத்தாளர்களின் உண்ணாநிலைப் போராட்டம்

பல ஆயிரம் தலைமுறைகளுக்கு பேரழிவைக் கொண்டு வரும் அணு உலையை எதிர்த்து ஓர் ஆண்டிற்கும் மேலாக அறவழியில் போராடி வரும்  கூடங்குளம் மற்றும் இடிந்தகரை மக்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான போலீஸ் தாக்குதலைக் கண்டித்து மதுரையில் அனைத்து எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள்,  மனித உரிமை மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்க  அனைவரையும் அழைக்கிறோம்.

அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காக கடுந்துயரங்களை எதிர் கொண்டு போராடும் மக்களுக்கு துணை நிற்போம்.

இடம் : காளவாசல் சந்திப்பு மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கு முன் வாயில்
நாள்:  15-09-2012  நேரம் காலை 9 மணி துவங்கி மாலை 5.30 வரை

அனைவரும் வருக!! போராடும் மக்களுக்கு ஆதரவு தருக!!!

Comments

1 comment

1
Vee.Na.So.
Aarpaattam vetri pera vaazhththukkal.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.